கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, December 01, 2005

நேயர் விருப்பம் - 1

இந்த பதிவுல மூனு பாட்டு கேட்போம். முதலில், புதிதாக நம்ம ப்ளாக்கு வருகை தந்திருக்கும் 'அல்வா சிட்டி' சம்மியை வரவேற்று அவர் விருப்பப் பாடல் ஒன்றை கேட்கலாம் ( எங்க ஊரு காரவியலா போய்டீயல்லா! அதான் மொத பாட்டா போட்டாச்சு :-) ). "மனிதரில் இத்தனை நிறங்களா" அப்படீங்கற படத்துல இருந்து ஒரு நல்ல S.P.B பாட்டு. டி.வி-ல அடிக்கடி பாக்கலாம். ஸ்ரீதேவிவை பார்த்து ஒரு முகம் தெரியாத ஹீரோ (தெலுங்கோ?) பாடிக்கிட்டு இருப்பாரு...இந்த பாட்டுக்கு இசை யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்கடே. இந்த பாட்டு கொடுத்து உதவி செய்த மரவண்டு கணேசுக்கு ரொம்ப நன்றி. இப்போ பாட்டு...


அப்புறம் ரெண்டாவதா அக்கா உஷா, போட்டி-2 ல் வெற்றி பெற்று பரிசாக :-) அவங்க விருப்ப பாடலை தட்டிக்கிட்டு போறாங்க. "நதியை தேடி வந்த கடல்" படத்துல இருந்து நம்ம இசைஞானி இசையில் S.P.B & சுசீலா பாடிய "எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்" பாடலை கேக்கலாம். இந்த பாட்டு கிட்டத்தட்ட "நானொரு பொன்னோவியம் கண்டேன்" போலவே Orchestration இருக்குது. கேட்டு மகிழுங்கடே. இந்த படத்துல இன்னொரு நல்ல பாட்டு "தவிக்குது தயங்குது ஒரு மனது". ஜெயச்சந்திரன் பாடிருப்பார். அதை அப்பறம் பாக்கலாம்.


நம்ம ப்ளாக்குக்கு ரசிகையாகி போன கீதா (அக்கா?) ஒரு பாட்டு கேட்டாங்க. "அம்மா" படத்துல இருந்து. கீதா! நான் அந்த பாட்டை கேட்டதில்லை. கிடைத்தால் உங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன். அதற்க்கு பதிலாக என்னோட தேர்வா ஒரு பாட்டு போடுகிறேன். புடிச்சா சொல்லுங்க. "பகல் நிலவு" படத்துல இருந்து "பூவிலே மேடை நான் போடவா" ஜெயச்சந்திரன், சுசிலா பாட்டு. இந்த படத்துல இருந்து "பூமாலையே தோள் சேரவா" பாட்டு பட்டையை கிளப்பியது எல்லோருக்கும் நினைவிருக்கும். சரி இப்போ பாட்டு..
20 Comments:

At 11:38 PM, Blogger ramachandranusha said...

முதல் பாட்டு சலீல் செளத்ரி, இந்த பாட்டை பற்றி நிறைய முறை இணைய உலகில் பேசியிருக்கிறோம். என் மனம் கவர்ந்த
முதல் பத்தில் வரும் பாடல் இது . மிக்க நன்றீ

 
At 11:44 PM, Blogger ramachandranusha said...

ஹம்மிங் எஸ்.பி ஷைலஜா. இன்னும் முதல் பாட்டை தாண்டி அடுத்துப் போகவில்லை :-)

 
At 1:45 AM, Blogger G.Ragavan said...

பூவிலே மேடை நான் போடவா.........எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஜெயச்சந்திரன் குரலும் சுசீலாவின் குரலும் இணைந்து இழைந்து இயைந்து ஒலிக்கும். என்ன அற்புதமான பாடல்.

அதெல்லாம் சரி. எனக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் போட மாட்டீங்களா?

 
At 1:48 AM, Blogger G.Ragavan said...

உஷா, மழை தருமோ மேகத்திற்கு இசை சலீல் சவுத்ரி இல்லை. இசையமைப்பாளர் பெயர் மறந்து விட்டது. மெல்லிசை மன்னரிடம் உதவியாளராக இருந்தவர்.

சலீல்தா இசையமைத்த தமிழ்ப்படங்கள்....
தூரத்து இடிமுழக்கம்
அழியாத கோலங்கள்
கரும்பு (படம் எடுக்கப்படவேயில்லை. சிலப்பதிகார வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் சலீல்தா. சுசீலாவும் ஜேசுதாசும் பாடியது.)

 
At 4:09 AM, Blogger சிவா said...

வாங்க உஷா! நிறைய பேரு என்னை போல பாட்டு கேக்கறத பாக்க சந்தோசம். தகவலுக்கு நன்றி. அந்த ஹம்மிங் S.P.சைலஜாவா. ரொம்ப நல்லா இருக்கு. அந்த படத்தை பற்றி, இந்த பாடல் வெளியாகும் போது இந்த பாடலின் வரவேற்ப்பை பற்றி தெரிந்தால் சொல்லுங்க.

ராகவன்! உங்களுக்கும் புடிச்ச பாட்டா. சும்மா பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கும் போது அப்படியே போட்டு விட்டேன். "அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி" என்று சுசிலா ஆரம்பிக்கும் போது சும்மா ஜிவ்வென்று பாட்டு பறக்கும். ரொம்ப அழகு, நீங்க சொன்ன மாதிரி. பாட்டு உங்களுக்கு இல்லாமலா! எல்லோர் விருப்பமும் இங்கே கேட்கலாம். சொல்லுங்க. அடுத்த பதிவா போட்டுடலாம். மற்ற பாடல்களையும் நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள்.

 
At 4:51 AM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Thanks for my request.Ennudiaya player ippodhu dhan work aradhu.Today songs ellam best nos.
Ungaludaiya writings nalae
blog interestaga iruku.Keep it up!!!!!

mazhi tharumo en megam - by Shyam? i think.

Poovilae medai - Jayachandran and Suseela voice nal, indha song enaku miga pidikum.

Thanks a lot for your serivice Siva!!!!

With Love,
Usha Sankar.

 
At 4:51 AM, Blogger பாலராஜன்கீதா said...

மழை தருமோ என் மேகம் என்ற பாடல் குறித்த அதிக விவரங்களுக்கு

http://www.kambar.org/sotd2/306.html

 
At 6:47 AM, Blogger கீதா said...

சிவா,

"அம்மா" படத்துல நான் சொன்ன "மழையே மழையே பாடல் இந்த சுட்டியில கேட்டுப் பாருங்க. class song. SPB யின் குரல்ல எவ்வளவு உருக்கம்.

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.2139/
(அ)
http://as01.cooltoad.com/music/song.php?id=159821

அந்த இன்னொரு பாடல் கிடைக்கலை. :(

--

மூன்று பாடலுமே அருமை. இதுல முதல் பாடல் நான் TVயில் நிறைய முறை பார்த்திருக்கேன். ரொம்ப மெலோடியஸ் பாடல். இந்த பாடல்கேட்டா எனக்கு இன்னொரு பாடல் உடனே நியாபகம் வரும். அதுவும் ரொம்ப rare பாடல் தான்.

பாடல்: "அங்கும் இங்கும் பாதை உண்டு இதில் நீ எந்தப் பக்கம்..."
பாடியவர்: SPB
படம்: அவர்கள்

class song இது.

இரண்டாவது பாடல் நான் கேட்டதில்லை.

மூன்றாவது பாடல் வாவ் அருமையான பாடல். ஜெயசந்திரன் அருமையான பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார். (மரவண்டு நிறைய collections வச்சிருக்கிறார் ஜெயசந்திரன் பாடல்கள்)
1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்...
2. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்..(கொஞ்சம் fast ரொம்ப நல்லா இருக்கும்..தையாரேத் தையாவுக்காகவே கேட்பேன்)
3. தேவன் தந்த வீணை..
4. கொடியிலே மல்லிகைப்பூ...
5. ஒரு வானவில் போலே
6. மாஞ்சோலைக் கிளிதானோ

இந்தப் பட்டியல் நீளும்..


---

நீங்க என்னை சகோதரின்னு சொல்லி இருந்தா எந்த பிரச்சனையுமே இருந்திருக்காது (அக்கா/தங்கை :) ) எனக்குத் தெரியலை.. நான் பிறந்தது 1979 அக்டோபர்ல. அப்ப உங்களுக்கு நான் அக்காவா? தங்கையா? :)

 
At 7:04 AM, Blogger கீதா said...

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.2139/

முதலில் கொடுத்த இந்த சுட்டி சரியில்லை.

 
At 7:37 AM, Blogger சிவா said...

அடடா வாய கொடுத்து மாட்டிகிட்டேனா?. சகோதரின்னே வச்சுக்கலாம் :-). இல்லன்னா அண்ணேன்னு திருப்பி தாக்கிடுவேஙளோ?
சும்மா சொன்னேன்..தாராளமா கூப்பிடுங்க..அடியேன் 1976 ஜுலை..நீங்க 80ல் வந்த பாட்டா போட்டு தாக்குனீங்களா, அதான் அக்கான்னு போட்டுட்டேன் :-). கொஞ்சம் 90ல் வந்த பாட்டும் (நம்ம ரேஞ்சுக்கு) கேளுங்க. 90ல் வந்த பாட்டு போட்டா சப்போட்டே இல்லை :-(

 
At 9:52 AM, Blogger குமரன் (Kumaran) said...

இலவச இணைய விவித்பாரதிக்கு நன்றி சிவா. பூவிலே மேடை நான் போடவா பிடிச்சிருந்தது.

 
At 12:34 PM, Blogger கீதா said...

90's ல வந்த பாடல்களும் கேட்காம இல்லை.. ஆனாலும் மனதை வருடும் பாடல் கேட்கனும்னா 80களின் பாடல் தான் கேட்கத் தோணுது..

90களின்,2000களின் பாடல்கள் ஒரு சின்ன உதாரணம் தான்..

1. புத்தம்புது பூ பூத்ததோ - தளபதி
2. சுந்தரி கண்ணாலொரு சேதி- தளபதி
3.நதியோடும் கரையோரம் - ஆவாரம்பூ
4.ஒரு கனம் ஒரு யுகமாக - நாடோடித்தென்றல்
5.கண்ணாலே காதல் கவிதை - ஆத்மா
6.வாராயோ உனக்கே சரன் நாங்களே - ஆத்மா
7. Sriranga ரங்கநாதனின் பாதம் - மகாநதி
8.தென்ற்ல் வந்து தீண்டும்போது - அவதாரம்
9.அப்டி பாக்கிறதுன்ன வேணாம் - இவன்
10. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு (class song)
11.நேத்து வரைக்கும் - கஸ்தூரி மான் (ஏதோ ஒரு பாட்டை நியாபகப் படுத்துது)

 
At 1:00 PM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா...கீதா கேட்ட எல்லா பாடல்களும் உங்ககிட்ட இருக்கா? இருந்தா போடுங்க. இனி நிறைய நேயர் விருப்பம் போடலாம். போட்டியெல்லாம் நிறுத்திடலாம். ஏன்னா எனக்கு போட்டின்னா ஒன்னும் புரியமாட்டேங்குது. :-)

 
At 5:18 PM, Blogger சிவா said...

குமரன்! விவித்பாரதியை நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஆமாம், தினமும் 4 பாட்டு போட்டா அப்படி ஆகிவிடும். நேரம் இருந்தால் பண்ணலாம். கீதா வரிசை படுத்தியிருக்கும் பாட்டு எல்லாம் இருக்கிறது. மெதுவாக ஒவ்வொன்னா கேக்கலாம்.

கீதா! 90ல் மனதை வருடும் பாட்டு நெறைய இருக்கு, அடுத்த வாரம் 90ல் வந்த பாட்டு வாரம்னு வச்சிக்கலாமா?. உங்க பாட்டு வரிசை நல்லா இருக்கு, நேத்து வந்த கஸ்தூரி மான் வரைக்கும் கவர் பண்ணிட்டீங்களே. நேத்து வரைக்கும் பாட்டு ரொம்ப நாளைக்கப்புறம் சுஜாதா குரலை கேட்டவுடன் ஏதோ பழைய பாட்டு மாதிரி இருக்கு :-)

 
At 5:30 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! இப்போ தான் ப்ளேயர் ஒர்க் ஆகிறதா. நல்லது. வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாம் அது ஷ்யாம் என்று பாலராஜன்கீதா (என்ன இது ஒரே உஷா, கீதா மயமா இருக்கு) கொடுத்த சுட்டியில் இருக்கிறது. சர்வீஸ் எல்லாம் இல்லை :-). நமக்கு ராஜாவின் பாட்டை ரசிப்பதற்கு கசக்குமா என்ன?. நீங்க உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வந்து எல்லா பாட்டையும் கேட்டு சொல்லறீங்களே. அதுக்கு நன்றி..நன்றி..ஐடியா நெறையா கொடுங்க. நெறைய பாட்ட பற்றி விவாதிக்கலாம்னா நேரம் கிடைக்க மாட்டேங்குது. கிடைக்கும் நேரத்தில் பதிவு போடவே போய்டறது :-)

பாலராஜன்கீதா! உங்க லிங்க் பார்த்தேன். நெறைய விசயங்கள் தெரிந்தது இந்த பாடலை பற்றி. தெரிவு படுத்தியமைக்கு நன்றி.

கீதா! 'மழையே மழையே" பாட்ட இன்னைக்கு தான் ரொம்ப நாளைக்கப்புறம் கேட்கிறேன். நன்றி. நீஙக சொன்ன மாதிரி இந்த அமைதி , உருக்கம் லேட்டஸ்டா வந்த பாடல்களில் இல்லை. சுசிலா பாட்டு கெடைச்சா சொல்கிறேன்.

 
At 6:31 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

அடடா, கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வரதுக்குள்ள 2 பதிவு போட்டீங்களையா?

முதல்ல கேட்ட பாட்ட போட்டதுக்கு நன்றி அண்ணாச்சி.

பாடல் இசையமைப்பாளர் ஷயாம்-னு சொல்லுறதுக்குள்ள் பாலராஜன்கீதா அழகான சுட்டி குடுத்து அசத்தீட்டாங்க நன்றி. அந்த படத்துல உள்ள மற்றொரு நல்ல பாடல் "பொன்னே பூமியடி அட..... மேலும் படத்துல கமல், ஸ்ரீதேவி உண்டு ஆனால் கமலுக்கு ஜோடி சத்தியபிரியா(கோலங்கள் புகழ்) ஸ்ரீதேவிக்கு யாருன்னு தெரியலை(தெலுங்கு நடிகர் மாதிரி தெரியும்).

அண்ணாச்சி நல்ல பாட்டா போடுதீங்க. மேலும் கேக்குறவங்களும் நல்ல ரசனையா காதுக்கு தீனி போடுறாங்க. இத பத்தியெல்லாம் எழுதனும்னா ஒரு மணி நேரம் வேணும்.

இப்ப நா கேக்குற பாடல்கள்....

எங்க ஊரு காவல்காரன் - அரும்பாகி மொட்டாகி பூவாகி (பாடகர்கள்?)
புதுக்கவிதை - அரே வாரே வா ( ஜானகி, ஜேசுதாஸ்)
புதுக்கவிதை - வா வா வசந்தமே (மலேசியா)
குணா - அப்பனென்றும் அம்மையென்றும் (மொட்டை)
முதல் மரியாதை - (எல்லா பாட்டும்) குறிப்பா - ஏறாத மல மேல எலந்த பழுத்துருக்கு (ஜானகி, மலேசியா)

இப்போதைக்கு இதோட நிறுத்துறேன், படிக்கிறவங்களுக்கு அலுப்புதட்ட போது?

 
At 6:40 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

மன்னிக்கனும், நா கேக்குற பாடல்கள்-னு சொன்னது நா கைக்கணில போக வரும்போது கேக்குற பாடல்கள்.

நா மட்டும் பாட்டு கேட்டுடே இருந்தா நல்லா இருக்காதுல்ல மக்கா?(நம்ம ஊரு ஆளு ஒடனே வேற போட்டுருதாரு ;-) )

இந்த முதல் மரியாதை பாட்டேல்லாம் கேக்கும்போது மொட்டையோட குட்டி பாடல்கள் பத்தி ஒரு பதிவு போட சொல்லலாம்னு தோணுது?

குட்டி பாடல்கள் :
முதல் மரியாதை - ஏறாத மல மேலே
வீரா - ஆத்துக்குள்ளே
சின்ன கவுண்டர் - சொல்லால் அடித்த சுந்தரி

எப்படி வசதி?

 
At 6:51 PM, Blogger சிவா said...

இப்போ தான் நேரம் கெடைச்சுதா சம்மி! வாங்க. நான் கூட குட்டி பாட்டு பதிவு ஒன்னு போடலாம்னு தான் நெனைச்சிருந்தேன். பாடல் வேற சொல்லிட்டீங்க. சீக்கிரம் போட்டுடலாம். எனக்கு 'வாரே வா..' பாட்டு ரொம்ப புடிச்சது. யேசுதாஸ்-க்கு வித்யாசமான டூயர். அரும்பாகி மொட்டாகி - ஜெயசந்திரன், சுசீலா- என்று நெனைக்கிறேன். சீக்கிரம் எல்லா பாட்டும் பார்க்கலாம்..கேக்கலாம் :-))

 
At 9:13 PM, Blogger Usha Sankar said...

Dear Siva,

Arumbagi mottagi - Arnu mozhi nu ninaikiraen.

With Love,
Usha Sankar

 
At 10:12 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

சிவா மற்றும் உஷா நீங்க 2 பேரு சொன்னதும் தப்பாம்? அத பாடினது சுசீலா மற்றும் தீபன் சக்கிரவர்த்தி. எனக்கு எஸ்.என்.சுரேந்தர்னு சந்தேகம். ஒரு வலைபதிவுல அதையும் போட்டு இருக்காங்க. ஆனா சுசீலாவோட வலைபதிவுல தீபன் சக்கிரவர்த்தினுதான் போட்டு இருக்காங்க. எதுக்கும் அந்த பாட்ட ஒருதடவ கேட்டுட்டு சொல்லுங்க.

இப்பொழுது கேட்க்கும் பாடல்:

படம் - ஆயிரம் மலர்களே
பாடல் - முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே ...

 

Post a Comment

<< Home