கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, December 16, 2005

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..

ஒரு அழகான பாடல். அர்த்தமுள்ள பாடல். காணாமல் போன பாடல். 'சின்னக் கண்ணம்மா' படத்தில் இருந்து. உஷா அக்கா, போன போட்டிக்கு முந்தின போட்டியில் சரியான விடை சொல்லி இந்த பாடலை தட்டிக்கிட்டு போறாங்க :-). இது தான் நான் கூறிய ஸ்பெசல் பாட்டு :-) 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல..பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே..என் மகளே'. நாய், குரங்கு கூட எல்லாம் நடித்தது போக பேபி ஷாம்லி கொஞ்சம் உருப்படியாக நடித்த சில படங்களில் இந்த 'சின்னக் கண்ணம்மா'வும் ஒன்று. ஒரு நல்ல கதை அம்சத்தோடு வந்த படம்.

அலட்டாத சிம்பிளான இசை. மனோ நன்றாகவே பாடியிருப்பார் (உஷா அக்கா! இளையராஜா Version கிடையாது :-). பாடல் வரிகள் மிக அழகு. தொடக்க வீணை அழகு.




6 Comments:

At 2:56 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! சும்மா தான் மனோவ அப்படி சொன்னேன். அவரும் ஒரு சிறந்த பாடகர் தான். நமக்கு ராஜா இசையில் பாடகர்கள் பிடிக்காம இருக்குமா?.

அடுத்த போட்டி, வரும் ஞாயிறு காலை (உங்கள் ஞாயிறு மாலை 6:15 ) வரும். இசைக்கதம்பத்தில் சேர்த்து போடுகிறேன். எளிதாக தான் இருக்கும். கஷ்டமானதுன்னா க்ளு சொல்கிறேன். நான்கு நாள் வைத்துக் கொள்ளலாம், புதன் கிழமை விடை சொல்லிடலாம். நீங்க உடனே கண்டு புடிச்சிட்டீங்கன்னா :-) என்ன பண்ணறது. அடுத்த போட்டி குழப்பி விடுகிறேன் :-)

 
At 3:21 PM, Blogger கீதா said...

வாவ். அருமையா இருக்கு சிவா. இப்பதான் கேட்குறேன் இந்தப் பாட்டை. பாடல் வரியெல்லாம் அருமையா இருக்கு. ரொம்ப ரசிச்சுக்கேட்டேன். அருமை.:)

 
At 9:20 PM, Blogger முத்துகுமரன் said...

எப்படி அய்யா இப்படி பாடல்களை தேடிக் கண்டு பிடிக்கிறீர்கள். நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்று பீற்றிக் கொள்வது உண்டு. உங்கள் ரசனைக்கு முன்பு நானெல்லாம் காத தூரம்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பிரச்சனை வந்து சில காலம் பாடாதிருந்தார். அந்த சமயத்தில் வந்த மனோ பாடல்கள் எல்லாமே உச்சத்தை தொட்டவைகளே....

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் ஒரு பாட்டு வருமே... என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்.... சுவர்ணலதாவும் பாலுவும் இழைத்து இழைத்து பாடி இருப்பார்கள்.......

 
At 6:57 AM, Blogger சிவா said...

ஆமாம் கீதா! இது ரொம்ப அர்த்தமுள்ள பாட்டு. இப்படி நிறைய பாடல்கள் காணாமல் போய்விடுகின்றன. எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முத்துக்குமரன்! உங்களுக்கு புடிச்ச ப்ளாக்னு சொல்லிட்டீங்க. ஒரே சந்தோசம் எனக்கு. நான் இளையராஜா பேருல எது வந்தாலும் கேட்பேன். இன்னும் கேட்காமல் நிறைய இருக்கிறது. தேடி தேடி கேட்பது என் முக்கிய பொழுது போக்கு. S.P.B தகவலுக்கு நன்றி. S.P.B 'அஞ்சலி'ல கூட'ராத்திரி நேரத்தில்' பாடி குரல் Damage ஆகிபோச்சின்னு கேள்வி பட்டிருக்கிறேன். சூப்பர் பாட்டு சொல்லிட்டீங்க. "என்னை தொட்டு அள்ளி" பாட்டு நிச்சயம் அடுத்த நேயர் விருப்பத்தில் கேட்கலாம். உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

 
At 5:02 PM, Blogger b said...

அருமை அருமை. மிக்க நன்றி சிவா.

 
At 3:41 PM, Anonymous Anonymous said...

WOW!!! Great song. I enjoyed listening to it. I usually dont like mano's voice. In this song he has done a great job. Simple,nice song. Thanks for introducing this song to me.

Suresh

 

Post a Comment

<< Home