கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, December 03, 2005

அருண்மொழி பாட்டு ரெண்டு

அருண்மொழி. எனக்கு S.P.B க்கு அடுத்து மிகவும் பிடித்த பாடகர். அலட்டாத, தெளிவான வசீகரிக்கும் குரல். தன் குழுவில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்த நெப்போலியனை, உன்னாலும் நல்லா பாடமுடியும்னு 'அருண்மொழி' என்று பெயரும் சூட்டி பாட வைத்தது இளையராஜா தான். கமலின் 'சூரசம்ஹாரம்' படத்தில் தான் முதன் முதலில் இரண்டு பாடல் பாடி இருப்பார் ( 'நீல குயிலே" "நான் என்பது நீ அல்லவோ" ) . அச்சு அசலாக நடிகர் பார்த்திபனுக்கு பொருந்தும் குரல். அவர் இளையராஜா இசையில் பாடிய பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் தான். போட்டா அத்தனையையும் போடலாம். இந்த பதிவில் எனக்கு புடிச்ச ரெண்டு பாட்டு பாக்கலாம். கேக்கலாம்.

1. "மல்லு வேட்டி மைனர்" சத்யராஜ்-சீதா-ஷோபனா நடித்து வெளி வந்த படம். ஊரில் மைனர் போல அலையும் சத்யராஜ், தெரியாமல் சீதாவை கல்யாணம் பண்ணும் ஒரு சூழ்நிலை வந்து, திருந்துவதாக கதை. இந்த பாட்டே கதை சொல்லும். ராஜாவின் வழக்கமாக தபேலா/புல்லங்குழல் அருமை. S.ஜானகி, அருண்மொழி குரல் எவ்வளவு அழகாக/அமைதியாக பாடலில் ஓங்கி ஒலிக்கிறது. கேட்டுப் பாருங்க.





2. ராஜ்கிரணில் மூன்று படங்களுக்குமே ராஜாவின் இசை மகுடம் என்றே சொல்லலாம். ராஜ்கிரண் படங்கள் பொதுவாக நல்ல கதை களம் கொண்டிருப்பதால், பாடல்களிலும் ராஜா கலக்கிவிடுவார். "அரண்மனை கிளி" படத்தில் இருந்து "ராத்திரியில் பாடும் பாட்டு" இந்த பதிவில். அருண்மொழி, மின்மினி, மலேசியா வாசுதேவன். இதுவும் ராஜாவில் தபேலா விருந்து தான். இரண்டாவது interlude-ல் புல்லாங்குழல் அழகு. இதோ பாடல்.




7 Comments:

At 7:11 AM, Blogger தங்ஸ் said...

Aathamum Eavaalum pola from 'Maruthupaandi' podunga boss..

 
At 7:15 AM, Blogger சிவா said...

வாங்க தங்கம்! 'ஆதாமும் ஏவாளும்" அடுத்த நேயர் விருப்பத்துல போட்டுடலாம் பாஸ் :-)

 
At 3:19 AM, Blogger ஜெ. ராம்கி said...

Did u go thru the post of Maravandu Ganesh?!

 
At 3:43 AM, Blogger சிவா said...

ராம்கி! நீங்க எந்த பதிவை சொல்றீங்க?. கணேசோடஜெயசந்திரன் பதிவையா?. அவரோட எல்லா பாடல் பதிவையும் படித்திருக்கிறேன். தனி மடல் எழுதியும் இருக்கிறேன்.

உஷா! அருண்மொழியோட முதல் படம் 'சூரசம்ஹாரம்' என்று நினைக்கிறேன். எந்த பாடல் என்று சரியாக தெரியவில்லை.

 
At 8:38 PM, Blogger Koman Sri Balaji said...

சிவா அருண்மொழியோட முதல் பாடல் தாலாட்டுப் பாடவா என்ற படம் வராது வந்த நாயகன் என்று நினைக்கிறேன்.... முடிந்தால் அந்தப் பாடலையும் தரலாமே

 
At 6:32 AM, Anonymous Anonymous said...

naanum raja-vin rasigan-thaan, ennaium unga aattathula saerthupingala?!, pls!...

 
At 6:52 AM, Blogger சிவா said...

பாலா! அடுத்த நேயர் விருப்பத்தில் கண்டிப்பா வராது வந்த நாயகன் போட்டுடறேன்.

நண்பரே! இது நம்ம ப்ளாக். நீங்களும் ஆட்டத்துல உண்டு. பேரை சொல்லாம போய்டீங்களே?

 

Post a Comment

<< Home