கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, December 12, 2005

குட்டி குட்டி பாட்டு & பாட்டுப்போட்டி

இந்த பதிவில் ராஜாவின் இசையில் சில குட்டி பாடல்கள் ( 1 நிமிட பாட்டு) சில கேட்கலாம். நிறைய குட்டி பாட்டு, ஒரு பெரிய பாடலின் சோக பாட்டாக வரும். அவற்றை தவிர்த்து, சில பாடல்கள் சின்ன பாடல்களாகவே கம்போசிங் செய்திருப்பார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கட்டமைப்புக்குள் வராமல், இந்த பாடல்களை பண்ணியிருப்பார்கள். மின்னலென வந்து படத்தில் வரும் இந்த பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். அதில் சிலவற்றை இங்கே கேட்கலாம். இந்த தலைப்புக்கு ஐடியா கொடுத்த அல்வா சிட்டி சம்மிக்கு நன்றி.

1. இந்த பாட்டு, 'அதிரடிப்படை' அப்படின்னு நடிகை ரோஜாவை ஓட்டாண்டியாக்கிய படத்தில் இருந்து. இசை கம்மியாக, குரல் ஓங்கி ஒலிப்பதால், நம்ம குமரனுக்கு புடிக்கும்னு நெனைக்கிறேன். பாடியது சித்ரா.








2. ரெண்டாவது. ஒரு வளைகாப்பு பாட்டு. புது பாட்டு படத்தில் இருந்து. இதுவும் சித்ரா. ரொம்ப அருமையான பாட்டு. இங்கே








3. முதல் மரியாதை படத்துல நிறைய குட்டி பாடல்கள் வரும். அதில் 'ஏ குருவி' பாட்டு இங்கே.








4. 'ஏறாத மல மேல' . இந்த பாட்ட கிராமத்துல போடுவாங்க, நான் சின்ன பையனா இருக்கச்சுல..மலேசியா சும்மா கின்னுன்னு தொடங்குவார் பாருங்க. சூப்பர்.








5. இந்த பாட்டு எல்லோருக்கும் தெரிஞ்ச பாட்டு தான். 'வீரா' வில் அருண்மொழி பாடிய 'ஆத்துல அன்னக்கிளி'








6. சமீபத்தில் வெளியான 'விஷ்வ துளசி'-ல நிறைய குட்டி பாட்டு இருந்தது. அதில் இருந்து ஒரு பாட்டு.






பாட்டுப் போட்டி:

இந்த Interlude-அ கேளுங்க. என்ன பாட்டுன்னு சொல்லுங்க.







10 Comments:

At 4:21 AM, Blogger பினாத்தல் சுரேஷ் said...

ennai maathiri real -player illatha pavappatta jeevankaLukku?

 
At 7:20 PM, Blogger Radha Sriram said...

usha .ke theriyalaya...pinna naangellam endha moolai...hm.
hint kudunga shiva try pannaren!!!!

Radha

 
At 7:55 PM, Blogger சிவா said...

வாங்க ராதா! ஒங்களுக்காக தான் இந்த போட்டி வெயிட்டிங். ரொம்ப கவலை பட்டீங்களேன்னு உஷாவுக்கு க்ளு கொடுக்காம வைத்திருந்தேன். இப்போ மறுபடியும் கேட்டுப்பாருங்க. கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். ஏதாவது தெரியுதான்னு பாருங்க. க்ளு - இது ஒரு பிரபு பாட்டு :-). குயிக்..உஷா கண்டுபுடிச்சிர போறாங்க

 
At 7:57 PM, Blogger சிவா said...

சுரேஷ்! வாங்க. முதல் வருகைக்கு நன்றி. ரியல் ப்ளேயர் ஓசிலேயே கெடைக்குமே. இறக்கி கொள்ளுங்கள். எளிது தான்.

உஷா! குவிஸ் மறுபடி கேட்டு பாருங்க. நான் கொடுத்த க்ளு-வ பாருங்க..

 
At 3:46 AM, Blogger குமரன் (Kumaran) said...

குட்டிக்குட்டிப் பாட்டெல்லாம் நல்லா இருக்கு சிவா.

 
At 10:48 AM, Blogger கீதா said...

ஏங்க இப்படி பன்னிட்டிங்க. ஒரு நிமிஷம் பாட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டை விட்டுட்டிங்க.

"அடி ஆத்துக்குள்ள அத்திமரம்.." னு ரஜனி பாடுவாரே(படத்துலதான்) ராஜாதி ராஜா ல.

அப்புறம் முதல் மரியாதையில "ஏ கிளியிருக்கு பழமிருக்கு..." கடைசியா முடியும் அந்த ஓஹோ ஹோ ஓ ஒ ஒ ஓ சூப்பரா இருக்கும்.

இப்படிப்பட்ட அருமையான பாடல்களை போடாம விட்டதனால உங்களை வன்மையா ( :) ) கண்டிக்கிறேன்.

-

குவிஸ் பாட்டு தெரிஞ்ச மாதிரியே இருக்கு. மனசுக்குள்ளயே இருக்கு வெளிய வராம படுத்துது. :)

 
At 7:49 PM, Blogger சிவா said...

உஷா! அப்பாடா..கண்டுபுடிக்க முடியலையா :-).. பாட்டச்சொன்னா, பூ..இதானா அப்படிம்பீங்க :-). நாளைக்கு காலைல நேயர் விருப்பத்தில் விடை சொல்லிடறேன். (அதுக்குள்ள யாராவது முயற்சி பண்ணுறாங்களான்னு பார்க்கலாம்).

 
At 8:00 PM, Blogger சிவா said...

கீதா, சம்மி, நெறைய பாட்டு வுட்டுப்போச்சு. யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். நெனைவுக்கு வரலை :-) வரும் பதிவுகள்ல கேட்டுடலாம். அரண்மனை கிளில எனக்கு தெரிஞ்சி குட்டிப்பாட்டு ஒன்னும் இல்லையே..'எல்லாமே என் ராசாவுல' ஒரு சந்தகாட்டுக்குள்ளே - சோகப் பாட்ட சொல்லறீங்களா? "வாங்கி வந்த மல்லிகப்பூ சூடிக்கொள்ள அன்பு தாரமில்ல' அப்படின்னு ராஜா பாடுவாறே..அதுவா?.

 
At 3:55 AM, Blogger சிவா said...

வீ.கே! 'அன்புக் கதை' ரொம்ப அருமையான பாடல். என்னோட லிஸ்ட்ல இருக்கு. இது 'உறுதி மொழி' இல்லை, நீங்க சொன்ன மாதிரி. //** இந்த பாட்டு அந்த படத்தையும் தாண்டி புனிதமானதுன்னு தோணுது.:-)**// ஹாஹாஹா.. ஆமாம்.

உஷா! விடை போட்டு விட்டேன். ஹீரோயின் பேர சொல்லா கண்டு புடிச்சிருவீங்களே :-) (சும்மா). எல்லா போட்டிலயும் நீங்களே ஜெயிக்கலாம்னு பாக்கறீங்களா. நான் எப்போ ஜெயிக்க :-)))
இனி வரும் போட்டிகளில் கடைசி தேதி வச்சுக்கலாம். என்ன சொல்றீங்க

 
At 3:59 AM, Blogger சிவா said...

குமரன்! நன்றி! மொத பாட்டு புடிச்சிருந்ததா?.

 

Post a Comment

<< Home