நாடு பார்த்ததுண்டா (காமராஜ்)
ரொம்ப நாளா இந்த பாட்ட போடணும் என்று நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ நம்ம நண்பர் டண்டணக்கா காமராஜ் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். அத படிச்சிட்டு, சரி இது தான் சரியான நேரம் இந்த பாடலை போடுவதற்க்கு என்று பதிகிறேன்.
காமராஜர் பற்றி டண்டணக்கா நிறைய சொல்லியிருப்பதால் நேரா பாடலுக்கு போய்விடலாம். நேரம் இருந்தா அவரோட பதிவுகளை படிங்க. ரொம்ப நல்லா எழுதி இருக்கிறார்.
பாடலுக்கு போற முன்னாடி, ஒரு சின்ன விசயம். நான் பொறந்தது காமராஜர் பிறந்த நாளோட தான் :-). பொறந்து தான் ஒன்றும் பெரிசா பண்ணல, பொறந்ததாவது காமராஜர் பிறந்த நாளில் பிறந்தோமே என்று ஒரு சின்ன சந்தோசம் :-). நான் பிறந்தவுடன் ஊர்ல எல்லோரும் எனக்கு காமராஜ்னு பேர் வைக்க சொல்லிருக்காங்க. அம்மா தான், ஒரு நல்லவர் பெயரை கெடுக்க வேண்டாமேன்னு வைக்கலை. சரி சரி! ப்ளாஷ் பேக் போதும் என்றீங்களா.
போன மாதம் 'காமராஜ்' பட DVD எடுத்து பார்த்தேன். அருமையான பார்க்க வேண்டிய படம். இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தான் இருக்கிறது. முடிந்தால் படம் பாருங்கள்.
"நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை - நாடு பார்த்துண்டா ..
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே"
இசைஞானியின் இசையில் 'காமராஜ்' படப் பாடல் இதோ.
21 Comments:
//நல்லவர் பெயரை கெடுக்க வேண்டாமேன்னு வைக்கலை. //
அம்மா தப்பா கணித்து விட்டார்கள். காமராஜர் பெயரை உதட்டாளவில் உச்சரித்து அவருக்கு அவமானம் செய்பவர்கள் மத்தியில் உங்களை போன்றவர்களுக்கு இருந்திருந்தால் ஆறுதலாகத்தான் இருக்க்கும்
காமராஜர் நமது பெரும் தவ
ரொம்ப நல்லப் பாடல் சிவா. நன்றி. அதென்ன அருமையான 'அம்மா' என்ற சொல்லை விட்டுவிட்டு மம்மி அம்மின்னு எழுதுறீங்க?
முத்துகுமரன்! பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க :-). நண்பர் என்பதனால் விட்டுடலாம் :-)).
அனானிமஸ் ஏதோ சொல்ல வந்து பாதிலையே போய்ட்டார் :-)
குமரன்! நான் எப்பவுமே அப்படி எழுதியது இல்லை. சும்மா போட்டு பார்த்தேன். வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திருவீங்களே :-). சரி! இப்போது சரி செய்து விட்டேன். கிராமத்துல ஏதுங்க மம்மி எல்லாம். சும்மா வெளாட்டுக்கு எழுதினேன் :-). பாட்டை கேட்டதற்க்கு நன்றி.
நான் ஆறுதலாகத்தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன். உங்களை தூக்கி பிடிக்கவில்லை.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் சிந்தனையை மதித்துதான் அப்படி சொல்லியிர்ந்தேன். இது ஒருவகையில் ஆதங்கம்தான்.
அருமையான தலைவர்
அருமையான இசை
அருமையான பாடல்
அருமையான பதிவு
அன்புடன்
கீதா
நல்லது முத்துகுமரன்! நீங்க சொன்ன மாதிரி ராஜா இசை கேட்கும் அனைவரும் எனக்கும் நண்பர்களே. அதில் உங்களுக்கு முதல் இடம். பிறருக்கு உதவுவது நல்லது தானே! எல்லாம் அந்த நடராஜன் (நண்பர்) அருள் :-)
கீதா! வாழ்த்துக்களுக்கு நன்றி. அருமையான கமெண்ட் :-) ம் கூட.
சிவா, நேத்து பார்த்தேன் ஆனா வேலைனால எழுத முடியாம போச்சு... ஆனா நேத்தே ஒரு + போட்டாச்சு :). நம்ம பதிவுக்கு இலவச விளம்ரம் வேற தந்திருக்கீங்க... நன்றி:))). நம்ம DVD கலெக்சன் லிஸ்ட்ல இந்த படமும் இருக்கு, நல்ல பாட்டு, நெறையா தடவ MP3 தேடி தெடி அலுத்து போயி விட்டுட்டேன், இப்ப லிங்க் குடுத்துறீக்கீங்க... ஒரு சனி, ஞாயிறு போல பதராம கேக்கணும்.
அப்புறம் நீங்க காமராஜ் பிறந்த நாளில் பிறந்தவரா...ம்ம்ம்.... நல்ல விஷயம்தான்....
டண்டணக்கா (பேர சொல்லுங்கப்பா :-)
வருகைக்கு நன்றி. காமராஜ் DVD வைத்திருக்கிறீர்களா? எல்லோரும் தங்களது கலெக்க்ஷனில் வைக்க வேண்டிய ஒரு படம். படமும் நன்றாகவே பண்ணியிருப்பார்கள். ரிச்சர்ட் மதுரம் காமராஜாகவே வாழ்ந்திருப்பார். அவரும் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று கேள்வி பட்டு ரொம்ப கஷ்டமா இருந்தது.
super Siva...
Nandri
Anbudan,
Natarajan.
ஒரு முறை தலைவர் மேடையில் இருக்கும் போது ஒரு பொடியன் தலைவருக்கு மாலை போட்டான் அவனை அழைத்து தம்பி," உனது பெயர் என்ன " என்று கேட்டார் அதற்கு அந்த பையன், "காமராஜ்" என நச்சுன்னு சொன்னான் அதைக்கேட்டு தலைவர் சத்தமாக சிரித்தார் இதை ஒரு முறை நான் சிறு துணுக்காக படித்தேன்
வாங்க நடா! பாட்டு பக்கம் முதல் முதலா வந்திருக்கீங்க. அடிக்கடி வருவது தானே! பாட்டு புடிக்கதோ?.
என்னார்! சுவாரசியமான துணுக்கு. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.
இரண்டு முறை இந்த படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன் .அதிலும் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் நாகர்கோவிலில் அமோக வெற்றிபெற்ற பின்னர் படுக்கையிலிருக்கும் அம்மாவை காணச்செல்லுவார் .அப்போது அவர் அம்மா "விருது நகர் காரங்களுக்கு உன் அருமை தெரியல்லியே ராசா ! நாகர்கோவில் காரங்க நல்லா இருக்கட்டும்" என்று சொல்லுவதாக வரும் காட்சியில் நாகர்கோவில் காரனாக பெருமையில் கண்ணீர் வந்து விட்டது.
இசைஞானி என்னமா போட்டிருக்கார் பாட்டு? இனிமே இப்படி ஒரு தலைவன் கிடைப்பானா?
வாங்க ஜோ! நட்சத்திர வாரத்துல கலக்குனீங்க. மறுபடி இப்போ தான் பார்க்கிறேன். நீங்க நாகர்கோவிலா.
அப்படி ஒரு தலைவர தோற்கடிக்க மக்களுக்கு எப்படி மனது வந்ததோ. ஹ்ம். எப்படியோ ஒங்க ஊரு காரங்க ஜெயிக்க வச்சாங்களே.
சிவா,
கிறிஸ்துமஸ்-க்கு ஊருக்கு போயிட்டு வந்தேன்.அதான் இடைவெளி .ஆமா! பெருந்தலைவரை இன்னும் கொண்டாடுகிற நாஞ்சில் நாட்டுக்காரன் நான்.உங்களைப்போல இசைஞானி ரசிகன்.
//**உங்களைப்போல இசைஞானி ரசிகன். **// அட நீங்க நம்ம ஆளு. உங்களை பற்றி தெரிந்ததில் சந்தோசம் ஜோ.
பாடலைப் படத்தோடு பார்த்து அழுதது உண்மை. அசைவம் சாப்பிடணும் போல இருக்கு முட்டையை வேக வையப்பா என்று சொல்வதிலும், சாராயம் காய்ச்சியவனை மன்னிக்காத இடத்திலும் பெருந்தலைவர் நிற்கிறார். படம் நல்லா ஓடி இருந்துச்சுன்னா நல்லாருந்திருக்கும்.
Siva - I guess after a very long time (after Sola pasungiliye) this song was really perfect for the situation in the movie and apt for the great leader Kamaraj. I was also moved by this song very much...Anand Subramanian.
கைப்புள்ள !
//** படம் நல்லா ஓடி இருந்துச்சுன்னா நல்லாருந்திருக்கும் **// நம்ம ஆளுங்களுக்கு தான் ரெண்டு குத்துப் பாட்டு இருந்தா தான பாப்பானுங்க..பாரதி, காமராஜ் மாதிரி படமெல்லாம் பாப்பாணுங்களா :-(
ஆனந்த்! முதல் வருகைக்கு நன்றி.
//** (after Sola pasungiliye) this song was really perfect for the situation **// ஆமாம் ஆனந்த். அதிலும் படம் இறுதியில் ராஜா பாடிய சோக பாடல், நெஞ்சை பிழியும். ரொம்ப அருமையான பாடல்.
Post a Comment
<< Home