கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, December 21, 2005

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

'வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து' இப்படி ஒரு பாடல் கேளடி கண்மணி படத்தில் வரும். வந்தவுடன் ஓட்டி விடுவேன். இலக்கிய தமிழ் அலர்ஜி என்பதும், ஒன்றும் புடியாது என்பது வேற. நேற்று நம்ம குமரன்
'கோதை தமிழ்' வாசிக்கும் போது, பாடல் நன்றாக இருந்தது. இந்த பாடல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று. அடடா! நம்ம கேளடி கண்மணி பாட்டாச்சே. ராஜா எப்படி இசை அமைத்திருக்கிறார் என்று மீண்டும் கேட்டேன். இந்த குமரனின் பதிவை படித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள். ராஜா மூன்று பாடல்கள் மட்டும் எடுத்து இசை அமைத்திருக்கிறார். இப்போது இந்த பாடல் எனது விருப்ப பாடலில் சேர்ந்து விட்டது. இளையராஜா இன்னும் நிறைய இப்படி பட்ட செய்யுள்களை பாடலாக இசை அமைத்தால் நன்றாக இருக்கும். நன்றி குமரன், உங்கள் பாடல் விளக்கத்திற்க்கு.

படம்: கேளடி கண்மணி
பாடல்: வாரணம் ஆயிரம்
பாடியவர்: S.ஜானகி
இசை: இளையராஜா







இதே பாடலை ஹேராம் படத்திலும் எடுத்திருக்கிறார்கள். தகவலுக்கு நன்றி குமரன். இந்த பாடல் தொடங்கியவுடன் ஓடி விடுவேன் :-), ஏதோ ஹிந்தி ஆலாபனை என்று. உள்ளே 'வாரணம் ஆயிரம்' பாடலும் வருவது இன்று தான் கேட்கிறேன். 'கேளடி கண்மணி' அளவுக்கு இல்லை :-). பாடாமல் வாசிப்பது போல போகிறது. ஆஷா போன்ஸ்லே குரல் வேறு. பாடல் இங்கே.

படம்: ஹேராம்
பாடல்: வாரணமாயிரம்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே & குழுவினர்
இசை : இளையராஜா






4 Comments:

At 6:59 AM, Blogger முத்துகுமரன் said...

சிவா, இந்த மாதிரி பாடல்களை அங்கங்கே ராஜா பயன்படுத்த தவறுவதே இல்லை. அதிலும் இந்த மாதிரி குறும்பாடல்களில் சத்தமே இல்லாமல் தனி ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

சமீபத்தில் பிதாமகன் படத்தில் - சூர்யா, விக்ரம் சிறைக்காட்சியின் போது வரும் யாரது யாரது மனசை....

 
At 9:14 AM, Anonymous Anonymous said...

ஏன் சிவா அந்த பாட்டக் கேட்டு ஓடினிங்க. பாட்டின் ஆரம்பம் எனக்கு பிடிக்கும்.. "கனா கண்டேன்..தோழி.." இந்த வரி பாடும்போது பிடிக்கும்.

அதுக்கப்புறம் ஒன்னும்புரியாது.. இந்த இரண்டு மூன்று வரி மட்டும் முணுமுணுப்பேன். கேட்க நல்லா இருக்கும்.

ஹே ராம்லயும்.. பாட்டின் ஆரம்பம்பிடிக்கும் எனக்கு.. அதுக்கப்புறம் புரியாது அதுனால பிடிக்காது. :)


அன்புடன்
கீதா

 
At 9:27 AM, Blogger சிவா said...

கீதா! குமரனோட விளக்கம் படிச்சு பார்த்துட்டு பாட்ட கேளுங்க..நல்லா இருக்கும்.

 
At 10:03 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா. ரொம்ப நன்றி இந்தப் பாடல்கள் போட்டதற்கு. இனிய தமிழ் பாடல்கள் பலவற்றை இப்படி நல்ல இசையில் இன்னும் நிறைய இளையாராஜா போடவேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை. அவர் என்ன நினைக்கிறாரோ. திருவாசகம் மாதிரி இன்னும் சில பழைய பாடல்களை அவர் இசையில் போடப்போவதாகப் படித்தேன். எப்போது வருமோ?

ஹேராம் படத்தில் வரும் 'வைஷ்ணவ ஜனதோ' காந்திஜிக்குப் பிடித்த பாடல். அதைப் பாடிய பின் 'வாரணம் ஆயிரம்' வருகிறது. கோவில்களில் ஆண்டாளின் பாடல்களை இறைவன் முன் பாடும்போது அந்த மாதிரித் தான் பாடுவார்கள்/வாசிப்பார்கள். அதையே இசையின்றி ராஜா இந்தப் பாடலில் போட்டுவிட்டார். கமலின் தூண்டுதலாய் இருக்கும்.

 

Post a Comment

<< Home