கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, December 08, 2005

நேயர் விருப்பம் - 2

( அரும்பாகி மொட்டாகி / ஆதாமும் ஏவாளும் / வராது வந்த )

வணக்கம்! வணக்கம்! மீண்டும் ஒரு நேயர் விருப்பத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ( FM ரேடியோ effect வருதா :-) சொல்லுங்க). இந்த பதிவுல மூன்று முத்தான பாட்டுக்களை கேக்கலாம். முதலாவதாக, எங்க ஊர் Ex. எம்.பி ராமராஜனுக்கு:-)) ராஜா போட்டு கொடுத்த அருமையான பாட்டு. 'எங்க ஊரு காவக்காரன்' படத்தில் இருந்து 'அரும்பாகி மொட்டாகி' . இந்த பாட்ட பாடுனது யாருன்னு ஒரே குழப்பம். கடைசில இந்த பாடலை பாடினது நம்ம அல்வா சிட்டி சம்மி (இல்ல) சொன்ன மாதிரி 'தீபன் சக்கரவர்த்தி' தான். கூட பாடுவது சுசிலா. இருந்தாலும் இந்த பாட்டு ராமராஜனுக்கு கொஞ்சம் ஓவர் தான். பாட்ட கேட்டுட்டு அப்படியே போய்டாதீங்கடே. நீங்க கேட்டீங்கன்னு எனக்கு தெரிய வேண்டாமா?. ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க.





அடுத்ததா, நம்ம தங்கம் அருண்மொழி பதிவுல 'ஆதாமும் ஏவாளும்' போடுங்க அப்படின்னு மொத மொத பாட்டு கேட்டுருக்கிறார். 'மருது பாண்டி' படத்துல இருந்து அருண்மொழி & ஜானகி பாடியது. பொதுவா எல்லா ஹிரோவுக்கும் வயசான கெட்டப்புல நடிக்க (நம்மை சோதிக்க) ஆசை இருக்கும். அப்படி அமுல் பேபி ராம்கிக்கு ஆசை வந்ததன் விளைவு தான் 'மருது பாண்டி' . இந்த பாடல் ராம்கி-நிரோஷா ப்ளஷ் பேக்கில் வரும். பாடலுக்கு இங்கே..





அப்புறம், நம்ம ப்ளாக்ல முதல் முதலாக வருகை தந்திருக்கும் பாலாஸ்ரீ அவர்களின் விருப்பப் பாடல் (பாட்டு போட்டு இப்படி தான் கவர் பண்ணனும். ப்ளாக் படிக்க ஆளுங்க வேணாமாடே!) 'தாலாட்டு பாடவா' படத்துல இருந்து 'வராது வந்த நாயகன்'. அருண்மொழி-ஜானகி பாடியது. இந்த படத்துல எல்லா பாடல்களுமே அருண்மொழி தான். இது அருண்மொழியோட மொத பாடலா என்று தெரியவில்லை. என்னோட தகவல் பொட்டி, சூரசம்ஹாரம் வந்தது 1988. தாலாட்டு பாடவா 1990 என்கிறது. சரியா தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. இப்போ பாட்டு...




8 Comments:

At 7:29 AM, Blogger தங்ஸ் said...

Thanks Siva!

 
At 10:01 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா,

மூன்றும் முத்தான பாடல்கள். ஒவ்வொன்றும் மும்முறை கேட்டுவிட்டேன், வேலையும் பார்த்துக்கொண்டே தான். :-)

குமரன்

 
At 8:10 PM, Blogger சிவா said...

தங்கம். வேறு புடிச்ச பாடல் இருந்தால் சொல்லுங்க.

உஷா! 'அரும்பாகி' நீங்க சொன்ன மாதிரி அருமையான பீட். நீங்க உங்க விருப்பம் (எனக்கும் தெரியற மாதிரி :-) சொல்லுங்க.

குமரன்! மூனு பாட்டையும் மூனு தடவையா?. சந்தோசம். 100 தடவை கூட கேக்கலாம். என்ன சொல்றீங்க?. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

வாங்க சம்மி (முழுப்பெயர் என்னவோ?)! நீங்க பாடி அனுப்புங்க..'இல்ல' இல்லாம ஒரு பதிவு போட்டுடலாம். :-)
எனக்கு தெரிந்து ராஜா பாட்டு மட்டும் தான். மற்றவைகள் என் மனதில் ஒட்டவில்லை (புதுசுல). பழைய S.P.B பாட்டு நிறைய போட்டுருக்கிறேன். அதனால் ராஜா பாட்டு மட்டும் தான் என்று இல்லை. எல்லாமும் கேட்க்கலாம். என்ன! என்னிடம் வேறு எதுவும் கிடையாது. இருந்த அனுப்புங்க. பதிவா போட்டு நானும் ரசிக்கிறேன். 'குட்டி பாட்டு' அடுத்த பதிவா (சனி கிழமை) போட்டுடலாம். வேற பாடல் தெரிந்தால் சொல்லுங்க.

"விடியும் வரை காத்திரு' பாட்டு இப்போ தான் கேள்வி படுகிறேன் :-(. தேடி பார்க்கிறேன். கிடைத்தால் அடுத்த நேயர் விருப்பத்துல எல்லோரும் கேட்டுடலாம். உங்க தொடர் வருகைக்கு நன்றி :-)

 
At 4:19 AM, Blogger சிவா said...

அசத்துங்க VK. நானும் அடிக்கடி வந்து பாட்டு கேக்கறேன். இந்த பாட்டை இப்போ கூட தினமும் ஒரு தடவை கேட்டு விடுவது உண்டு. எஸ்.பி.பி 'மஞ்சளின் மகராணி' அப்படின்னு ஆரம்பிக்கும் போது, சும்மா பாட்டு ஜிவ்வுன்னு தூக்கும். நெறைய தகவல் சொல்லிருக்கீங்க. நல்லா இருக்கு.

 
At 6:05 AM, Blogger தங்ஸ் said...

Thanks Usha, Siva!
Itho en adutha choice..
'Unnai Naanariven' from 'Guna'..

 
At 10:40 AM, Blogger கீதா said...

அருமையான பாடல்கள் சிவா.

மூன்றாவது பாடல் இருக்கே அது ரொம்ப நல்லா இருக்கும். வினாயகர் ஸ்லோகம் சொல்லிட்டே இருப்பாங்க அப்படியே பாடலுக்கு நழுவும்.. ரொம்ப நல்லா இருக்கும்.

(உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி சிவா. நானும் பாட்டு போட ஆரம்பிச்சிட்டேன்ல.. ரொம்ப நாள் ஆசை. நன்றி. http://kirukkals.com ல தான்)

 
At 12:02 AM, Blogger Koman Sri Balaji said...

நன்றி சிவா அருமையான பாடல அது... பிறகு ஆயிரம் நிலவே வா என்ற படத்தில் அந்தரங்கம் யாவுமே என்ற பாடல முடியுமா?

 
At 5:53 AM, Blogger சிவா said...

பாலாஸ்ரீ

நானே இந்த 'அந்தரங்கம் யாவுமே' பாட்ட போடலாம்னு நெனைச்சிருந்தேன். கண்டிப்பா அடுத்த நேயர் விருப்பத்தில் பார்க்கலாம்.

 

Post a Comment

<< Home