கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, March 01, 2006

உன் எண்ணம் எங்கே எங்கே

'தம்பி பொண்டாட்டி' . இப்படி ஒரு படம் 1992-ல வந்தது. ரகுமான், ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்க காத்துக்கிடந்த காலத்தில் நான் ரொம்ப ரசித்த பாடல் இது. ரொம்ப நாளா இந்த பாடலை போடலாம்னா, நிறைய பேருக்கு தெரியாத, அவ்வளவாக ஹிட் ஆகாத பாட்டு. அதான் அப்படியே கிடப்பில் போட்டுட்டேன். சரி இன்னைக்கு ரிலீஸ் பண்ணுறேன். அருமையான, சொல்லப்போனால் சூப்பரான பாடல். எனக்கு ராஜாவின் இந்த பாடலும், காதல் ஓவியம் பாடலும் ஒன்றே. இரண்டையும் ஒரே ரசனையுடன் ரசிப்பேன். என்னைப் பொருத்த வரையில் ராஜா இந்த மாதிரி பாடல்களில் காட்டியிருக்கும் திறமை அதிகம். அதை ரசிக்க எனக்கு ஒரு ரசனையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. ஏனோ வெறும் காதல் ஓவியம், இதயக் கோவில், உதய கீதம் என்று ராஜா பாடல்களை ஒரு 50 படங்களுக்குள் அடக்கிக்கொண்டது வெகுஜனம்.

பாடல் 'உன் எண்ணம் எங்கே எங்கே'. சுனந்தா பாடியது. படத்தில் ரம்யா கிருஷ்ணன் மாடலிங் செய்ய இந்த பாடல் ஒலிக்கும்.

முதலில் எனக்கு பிடித்தது தபேலாவையும் ட்ரம்ஸையும் கலந்து ராஜா அமைத்திருக்கும் பீட்(Beat). என் மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அப்புறம் மொத்த பாடலே ஒரு அருமையான இசை கலவை (Fusion). சீரான மெட்டில் பாடல் ஓடிக்கொண்டிருக்க, வயலின், வீணை, புல்லாங்குழல் என்று கலந்து ஓடும் பாடல் முழுக்க. ( Listen all ludes). மூன்றாவதா, சுனந்தாவின் (Sunantha) குரல். ரொம்ப சில பாடல்களே பாடினாலும், அத்தனையும் ராஜாவின் இசையில் ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் இந்த பாடல் ரொம்பவே அருமை.

முதலிலேயே சொல்லிட்டேன். இந்த பாடலுக்கு இவ்வளவு பில்ட்-அப் பா என்று சொல்லாதீங்க. இது என் ரசனை அவ்வளவே :-)). (எப்பவாவது என்னுடைய விருப்பமும் போடலாம்லா :-)).

பாடலுக்கு இங்கே.

7 Comments:

At 3:43 AM, Blogger நன்மனம் said...

Siva, tooooo good, thanks for taking pain in posting what you enjoyed and let a few others (if not all) enjoy, sridhar

 
At 8:14 AM, Blogger தங்ஸ் said...

kalakkal paattu..Nanri Siva..

 
At 9:23 AM, Anonymous Anonymous said...

இப்பதான் முதல் முறை கேட்கிறேன் சிவா.. இதே படத்துல ராஜா பாடின பாட்டு இருக்காமே அப்படியா..

இந்த பாட்டு நல்லாயிருக்கு.. ஏற்கனவே கேட்டது போல ஒரு feeling.. ஆனா நான் கேட்டதில்லை

அன்புடன்
கீதா

 
At 7:16 PM, Blogger சிவா said...

வாங்க ஸ்ரீதர்! முதல் வருகைக்கு ரொம்ப நன்றி. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உங்களை மாதிரி ஆளுங்களுடைய உற்சாகத்தினால் தான் நான் இந்த ப்ளாக்கை கொண்டு போகிறேன். நன்றிங்க.

வாங்க தங்க்ஸ், உங்களை அடிக்கடி இப்போ பார்ப்பதில் சந்தோசம். பாராட்டுக்கு நன்றி.

கீதா! இப்போ தான் மொத தடவையா கேக்கறீங்களா. இந்த படத்தில் ராஜா பாடின பாட்டு எதுவும் கெடையாதே..எந்த படத்தை நினைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே. (இந்த படத்தில் இன்னொரு வேகமான பாட்டு 'என் மானே..மீனே..வண்ணம் கொஞ்சும் பொன்னே' மனோ-சித்ரா பாடியது).

இந்த பாடல் சில நேரம் 'காலை குயில்களே' பாடலை நினைவு படுத்தலாம் :-). அதான் கேட்ட மாதிரி இருக்கலாம்.

 
At 12:54 PM, Anonymous Anonymous said...

Sunanda! She has a lovely voice! ‘Poo mudithu pottu....’-en purushan dhaan yenakku mattumdhaan and ,’kaadhal mayakkam....’- pudhumaip pen are my other favorite sunanda gems!
I am listening to ‘aananda raagam...’ Panner pushpangal by Deepan chakravarthy and Uma ramanan! Siva, you should host some Deepan’s gems too! Aananda ragam... is a stunning compostion with breezy tune, magical interludes, sweet singing! Lunch break with Raaja pattu, enjoy panniyaachu!
love, vinatha

 
At 7:18 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா, இந்தப் பாட்டையும் கேட்டுட்டேன். நல்லா இருந்தது.

 
At 4:54 AM, Blogger சிவா said...

வினு அக்கா! நீங்க சொல்லிய சுனந்தா பாடல்கள் எல்லமே அருமை. நீங்க சொன்ன மாதிரியே தீபன் பதிவு ஒன்று சீக்கிரம் ரெடி பண்ணுகிறேன்.

நன்றி குமரன்

 

Post a Comment

<< Home