இசைஞானி இளையராஜா
பதிவுக்கு பதிவு ராஜா, ராஜா என்கிறேன். இது வரைக்கும் ராஜா பாடிய பாடல் ஒன்று கூட போடவில்லை பாத்தீங்களா?. சரி இந்த பதிவில் இருந்து தொடங்கி விடலாம். தமிழ் இசையமைப்பாளர்களிலேயே மிகவும் அதிக பாடல்களை பாடியவரும் ராஜா தான். இசையமைப்பாளர்களிலேயே திறமையான பாடகரும் ராஜா தான். சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் பட்டியலிட்டால் குறைந்தது 100 பாடல்கள் கூறலாம். அவரது குரலின் பரிமாணங்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவற்றில் சில இங்கே,
"காதல் கசக்குதையா" (ஆண் பாவம்) என்று நம்மை சிரிக்க வைத்ததும் அவர் குரல் தான். "சோல பசுங்கிளியே" (என் ராசாவின் மனசிலே) என்று நம்மை அழ வைத்ததும் அதே குரல் தான். "ஓரம் போ.. ஓரம் போ" (பொண்ணு ஊருக்கு புதுசு) என்று கிராமத்து கலக்கலும் உண்டு. "ராஜா! ராஜாதி ராஜன் இந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) என்று மாடர்ன் கலக்கலும் உண்டு. "என் தாயெனும் கோவிலை" (அன்னக்கிளி) என்று தாய் பாசத்தையும் கொண்டு வரும், "விழியில் விழுந்து" (அலைகள் ஓய்வதில்லை) என்று காதலையும் கொண்டு வரும். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" (தர்ம பத்தினி) என்று ஜாலி பாட்டும் உண்டு. "ஜனனி ஜனனி" (தாய் மூகாம்பிகை) என்று பக்தி பாட்டும் உண்டு. இதெல்லாம் தவிர, "காட்டு வழி போற பொண்ணே, கவல படாதே" (மலையூர் மம்பட்டியான்) "அம்மன் கோவில் கெழக்காலே" (சகலகலா வல்லவன்) என்று எங்கள் கிராமத்தை கலக்கிய தலைப்பு பாடலும் உண்டு. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றையும் பார்க்க ஒரு 50 பதிவு வேண்டும். ராஜாவை ஒரு தலை சிறந்த பாடகர் என்றே நான் சொல்வேன்.
1. பக்தி பாடல் போடாமல் பதிவு தொடங்கலாமா?. ராஜா என்றவுடன் "ஜனனி ஜனனி" நினைவுக்கு வராமல் இருக்குமா?. சமீபத்திய திருவாசக்தை தான் மறக்க முடியுமா?. கீதா எனக்கு முன்பே தாய் மூகாம்பிகை பாடலை வலை ஏற்றி விட்டார். அதனால் ராஜாவின் 'குரு ரமண கீதம்"-ல் இருந்து "என் ஊரு சிவபுரம்". இது ராஜாவுக்கே ரொம்ப பிடித்த பாடல் என்று நினைக்கிறேன். திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில், கூட்டத்தை பார்த்து "என்ன தலைவா! பாட்டு பாடணுமா?" என்று இதை பாடி காண்பிப்பார். CD விலை வெறும் 95 ரூபாய் தான். அனைத்து பாடல்களும் அருமை. கண்டிப்பாக வாங்கி கேளுங்கள்.
"என் ஊரு சிவபுரம் ! பரலோக பெரும்புரம் !
சொந்த ஊர விட்டுப்பிட்டு எப்படி இங்கே வந்தேனுன்னு தெரியலையே!
உலக வாழ்க்கை ஒருபுறம் தெரியவில்ல மறுபுறம் - என்ன பெத்த
அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று புரியலையே"
2. இப்போ காதல். இந்த பாடலை போடாவிட்டால் துபாயில் (அமீரகம்) இருந்து ஒரு நண்பர் கல்ல விட்டு எறிவார் :-). போன பதிவில் ஜென்சி பாடல்கள் கேட்டோம். இது இன்னெரு ஜென்சி பாடல். ஒரு சகாப்த பாடல். "காதல் ஓவியம்" அலைகள் ஓய்வதில்லை-ல் இருந்து. இந்த பாட்ட போட்டா நான் அப்படியே என்னை மறந்து உட்கார்ந்திருப்பேன். பேஸ் கிட்டார இப்படியும் செய்ய முடியுமா?. பாட்டுக்கு பீட்டே பேஸ் கிட்டார் தாம்யா?. அத பாலோ பண்ணி பண்ணி, பாடுறத கேட்க முடியறதே இல்லை :-). கலக்கல் பாட்டு.
3. அமைதியா ஒரு காதல் பாட்டு கேட்டீங்க. அப்படியே ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இந்த பாடலை ராஜா தொடங்குவதை நடிகர் பார்த்திபன் சமீபத்தில் சென்னையில் நடந்த ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கூறும் போது " நாம ரொம்ப சந்தோசமா இருக்கும் போது, நமக்கு செத்துடலாம்னு தோணும். இந்த பாட்டோட ஆரம்பத்தை கேட்டா எனக்கு அப்படி தோணும்" என்றார். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" தர்மபத்தினி படத்தில் இருந்து. வயலின் Backing ரொம்ப சூப்பரா இருக்கும். ஜிவ்வென்று பாட்டு இதோ.
4. எனக்கு பிடித்த ராஜா பாடல்களிலே (எல்லா பாட்டும் புடிக்கும் என்பது தான் உண்மை), முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். ஒரு வித்தியாசமான மனசை வருடும் ஒரு ஓட்டம். அன்பான வரிகள். ராஜா ரொம்ப அனுபவித்து பாடி இருப்பார். "அழகே அமுதே" பரதன் படத்தில் இருந்து.
5. அம்மான்னா சும்மா இல்லடா. அவ இல்லன்னா யாரும் இல்லடா. ராஜாவ அம்மா பாடலில் அடிக்க ஆள் உண்டா?. "பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா" என்ன பெத்த ராசா படத்தில் இருந்து.
6. சோக ராஜா. இந்த பதிவுல போடணுமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். ராஜாவில் குரலின் பரிணாமங்களை பார்க்கும் போது, இந்த பாடலை விட முடியலை. "சோல பசுங்கிளியே" என் ராசாவின் மனசிலே-யில் இருந்து. அழாதீங்கடே! கஷ்டமா இருந்தா அடுத்த பாட்டுக்கு ஓடி போய்ருங்க.
7. அழ வைக்கவும் முடியும். சிரிக்க வைக்க முடியும். "ஆண் பாவம்" ஒரு கிளாசிகல் காமெடி. பாண்டியராஜனா அப்படி எல்லாம் படம் பண்ணினார். நிறைய நேரம் நம்ப முடிவதில்லை. இந்த பாடலை பாண்டியராஜன் ரொம்ப நல்லா படம் பிடித்திருப்பார். அவரது உயரம், அதற்கேற்ற டான்ஸ் என்று சிரிக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி ராஜா கிச்சி கிச்சி மூட்டிக்கிட்டே இருப்பார் :-). "காதல் கசக்குதையா..வர வர காதல் கசக்குதையா". எனக்கில்லைங்க..பாட்டுங்க..
8. கத கேளு..கத கேளு...கரிமேட்டு கருவாயன் கத கேளு கத கேளுடியே.... கிராமத்தை ஒரு கலக்கு கலக்கிய பாடல் இது. காட்டு வழி போற பொண்ணே கவல பட்டதே...காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு..இது இன்னொரு கலக்கல். இப்போ கரிமேட்டு கருவாயன் கத கேட்கலாம். ராஜாவின் குரல் ரொம்ப வித்தியாசமாக, ரொம்பவே வீரமாக பாடி அலம்பி தள்ளியிருக்கிறார். கலக்குங்க தலைவா :-)
9. வாங்கடா! வந்தனம் பண்ணுங்கடா! வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா :-). "ஓரம் போ பாட்ட போடலன்னா" அது பதிவாகுமா?. ஊரே இந்த பாட்டுக்கு அல்லோலப்பட்டது என்று கேள்விபட்டிருக்கிறேன்.
"பாளையம் பண்ணபுரம் சின்ன தாயி பெத்த மகன்
பிச்சமுத்து ஏறியே வராண்டோய்..ஓரம் போ" .. ஹாஹாஹா..:-)
10. பத்தோட முடிச்சிக்கலாம். என்ன?. 90-ல் ராஜா ஒரு பார்முலா வச்சிருந்தாரு. அது இந்த ஜோடி பாடல் பார்முலா தான். "வள்ளி வள்ளி என வந்தான்" (தெய்வவாக்கு - S.ஜானகி) "சொர்க்கமே என்றாலும்" (ஊரு விட்டு ஊரு வந்து - S.ஜானகி). அப்புறம் "நில் நில் நில்..பதில் சொல் சொல் சொல்" (பாட்டு பாடவா - உமா ரமணன்), "புன்னகையில் மின்சாரம்" (பரதன் - S.ஜானகி). செமயா பீட் செட் பண்ணி ஜம்முன்னு இருக்கும் இந்த பாடல்கள். எனக்கு பிடித்த 'பாட்டு பாடவா" பாடலோடு இந்த பதிவை முடிச்சிக்கலாம்.
நிறைய பேர் "யோவ்! அந்த பாட்ட போடாம, என்னய்யா பதிவு போடுற" என்று வருவீங்க :-) "பூமாலையே தோள் சேரவா" "மெட்டி ஒலி" "துள்ளி எழுந்தது காற்று" "ஒரு ஜீவன் அழைத்தது" அப்படியே லிஸ்ட் போட்டுட்டு போய்டுங்க. அடுத்த பதிவுல "இளையராஜா-2" வில் இதே போல இன்னொரு செட் பாடல்கள் கேட்கலாம்.