கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, February 16, 2006

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 1

தபேலா - ராஜாவுக்கு மிகவும் பிடித்தமான வாத்திய கருவி போல. அவரது 70% (குறைந்தது) பாடல்கள் தபேலாவை ஒட்டி தான் வரும். அதிலும் அவரது மெலோடி பாடல்கள் ('முத்து மணி மாலை' 'நிலவே முகம் காட்டு') எல்லாம் ஒரே மாதிரியான தபேலா மெட்டில் தான் இருக்கும். தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே அடி தான். டக்க..டக்க..டக்க அப்படின்னு ரிப்பீட்டு தான் (தலேபா வாசிப்பவர் கொடுத்து வச்சவர்). அதற்கு அவர் அந்த பாடல்களில் மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசை வித்தைகளை அடக்கி வாசித்திருப்பார்.

ராஜாவின் மொத்த பரிமாணங்களையும் வெளிக் கொண்டுவரும் பாடல்கள் மேடைப் பாடல்கள் தான். அதாவது மேடையில் ஆடி பாடி ஆடுவது போல வரும் பாடல்கள் தான். கலர் கலராக விளக்குகள் வெட்டி வெட்டி எரிய, குழுவினர் ஆட, கதாநாயகியோ, கதாநாயகனோ பாடுவது போல வரும் பாடல்களில் ராஜா நம் செவிக்கு நல்ல தீனி போட்டிருப்பார். அதில் சில பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதிரி பாடல்கள் இப்போ வரும் படங்களில் காண முடிவதில்லை. அப்படி ஒன்னொன்னு வந்தாலும், காது தான் கிழியுது :-).

இது போன்ற பாடல்களில் ராஜா தபேலாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, டிரம்ஸ், ட்ரம்பட், எலக்ட்ரிக் கிடார் என்று கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்.

முதல் பாடல், 'வா வா பக்கம் வா'. 'தங்க மகன்' படத்தில் இருந்து. வாணி ஜெயராம் பாடிய வெகு சில ராஜா பாடல்களில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாடல். ரஜினிக்கு எஸ்.பி.பி-ய விட்டா வேறு ஆள் உண்டா?. ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல். பாடலின் தொடக்கமே தூக்கலாம இருக்கும். போங்கோ (pongo) மாதிரி இரு வாத்தியத்தில் ஆரம்பிக்கும். அதோடு ட்ரம்பட் (Trumpet/Sax) சேர்ந்து அப்படியே ஒன்னொன்னா சேர்ந்துக்கிட்டே இருக்கும். கலக்கல் ஆரம்பம். பல்லவியில் ஒவ்வொரு வரி முடிந்தவுடன் குட்டியா ஒரு எலக்ரிக் கிடார் பிட் ஒண்ணு வரும். அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. இவ்வளவு சின்ன விசயத்தை ராஜா எவ்வளவு கலக்கலாக கொடுத்திருக்கிறார். கவனித்துப் பாருங்கள் ( 'வா வா பக்கம் வா' என்று முடிந்தவுடன்...'பக்கம் வர வெக்கமா' முடிந்தவுடன்). பாடலே ஒரு டிஸ்கோ பாட்டு. ஆனால் அதிலும் ஒரு மெலோடி பாடல் முழுவதும் நம்மை ஆட்டத்தோடு தாலாட்டவும் செய்யும். கேட்டுப் பாருங்க.

இரண்டாவதாக, ஒரு அரிய பாடல். 'கடல் மீன்கள்' படத்தில் இருந்து 'என்றென்றும் ஆனந்தமே'. இதை நான் ஏன் அரிய பாடல் என்று சொல்கிறேன் என்றால், 'கடல் மீன்கள்' படத்தில் 'தாலாட்டுதே வானம்' அளவுக்கு இந்த பாடல் மக்களை தொடவில்லை. கமல் படமாக இருந்தும், கமல் பாட்டாக இல்லாதது காரணமாக இருந்திருக்கலாம் (படத்தில் சுமன் மேடையில் ஆடிப்பாட, அம்பிகா கூட சேர்ந்து ஆடுவார்). மலேசியா வாசுதேவனின் டாப் 10-ல் இந்த பாடலை தாராளமாக வைக்கலாம். அவ்வளவு அருமையாக பாடி இருப்பார்.

இந்த பாடல் ஒரு தனி வயலின் ஆவர்த்தனம். இப்படி ஒரு டான்ஸ் பாட்டில் தனி வயலின் சேர்ப்பதே ஆச்சர்யம் தான். அதை கிட்டத்தட்ட ஒரு இணை குரல் அளவுக்கு இந்த பாடலில் பயன் படுத்தி இருப்பார். தனி வயலினுக்காக ரொம்ப ரசிக்கும் பாடல் இந்த பாடல் தான். அதுவும் சரணத்தில் ஆண் குரலோடு பின்னி பிணைந்து வயலினை விட்டிருப்பார். அதைக் கேட்டால், ஒரு பெண் அப்படியே ஆண் குரலோடு பின்னி பிணைந்து ஆடுவது போலவே கலக்கலாக இருக்கும் (மஞ்சள் நிற பூவெடுத்து...மங்கை உடல் சீர் கொடுத்து..கொஞ்சி வரும் பாட்டெடுத்து..வந்த சுகமே- பாடும் போது). கேட்டுப் பாருங்கள்.


இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

7 Comments:

At 7:35 PM, Blogger G.Ragavan said...

இந்த இரண்டு பாட்டுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் சிவா.

வா வா பக்கம் வா...மிகவும் பிடித்த பாடல். ரொம்ப ஸ்டைலா பாடியிருபாங்க.

ரெண்டாவது பாட்டும் பிடிக்கும். நீங்க சொன்ன மாதிரி தாலாட்டுதே வானம் கிட் ஆன அளவுக்கு இது கிட் ஆகலை. ஆனாலும் நல்ல பாட்டு.

 
At 7:37 PM, Blogger G.Ragavan said...

This comment has been removed by a blog administrator.

 
At 8:22 PM, Blogger கைப்புள்ள said...

நட்சத்திர வாரத்துக்கு அப்புறம் சிவா அண்ணன் back to form. ரெண்டு பாட்டுமே சூப்பர் பாட்டு. காலங்கடந்து சமீபத்தில் மிகவும் ரசித்த ஒரு மேடை பாட்டு - 'ஏய்! உன்னைத் தானே'.

 
At 11:06 PM, Blogger முத்துகுமரன் said...

தங்கமகன் படத்தின் ஆடல் பாடலிலும் ஒருவித மென்மை இருப்பது கதைநாயகர்களின் குணத்தை உணர்த்துவதற்கு. ராஜா இதை சரியாக உள்வாங்கி செய்திருப்பார்....:-)

ராஜா தபேலா வைத்தே கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் போட்டு இருப்பார். வயலின் ராஜாவின் மிக விருப்பமான கருவிஅல்லவா... இடம் கிடைத்தால் போட்டு தாக்கிவிடுவார்.

அப்புறம் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா எப்ப போடுவீங்க:-))))))))

 
At 7:50 PM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! ( என்ன கைப்புள்ளைக்கு போட்ட பின்னோட்டத்தை தெரியாம இங்கே போட்டுட்டீங்களோ :-).

//** வா வா பக்கம் வா...மிகவும் பிடித்த பாடல். ரொம்ப ஸ்டைலா பாடியிருபாங்க. **// உண்மை தான் ராகவன். படமாக்கி இருக்கும் விதமும், டான்ஸ்-ம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப ஜாலியா ஆடின மாதிரி நமக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

 
At 7:52 PM, Blogger சிவா said...

வாங்க மோகன்ராஜ்! என்ன அண்ணன் அப்படின்னு சொல்லிட்டீங்க :-)). இருக்கலாம் :-)).

Back to form-ஆ :-)). நம்ம புராணத்தை சிவபுராணத்தில் சீக்கிரம் ஆரம்பிச்சுடறேன் :-)

'ஏய் உன்னைத்தானே' பாட்டு நீங்க சொன்ன மாதிரி கலக்கல் மேடைப்பாடல். அதுவும் எஸ்.பி.பி-யே இரண்டு பேருக்கும் பாடுவது கலக்கலாக இருக்கும்.

 
At 7:57 PM, Blogger சிவா said...

//** தங்கமகன் படத்தின் ஆடல் பாடலிலும் ஒருவித மென்மை இருப்பது கதைநாயகர்களின் குணத்தை உணர்த்துவதற்கு. **// புரியலையே முத்துகுமரன். கொஞ்சம் விளக்கி சொல்லுங்க.

//** வயலின் ராஜாவின் மிக விருப்பமான கருவிஅல்லவா... இடம் கிடைத்தால் போட்டு தாக்கிவிடுவார் **// உண்மை நண்பரே..

'வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா' ??? எத சொல்றீங்க..சேது பாட்டையா?. இல்லை எஸ்.பி.பி பாட்டையா..எஸ்.பி.பி- ப்ளாக் பாத்தீங்களா?.

இல்ல 'காதல் ஓவியம்' போடாம ஏமாத்துறனே..அத சொல்லி காட்டுறீங்களா. :-)) . கண்டிப்பா அடுத்த பதிவு 'காதல் ஓவியம்' தான்..இந்த பதிவுக்கு உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். :-)

 

Post a Comment

<< Home