கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, December 14, 2005

எனைத் தேடும் மேகம் - மீண்டும் S.P.B & வாணி ஜெயராம்

அடுத்த நேயர் விருப்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருங்கள். சோகப்பாடல்கள் பொதுவாகவே எல்லோருக்கும் பிடிக்கும். அதற்காக நாம் சோகமாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பாடல்களில் ஒரு அமைதி இருக்கும். உருக்கம் இருக்கும். இப்பொதெல்லாம் வரும் படங்களில் அப்படி பாடல்கள் வருவதும் இல்லை, ஹிட் ஆவதும் இல்லை. நாட்டு மக்கள் எல்லோரும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க போல. நல்லது தானே. ஒரே குத்துப்பாட்டு தான்.

சரி! மறுபடியும் S.P.B & வாணி ஜெயராம் ஜோடியில் ஒரு பாட்டு. 'கண்ணோடு கண்' படத்தில் இருந்து 'எனை தேடும் மேகம்..சபை வந்து சேரும்'. உருக்கமோ உருக்கம். S.P.B யும் வாணியம்மாவும் போட்டி போட்டு குரலில் உருக்குவாங்க. கவிதை வரி கூடுதல் உருக்கம். இந்த படத்தையும் பாட்டையும் பற்றி தெரிஞ்சவங்க கூடுதல் விவரம் (இசையமைப்பாளர்/கவிஞர்) சொல்லுங்க. இப்போ பாட்டு.

9 Comments:

At 10:34 AM, Blogger கீதா said...

அர்புதமான பாட்டுங்க. கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி.

 
At 7:17 PM, Blogger அல்வாசிட்டி.சம்மி said...

வணக்கம் அண்ணாச்சி.

அருமையான பாடல்.

கவிஞர் - வைரமுத்து
இசை - சங்கர்-கணேஷ்

 
At 8:12 PM, Blogger பாட்டுக் கச்சேரி said...

சிவா,
நல்ல பாட்டு இது. இசையமைப்பாளர் பேரை சொல்லலாம்னு வந்தா அல்வாசிட்டி அண்ணாச்சி ஏற்கனவே சொல்லிட்டாரு.வைரமுத்து பாடல்னு அவரு சொல்லித்தான் தெரியும்.
அண்ணாச்சிக்கும் உங்களுக்கும் நன்றிங்கோவ்

வீகே

 
At 10:04 PM, Blogger Maravandu - Ganesh said...

அண்ணாச்சி

இந்தப்பாட்டு எனக்கு ரொம்பப்பிடிக்கும்.
இந்தப் பாட்டை முதலில் இலங்கை வானொலியில் கேட்டேன்
இந்தப்பாட்டு கேட்கும் போது தேன்சிந்துதே வானம் பாட்டும் எனக்கு நாபகத்துக்கு வரும்

நன்றி அண்ணாச்சி

 
At 10:27 PM, Blogger Radha Sriram said...

shiva.

mandai vedichidum.....Usha sonna madhiri romba therincha madhiri irukku.....aana theriyala.....seekarama sollunga.illa enakku mattum inoru tip...

Radha

 
At 3:50 AM, Blogger சிவா said...

நன்றி கீதா.

தகவலுக்கு நன்றி சம்மி அண்ணாச்சி. வைரமுத்துன்னா, புது பாட்டு தான் (நிழல்களுக்கு அப்புறம்). கொஞ்சம் பழைய பாட்டு மாதிரி தெரிஞ்சது. நான் கண்ணதாசனோன்னு நெனச்சேன்.

வீ.கே! 70-80S பாட்டெல்லாம் போட்டு கலக்கறீங்க. எனக்கு 70S எல்லாம் அவ்வளவாக தெரியாது
:-(. எப்போவாவது கேட்டப்பாட்டு இப்படி ஒன்னு போடுறதோட சரி. நெறைய வெவரம் வேற சொல்லி கலக்கறீங்க. 70-80 பாட்டு நெறைய போடுங்க.

வாங்க கணேஷ்! நான் தனி மடல் ஒன்னு அனுப்பினேன். கெடைச்சுதா? சொல்லுங்க.

 
At 5:36 PM, Blogger மூர்த்தி said...

அற்புதமான ஒரு முயற்சி நண்பரே,

வாழ்த்தும் பாராட்டும்.

 
At 5:04 AM, Blogger சிவா said...

பாராட்டுக்கு நன்றி மூர்த்தி.

 
At 8:09 PM, Blogger rajkumar said...

ரவிக்குமார் என்ற ஒரு புதுமுகமும், சுலக்ஷனாவும் நடித்த படம். 83 லோ 84 லோ வெளிவந்தது.

அன்புடன்

ராஜ்குமார்

 

Post a Comment

<< Home