நேயர் விருப்பம் - 4
( சென்ற போட்டிக்கான விடை கீழே)
இந்த வார நேயர் விருப்பம். முதல் பாடல், முத்துக்குமரன் விருப்பத்தில் 'உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்" (பாட்டு இல்ல) படத்தில் இருந்து 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட". இது ஒரு கார்த்திக் படம். வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் போன படம். ஆனால் இந்த பாடல் மட்டும் ஓரளவுக்கு எல்லோர் மனதையும் கவர்ந்தது. S.P.B & சுவர்ணலதா பாடியது. ஒரு அருமையான மெலோடி. சுவர்ணலாதாவின் தொடக்க கம்மிங் அழகு. பாடலுக்கு இங்கே.
இதே போல, இன்னொரு சுவர்ணலதா பாடலையும் கேட்கலாம். இந்த படமும் ஊத்திக்கிட்டு. ஆனால் பாடல் ஹிட். "தாய் மொழி" படத்தில் இருந்து மனோ-சுவர்ணலதா குரலில் "சிங்கார மானே பூந்தேனே". சரத்குமார் நடித்த படம். இந்த பாடல் நம் மனதுக்குள் அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்கும். அருமையான பீட். பாடலுக்கு இங்கே.
அடுத்து, போன பாடலுக்கு சம்மந்தம் இல்லாமல் ஒரு சோகப்பாடல். போன பதிவில் 'ஆத்மா' பாடலை கேட்டுவிட்டு கீதா எனக்கு இந்த இருமல் :-) பாட்டு ரொம்ப பிடிக்கும் என்றார்கள். அது "பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இருந்து 'மணியோசை கேட்டு எழுந்து". சூப்பர் டூப்பர் ஹிட் இந்த பட பாடல்கள். படமும் கூட. S.P.B யின் இன்னொரு திறமை இந்த இருமிக் கொண்டே பாடுவது. படத்தில் பாடும் போது மோகன் கலக்கி இருப்பார் :-). இனைந்து பாடுவது ஜானகி. கேட்டு மகிழுங்கள்.
இப்போ ரொம்ப வித்தியாசமான ஒரு நேயர் விருப்பம். தம்பி விஷ்ணு பின்னோட்டம் விட்டு ஒரு பாடல் கேட்டு இருந்தார். "Disco Dancer" என்ற ஹிந்தி படத்தை நடிகர் ஆனந்த்பாபு (முதல் படம்)வை வைத்து "பாடும் வானம் பாடி" என்று எடுத்தார்கள். பாட்டு எல்லாமே அப்படியே ஹிந்தி பாட்டு ரீ-மேக் தான் (பப்பி லஹரி இசை). அதில் வருகிற "அன்பே அன்பே அன்பே" பாட்டு இருக்குமான்னு கேட்டிருந்தார். இல்லன்னா அந்த ஹிந்தி பாடலையாவது போடுங்க என்று கேட்டிருந்தார். ஹிந்தியில் "ஜிம்மி..ஜிம்மி..ஜிம்மி" என்று வரும். என் அண்ணன் டில்லியில் இருந்த போது, நானும் ஹிந்தி பாடல் கேட்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று இந்த பாடல். இப்போது சுத்தமாக கேட்பது இல்லை :-). தம்பி விஷ்ணு விருப்ப பாடல் இங்கே.
இப்போது போட்டிக்கான விடை:
1. கொஞ்ச நாள் முன்பு ஒரு DVD வாங்கினேன். ஜானகி ஹிட்ஸ். காசு கொடுத்து வாங்கியதால் எல்லா பாடலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். 'நான் சிகப்பு மனிதன்" படத்தில் இருந்து ஒரு கவர்ச்சிப் பாடல். 'குங்குமத்து மேனி". தொலைக்காட்சியில் வந்தால் உடனே சேனல் மாற்றி விடுவோம். இல்லன்னா "என்னடா இவன்! அனுராதா டான்ஸ் பாத்திக்கிட்டு இருக்கிறான்" என்று வீட்டுல ஒரு மாதிரி பார்ப்பாங்க :-). பாடல் முழுவதும் பார்த்தவுடன் தான் தெரிந்தது எவ்வளவு கலக்கலான இசை என்று. டிரம்ஸ் என்ன, ட்ரம்பட் என்ன, கிடார் என்ன. அடடா! ராஜா கலக்கி இருப்பார். அதில் இருந்து தான் முதல் போட்டி Interlude போட்டேன். சரியான பதிலை கீதா சொல்லி, பரிசுப்பாடலை தட்டிக்கிட்டு போறாங்க. கீதா! உங்க விருப்ப பாடல் என்னவென்று சொல்லுங்க. இப்போ பாடல் இங்கே.
2. ராஜா இசை அமைத்த பிரபு படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது "மைடியர் மார்த்தாண்டன்". இந்த படத்தில், அவரது வழக்கமான தபேலா இல்லாமல், ஒரு வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார். அதில் இருந்து 'இளவட்டம் கை தட்டும்" பாடலிம் Interlude தான் இரண்டாவது போட்டி. எவரும் முயற்சி செய்யவில்லை. பாடல் குஷ்பு மேடையில் பாடுவதாக வரும், அப்புறம் அதை பார்த்துக் கொண்டிருக்கும் பிரபு அப்படியே பாடலை டூயட்டாக மாற்றிவிடுவார். இந்த போட்டியின் பரிசு எனக்கே :-).
இப்போ பாடல்.
8 Comments:
நல்ல பாடல் தேர்வு சிவா!
"சிங்கார மானே.." பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு.
"பாடும்வானம்பாடி" படப்பாடல்கள் என்னிடம் இருக்கு. "அன்பெ அன்பே அன்பே "-இந்த பாடலைத்தவிற மற்றதெல்லாம் இருக்கு. விஷ்ணு உங்களுக்கு வேண்டும்னா சொல்லுங்க.
இருமல் பாட்டு ( X-( ) போட்டதற்கு நன்றி.
மைடியர் மார்த்தாண்டன் படத்திலிருந்து இந்த பாட்டு மட்டும் ஏனோ நினைவுக்கு வரவேயில்லை.. சரி இருக்கட்டும்.
என் விருப்பம் :
படம்:I love India
பாடல்: அடி ஆடி வரும் பல்லாக்கு
:)
சிவா, 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட' பாட்டு முத்துகுமரனுக்கு மட்டும் இல்லை. இந்த வெத்துகுமரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். காலையில இருந்து குறைந்தது பத்து தடவையாவது கேட்டிருப்பேன். மிக நல்ல கவிதை. இசையும் அருமை.
'மணி ஓசை கேட்டு எழுந்து' நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்ப விரும்பிக்கேட்டது, அப்போதெல்லாம் பொருள் எல்லாம் பார்த்ததில்லை.
அந்த இந்திப்பாட்டையும் நான் கேட்டிருக்கேன் சிவா. எனக்கே ஆச்சரியமாய் இருக்கு. :-)
கீதா! விஷ்ணு தம்பி கேட்டா 'பாடும்வானம் பாடி' கொடுங்க. ரொம்ப விரும்பி கேட்டாரு. "மைடியர் மார்த்தாண்டன்' படத்துலேயே கலக்கல் பாடல் இது தாங்க. சரி! எப்படியோ விட்டுட்டீங்க. அடுத்த போட்டிய எளிதா கொடுக்கிறேன். :-)
"I love India" தான. அடுத்த பதிவுல கேட்டுடலாம்.
குமரன்! எதுகை மோனைக்காக உங்களை வெத்துக்குமரனாக்கிட்டீங்களே :-) நீங்களும் ஒரு முத்து குமரன் தான். 10 தடவை கேட்டீங்களா! நல்லது. பாட்டு போட்டது திருப்தியா இருக்கு. இந்தி பாட்டெல்லாம் அந்த காலத்துல எல்லா இடத்திலேயும் ஓடுமே! அப்போது உங்கள் பாசுரங்களுக்கு இடையே காற்றோடு கேட்டிருப்பீங்க.
உஷா! கொஞ்ச நாளாக ஆளை காணோம்?. அந்த பாடல் 'மைடியர் மார்த்தாண்டன்' படத்திலேயே நல்ல பாடல் அல்லவா?. நான் Interlude தேர்வு செய்யும் போது, கேட்க நன்றாக, நீளமான Interlude-ஆக செலக்ட் செய்கிறேன். கடைசியில் கடினமாக போய்விடுகிறது. இனி வரும் போட்டிகளில் எளிதாக போட முயற்சிக்கிறேன்.
நன்றி சிவா.
காதல் ஓவியம் படத்தை பற்றி ஒரு பதிவில் நாம் பேசலாமே. என்னைப் பொறுத்தவரை தனிமைச்சிறையில் வைரமுத்துவையும் இளையராஜாவையும் அடைத்து வைத்து இந்தப் படப்பாடல்களை போட்டு கேட்கவைத்தால், அவர்களை விடுவிக்கும் போது சாக வரம் கொண்ட டியூனோடும் பாட்டோடும் வருவார்கள் என்பது உறுதி. இவர்களுக்கு நடுவில் கட்டிப் போடப்பட வேண்டியவர் திரு.பாரதிராஜா
வணக்கம் சிவா அண்ணா...
நலம் நலமறிய ஆவல்... நான் கேட்ட பாடலை குடுக்காவிட்டாலும்... அதே மெட்டில் அமைந்த இந்தி பாடலை குடுத்து என்னை சந்தோசத்தில மூழ்கவைச்சிடிங்க.. ரொம்ப நன்றி அண்ணா... மேலும் நான் கேள்விப்படாத பாடல்கள் பலதை.. உங்கள் தளத்தில் கேட்டேன். நன்றி.. நேரம் பற்றாக்குறையால் அதிகம் நெட்டில் வர முடியவில்லை. மேலும் உங்கள் பக்கத்தை சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.
கீதா அக்கா.. முடிந்தால் பாடும் வானம் பாடி பட பாடல்களை எனக்கு தாருங்கள். எல்லா பாடல்களுமே இனிமையானவை. நான் விரும்பி கெட்டவை. ( உ+ம் என் நினைவு தானே... பெற்ற அன்னை இல்லையெ.... அப்புறம்.. வாழும் வரை போராடு.. ) எல்லாமே நல்ல பாடல்கள் தான். நன்றி.
விஸ்ணு
முத்துகுமரன்! இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா. இது சாகா வரம் கொண்ட பாடல்களை கொடுக்கும் கூட்டணி. சரியாக சொன்னீர்கள். நமக்கு ஏனோ கொடுத்து வைக்கவில்லை. மூவருமே பிரிந்துவிட்டார்கள். சமீபத்தில் ஒரு செய்தி வந்தது, இந்த மூவர் கூட்டணியை கஸ்தூரிராஜா இனைத்து வைக்க முயற்சி செய்வதாக. நடந்தால், சந்தோசம் தான். "காதல் ஓவியம்" படம் பாடல்களை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். சீக்கிரம் பார்க்கலாம்.
விஷ்ணு தம்பி, உன் வாழ்த்துக்களுக்கு நன்றி. கீதா! விஷ்ணுவிற்க்கு முடிந்தால் அவர் கேட்கும் பாடலை அனுப்பி வையுங்கள்.
சிலமாதங்களுக்கு முன்னால் , குங்குமம் புத்தகத்தில் வாசகர்கள் கேள்விக்கு
இளையராஜா பதில் அளித்திருந்தார் , ஒரு வாசகர் இளையராஜாவிடம்
நீங்கள் எத்தனை படங்கள் வைரமுத்துவுடன் சேர்ந்து இசையமைத்து இருக்கிறீர்கள்"
என்று கேட்டிருந்தார். அதற்கு இளையராஜா , நான் யாருடனும் சேர்ந்து இசையமைக்கவில்லை ,
தனி ஆளாகத் தான் இசையமைத்தேன்" என்று பதிலளித்திருந்தார்.
வைரமுத்துவை திரைத்துறைக்கு அழைத்து வந்தது பாரதிராஜா தான்.
என்றும் அன்பகலா
மரவண்டு
Post a Comment
<< Home