கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, January 26, 2006

சின்ன புறா ஒன்று ( SPB - தனி ஆவர்த்தனம் - 2)

எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் -1 ல் நிலா அவர்கள் இப்படி கூறியிருந்தார்கள். "அடுத்த ஜென்மத்தில அவருக்கு மகளா பிறந்து அவர் பாடற தாலாட்டில தூங்கணும்னு பேராசை". இப்படி நிறைய பேரு ஆசைப்பட்டா அடுத்த ஜென்மத்துல அவரு எத்தனை பிள்ளை பெத்துக்க வேண்டிய வரும் :-). உண்மை தான். திறமையான பாடகர் என்பது வேறு. சங்கீதம் கற்றுக் கொள்ளலாம். குரல்? குரல் என்பது கடவுள் கொடுத்த வரம். அந்த வரம் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. எஸ்.பி.பி வரம் வாங்கி வந்த ஒரு பாடகர். இந்த பதிவில் எஸ்.பி.பி பாடிய ராஜாவின் தொடக்க கால பாடல்கள் சில பார்க்கலாம். ( ராஜா தவிர மற்ற இசையமைப்பாளர்களை அடுத்த பதிவில் பார்த்துடலாம்).

முதல் பாடல். இதை ராஜாவின் சிம்பொனிக்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். இசையை கவனித்து பார்த்தால் தெரியும். வயலின், ஹம்மிங் எல்லாமே அந்த காலத்திலேயே இவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்தியது ராஜாவாக தான் இருக்கும். 'சின்னப் புறா ஒன்று' பாட்டு. 'அன்பே சங்கீதா' படத்தில் இருந்து. ஆனால் படத்தில் பரிதாபமாக தேங்கா சீனீவாசன் பாடிக்கிட்டு இருப்பார் (இந்த பாட்டு தானே. இல்லன்னா சொல்லிடுங்க). SPB தனி ஆவர்த்தனம் என்று சொல்லியாச்சு. அதற்கு மறுபேச்சு உண்டோ :-). பாட்ட கேளுங்க.





அடுத்த பாட்டு 'பகலில் ஒரு இரவு'. எல்லோருக்கும் தெரிந்த பாட்டு தான். 'இளமை எனும் பூங்காற்றி' . ஹம்மிங் எல்லாமே கிட்டத்தட்ட சென்ற பாடலை போலவே இதிலும் கலக்கல்.





மூன்றாவதாக, 'வா பொன் மயிலே..நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது'. பூந்தளிர் படத்தில் இருந்து. பாட்டுல prelude ரொம்ப நல்லா இருக்கும்.





கடைசியா, ராஜாவின் ஆரம்ப பாடல்கள் சில M.S.V ஸ்டைலில் இருக்கும். ராஜாவா M.S.Vயா என்று எனக்கு நிறைய தடவை குழப்பம் வரும். அவை பொதுவாக சிவாஜி படத்தில் வரும் பாடல்களாக இருக்கும். அப்படி நான் ரொம்ப நாளா ராஜா பாட்டு இல்லன்னு நெனைச்சுக்கிட்டு இருந்த பாட்டு ஒன்று. 'கவரி மான்' படத்தில் இருந்து ஒரு அருமையான பாட்டு. குழந்தை பாட்டு. 'பூப்போலே உன் புன்னகையில்'. மற்ற மூன்று பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் இசை அமைப்பில், இசை கருவிகளில், பாடும் விதத்தில் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். கேட்டு பாருங்கள்.





இன்னொரு விசயம். இந்த பதிவில் போட்ட நாலு பாட்டுமே ஒரே ஆண்டில் வெளி வந்த பாடல்கள். வருடம் 1979 ( நான் அப்போ ஸ்கூலுக்கே போகலையே :-). ஒரே வருசத்துல SPB-க்கு இத்தனை கலக்கல் தனி பாடல்களா :-)).

11 Comments:

At 7:24 AM, Blogger Sundar Padmanaban said...

சிவா.

பாலுவின் அருமையான பாடல்களில் இவையும் சில.. நன்றி.

அது சரி. பட்டியல் போட்டு மாளுமா? :)

பொதுவாக நல்லவற்றை ரசிக்கலாம்; ஆனால் வெறித்தனமாக ரசிக்கக்கூடாது என்று நினைப்பவன் நான். ஆனால் தலைவரைப் பொருத்தவரை அவரது வெறித்தனமான ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமைதான்.

அந்தக் குரல்!

 
At 7:28 AM, Blogger Sundar Padmanaban said...

அப்றம் ஒரு சின்ன விஷயம்..

>சின்ன புறா <

நடுவுல 'ப்'பணும்!

 
At 7:33 AM, Blogger சிவா said...

நன்றி சுந்தர். 'ப்'பியாச்சு :-). சுட்டி காட்டியமைக்கு நன்றி. தலைப்பை மாற்ற முடியவில்லை. மாற்றினால் தமிழ்மணம் சுட்டி வேலை செய்ய மாட்டேங்குது. அப்புறம் மாற்றுகிறேன் :-).

 
At 1:21 PM, Anonymous Anonymous said...

Even after 25 yrs these songs are so fresh!! What a tune,orchestration, divine singing by Balu!! God Bless Shri.Ilayaraja!!
Poonthalir is my favorite album! 'manadhil yenna...' is another amazing song in this album! Thanks a lot, Siva! love, vinatha

 
At 2:49 PM, Anonymous Anonymous said...

dear siva,

Inru than Geetham sangeetham" vanthean.

"intha padaluku adimai" enru oru padal patri solli iruntheergal.

Naanum kuda antha padalai migavum rasipathundu.

ungal valaipoo , ungalai patri niraya pesamal ilayarajavin thirai isai patri vivaripathu , ungal meethu konjam eerpai varavalaithathu.

nalla oru isai vattam,
nallum perugatum ithan vittam.

nandri

guna-singapore

 
At 4:25 PM, Blogger சிவா said...

வாங்க சுந்தர்! முதல் வருகைக்கு நன்றி. நீங்களும் பாலுவோட வெறியரா :-) அடிக்கடி வாங்க. நெறைய பாட்டு கேட்கலாம்.

வினதா அக்கா! பூந்தளிரில் நீங்க சொன்ன பாட்டும் சூப்பர் பாட்டு தான். //** What a tune,orchestration, divine singing by Balu!!**// உண்மை உண்மை உண்மை...

குணா! முதல் வருகைக்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் ராஜாவ பற்றி, ராஜா பாட்டு பற்றி நாள் முழுவதும் பேசிக்கிட்டே இருப்பேன். ஆள் கிடைத்தா. அப்படி பேச இந்த ப்ளாக் மூலம் சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். உங்களை போல நண்பர்களின் ஊக்குவிப்பால் எனக்கு முழு திருப்தியுடன் போகிறது. வருகைக்கு ரொம்ப நன்றி. அடிக்கடி வாங்க. பாட்டு கேளுங்க.

இந்த பதிவில் வெறும் ராஜா பாட்டு மட்டும் போடுவது கிடையாது (98 % ராஜா தான் :-)) . சில மற்ற இசை அமைப்பாளர்களின் பாட்டும் போடுவேன்.

என்னோட புராணம் பாட 'சிவாபுராணம்'னு ஒரு ப்ளாக்-ம் வச்சிருக்கேன். இங்கே பாருங்க http://sivapuraanam.blogspot.com/
என் கதை எல்லாம் அங்கே தான். இங்கே ராஜா...ராஜா...ராஜா புராணம் மட்டுமே :-))

 
At 2:11 PM, Blogger தங்ஸ் said...

SPB-list ekkachkkam irukku..eppadi solla?ellame super.

 
At 4:17 PM, Blogger சிவா said...

வாங்க உஷா! வைரஸ் தொல்லை ஓய்ந்து விட்டதா. அதானே! ஆளை ஒரு வாரமா இந்த பக்காமே காணோம் என்று பார்த்தேன். //**Nanraga nadathugireergal Siva**// உங்களை மாதிரி ஆளுங்க ஆதரவு இருக்கும் வரை நான் எதையாவது எழுதிக்கொண்டு தான் இருப்பேன் :-))

வாங்க தங்ஸ், ஆமாங்க எஸ்.பி.பி பாடல்களை பட்டியல் போட்டு மாளாது. முடிந்த அளவு எனக்கு பிடித்தவைகளை பதிய முயற்சி செய்கிறேன்.

 
At 1:09 AM, Blogger முத்துகுமரன் said...

பத்து நாளா வேலையில நொங்கெடுக்கிறாய்ங்கய்யா. அதான் தலை காட்ட முடியலை.

சின்னப்புறா ரொம்ப நல்ல பாட்டு. நன்றாகவும் படமாக்கி இருப்பார்கள். தேங்காய் சீனிவாசனின் முகபாவமும் நன்றாகவே இருக்கும்.

இந்தப்பாட்டை அப்படியே காப்பியடிச்சு காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா தேவா போட்டிருப்பார்.

வா பொன்மயிலே பாட்டில் பாலுவின் உச்சரிப்பு தேனாய் இருக்கும்.

நல்ல பாடல்கள் தந்ததற்கு நன்றி சிவா

 
At 8:10 PM, Blogger சிவா said...

//**பத்து நாளா வேலையில நொங்கெடுக்கிறாய்ங்கய்யா**// அடப்பாவிங்களா..எங்க முத்துகுமரன Freeயா விடுங்கப்பா.

ஓ! அதுவும் சுட்ட பாட்டு தானா :-)) தேவா இதை தான் சுட்டு போட்டாரா..அதுவும் எஸ்.பி.பி தான் பாடி இருப்பார் இல்லையா.

 
At 3:22 PM, Blogger சிவா said...

சசிகலா! மூன்று நாட்கள் விடுமுறை. ஊர் சுற்ற போய்விட்டேன். அதான் உடனே பதில் கொடுக்க முடியவில்லை. பழைய பதிவுகளை என்னையும் புரட்டி பார்க்க வைத்து விட்டீர்கள். நன்றி. நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

அன்புடன்.
சிவா

 

Post a Comment

<< Home