கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, October 31, 2005

தீபாவளி வாழ்த்துக்கள் - தீபங்கள் பேசும்


நண்பர்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். டி.வி-ல நதியா பட்டாச சுட்டு சுட்டு போட்டு பாட்டுப் பாடி கேட்டு கேட்டு வெறுத்துப்போய் இருப்பீங்க. இந்த இனிமையான பாடலை கேட்டுட்டு டி.வி முன்னாடியே உக்காராம, நல்லா பட்டாசு விட்டு தீபாவளிய கொண்டாடுங்க.

பாடல் : தீபங்கள் பேசும்..இது கார்த்திகை மாசம்..
படம் : தேவதை
பாடியவர் : S.P.B.சரண், சந்தியா
இசை: இசைஞானி 'இளையராஜா'






Sunday, October 30, 2005

அதிகாலை நேரமே..புதிதான ராகமே

இளையராஜா!!. நான் அவர் இசைக்கு ரசிகன் என்று மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் அவரை ரசிப்பேன். அவர் போஸ்டர் பார்த்தால் சந்தோசம். அவர் பேச்சை கேட்டால் சந்தோசம். கிட்டத் தட்ட, ஒரு நடிகனின் ரசிகன் போல மாறிப் போனேன். திருவாசகம் ஒலிப்பேழை (CD) வந்த போது அதை எடுத்துக் கொண்டு கடை கடையாக அலைந்து, முன் அறிமுகம் இல்லாத பேரிடம் மூக்குடை பட்ட போதும் ; பட துவக்கத்தில் இசை 'இளையராஜா' என்று வரும் போது , "தலைவா" என்று கத்துவதை பார்த்து, என் மனைவி "ம்ம்ம்ம்" என்று கண்ணை உருட்டி எச்சரிக்கை விடும் போதும் :-) இது நமக்கு தேவையா என்று சில சமயம் நினைப்பதுண்டு.

ஆனால் இது போன்ற பாடலை கேட்கும் போது, நம் ரசனை சரியே என்று தோன்றும். அப்படி என்ன பாட்டு என்று கேக்கறீங்களா. சில பாடல்கள் நம் செவியையும் தாண்டி, நம் உள் மனதை வருடிச் செல்லும். அதை ராஜாவின் இசையில் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன். அதில் ஒன்று இந்த பாடல்.

"மீண்டும் ஒரு காதல் கதை" - இப்படி ஒரு படத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. ஆனால் K TV-ல் அடிக்கடி இந்த பாடல் போடுவார்கள். பிரதாப்பும் ராதிகாவும் மனநிலை பாதித்த வளர்ந்த குழந்தைகளாக ஒரு இல்லத்தில் விளையாடிக் கொண்டிருக்க, இந்த பாடல் பின்னனியில் ஓடிக் கொண்டிருக்கும்.

பாடல் : அதிகாலை நேரமே..
படம் : மீண்டும் ஒரு காதல் கதை
பாடியவர்கள் : S.P.B & S.ஜானகி
இசை : "இசைஞானி" இளையராஜா



Wednesday, October 26, 2005

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ


இந்த பாடலை நண்பர் 'மரவண்டு' கணேஷ் மெயிலில் எனக்கு அனுப்பி இருந்தார். இந்த பாடலுக்கு பெரிய பதிவே போட்டு பரிசெல்லாம் கொடுத்தார். அவ்வளவு அருமையான பாட்டுங்க. S.B.P யின் குரல் இனிமையோ இனிமை. ரேடியோ மட்டுமே பொழுது போக்காக இருந்த காலத்தில் கேட்ட பாடல். இந்தப் பாடலின் விஷேசம் என்னவென்றால் அதன் வரிகள் தான். முதலில் இந்த பதிவை படித்து விட்டு, கீழே உள்ள பாடலை கேட்டுப்பாருங்கள். பாடல் வரிகளை கவனித்து பாடலை கேளுங்கள். நண்பர் கணேஷின் அனுமதியுடன் இந்த பாடல் உங்களுக்காக ,

முக்கியமான ஆள வுட்டுட்டீங்களேப்பா! இசை அமைப்பாளர் யாரு. தெரிஞ்சா சொல்லுங்க

படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம்
கவி: வாலி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்

(கொஞ்சம் PC-ல் ஒலி அளவை குறைத்து வைத்து பாடலை க்ளிக் செய்யவும்)







மேலும் பாடல்களுக்கு இங்கே.

Tuesday, October 25, 2005

மழை வருது..மழை வருது


இந்த வாரம் "ஒரு நாள் ஒரு கனவு" "அ..ஆ" எல்லாம் பார்த்து மண்டை காய்ந்து போய், கொஞ்சம் பழைய படம் பார்க்கலாம் என்று இரண்டு DVD எடுத்து பார்த்தேன். ரெண்டும் பிரபு படங்கள் - "ராஜா கைய வச்சா" " சின்ன மாப்ளே" . 90 களில் வந்த படங்கள் எவ்வளவோ தேவலாம் போல இருக்கு. பெரிசா ஒன்னும் இல்லைன்னாலும், ரொம்ப கொத்து என்றும் சொல்ல முடியாது. பாடல்களையாவது ரசிக்க முடியும்.

"ராஜா கைய வச்சா" வில் ரொம்ப புடிச்ச பாட்டு "மழை மழை வருது..குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே". அருமையான மெலோடி. K.J.ஜேசுதாஸ்-ம் சித்ராவும் பாடிய ஜோடி பாடல். வித்தியாசமான இசையில் செல்லும் பல்லவியும், அழகாக மெலெடியை தபேலாவில் கொண்டு வரும் சரணமும் அருமை. கேட்டுப் பாருங்கள்.

பாடல் : மழை வருது..மழை வருது
படம் : ராஜா கைய வச்சா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், சித்ரா
இசை : "இசைஞானி" இளையராஜா






மேலும் பாடல்களுக்கு இங்கே.



Sunday, October 23, 2005

பாடல் - 1 ஜோடி நதிகள்(S.P.B)

முதல் பாடலை எனக்கு பிடித்த S.P.B பாடலோடு தொடங்குகிறேன். "அன்பே ஓடிவா" படத்தில் இருந்து. இந்த பாடலை நான் ஒரே நாளில் 20 தடவை கூட கேட்டிருக்கிறேன். அந்த தொடக்க S.P.B ஹம்மிங் ரொம்ப அருமை. எப்போதுமே அலுக்காத பாடல். கேட்டு பார்த்து சொல்லுங்கள்.

படம் : அன்பே ஓடிவா
பாடல்: ஜோடி நதிகள்
பாடியவர்: S.P.B
இசை: இளையராஜா




Saturday, October 22, 2005

பக்தி பாட்டு ஒன்னு

சரி! முதல் பாடலை வழக்கம் போல ஒரு பக்தி பாடலோடு ஆரம்பிச்சிரலாம். எனக்கு பக்தி பாடல்களில் T.M.S பாடிய முருகர் பாடல்கள், சீர்காழி கோவிந்தராஜனின் பிள்ளையார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இவர்கள் இருவர் குரலிலும் அப்படி ஒரு பக்தி தவழும். "கணபதியே வருவாய்" என்று கணீரென்று விடியற்காலையில் பிள்ளையார் கோவிலில் கேட்கும் சீர்காழி கோவிந்தராஜனின் பாடல், "முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு" என்று உருக்கமான T.M.S பாடல் என்று பழைய பக்தி பாடல்களில் உள்ள தெய்வீகம் இப்போது வரும் பாடல்களில் ஏனோ காணாமல் போய்விட்டது. முஸ்லிம் பக்தி பாடல்களில் நாகூர் கனிபா பாடல்களில் இதே உருக்கத்தை நான் கேட்டிருக்கிறேன். இரு பாடல்கள் உங்களுக்காக,

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யாரென்று தெரிந்தால் கூறுங்கள்.

பாடல் 1: கணபதியே வருவாய்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்








பாடல் 2: முருகனை கூப்பிட்டு
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்



முதல் பதிவு


பாட்டு கேக்கறது தான் என்னோட முதல் பொழுது போக்கு. பாட்டு இருந்தா வேற ஏதும் தேவை இல்லை எனக்கு. எனக்கு இளையராஜா பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். பொதுவாகவே நாம நல்லா ரசிச்ச ஒரு பாட்ட, கேட்க வாய்ப்பு இல்லாத போது அது மறந்து போயிடும். அப்புறம் எங்கேயாவது கேட்டால், நம்ம பழைய நினைவுகளை எல்லாம் அந்த பாடல் கொண்டு வரும். அந்த பாட்டு வந்த காலத்துல நாம எப்படி இருந்தோம், என்ன என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் என்று பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்று விடும். அப்படி சில மறந்து போன, இப்போது கேட்ட வாய்ப்பில்லாத சில பாடல்களை இங்கே உங்களுக்காக பதியலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இதில் என் ரசனை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.