கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, December 15, 2005

நேயர் விருப்பம் - 3

( சென்ற போட்டிக்கான விடை கீழே)

மீண்டும் இந்த வார நேயர் விருப்பம் இதோ. நிறைய பேர் நல்ல நல்ல பாட்டெல்லாம் கேட்டிருந்தீங்க. சம்மியும், கீதாவும் ஒரு பெரிய பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவற்றில் சில இங்கே கேட்க்கலாம்.

முதலில் பாலாஸ்ரீ அவர்கள் விருப்பம். 'ஆயிரம் நிலவே வா' (பாட்டு இல்ல) படத்தில் இருந்து 'அந்தரங்கம் யாவுமே..சொல்வதென்றால் பாவமே'. ஒரெ சொல், இது S.P.B பாட்டு. அவரே பாடி, அவரே எதிர்பாட்டு பாட அவரால் மட்டுமே முடியும் (இன்னொன்று 'ஏய்! உன்னைத் தானே" - காதல் பரிசு). 'எப்படி..எப்படி' அழகோ அழகோ. இன்னொரு ராஜ(ஜா) இசை. நீங்க பாட்டு 'எப்படி' ன்னு சொல்லிருங்க.

ரெண்டாவது, சம்மியோட பெரிய பட்டியலில் இருந்து எனக்கு டக்குன்னு 'அடடா' அப்படின்னு தோன்றிய பாடல். "கட்டி வச்சிக்க எந்தன் அன்பு மனச". படம் 'என் ஜீவன் பாடுது'. ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன், இந்த படத்தில் எல்லாமே கிளாசிக் பாடல்கள் என்று. மேலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம். தடம் புரளாமல், பாடல் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை கொண்டு செல்லும் Beat, எல்லோரையும் மயக்கும். மலேசியாவும், ஜானகியும் ரொம்ப நல்லா பாடியிருப்பாங்க. தொடக்கத்தில் ஜானகி ஆரம்பிக்கும் 'தனியா தவமிருந்து இந்த ராசாத்தி' வித்தியாசமாக தோன்றியது எனக்கு. இது தான் அனுபல்லவியா?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். கேட்டு மகிழ பாட்டு இங்கே.

இப்போ, தங்கம் அவர்களின் விருப்பத்தில் 'குணா' படத்தில் இருந்து 'உன்னை நான் அறிவேன்'. ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்கும் பாட்டு. கண்டிப்பாக கேட்பவர் மனதை லேசாகவாவது இந்த பாடல் தொடும். Prelude-ல் வரும் பேஸ் கிடடாரும், புல்லங்குழலிசையும் என்னை கவர்ந்தவவை. ஜானகியின் சிறந்த பாடல்களில் இதையும் நிச்சயம் சொல்லலாம். நன்றி தங்கம், இந்தப் பாடலை கேட்டமைக்கு. கொஞ்சம் சிறிய பாடல். பாட்டிங்கே...

கீதாவிடம், 90S பாட்டே கேட்க மாட்டீங்களான்னு கேட்டதுக்கு, ஒரு பட்டியல் போட்டிருந்தார்கள். சில வழக்கமான பாடல்கள் தவிர, எனக்கு ஒரு பாடல் உடனே 'அடடா..ஒங்களுக்கும் புடிக்குமா' அப்படின்னு தோன்றியது. அது 'ஆத்மா' படத்தில் இருந்து 'வாராயோ..உனக்கே சரண் நாங்களே' . 'ஆத்மா', பிரதாப் போத்தன் (இயக்கம்) படம் என்று நினைக்கிறேன். கடவுள் உண்மையா என்று சொல்ல கொஞ்சம் உருப்படியாக முயற்சி செய்திருப்பார்கள். "விளக்கு வைப்போம்' 'கண்ணாலே..காதல் கடிதம்' இரண்டும் ஹிட். 'வாராயோ' நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை (சூடம் எல்லாம் வேண்டாம் :-)). மனோவுக்கு கொஞ்சம் கஷ்டமான பாட்டு. நன்றாகவே பாடியிருப்பார். கடைசில முடிக்கும் போது 'புலிய பாத்து பூனை சூடு போட்ட கதை' (இந்த கதை தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க) மாதிரி S.P.Bய (மணியோசை கேட்டு & வந்தனம்) மாதிரி இருமற மாதிரி பாடியிருப்பார். வேறென்ன சொல்ல, என்னால சிரிப்ப அடக்க முடியல. ஏன் ராஜா? இப்படி மனோவ கொடும படுத்தறீங்க :-). நல்ல ஒரு பக்தி பாட்டு. கேளுங்க.

உஷா! உங்களுக்கு ஒரு ஸ்பெசல் பாட்டு ரெடியாகுது. அடுத்த பதிவில் கேட்கலாம். அதை தனிப்பதிவாக தான் போடுவேன். :-)

சென்ற போட்டிக்கான விடை:

நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் போட்டிக்கான விடை. உஷா, கீதா, ராதா, வீ.கே எல்லோரும் முயற்சி பண்ணிருக்காங்க. ரொம்ப சந்தோசம். பொதுவா உஷா மேல ஒரு புகார் இருக்கும். உடனே விடை சொல்லிடறாங்க அப்படின்னு :-). அதனால் ரொம்ப நல்லா தெரிஞ்ச பாட்டு, ஆனா பாடல் மெட்டு தெரியாத மாதிரி ஒரு Interlude எடுத்து போட்டேன். வேலை செஞ்சிடுச்சு. விடையை கேட்டுட்டு 'பூ..இதானா..அடடா..உள்ளுக்குள்ள தோணிச்சி..வெளியே வரமாட்டேன்னுட்டு' அப்படிம்பீங்க... விடை கீழே..( உங்கள் ஆதரவுக்கு நன்றி. அடுத்த போட்டி வரும் வார இறுதி இசைக் கதம்பத்தில்..
20 Comments:

At 6:12 AM, Blogger பாட்டுக் கச்சேரி said...

சிவா,
சொன்னா நம்பமாட்டீங்க.ராஜா கைய வச்சா படத்தில வர்ற பாட்டா இருக்கலாம்னு பின்னூட்டத்துல எழுதலாம்னு இருந்தேன்.மிஸ் ஆயிடுச்சி.
எப்படி இருந்தாலும் நல்ல போட்டி இது.
ஆத்மா பிரதாப் போத்தன் இயக்கம் தான்.
இந்த பதிவுல இருக்கிற பாட்டெல்லாம் அருமை. என்னோட favorite "கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசை" & "அந்தரங்கம் யாவுமே".பாடல்களுக்கு நன்றி.

வீகே

 
At 6:27 AM, Anonymous கீதா said...

அடடடடடடா மனுஷனை போட்டு இந்தப் பாடு படுத்திட்டிங்க. நான் அதே படத்துல வரும் 'மழைவருது மழைவருது குடை கொண்டு வா..' பாடலா இருக்குமோன்னு யோசிச்சேன் ஆனா இல்லை. ஹ்ம். கேட்ட மாதிரியே இருந்துச்சி ஆனா இப்படி ஒரு fast song ல இந்த இண்டர்லுட் நான் எதிர்பார்க்கல. நல்லா குழம்பவச்சிட்டிங்க.:)

 
At 7:09 AM, Anonymous கீதா said...

முதல் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை.SPB தான் எதிர்குரலுமா? அருமை அருமை.

'கட்டி வச்சிக்க எந்தனன்பு மனச.. ' மெலோடியான பாடல்.

பல்லவி அனுபல்லவி பத்தில்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியாது. இந்த பதிவு படிச்சதுக்கப்புறம் google அண்ணே கிட்ட கேட்டேன். அடிப்படையா இந்த மூன்று கருத்து சொன்னார். ஏதோ புரிஞ்சது. உங்களுக்கு புரியுதா பாருங்க. நீங்க குறிப்பிட்ட அந்த வரிகள் அனுபல்லவி தான் போல. தெரியலை. தெரிஞ்சவங்க விளக்குங்களே.

Pallavi (पल्लवि). This is the equivalent of a refrain in Western music. Two lines.
Anupallavi (अनुपल्लवि). The second verse. Also two lines.
Charanam (चरणं). The final (and longest) verse that wraps up the song. The Charanam usually borrows patterns from the Anupallavi. Usually three lines

"வாராயோ.. " பாடல் போடும்முன்னே "மணியோசை கேட்டு .." பாடல் குறிப்பிட்டிருந்திங்க. ஆச்சர்யம் நேயர் விருப்பமா அந்த பாடல் கேட்கலாம்னு நான் ஒரு வாரமா நெனச்சிக்கிட்டு இருக்கேன். :) முடிஞ்சா அவசியம் போடுங்க.

 
At 5:50 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

வணக்கம் அண்ணாச்சி.

"கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசை" பாட்டு எல்லாருக்கும் பிடிச்சிருந்ததுல ரொம்ப மகிழ்ச்சி (அதெப்படி பிடிக்காம இருக்கும்?).

அன்னைக்கு உஷா மொட்டையில் அபூர்வ அல்லது அதிகம் கேக்காத பாடல்கள் கேட்டாங்க. இது எப்படி?

படம் : சக்திவேல்
இசை : மொட்டை
பாடியவர்கள் : அருண்மொழி, சொர்ணலதா
பாடல் : மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே...

படம் : மனசெல்லாம் (2003)
இசை : மொட்டை
பாடியவர்கள் : சீனிவாஸ், சாதனா சர்கம்
பாடல் : இளைய நதி இனிய நதி
(இந்த பாட்ட கேட்ட ஒடனே அடடா எங்கையோ கேக்கிற இசையா இருக்கேனு பாத்தா மொட்டை, சரி அப்படி படத்த பாக்கலாம்னா.... என்னத்த சொல்ல?)

இது அடிக்கடி கேக்குறதுதானே-னு சொல்லீராதீங்க? ;-)

தொடருங்கள்...

 
At 5:57 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

அண்ணாச்சி ஒரு சில சின்ன திருத்தங்கள் :

முயற்ச்சி -> முயற்சி

"ற்" க்கு அப்புறம் எந்த மெய்யெழுத்தும் வராது.

பிண்ணனி -> பின்னணி

பின்+அணி(சேர்ந்த) இசை -> பின்னணி இசை

(சொன்னது சரியா?)

எல்லாருக்கும் உதவியா இருக்கும்-னுதான் பொதுவுல சொன்னேன். தப்பா செஞ்சிருந்தா மன்னிக்கணும்.

 
At 6:27 PM, Blogger சிவா said...

வாங்க சம்மி! திருத்தம் சொன்னதற்க்கு நன்றி. இன்னைக்கு தான் குமரனிடம் மடல் அனுப்பி முயற்ச்சி-ல ச் வருமான்னு சந்தேகம் கேட்டேன். தமிழ்ல எழுதி நாளாச்சா, அதான்..ஹி ஹி ஹி..சரி பண்ணிடறேன்.

 
At 6:43 PM, Blogger குமரன் (Kumaran) said...

'எப்படி எப்படி' பாட்டு நல்லா இருக்கு சிவா. இன்னைக்கு காலையிலேயும் கேட்டேன். இப்ப மறுபடியும் கேட்டேன்.

'கட்டி வச்சிக்கோ என் அன்பு மனச' கூட நல்லா இருந்தது.

'உன்னை நான் அறிவேன்' குணா வந்த அன்றிலிருந்து எனக்குப் பிடித்தப் பாட்டு தான். அதில் வரும் தத்துவங்கள் பிடிக்கும்.

'வாராயோ' பாட்டும் நான் விரும்பிக் கேட்டப் பாடல். ஆத்மா படம் பார்த்தபிறகு இப்போது தான் அந்தப் பாட்டை மீண்டும் கேட்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவில் தான் எல்லாப் பாட்டுகளும் எனக்கும் என் மகளுக்கும் பிடிக்கிறது. வாழ்த்துகள் சிவா. என் மகளும் என்னுடன் அமர்ந்து இந்தப் பாட்டுகளைக் கேட்டாள். :-)

 
At 6:45 PM, Blogger குமரன் (Kumaran) said...

மனோவோட இருமல் அவ்வளவு ஒன்னும் மட்டமா இல்லியே சிவா?

 
At 7:13 PM, Blogger சிவா said...

வீ.கே! நீங்க படம் பேரை சொல்லிருந்தீங்கன்னா, பாட்ட கண்டுபுடிச்சிருப்பாங்க :-). போட்டி நல்லா சுவாரஸ்யமா போச்சி. எல்லோருக்கும் நன்றி.

கீதா! ஆமாம். குழப்பத்தான் இந்த போட்டி போட்டேன். உண்மை தான். இந்த மாதிரி ஒரு Interlude அப்படி ஒரு பாடலில் ஒரு Surprise தான். இந்த பாடல் ஜனகராஜ் மேடையில் ஆடிப்பாடுவதாக தொடங்கும். ரேவதி அதை பார்த்து அப்படியே ட்ரீம்ல பிரபுவோட சரணத்தை தொடங்குவார். அந்த ட்ரீம்ஸ் Shift தான் அந்த prelude :-). முயற்சித்ததுக்கு நன்றி.

அனுபல்லவி விவரங்களுக்கு நன்றி. ஏதாவது உதாரண பாட்டு கெடைச்சா புரியும்னு நெனைக்கிறேன். "மணியோசை" எல்லோருடைய Favorite கூட. அடுத்த நேயர் விருப்பத்தில் பார்க்கலாம்.

 
At 7:17 PM, Blogger சிவா said...

வாங்க சம்மி! 'மல்லிகை மொட்டு' பாட்டு சூப்பர் ஹிட் பாட்டு தான். நீங்க சொன்ன மாதிரி 'மனசெல்லாம்' படம் பார்க்க எருமை பொறுமை வேண்டும் :-). இல்லன்னா வாழ்க்கை வெறுத்திருக்கனும் :-). ராஜாவின் இசையை ஒரு தண்டம் படத்துக்கு போச்சு. அதுல 'நீ தூங்கும் நேரத்தில்' என்ன ஒரு பாட்டு. விட்டுட்டீங்களே. நேயர் விருப்பத்தில் ஒன்றை பார்க்கலாம்.

 
At 7:22 PM, Blogger சிவா said...

குமரன்! எல்லா பாட்டும் கேட்டீங்களா. சந்தோசம். ஒங்க பாப்பாவுக்கு வேற புடிச்சிருக்கா. அடடா! ரொம்ப சந்தோசம். நல்ல நல்ல பாட்டு கேட்க விடுங்கள். குட்டீஸ் மூளைக்கு ரொம்ப நல்லது. இசை கேட்பது நல்லதாம். இந்த டம்..டம்..பூம்..பூம்.. பாட்டெல்லாம் இப்பவே போடாதீங்க :-).

மனோ இருமினது எனக்கு கொஞ்சம் செயற்கையா இருந்திச்சி..அதான்
:-). SPB-ய கேட்டுட்டு இத கேட்டேனா, அதான் கொஞ்சம் சிரிச்சுட்டேன் :-))

 
At 7:36 PM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Thanks for all the songs.Matravargalin viruppam ellam en virupa padalaga irukiradhu.!!!!!!
Namaga padalgal ketpadhai vida, padalgal KETKA VAIKA PADUM PODHU ANDHA SUGAM THANI DHAN!!!!
Adhanal dhan radiovai nam migavum virumbi irukom enru
ninaikraen.
Inru Siva,enna song ,oduvar
enra expectationudan vandhu
songs parthu. ketkum podhu
song innum konjam adhigamavae
nanraga irukiradhu.

Andharanga yavumae - beautiful
tune by IR.Madhyamavathi?
IR in madhyamavathi nichayam
azhagu dhan.

Katti vechuko - Simple
composition!!! Great tune!!
Unnai naan ariven - IR and Kamal enralae isai oru magic dhan avargal iruvarukum.Special
tune aga than irukum Kamal film il IR tune.

Marudhani - indha songai matum try kuda pannalai Siva.Chance illai enru vittu vitaen.Neenga jayuchuteenga!!!!

Indha songaiyum fullum podungalaen.Beautiful tune.
Janakaraj ku perfecta match
agum IR voice.IR Janakarajai
nalla observe panni vechu
irukar i think!!!
With Love,
Usha Sankar.

 
At 7:57 PM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Enakana spl song - aavaludan
kaathu kondu irukiraen!!!!!!!!!!!!!!

Varayo song - IR in voice il
'Kamatshi karuna vilasini'
enru bhakthi bhavathudan
ketta pin, indha song version
enaku pidikavilai.Mano nanraga
paadinalum, impress pannavillai.

Endha paadalgalum IR in isaiyil, composing touch
konjam maatri tune potalum
ketka nanraga than irukum.Anal
indha song vidhivilaku.Avvalavaga nanraga illai.Idhu en personal opinion!!!


Dear Alwa City,
Neenga solra song list eppodhum nanraga irukiradhu!! Continue your list!!!

With Love,
Usha Sankar.

 
At 1:27 PM, Blogger Vishnu said...

Vanakkam Siva anna..

meendum naan thaan Vishnu.. ungal pathippukal arumai.. melum thodarungal... naan vajathil kurainthavan.. iruppinum payaiya padalkalil romba naaddam undu...

enakku viruppamaana paadal onru.. aanaal kidaikkuthu illai.. ungkalidam irunthaal inaiyungal..

Anpe anpe anpe.. paadum padal enke??
anpe anpe anpe.. sogam eno inke..
nee inri naan ethu??
nenyankal maarathu...

padam : paadum vaanam paadi ( Nages, aanantha paapu nadiththathu )

ungalidam irunthaal inaikkavum.

appuram.. "1000 nilave vee" padal ennidam ullathu.. virumpinaal inaiththu vidukiren.

nanri

Vishnu

 
At 2:46 PM, Blogger சிவா said...

வாங்க தம்பி விஷ்ணு,

ரொம்ப நேரமா நீங்க சொன்ன பாட்ட யோசிச்சேன். என்னடா பாட்டு இது என்று. அப்புறம் தான் புடிபட்டிச்சி. சாரிப்பா! என்னிடம் அந்த பாடல் இல்லை. இது 'டிஸ்கோ டான்சர்' என்னும் பெயரில் ஹிந்தில பப்பி லஹரி இசையில் வெளிவந்த படத்தோட ரீமேக். பாட்டு எல்லாமே அப்படியே பயன்படுத்தி இருப்பார்கள். 'I am a Disco Dancer' பாட்ட சொல்லிருந்தா உடனே தெரிஞ்சிருக்கும். ஆனந்த் பாபுவோட மொத படம்னு நெனைக்கிறேன்.

இதோட ஹிந்தி பாட்டு என்னிடம் இருந்தது. (என் அண்ணன் டெல்லி-ல இருக்கச்சுல கொடுத்தது). இந்த அன்பே..அன்பே..அன்பே..- ஹிந்தில ஜிம்மி..ஜிம்மி..ஜிம்மி...ஆஜா..ஆஜா..ஆஜா அப்படின்னு வரும்.

ரொம்ப புடிக்குமோ. நீங்க எங்க இருக்கீங்க. தமிழ்நாட்டுல ஏதாவது ரெக்கார்டிங் கடைக்கு போய் கேட்டீங்கன்னா, கண்டிப்பா கிடைக்கும். நான் இப்போ US-ல இருக்கேன்.

உங்கள் பாரட்டுக்கு நன்றி. அடிக்கடி வந்து பாட்டு கேளுங்க. கருத்து சொல்லுங்க. ஆயிரம் நிலவே வா பாட்டு எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவை பட்டால் கண்டிப்பாக கூறுகிறேன்.

நீங்கள் விரும்பினால், இங்கே நடக்கும் கலந்துரையாடலிலும் பங்கு பெறலாம். எல்லாம் நம்ம மக்கள் தான்.

 
At 2:47 PM, Blogger Thangs said...

Thanks Siva! Ella selection-um super! Radio vula namakuu pidicha paattukkala varra maathiri arumaiyaana songs.. Thanks again!

 
At 4:47 AM, Blogger Vishnu said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:50 AM, Blogger Vishnu said...

வணக்கம் சிவா அண்ணா..

'I am a Disco Dancer' படத்தை பற்றி நீங்கள் சொன்ன தகவல்கள் எல்லாம் நான் அறிந்தவை தான். நான் அப்படி கூறி இருக்கலாம் என்று இப்போ தான் புரிகிறது. அந்த பாடல் எனக்கு நன்கு பிடிக்கும். நீங்கள் உங்கள் பக்கத்தில் மற்றவர்கள் கேட்கும் பாடல்களை இணைக்கிறீர்கள் தானே.. முடிந்தால் அந்த இந்தி பாடலையாவது இணையுங்கள். நான் அந்த படம் 2 மொழியிலும் பார்த்து இருக்கிறேன்.

நான் ஒரு ஈழத்தவன்... இப்போது ஹொலண்டில் வாழ்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டு ரெக்கார்டிங் கடைக்கு போக சொன்னபடியால் தான் இதை சொல்கிறேன். சில பாடல்களை இங்கு பெற முடியாது.. இப்படி நண்பர்கள் மூலமாக கிடைத்தால் தான் உண்டு... பறவாயில்லை...

நிட்சயமாக..... கலந்துரையாடலில் நானும் பங்கு பெறுவேன்... எல்லாம் நம்ம பசங்க என்று சொன்னீர்கள்... உண்மை தான்....எல்லாம் நம்ம சகோதரர்கள் தான்.. தமிழ்நாட்டவர்களை நான் சகோதரர் போல் தான் காண்கிறேன்.. ஸோ இனி வரும் கலந்துரையாடலில் நானும் இருப்பேன்.

உங்கள் அழைப்புக்கு நன்றி..

மீண்டும் சந்திக்கிறேன்..

விஸ்ணு

 
At 5:00 AM, Blogger சிவா said...

தங்ஸ் (Thangs)! பாட்டெல்லாம் புடிச்சிருந்துதா. நன்றி!

விஷ்ணு தம்பி, நான் இந்த வாரம் இந்தியாவிற்கு ஒரு பாடல் (CD வாங்க) லிஸ்ட் அனுப்புகிறேன். அதில் இசையும் சேர்த்து அனுப்புகிறேன். கிடைத்தால் உங்களுக்கு சொல்கிறேன்.

 
At 5:54 AM, Blogger BALASRI said...

Thanks Shiva.... That was a good song especially SPB voice....Katti Vachikka song too... Today I heard a song in Jaya Tv Vellai Pura Onru starred by Thengai Srinivasan.... But i don't the name of the movie..mostly Ilaiyaraaja did the music I think so... If possible please it has more Violin and Piano work....

 

Post a Comment

<< Home