கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, December 11, 2005

இசைக் கதம்பம் -1

( ஒரு வித்தியாசமா, கலவையா ஒரு பாடல் பதிவு தொடங்குகிறேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க).

இந்த முதல் இசைக் கதம்பத்தில் ஹிட்டு பாட்டு, ஊத்திக்கிச்சி, பின்னணி இசை, அடுத்தாத்து ஆல்பட், அக்கம் பக்கம், பாட்டு போட்டி ஆகிய தலைப்புகளில் பாடல்களை கேட்கலாம்.

ஹிட்டு பாட்டு:

மொதல்ல எல்லோருக்கும் புடிச்ச மாதிரி பாடல்களை இதில் பார்க்கலாம் (இல்லன்னா, என்னடா இவன் பாட்டு போடறான்னு சொல்லிட்டு ஓடிடறீங்க).

இளமை காலங்கள். மோகன்-சசிகலா நடித்து வெளிவந்த படம். படத்தில் அத்தனை பாடல்களும் அருமை. இந்த படத்தை பார்த்து என் நண்பர்கள் எல்லோரும் சசிகலா விசிறியாகி போனோம். இந்த 'இசை மேடையில்' பாட்ட வீடியோவுல போட்டு போட்டு தேஞ்சி போச்சி. சரி இப்போ பாட்டு. ராஜாவோட அக்மார்க் 80s ஹிட்டு பாட்டு. S.P.B & ஜானகி பாடியது. பாட்டு இங்கே.






அடுத்தாத்து ஆல்பட்:

இளையராஜாவை விட்டா வேற பாட்டு போட மாட்டீங்களான்னு அல்வா சிட்டி சம்மி கேட்டாங்க. கொஞ்சம் கேட்பதுண்டு. அதில் சில பாடல்களை இந்த தலைப்பில் வாரம் ஒன்று பார்க்கலாம்.

இந்த வாரம். 'வானமே எல்லை" படத்தில் இருந்து "நீ ஆண்டவனா". K.பாலசந்தர் தெலுங்கில் இருந்து இறக்குமதி பண்ணிய ஒரு இசை அமைப்பாளர் "மரகதமணி". மனுசன் அவரு படத்துக்கு எல்லாம் நல்லாத்தான் பாட்டு போட்டிருப்பார். 'அழகன்' படத்துல "என் வீட்டில் இரவு..அங்கே இரவா..இல்ல பகலா" பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சது. "சங்கீத ஸ்வரங்கள்..ஏழே கணக்கா..இன்னும் இருக்கா" அப்படிங்கற பாட்டும் சூப்பர்.

இந்த 'நீ ஆண்டவனா" பாட்டுல ரசிக்க நெறைய விசயம் இருக்கு. பாட்டோட தாலாட்டுற மாதிரி அந்த Repeated Beat எவரையும் மயக்கும். அப்புறம் S.P.B-யோட குரல் ஏற்க்கனவே ரொம்ப குழைவு. இந்த பாடலில் ரொம்பவே Smooth. கூட சித்ரா வேற. இன்னொரு முக்கியமான ஆள். கவிஞர் (வைரமுத்தா?). மனுசன் கவிதையில கலக்கராருப்பா.

படம்: வானமே எல்லை.
பாடல்: நீ ஆண்டவனா
பாடியவர்கள்: S.P.B & சித்ரா.






அக்கம் பக்கம்:

தமிழ் பாடல்களை தவிர வேறு மொழிப்பாடல்கள் எத்தனை பேர் கேட்பீங்கன்னு தெரியலை. இசைக்கு மொழி ஏது. (ஒரு காலத்துல ஹிந்தி பாட்டு கேக்கலையா :-). இந்த தலைப்புல ராஜாவின் இசையில் சில மலையாளப் பாடல்கள் பதிகிறேன். கேட்க முயற்ச்சி பண்ணிப் பாருங்க.

முதல் பாடல். 'குரு' படத்தில் இருந்து 'தேவசங்கீதம் நீயல்லே". படத்தில் இசை இளையராஜாவின் வாழ்நாள் சாதனை என்றே நான் சொல்வேன். இந்த எல்லா பாடல்களும் ஹங்கேரியில் இசை அமைக்கப்பட்டது. 'குரு' படமும் ரொம்ப அழகான, தமிழில் பார்க்க முடியாத ஒரு கதை களத்தோடு அமைந்த படம். மோகன்லால்-சித்தாரா நடித்தப்படம். போன வருடம் தான் படம் பார்த்தேன். இந்த படத்தில் வரும் ஐந்து பாடல்களுமே அருமை. இன்று ஒரு பாடல் கேட்கலாம். இந்த தேவ சங்கீதத்தை பாடியவர்கள் யேசுதாஸ் & சித்ரா. பாடலில் பயன்படுத்தப் படிருக்கும் வாத்ய கருவிகளை கவனித்துப்பாருங்க. திரை இசையில் கேட்க முடியாத ஒரு வித்தியாசமான இசை இது.

படம்: குரு (மலையாளம்)
பாடல்: தேவசங்கீதம்..நீயல்லே.
பாடியவர்கள்: யேசுதாஸ் & சித்ரா





ஊத்திக்கிச்சி:

இந்த தலைப்பில் படம் ஊத்திக்கிட்டதால் ராஜாவின் காணாமல் போன பாடல்கள் பற்றி பார்க்கலாம். என்னோட ரசனையை போட இந்த தலைப்பு :-). 90ல் வந்த சில நல்ல பாடல்கள், மக்கள் ரசனை மாறிப் போனதால் காணாமல் போய் விட்டது.

அப்படி ஒரு பாட்டு. "கோலங்கள்" (1995) படத்தில் இருந்து "தெற்க்கே வீசும் தென்றல் வந்து" அப்படின்னு ஒரு பாட்டு. ஜெயராம்-குஷ்பு நடித்த படம்.யாரும் கேட்டிருக்க மாட்டீங்க அப்படின்னு சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். ரெண்டு மூனு தடவை கேட்டு பாருங்க. அப்புறம் உங்க Play list-ல கண்டிப்பா இடம் பெறும். இந்த பாடல் ரொம்ப வித்தியாசமான முயற்சி என்றே சொல்லலாம். கிடார்..கிடார்..கிடார்..வேறொன்றும் இல்லை. தாள வாத்தியம் (Percussion instruments) இல்லாமல் பாடல் முழுவதும் (தொடக்கம் தவிர) வெறும் கம்பி கருவிகள் (String Instruments) வைத்து கொண்டு போயிருப்பார். கவனித்து கேட்டு மகிழுங்கள்.( அக்னி நட்சத்திரம் 'ராஜாதி ராஜா' பாட்டு வெறும் தாள வாத்திய கருவிகள் மட்டும் வைத்து செய்திருப்பர். No sting instrument). அருண் மொழி - லேகா குரல் கூடுதல் கவர்ச்சி.

படம் : கோலங்கள்
பாடல்: தெற்கே வீசும் தென்றல்.
பாடியவர்கள்: அருண்மொழி-லேகா





பிண்ணனி இசை:

இதுல யாருக்கும் விருப்பம் இல்லை போல. இளையராஜா பாடல்களில் எவ்வளவு சாதனை/முயற்சிகள் செய்தாரோ, அதே அளவு பின்னணி இசையிலும் செய்திருக்கிறார் (செய்து கொண்டிருக்கிறார்). அது அவ்வளவாக கவனிக்கப்படாமல் போனது துரதிஷ்ட்டம் தான். எல்லா இசைக் கதம்பத்திலும் ஒரு பின்னணி இசையை போடுகிறேன். புடிச்சா கேட்டுப் பாருங்க :-)

ராஜபார்வை படத்தில் இருந்து ஒரு Fusion இசையை இங்கே கேட்கலாம். ராஜாவிடம் இருந்து சரியாக இசையை வாங்க தெரிந்த ஒரே நடிகர் கமல் (அதுக்கு கொஞ்சம் ஞானம் வேணுங்கோ). ராஜபார்வை படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை யாரும் மறக்க முடியாது. கமலுக்கு கண் தெரியாது என்று தெரியாமல் மாதவி அவரை அவமான படுத்த, கமல் கண் தெரியாதோர் பள்ளியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது தெரிந்து மாதவி அங்கு செல்வார். கமல் தனி வயலின் வாசிக்க, ஒவ்வொரு இசையாக இணைந்து செல்லும் இசை இது. தொடக்க வயலினை கேட்டவுடன் 'இழுக்கறாங்க'ன்னு கேட்காம போய்டாதீங்க. முழுசும் கேட்டுட்டு சொல்லுங்க. ( ஒலி தரம் கம்மி தான். அட்ஜஸ்ட் பண்ணுங்க :-)





பாட்டு போட்டி :

பாட்டோட Lude-s போட்டு பாட்ட கண்டுபுடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். உங்களுக்கும் புடிச்சா முயற்சி பண்ணுங்க.




13 Comments:

At 7:19 AM, Blogger குமரன் (Kumaran) said...

நீ ஆண்டவனா பாட்டு நல்லா இருக்கு சிவா. இந்தப் பாடலை நான் விரும்பிக் கேட்டுருக்கேன்.

யேசுதாஸ் குரல் எனக்குப் பிடிக்கும் என்றாலும் இந்த தேவசங்கீதம் பாட்டில் இசைக்கு உள்ள முக்கியத்துவம் குரலுக்கு இல்லாதததால் இன்னொரு முறை கேட்பது சந்தேகம் :-)

தெற்கே வீசும் தென்றலில் ஆரம்பத்தில் வரும் இசை நல்லா இருக்கு. ராஜ பார்வை இசையில் ராஜாவின் பார்வை தெரிகிறது. நன்றாய் இருக்கிறது. கர்னாடிக் கொஞ்சம் வருவதால் என்னவோ எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

 
At 7:51 AM, Blogger கீதா said...

சிவா,
அதெப்படி சூடம் அடிச்சு சத்தியம் பண்ணுவிங்க.. 'கோலங்கள்' பாட்டு யாரும் கேட்கலைன்னு :)

நான் கேட்டிருக்கேனே.. அதே படத்துல இன்னொரு பாட்டும் இருக்கு


"ஒரு கூட்டில் சின்ன கோகிலம் இரண்டு.."

ரொம்ப அருமையா இருக்கும்.. மெலோடியான பாடல்.

 
At 8:07 AM, Blogger மதுமிதா said...

சிவா
பாடல்கள் தேர்வு நல்லா இருக்கு

உல்லாச பூங்காற்று
ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக பாடல்
எந்நாளும் நீ பாடு

கோலங்கள் படம் தானே
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது.

 
At 9:34 AM, Blogger தங்ஸ் said...

Ennanga..ippadi kalakareenga?ella selection-um super.

 
At 7:04 PM, Blogger சிவா said...

உஷா! போட்டிக்கான பதில் சரி. 'நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்'. படம் 'கைராசிக்காரன்'. உங்களுக்கு அடுத்த பதிவில் சூப்பர் பாட்டு ஒன்னு நானே போடுகிறேன். வெயிட் பண்ணுங்க.

குமரன்! உங்களுக்கு மலையாளம் தெரியுமோ?. இந்த பாடலில் யேசுதாஸ் பாடும் போது இசை கொஞ்சமாகவே வருகிறது என்று நினைக்கிறேன். அடுத்த கதம்பத்தில் குரல் அதிகமாக, இசை கம்மியாக ஒரு யேசுதாஸ் பாட்டு போட்டுடறேன்.

ராஜ பார்வை இசையை கேட்டதற்க்கு நன்றி. முதல் முதல் பிண்ணனி இசைக்கு பின்னோட்டம் கொடுத்துள்ளீர்கள் (உஷாவை தவிர). நன்றி.

 
At 7:08 PM, Blogger சிவா said...

கீதா! கோலங்களில் 'உல்லாச பூங்காற்று' 'ஒரு கூட்டில்' எல்லோரும் கேட்டிருப்போம். "தெற்கே வீசும்" கேட்டுருக்கீங்கலா?. சரி..சரி..தெரியாம சூடத்தை இழுத்துட்டேன். விட்டா கைல சூடத்தோட வந்துடுவீங்க போல :-).

நீங்க பாட்டு போட ஆரம்பிச்ச பிறகும் உங்கள் வருகைக்கு நன்றி.

மதுமிதா அக்கா! வருகைக்கு நன்றி. ஆமாம் 'உல்லாச பூங்காற்று' அந்த படம் தான். அருமையான பாடல். சீக்கிரம் கேட்கலாம்.

 
At 7:16 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! 'தெற்கே வீசும் தென்றல்' பாடலுக்கு உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. நீங்களே ஒரு பதிவு போடலாமே (என்னோட ப்ளாக்ல). மாடுலேஷன் பற்றி இந்த மக்குக்கு சரியா தெரியலை :-). ஆனா ஏதோ விசேசமான கம்போசிங்னு மட்டும் தெரியுது :-)
குரு படம் நான் பார்த்து விட்டேன். பிறகு கதை சொல்கிறேன்.

தங்ஸ் ;-) வருகைக்கு நன்றி. கலக்கறது இளையராஜா. பதிவு தேர்வு மட்டும் நான. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

 
At 7:26 PM, Blogger Radha Sriram said...

Shiva,
i sincerely wish you give timeout for Usha Shankar and Geetha!!!!.....(smiley) it si driving me crazy...seri ada enakku therincha paatta irukke nnu quiz kku answer pannalaamnu ninaicha......ennakku thanni kaatraanga rendu perum.....romba mandai kaanja...eppadikku

Radha(fumes from ears!!!!!)

 
At 7:57 PM, Blogger சிவா said...

ராதா! வாங்க. உஷா அக்கா உடனேயே சொல்லிட்டாங்க. உஷா அக்காவுக்கு தெரியாம எதுவுமே இருக்கது :-) போன போட்டில யாருமே கலந்துக்கலன்னு கொஞ்சம் எளிதா போட்டேன். உடனே சொல்லிட்டாங்க. அடுத்த கேள்வி யோசிக்கிற மாதிரி கேட்கிறேன். :-)

 
At 4:02 AM, Blogger Vishnu said...

வணக்கம்....

உங்கள் பக்கத்துக்கு நான் வருவது இது தான் முதல் தடவை.... அருமை... எப்போதோ கேட்ட பாடல்... இங்கே எல்லாம் கிடைக்க முடியாத பாடல்களை இணைத்து இருக்கிறீர்கள். நன்றிகள். மேலும் உங்கள் பக்கம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதி பதிவில்... இளமைத்துடிப்புடன் கூடிய முதலாவது பாடல்.. " இசை மேடையில் இந்த வேளையில்...." பாடல் அருமையான பாடல்.. அதிக நாட்களாக கேட்காத பாடலும் கூட... இணைத்தமைக்கு நன்றிகள்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி

விஸ்ணு

 
At 4:45 AM, Blogger சிவா said...

வாங்க விஷ்ணு. முதல் வருகைக்கு நன்றி. பாட்டெல்லாம் கேட்டு ரசித்தமைக்கு நன்றி. உங்கள் விருப்பங்களையும் சொல்லுங்கள். நேரம் கிடைக்கும் போது வந்து பாட்டு கேளுங்க.

 
At 10:50 PM, Blogger Koman Sri Balaji said...

சத்தியமாக சிவா இந்த பாடல் தெற்கே வந்த கேட்டதே இல்லை.....

 
At 3:57 AM, Blogger சிவா said...

பாலஸ்ரீ! நான் சூடம் அணைச்சதுக்கு ஒரு ஆதரவாவது இருக்கே :-)). ஆமாம் நான் கூட ரொம்ப நாள் கழிச்சி தான் கேட்டேன்.

 

Post a Comment

<< Home