கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, December 30, 2005

இசைஞானி இளையராஜா

பதிவுக்கு பதிவு ராஜா, ராஜா என்கிறேன். இது வரைக்கும் ராஜா பாடிய பாடல் ஒன்று கூட போடவில்லை பாத்தீங்களா?. சரி இந்த பதிவில் இருந்து தொடங்கி விடலாம். தமிழ் இசையமைப்பாளர்களிலேயே மிகவும் அதிக பாடல்களை பாடியவரும் ராஜா தான். இசையமைப்பாளர்களிலேயே திறமையான பாடகரும் ராஜா தான். சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் பட்டியலிட்டால் குறைந்தது 100 பாடல்கள் கூறலாம். அவரது குரலின் பரிமாணங்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவற்றில் சில இங்கே,

"காதல் கசக்குதையா" (ஆண் பாவம்) என்று நம்மை சிரிக்க வைத்ததும் அவர் குரல் தான். "சோல பசுங்கிளியே" (என் ராசாவின் மனசிலே) என்று நம்மை அழ வைத்ததும் அதே குரல் தான். "ஓரம் போ.. ஓரம் போ" (பொண்ணு ஊருக்கு புதுசு) என்று கிராமத்து கலக்கலும் உண்டு. "ராஜா! ராஜாதி ராஜன் இந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) என்று மாடர்ன் கலக்கலும் உண்டு. "என் தாயெனும் கோவிலை" (அன்னக்கிளி) என்று தாய் பாசத்தையும் கொண்டு வரும், "விழியில் விழுந்து" (அலைகள் ஓய்வதில்லை) என்று காதலையும் கொண்டு வரும். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" (தர்ம பத்தினி) என்று ஜாலி பாட்டும் உண்டு. "ஜனனி ஜனனி" (தாய் மூகாம்பிகை) என்று பக்தி பாட்டும் உண்டு. இதெல்லாம் தவிர, "காட்டு வழி போற பொண்ணே, கவல படாதே" (மலையூர் மம்பட்டியான்) "அம்மன் கோவில் கெழக்காலே" (சகலகலா வல்லவன்) என்று எங்கள் கிராமத்தை கலக்கிய தலைப்பு பாடலும் உண்டு. இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றையும் பார்க்க ஒரு 50 பதிவு வேண்டும். ராஜாவை ஒரு தலை சிறந்த பாடகர் என்றே நான் சொல்வேன்.

1. பக்தி பாடல் போடாமல் பதிவு தொடங்கலாமா?. ராஜா என்றவுடன் "ஜனனி ஜனனி" நினைவுக்கு வராமல் இருக்குமா?. சமீபத்திய திருவாசக்தை தான் மறக்க முடியுமா?. கீதா எனக்கு முன்பே தாய் மூகாம்பிகை பாடலை வலை ஏற்றி விட்டார். அதனால் ராஜாவின் 'குரு ரமண கீதம்"-ல் இருந்து "என் ஊரு சிவபுரம்". இது ராஜாவுக்கே ரொம்ப பிடித்த பாடல் என்று நினைக்கிறேன். திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில், கூட்டத்தை பார்த்து "என்ன தலைவா! பாட்டு பாடணுமா?" என்று இதை பாடி காண்பிப்பார். CD விலை வெறும் 95 ரூபாய் தான். அனைத்து பாடல்களும் அருமை. கண்டிப்பாக வாங்கி கேளுங்கள்.

"என் ஊரு சிவபுரம் ! பரலோக பெரும்புரம் !
சொந்த ஊர விட்டுப்பிட்டு எப்படி இங்கே வந்தேனுன்னு தெரியலையே!
உலக வாழ்க்கை ஒருபுறம் தெரியவில்ல மறுபுறம் - என்ன பெத்த
அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று புரியலையே
"





2. இப்போ காதல். இந்த பாடலை போடாவிட்டால் துபாயில் (அமீரகம்) இருந்து ஒரு நண்பர் கல்ல விட்டு எறிவார் :-). போன பதிவில் ஜென்சி பாடல்கள் கேட்டோம். இது இன்னெரு ஜென்சி பாடல். ஒரு சகாப்த பாடல். "காதல் ஓவியம்" அலைகள் ஓய்வதில்லை-ல் இருந்து. இந்த பாட்ட போட்டா நான் அப்படியே என்னை மறந்து உட்கார்ந்திருப்பேன். பேஸ் கிட்டார இப்படியும் செய்ய முடியுமா?. பாட்டுக்கு பீட்டே பேஸ் கிட்டார் தாம்யா?. அத பாலோ பண்ணி பண்ணி, பாடுறத கேட்க முடியறதே இல்லை :-). கலக்கல் பாட்டு.






3. அமைதியா ஒரு காதல் பாட்டு கேட்டீங்க. அப்படியே ஜிவ்வுன்னு ஒரு பாட்டு. இந்த பாடலை ராஜா தொடங்குவதை நடிகர் பார்த்திபன் சமீபத்தில் சென்னையில் நடந்த ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கூறும் போது " நாம ரொம்ப சந்தோசமா இருக்கும் போது, நமக்கு செத்துடலாம்னு தோணும். இந்த பாட்டோட ஆரம்பத்தை கேட்டா எனக்கு அப்படி தோணும்" என்றார். "நான் தேடும் செவ்வந்தி பூவிது" தர்மபத்தினி படத்தில் இருந்து. வயலின் Backing ரொம்ப சூப்பரா இருக்கும். ஜிவ்வென்று பாட்டு இதோ.






4. எனக்கு பிடித்த ராஜா பாடல்களிலே (எல்லா பாட்டும் புடிக்கும் என்பது தான் உண்மை), முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். ஒரு வித்தியாசமான மனசை வருடும் ஒரு ஓட்டம். அன்பான வரிகள். ராஜா ரொம்ப அனுபவித்து பாடி இருப்பார். "அழகே அமுதே" பரதன் படத்தில் இருந்து.






5. அம்மான்னா சும்மா இல்லடா. அவ இல்லன்னா யாரும் இல்லடா. ராஜாவ அம்மா பாடலில் அடிக்க ஆள் உண்டா?. "பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா" என்ன பெத்த ராசா படத்தில் இருந்து.






6. சோக ராஜா. இந்த பதிவுல போடணுமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். ராஜாவில் குரலின் பரிணாமங்களை பார்க்கும் போது, இந்த பாடலை விட முடியலை. "சோல பசுங்கிளியே" என் ராசாவின் மனசிலே-யில் இருந்து. அழாதீங்கடே! கஷ்டமா இருந்தா அடுத்த பாட்டுக்கு ஓடி போய்ருங்க.






7. அழ வைக்கவும் முடியும். சிரிக்க வைக்க முடியும். "ஆண் பாவம்" ஒரு கிளாசிகல் காமெடி. பாண்டியராஜனா அப்படி எல்லாம் படம் பண்ணினார். நிறைய நேரம் நம்ப முடிவதில்லை. இந்த பாடலை பாண்டியராஜன் ரொம்ப நல்லா படம் பிடித்திருப்பார். அவரது உயரம், அதற்கேற்ற டான்ஸ் என்று சிரிக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி ராஜா கிச்சி கிச்சி மூட்டிக்கிட்டே இருப்பார் :-). "காதல் கசக்குதையா..வர வர காதல் கசக்குதையா". எனக்கில்லைங்க..பாட்டுங்க..






8. கத கேளு..கத கேளு...கரிமேட்டு கருவாயன் கத கேளு கத கேளுடியே.... கிராமத்தை ஒரு கலக்கு கலக்கிய பாடல் இது. காட்டு வழி போற பொண்ணே கவல பட்டதே...காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு..இது இன்னொரு கலக்கல். இப்போ கரிமேட்டு கருவாயன் கத கேட்கலாம். ராஜாவின் குரல் ரொம்ப வித்தியாசமாக, ரொம்பவே வீரமாக பாடி அலம்பி தள்ளியிருக்கிறார். கலக்குங்க தலைவா :-)






9. வாங்கடா! வந்தனம் பண்ணுங்கடா! வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா :-). "ஓரம் போ பாட்ட போடலன்னா" அது பதிவாகுமா?. ஊரே இந்த பாட்டுக்கு அல்லோலப்பட்டது என்று கேள்விபட்டிருக்கிறேன்.

"பாளையம் பண்ணபுரம் சின்ன தாயி பெத்த மகன்
பிச்சமுத்து ஏறியே வராண்டோய்..ஓரம் போ
" .. ஹாஹாஹா..:-)






10. பத்தோட முடிச்சிக்கலாம். என்ன?. 90-ல் ராஜா ஒரு பார்முலா வச்சிருந்தாரு. அது இந்த ஜோடி பாடல் பார்முலா தான். "வள்ளி வள்ளி என வந்தான்" (தெய்வவாக்கு - S.ஜானகி) "சொர்க்கமே என்றாலும்" (ஊரு விட்டு ஊரு வந்து - S.ஜானகி). அப்புறம் "நில் நில் நில்..பதில் சொல் சொல் சொல்" (பாட்டு பாடவா - உமா ரமணன்), "புன்னகையில் மின்சாரம்" (பரதன் - S.ஜானகி). செமயா பீட் செட் பண்ணி ஜம்முன்னு இருக்கும் இந்த பாடல்கள். எனக்கு பிடித்த 'பாட்டு பாடவா" பாடலோடு இந்த பதிவை முடிச்சிக்கலாம்.







நிறைய பேர் "யோவ்! அந்த பாட்ட போடாம, என்னய்யா பதிவு போடுற" என்று வருவீங்க :-) "பூமாலையே தோள் சேரவா" "மெட்டி ஒலி" "துள்ளி எழுந்தது காற்று" "ஒரு ஜீவன் அழைத்தது" அப்படியே லிஸ்ட் போட்டுட்டு போய்டுங்க. அடுத்த பதிவுல "இளையராஜா-2" வில் இதே போல இன்னொரு செட் பாடல்கள் கேட்கலாம்.

32 Comments:

At 5:12 AM, Blogger மதுமிதா said...

தென்பாண்டி சீமையிலே
போடலியே சிவா

நில் நில் நில்
பதில்
சொல் சொல் சொல்

போட்டதால தப்பிச்சீங்க

 
At 5:36 AM, Anonymous Anonymous said...

Another melody cum divine song from Ilayaraja is "Vedham Onga...Isai Nadham Onga...Athil Vaazhum Jeevane" frim Sarkarai Panthal. Any of you heard it?

 
At 6:11 AM, Anonymous Anonymous said...

அது எப்படி உங்களுக்கு மூக்கில வேர்க்குமா ?? :) இளைய ராஜா பாடின பாடல் நான் போடலாம்ணு நெனச்சேன்.. நிங்க போட்டுடிங்க... அதுவும் ஓரம்போ பாடல்.. நேத்து மூணு நாலுமுறை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனாலும் என்ன பாட்டுக்கு குறைவா என்ன..

எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.. ராஜா தனக்குனு ஒரு பாடலை எந்த அடிப்படையில தேர்வு செய்யரார்ணு.. இதை முன்வச்சி ஒரு பதிவு போடலாம்ணு ஒரு யோசனை ஓடிட்டிருந்துச்சி.. ம்ம்

நான் நெனச்சி வச்சிருக்க மத்த பாட்டுகளை நீங்க இன்னும் போடலை.. அதுல ஒன்னாச்சம் நான் போடும் வரை கொஞ்சம் விட்டு வையுங்கப்பா :))

அன்புடன்
கீதா

 
At 6:44 AM, Blogger முத்துகுமரன் said...

//"யோவ்! அந்த பாட்ட போடாம, என்னய்யா பதிவு போடுற" என்று வருவீங்க :-) "பூமாலையே தோள் சேரவா" "மெட்டி ஒலி" "துள்ளி எழுந்தது காற்று" "ஒரு ஜீவன் அழைத்தது" அப்படியே லிஸ்ட் போட்டுட்டு போய்டுங்க//.

பாம்பின் கால் பாம்பறியும்:-)

நெறய பாட்டை காணமேன்னு வந்தா கடைசி பாட்டில ஒரேடியா ஆள சாச்சுப்புட்டீங்க....

நில் நில் - ராஜாவின் அட்டகாசமான பாடல். எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடித்த பாடல்.

என் விருப்பபாடல்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பதும் ராஜா பாடினதுதான்.
அந்த பாட்டு என்னான்னு கண்டுபிடிங்க பார்ப்போம். அந்த பாட்டுக்கு எல்லாமே ராஜாதான்(பி.கு: நீங்க குறிப்பிட்ட இந்த பாடல்கள் எதுவுமில்லை)

 
At 6:49 AM, Blogger சிவா said...

என்ன பாட்டு முத்துகுமரன்? "சிறு பொன்மணி அசையும்" பாட்டா? க்ளு கொடுங்களேன் :-)

 
At 7:28 AM, Blogger டண்டணக்கா said...

ஆகா, நாளைக்கு (சனிக் கிழமை) வீட்ட அதிர வைக்க பாட்டு ரெடி...
"நான் தேடும் செவ்வந்தி பூவிது"
"காதல் கசக்குதையா.."
"கத கேளு..கத கேளு...கரிமேட்டு ..."
"வாங்கடா! வந்தனம் பண்ணுங்கடா"

அப்புறம் சொன்னபடி மிச்ச ரெண்டு பாட்ட போட்டுருங்க..
"காட்டு வழி போற பொண்ணே,"
"அம்மன் கோவில் கெழக்காலே"
இல்லீன்ன .../* "யோவ்! அந்த பாட்ட போடாம, என்னய்யா பதிவு போடுற" */ன்னு வந்துருவோம்ல.
அப்புறம் கல்லு துபாய்ல இருந்துதான் வரணும்னு இல்ல, நாளைக்கு பக்கத்து வீட்டுகாரர் தந்தா மறக்க்காம அனுப்பி வைக்கிறேன் :)

 
At 7:36 AM, Blogger முத்துகுமரன் said...

அந்த படத்தில் வரும் ஒரு காட்சி...

கொஞ்ச நாளைக்கு முன்னால கேட்ட உன்னாலயே இதை மறக்க முடியலையே
அதை நான் எப்பிடி மறப்பேனு நினைக்கிற......

பி.கு: படத்தில ராஜா வாய்ஸ் வராது

 
At 1:35 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல பாடல்கள் சிவா. காலையில இருந்து ஒரு நாலு தடவை கேட்டுட்டேன்.

 
At 2:56 PM, Blogger சிவா said...

மதுமிதா அக்கா! வாங்க வாங்க! அப்பா! எப்படியோ 'நில் நில் நில்' புடிச்சதே. கடவுளே என்ன அக்காகிட்ட இருந்து காப்பத்திட்ட. அதுவும் கடைசி பாட்டால :-)). இன்னும் நிறைய பாட்டு இருக்கு. மெதுவா கேட்கலாம்.

கீதா! எனக்கு என்னமோ நேத்து தோன்றியது, வேற யாரோ இதே மாதிரி பதிவு ஒன்னு ரெடி பண்ணறதா?. அது நீங்க தானா :-))). அதனால தான் நேத்து இரவு 12 மணி வரை முழிச்சி இந்த பதிவ ரெடி பண்ணினேன். ஓ! ஒங்க லிஸ்ட்ல எதுவுலே வரலையா?. ச்சே! மிஸ் பண்ணிட்டேன் போல. அதுவும் நல்லது தான். உங்க பதிவுக்கு ஆவலாக காத்துக்கிட்டு இருக்கிறேன்.

வந்துட்டார்யா நம்ம ப்ரண்டு முத்துகுமரன், கஷ்டப்பட்டு 10 விதமான பாட்டு போட்டா, கடைசி பாட்டு தான் புடிச்சிருக்குன்னு சொல்றீய, இது நியாயமா?. பரதன் பாட்டு எல்லாம் பாட்டா தெரியலையா :-)). இனி இப்படி 10 பாட்டெல்லாம் போடறது இல்லை. 3 பாட்டு தான் :-))).எல்லா பாட்ட விட இந்த 90ஸ் ராஜா புடிச்சிருக்குன்னு சொல்லி என்ன சந்தோச படுத்திட்டீங்க. "பாட்டு பாடவா"ல மத்த பாடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம். நானே குவிஸ் போடுறவன். எனக்கே திருப்பி போட்டுட்டீங்களே! யோசிச்சு பாக்கறேன். முடியலன்னா, சீக்கிரம் சொல்லிடுங்க. புது வருசமும் அதுவுமா, இப்படி காய வுடாதிய. என்ன நான் சொல்றது :-))

 
At 3:01 PM, Blogger சிவா said...

வாங்க டண்டணக்கா (ஏங்க! பேர சொல்லுங்க. கேக்குறேன்ல :-)
மத்த பாட்டு தான. சீக்கிரம் போட்டுடலாம். கல் எல்லாம் வேணாம் :-))
உங்க PCல ரியல் ப்ளேய்ர் இருக்கான்னு பாத்துக்கோங்க. இல்லன்னா ஃரியா இறக்கி, அப்புறம் பாட்ட கேளுங்க. "கத கேளு..கத கேளு" உண்மையிலே கலக்கல் பாட்டு. என்ன ஒரு தாளம். என்ன ஒரு குரல்.

குமரன்! எத்தனை தடவை கேட்டீங்கண்ணு சரியா சொல்லிடறீங்க. எந்த பாட்டு புடிச்சதுன்னு சொல்லிருங்க

 
At 3:03 PM, Blogger சிவா said...

Anonymous அவர்களே! உங்க பேர் என்னவோ?. நீங்க சொன்ன சர்கரை பந்தல் பாட்ட கேட்டிருக்கிறேன். எல்லா பாட்டுமே ரொம்ப நல்ல பாட்டுங்க.

 
At 5:23 PM, Blogger டண்டணக்கா said...

சிவா, நம்ம ஐடிக்கு ("dandanakka_blog AT yahoo DOT com")ஒரு மெயில தட்டுங்க, இல்லேன உங்க ஐடி தாங்க, நான் தட்டுறேன்.
கல் இருக்கா இல்லீயான்னு பக்கத்து வீட்டு அண்ணாவதான் கேட்கனும் :)

 
At 8:30 PM, Blogger முத்துகுமரன் said...

10 வது பாடல் ரெம்ப பிடிச்சிருக்குனா மத்த பாட்டுங்க பிடிக்கலைன்னு அர்த்தம?:-)

அப்புறம் உங்கள் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்

எனக்கு மிக விருப்பமான அந்த பாடல் இதயம் ஒரு கோயில் அதில் உதயம்.....(இசை, பாடல், குரல் எல்லாமே நம்ம மொட்டைதான்)

 
At 3:57 AM, Blogger சிவா said...

முத்துகுமரன்! உங்களுக்கு பிடித்த பாட்டை இன்றே கூறிவிட்டீர்கள். புதுவருசத்துக்கு முன்னமே சொன்னதல நன்றி :-). உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

உஷா! அம்மாவ கேட்டதா சொல்லுங்க. 'எங்கே சென்றாலும்" நல்ல பீட் பாட்டு. அதை ராஜா "ஒரு சிறி கண்டால்" என்று பொன்முடிபுழயோரத்து படத்துல ஒரு கலக்கல் பாட்டு போட்டிருப்பார். அதையும் சீக்கிரம் போடுகிறேன்.
என்னோட ப்ளாக் அம்மா கூட படிக்கறாங்களா?. ரொம்ப ரொம்ப சந்தோசம். பையன் நெல்லை தமிழ் பேசுவானா. உங்க வீட்டுக்கு வந்தா எனக்கு பேச்சு துணைக்கு ஒரு ஆள் இருக்கு :-))
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At 3:58 AM, Anonymous Anonymous said...

ramo said,
dr siva,vaaranam soola...padal mathiri illaiyaraja songsla Thirumalin thiruppalli yelltchi kuda vanthirrukku theriyuma?

film: mella pesungal
song:koovina ponguyil... kettupparunga!

 
At 4:01 AM, Anonymous Anonymous said...

ramo said,
dr siva,vaaranam soola...padal mathiri illaiyaraja songsla Thirumalin thiruppalli yelltchi kuda vanthirrukku theriyuma?

film: mella pesungal
song:koovina ponguyil... kettupparunga!

 
At 4:08 AM, Blogger சிவா said...

Ramo! வாங்க. ஓ அப்படியா! நான் இந்த படப்பாடல் கேட்டதே இல்லையே. கிடைத்தால் கேட்கிறேன். தகவலுக்கு ரொம்ப நன்றி ramo

 
At 5:37 AM, Blogger Maravandu - Ganesh said...

//film: mella pesungal
song:koovina ponguyil... kettupparunga!

Ramo! வாங்க. ஓ அப்படியா! நான் இந்த படப்பாடல் கேட்டதே இல்லையே.//

அன்புள்ள சிவா

செவ்வந்த்திப்பூக்களில் செய்தவீடு
வெண்பஞ்சு மேகமே கோலம் போடு

தீபன்சக்கரவர்த்தியும் ஒரு பெண்குரலும் இணைந்து பாடிய பாடல் அது
கூவின பூங்குயில்( அந்தப் பாடலின் தொகையறா)

 
At 6:24 AM, Blogger ilavanji said...

சிவா... எனக்கு சங்கீதம் கூட இல்லை.. திரைப்பாடல்களிலேயே அபார ஞானம் என்பதால் இந்த பக்கமே வர்றதில்லை! :)

ஆனா என் சிற்றறிவுக்கு என்னைக்கேட்டால் "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..." பாட்டைத்தான் song of the Century ன்னு சொல்லுவேன்!

ரகுமான் பாட்டில் மிகவும் பிடித்தது "ஓர் உண்மைசொன்னால் மன்னிப்பாயா?" தான்!

 
At 7:02 PM, Blogger சிவா said...

கணேஷ்! செவ்வந்தி பூக்களில் - பெண் குரல் உமா ரமணன் என்று நினைக்கிறேன். நல்ல பாட்டாச்சே. அந்த படமா இது. தகவலுக்கு நன்றி.

இளவஞ்சி! வாங்க. மொத தடவையா கீதம் பக்கம் வந்திருக்கீங்க. பாஸ்! இசைய ரசிக்க ஞானம் எல்லாம் தேவை இல்லை தலைவா! "தென்றல் வந்து" பாட்டு நல்ல பாட்டா தெரியுதுல்லா! அது போதாதா பாட்ட ரசிக்க. நானும் உங்க மாதிரி தான். சும்மா பாட்ட கேட்க வேண்டியது தான். என்ன சொல்றிய. ரகுமான் பாட்டு என்ன படம்னு சொல்லுங்க. எனக்கு தெரியலையே

 
At 8:28 PM, Blogger ஜோ/Joe said...

வாவ்!கலக்கிபுட்டீங்க.நன்றி!

 
At 9:37 PM, Blogger ilavanji said...

//ரகுமான் பாட்டு என்ன படம்னு சொல்லுங்க. //

ஆயுதஎழுத்து..

 
At 8:12 PM, Blogger சிவா said...

நன்றி ஜோ!

இளவஞ்சி! நான் புது பாடல்களை அவ்வளவாக கேட்டதில்லை. அது ஆய்தஎழுத்து பாட்டா. கேட்டு பார்க்கிறேன். மறுபடியும் வந்து என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி இளவஞ்சி.

 
At 4:53 AM, Blogger சிவா said...

வாங்க அண்ணாச்சி! உண்மை தான் எஸ்.பி.பியும் ராஜாவும் இனைந்து பாடிய மிக சில பாடல்களில் வழி வழி விடு சிறந்த பாடல். அடுத்த நேயர் விருப்பத்தில் நிச்சயம் போட்டுடறேன். ஆமாம்! அந்த படம் கொத்து தான். ஆனா, நெறைய பாட்டு உண்டு. அத்தனையும் 100/100 கொடுக்கற மாதிரி அருமையான பாட்டு. அதுக்காக நானும் அந்த படத்தை இரண்டு தடவை பார்த்தேன்.

"வெளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்' பாட்டு தான. நல்ல பாட்டாச்சே. ஜானகி தானே? என்ன படம் என்று நினைவிருக்கிறதா அண்ணாச்சி?

 
At 1:58 PM, Anonymous Anonymous said...

விளக்கு வெச்ச நேரத்துல - முந்தானை முடிச்சு

 
At 4:44 AM, Blogger சிவா said...

நன்றி ஆனந்த்.

அண்ணாச்சி! நான் குறுந்தட்டு பல படங்களுக்கு தேடி தேடி ஓய்ந்து போய்ட்டேன். அதுவும் ராஜாவின் 90-ல் வந்த பாடல்கள் கிடைப்பதே இல்லை. 'பாட்டு பாடவா' கிரண் ஆடியோன்னு ஒரு கம்பெனி வெளியிட்டது. அப்புறம் அந்த கம்பெனி அட்ரஸே இல்லாம போய்ட்டு. நெறைய ராஜா கம்பெனி விசிறி படம் போட்ட ஆடியோவெல்லாம் இப்போ கெடைப்பதே இல்லை. நீங்க சொல்ற கடை எங்கிருக்கு. கொஞ்சம் முகவரி தரமுடியுமா?.

 
At 4:49 AM, Blogger சிவா said...

அண்ணாச்சி! தெய்வம் படமும் பார்த்திருக்கிறேன். நம்ம ஊரு திருச்செந்தூர பத்தி ரொம்ப அழகான பாட்டுங்க அது. நான் நெனைச்சா ஓடி போற கோவில் அப்பன் முருகனின் செந்தூர் கோவில் தான். அப்புறம் கோவைக்கு போகும் போது மருதமலைக்கும் போய்ட்டு வந்தேன். அப்போ அங்கே 'மருதமலை மாமணியே முருகையா' பாட்டு உட்கார்ந்து பாடுவாங்களே அந்த மேடையை பார்த்தவுடன் அந்த படம் தான் வந்தது. பக்தி பாட்டுன்னா இது தாங்க பாட்டு. எல்லாவற்றையும் நினைவு படுத்திட்டீங்க.

 
At 7:34 PM, Blogger சிவா said...

அண்ணாச்சி! நீங்க மலேசியா என்பது எனக்கு தெரியும். உங்க ப்ளாக் தொடக்கம் முதல் படிப்பவன் நான். இது தெரியாதா :-). ஊருக்கு போகும் போது ஏதும் கடை இருக்குதான்னு தெரிஞ்சிக்க கேட்டேன். சென்னைல மியூசிக் வேல்ட் எல்லாம் வேஸ்ட்.

 
At 8:19 AM, Anonymous Anonymous said...

hello siva sir!

epdi irukkinga? raja unmaiyil koduthu vaithavarthaan, ungalai poandra rasigargal kidaippatharkku...

... indroru naal kazhinthathu en vaazh naalil!.... ithuthaan indraiya aanmeega rajavin mana nilai...

isaiyaal inaivoem!... vaalga valamudan!....

 
At 7:59 AM, Anonymous Anonymous said...

hello sir!,

naan, manickam from singapore.

ungal muyarchi manathukku magizhchi alikkirathu,.. innum 50 varudangal kazhithuthaan therium raja enna vittu sendrirukkiraar endru... avarin anaithu padaippugalumey kaalam kadanthavai....

enathu viyappu!...

sangathil paadathe kavithai angathil yaar thanthathu!?'....- AUTOKAARAN. RAJA IN LIVE CONCERT THEME SONG INTHA PAADALTHAAN... mudinthal poadungal... kurippa athil parellel humming.... athuthaan avar.

 
At 9:25 PM, Blogger சிவா said...

வாங்க மாணிக்கம்! எதுக்கு சார் எல்லாம் போட்டுக்கிட்டு..சிவா என்றே சொல்லுங்க..ப்ளீஸ்..

//** ungal muyarchi manathukku magizhchi alikkirathu **// ரொம்ப மகிழ்ச்சி மாணிக்கம். அடிக்கடி வாங்க. மற்ற பதிவுகளையும் பார்த்து/கேட்டு மகிழுங்கள்.

//** AUTOKAARAN. RAJA IN LIVE CONCERT THEME SONG INTHA PAADALTHAAN... mudinthal poadungal... **// ஆமாங்க. ஹம்மிங் நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அருமை. நான் கூட பார்த்தேன். சீக்கிரம் இந்த பாடலை கேட்கலாம். அடிக்கடி வாங்க.

( நீங்க தானா இதுக்கு முந்தி பெயர் சொல்லாமல் கமெண்ட் கொடுத்தீங்களா..சாரிங்க. பதில் அளிக்க பிந்தி விட்டது)

 
At 9:20 AM, Anonymous Anonymous said...

Siva - 1 recent songs that impressed me in recent times with IIR voice - 'Kaatuvazhi kaalnadaya pora thambi' from 'Adhu oru kanakkalam'

Anand Subramanian

 

Post a Comment

<< Home