என் இனிய பொன் நிலாவே
( இன்று நேரம் கிடைக்காததால் சின்ன பதிவா போட்டாச்சு. அடுத்த பதிவில் நிறைய பாடல்களை பேசலாம். கேட்கலாம்).
இளையராஜா-பாலுமகேந்திரா கூட்டணி சாதித்தது நிறைய. பாலுமகேந்திராவுக்கும் இளையராஜாவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ. தெரியவில்லை. அதிலும் மூடுபனிக்கு என் விருப்ப படங்களில் முதலிடம் உண்டு. பாட்டென்ன, பின்னணி இசை என்ன, ராஜா அசத்தி இருப்பார். அது ஒரு கனாக்காலம். அப்படித்தானே?. இந்த பாடல் ஒரு அழியாத வரம் பெற்றப் பாடல் (உஷா அக்கா சொல்ற மாதிரி) என்றே சொல்லலாம். "என் இனிய பொன் நிலாவே". அருமையான கிடார் இசை. யேசுதாஸின் குரல் என்ன ஒரு கவர்ச்சி. முதல் Interlude-ல் வரும் ஹம்மிங்கோடு இணைந்த டிரம்ஸ், அதை தொடர்ந்து வரும் ஹம்மிங்கும் நல்லா இருக்கும்.
பாட்ட கேக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கிடார் பீஸ். மூடுபனி படத்தில் இருந்து. ரொம்ப Simple-லா ஒரு ஹம். உங்களை மயக்குவது நிச்சயம். கேட்டுப் பாருங்க. ( ஒலி தரம் அவ்வளவாக நல்லா இருக்காது. பொருத்துக் கொள்ளுங்கள்)
இப்போ பாட்டு,
2 Comments:
Hi siva
nice song ,
keep sharing some rare songs
Thanks
Ganesh
வாங்க கணேஷ் அண்ணாச்சி! நல்லாருக்கியலா! நீங்க பாட்டு கேக்கறதுல கில்லாடியாச்சே. அறிய பாட்டு தானே போட்டுடலாம்.
உஷா, உங்க தமிழ் எழுத்துக்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. ஏன் என்று கொஞ்சம் பாருங்கள். உங்கள் கமெண்டை படிக்க ஆவலாய் உள்ளேன்.
Post a Comment
<< Home