கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, December 18, 2005

இசைக் கதம்பம் -2

இரண்டாவது இசைக்கதம்பத்தில் மீண்டும் சந்திக்கிறோம். முதல் இசைக்கதம்பம் எல்லோருக்கும் புடிச்சதுன்னு சொன்னீங்க. நன்றி. இப்போ தொடரலாம்.

ஹிட்டு பாட்டு:

"அன்புள்ள ரஜினிகாந்த்'. படம் இது வரைக்கும் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. எங்க ஊரு R.C கோவில்ல வருசா வருசம் திருவிழாவுக்கு இந்த படத்தை போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். 'ராஜினி அங்கிள், நான் இங்க இருக்கேன்' என்ற குட்டி மீனா குரலை மறக்க முடியுமா (முத்து மணி சுடரே வா). அப்புறம் 'கடவுள் இல்லமே..கருனை உள்ளமே'. சரி! அந்த படத்துல இப்படி ஒரு ஜோடி பாட்டு எப்படி? . படம் பார்த்தவங்க சொல்லுங்கப்பா. 'தேன் பூவே பூவே வா'. அக்மார்க் 80s பாட்டு. கிடார் ரொம்ப ரொம்ப அழகாக பாடல் முழுவதும் பயன்படுத்தி இருப்பார். அருமையான பீட். பாடினது S.P.B & ஜானகி.





அடுத்தாத்து ஆல்பட்:

இளையராஜாவை விட்டா வேற பாடல்கள் சில ஒரு காலத்தில் கேட்பதுண்டு. இப்போ சுத்தம் :-). அதில் சில பாடல்களை இந்த தலைப்பில் வாரம் ஒன்று பார்க்கலாம்.

வித்யாசாகர். இளையராஜாவுக்கு அப்புறம் ஒரு காலத்தில் நான் ரசித்த ஒரு இசை அமைப்பாளர். அவரோட மெலொடி எல்லாம் ஒரு காலத்தில் (ஆவர் ஹிட் ஆவதற்க்கு முன் ரொம்ப நல்லா இருக்கும்). நடிகர் அர்ஜுன்-வித்யா சாகர் காம்பினேசன் ரொம்ப கலக்கலாக இருக்கும். தமிழில் 'ஜெய்கிந்த்'ல் தான் அறிமுகமானார் என்று நினைக்கிறேன். 'சுபாஷ்' 'செங்கோட்டை' படப் பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கும். 'ரன்' வரைக்கும் எனக்கு அவரை பிடித்திருந்தது. அப்புறம் அவர் ஏனோ அவ்வளவாக ரசிப்பதில்லை. என் ரசனை மாறி விட்டது என்று நினைக்கிறேன். 'செங்கோட்டை" ( அர்ஜுன்-ரம்பா) படத்தில் இருந்து 'பூமியே! பூமியே" பாடல். எனக்கு எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல். மீண்டும் S.P.B & ஜானகி. இரண்டு பேருமே ரொம்ப ரொம்ப அழகாக பாடி இருப்பார்கள். S.P.B பேஸ் வாய்சில் பாடி அசத்தியிருப்பார். பாட்டு இங்கே.





அக்கம் பக்கம்:

தமிழ் பாடல்களை தவிர வேறு மொழிப்பாடல்கள் எத்தனை பேர் கேட்பீங்கன்னு தெரியலை. இசைக்கு மொழி ஏது. (ஒரு காலத்துல ஹிந்தி பாட்டு கேக்கலையா :-). இந்த தலைப்புல ராஜாவின் இசையில் சில மலையாளப் பாடல்கள் பதிகிறேன். கேட்க முயற்ச்சி பண்ணிப் பாருங்க.

"Poomukhappadyyil Ninneum Kaathu". இது ஒரு மோகன்லால் படம் என்று என் CD சொல்கிறது. 1986ல் வெளி வந்த படம். யேசுதாஸ் குரலை மலையாளத்தில் சொல்லவும் வேண்டுமா. இதுவும் ஜானகி தான். ஒரு தடவை பொறுமையாக கேட்டுப் பாருங்கள். அப்புறம் கேட்பதை நிறுத்த பாட்டீர்கள். என் பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு. இந்த பாட்டை போட்டால், 'கொஞ்சி கரையல்லே..கொஞ்சி கரையல்லே' அப்படின்னு பாடிக்கிட்டே இருப்பாள். கேட்டு வாங்கி போட்டு கேட்பாள். அவளுக்கு இப்போ 2 1/2 வயது ஆகிறது. உங்களுக்கும் பிடிக்கும். கேட்டு பாருங்கள்.






ஊத்திக்கிச்சி:

இந்த தலைப்பில் படம் ஊத்திக்கிட்டதால் ராஜாவின் காணாமல் போன பாடல்கள் பற்றி பார்க்கலாம். என்னோட ரசனையை போட இந்த தலைப்பு :-). 90ல் வந்த சில நல்ல பாடல்கள், மக்கள் ரசனை மாறிப் போனதால் காணாமல் போய் விட்டது.

'ராசாமகன்'. பிரசாந்த்-சிவரஞ்சனி நடித்து வெளிவந்த படம். 90s ல பிரசாந்த் படங்களில் ராஜாவின் இசை ரொம்ப நல்லா இருக்கும். 'ராசா மகனில் 'வைகாசி வெள்ளிக்கிழம' S.P.B பாடல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த பாடல் சிலரே கேட்டிருப்பீங்க (கீதா! சூடத்தோட சுற்றுவதால், 'யாரும் கேட்டிருக்க மாட்டீங்கன்னு' சொல்லலை :-)). ஒரு தாய் பாடும் வித்தியாசமான ஒரு ஏக்க தாலாட்டு. சுனந்தாவின் குரல் நன்றாக உருக்கமாக இருக்கிறது. கவிதை வரிகள் அழகு. ராஜாவின் தபேலாவுக்காக ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.






போட்டி எண்-4:

இப்போ நீங்க ஆவலுடன் இந்த வாரப் போட்டி. சென்ற போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. இந்த வாரம் இரண்டு Interludes. பாட்ட கண்டு பிடிங்க Please..போட்டியோட கடைசி தேதி புதன் கிழமை. அடுத்த நிமிடமே பதில் சொல்ல இங்கே நிறைய பேர் இருக்கீங்க :-). யாரும் கண்டு பிடிக்கவில்லை என்றால், வியாழக்கிழமை காலை (இந்தியாவில் வியாழன் மாலை) விடைய சொல்லிடலாம். என்ன சொல்றீங்க.

1.





2.




11 Comments:

At 6:12 AM, Blogger Koman Sri Balaji said...

Siva Vidyasagar's first movie is Nila Pennae Starred Anand and Divyabarathi.... The songs in that movie also good....

 
At 6:36 AM, Anonymous Anonymous said...

சிவா,

அன்புள்ள் ரஜினிகாந்த் படத்துல குட்டிமீனாவுக்கு அம்மா அம்பிகா. அவங்க அவங்களோட ல்வ்வரோட பாடும் பாடல் தான் 'தேன் பூவே பூவே.." படம் பார்த்திருக்கேன். ஏன் மீனாவை ஆசிரமத்துல விடுவாங்கணு மறந்துடுச்சு.

"பூமியே பூமியே" நல்ல பாடல். ரொம்ப நாளாச்சு கேட்டு.

நான் ஒரு காலத்துல ஹிந்தி பாடல்கள் கேட்டதுண்டு. இப்ப இல்லை. பழைய ஹிந்தி பாடல்கள் பிடிக்கும். "கலி கலி .. " இப்படின்னு ஒரு பாட்டு ஆரம்பிக்கும் அது பிடிக்கும்.. தமிழ் பாட்டு "கலீர் கலீர்.." நியாபகம் வரும்.

:) நான் ஒன்னும் சூடத்தோட சுத்தலை. 'வைகாசி வெள்ளிக்கிழமை ' பாட்டு கேட்டிருக்கிறேன். நீங்க போட்டிருக்கும் பாட்டு கேட்டதில்லை. ரொம்ப நல்லாருக்கு.

போட்டி நான் பதில் சொல்லுவனா தெரியலை. முயற்சி பன்றேன். கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல தெரியுது.

முயற்சி பன்றேன்.:)

 
At 7:05 AM, Anonymous Anonymous said...

சிவா! போட்டிப் பாடல்கள்ள நான் கண்டுபிடிச்சது ஒரு விஷயம். முதல் பாடல் கொஞ்சம் பழசு, இரண்டாவது கொஞ்சம் புதுசு. ஹ்ம் யோசிக்கிறேன்.

 
At 7:11 AM, Blogger சிவா said...

கீதா! கரெக்டா சொல்லிட்டீங்க. முதல் பாடல் கொஞ்சம் பழசு. ரெண்டாவது புதுசு. இரண்டாவது எளிது தான். முயற்சி பண்ணுங்க. Best of Luck :-)

 
At 4:13 PM, Blogger சிவா said...

வீ.கே! ராஜா இசையில் நான் தெலுங்கு, கன்னடம் கூட கேட்பேன். அவரது இசை தானே மெயின் :-).
மலையாள பாட்டு கேட்டீங்களா?. நல்லது. பொதுவாக வேறு மொழி பாடல் கேட்டால் நமக்கு அவ்வளவு எளிதாக ஒட்டாது. இசையை ரசிக்க ஆரம்பித்து விட்டால், விட மாட்டோம்.

அடடா! போட்டி என்ன, அவ்வளவு கடினமா?. இரண்டாவது கேள்வி மிகவும் எளிது என்று அல்லவா நினைத்தேன். மற்றவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம். நாளை ஒரு க்ளு சொல்கிறேன்.

ராசாமகனில், நீங்க கூறிய பாடல்கள் எல்லாமே ஹிட்டு. நான் நன்றாக, ஆனால் ஹிட் ஆகாத பாடலை அந்த தலைப்பில் போடுகிறேன். அடுத்த நேயர்விருப்பத்தில் ராசாமகனில் இருந்து ஒரு பாடலை போட்டுடலாம்.

 
At 4:38 AM, Blogger சிவா said...

கீதா! வீ.கே! உஷா !

அடடா! அவ்வளவு கஷ்டமானதா?. ரெண்டாவதை எளிதாக கண்டு பிடித்து விருவீர்கள் என்று அல்லவா நினைத்தேன். முதல் க்ளு. முதல் பாடல் ஒரு ரஜினி படம். கீதா சொன்னது மாதிரி Mid 80S. பெண் மட்டும் பாடுவது. ரெண்டாவது ஒரு பிரபு படம்.90s தொடக்கத்தில் வந்தது. இரண்டுமே மேடையில் ஒரு பெண் பாடுவதாக வருவது. இரண்டாவது ஜோடி பாடலாக மாறி விடும். மீண்டும் கேட்டு பாருங்கள். அடுத்த தடவை கண்டிப்பா எளிதாக கேட்கிறேன். அப்புறம் எல்லோருக்கும் Interest போய்விடும் :-)

 
At 4:44 AM, Blogger சிவா said...

பாலாஸ்ரீ! தகவலுக்கு நன்றி. நான் கூட 'நிலா பெண்ணே" பாடல்கள் டி.வில் பார்த்தாக நியாபகம். பாடல் எதுவும் நினைவுக்கு இல்லை.

கீதா! ஓ! அது தான் கதையா! கதை சொன்னதுக்கு நன்றி. ஹிந்து பாட்டு 'கலி..கலி'யா?. "Tridev' ல வருமே அந்ததபாட்டா?. மறுபடியும் போட்டி பாட்டை கேட்டு பாருங்கள். Interlude நீளத்தை அதிகரித்து இருக்கிறேன்.

உஷா! உண்மை தான் வித்யாசாகர் படங்களில் இப்போதும் நல்ல பாடல்கள் வருகின்றன. என் ரசனை தான் மாறி விட்டது :-)

 
At 6:55 AM, Anonymous Anonymous said...

அண்ணே சிவாண்ணே!

ஒரு பாட்டு தெரிஞ்சிடுச்சுண்ணே (அப்பாடி... ம் அவ்வளவா கேட்காத பட்டு)

முதல் பாட்டு

பாடியவர்: ஜானகி
பாடல்: குங்குமத்து மேனி கொள்ளையிட வாநீ
படம்: நான் சிகப்பு மனிதன்

:)

 
At 7:03 AM, Blogger சிவா said...

:) கண்டு புடிச்சிட்டீங்களே கீதா :-). ஆமாம்! அவ்வளவாக கவனிக்க படாத பாடல் தான். அந்த 30 செகண்ட் இன்டர்லுட் கேட்டாலே தெரியும், ராஜா எவ்வளவு ரிச்சாக இசை அமைத்திருப்பார் என்று. ட்ரம்ஸ், கிடார், ட்ரம்பட் என்று ஒரு கலக்கல் பாடல் அது. அதனால் தான் எடுத்து போட்டேன். ஆனால், கவர்ச்சி பாட்டா போய்ட்டதால, யாரும் உக்கார்ந்து பார்க்க முடிவதில்லை :-(.

அடுத்த பாடல் தான் மிகவும் எளிது. சீக்கிரம் சொல்லிருங்க.யாராவது முந்திக்க போறாங்க

 
At 10:26 PM, Anonymous Anonymous said...

Dear Siva,

Any chance ungakkitta Nilaa Pennae paadalgal irukkuma???

Romba varusamaa thedikkittu irukken, kidaikkamaatenguthu!

Athil Gangai Amaran & Chitra sernthu oru super paadal paadiyiruppaanga. Kiccha Kiccha Chaan...Patcchai Kiligal Santhosama...endra paadal megavum arputham...padam flop aanathaale paadalgal marainthuvittana...

Irunthaal thayavu seithu auppungal...Nandri Pongal Vaazthukkal!

 
At 3:27 PM, Blogger சிவா said...

சந்திரா! அடடா! ரொம்ப ரசித்திருப்பீர்கள் போல. என்னிடம் இந்த படம் இல்லையே. நான் சில பாடல்களை டி.வில பார்த்ததோடு சரி. அந்த அளவு ஹிட் ஆகாததால், நீங்க சொன்ன மாதிரி நிறைய பேருக்கு தெரியாமல் போய்விட்டது. உங்கள் இ-மெயில் முகவரி கொடுங்கள். கிடைத்தால் கண்டிபாக உங்களுக்கு சொல்கிறேன்.

 

Post a Comment

<< Home