கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, January 18, 2006

எஸ்.பி.பி ( தனி ஆவர்த்தனம் - 1)

இந்த பாடல் பதிவை ஒரு தொடராகவே கொண்டு போகிறேன். இசையமைப்பாளர்களில் ராஜா எனக்கு பிடித்த மாதிரி, பாடகர்களில் எஸ்.பி.பி (நிறைய பேருக்கு அப்படித்தானே). அவர் பாடிய தொடக்க பாடல்களில் இருந்து சமீபத்திய பாடல்கள் வரை இங்கே கேட்கலாம். தனி பாடல்கள் மட்டுமே. பொதுவாக ஒரு பாடகர் ரிடையர்ட் ஆகும் போது அடுத்த காலகட்டங்களில் நமக்கு ஒரு சிறந்த பாடகர்(கள்) கிடைப்பார்கள். இப்போதெல்லாம் எவரும் இந்த அளவுக்கு வருவதில்லை. அந்த காலங்கள் அவ்வளவு தானா?.

'பனி விழும் மலர்வனம்' பாட்டுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ராஜாவின் திறமையை பார்த்து ஆச்சரியபடுவதுண்டு. அத்தனை வாத்திய கருவிகளையும் இந்த பாடலில் கேட்கலாம். அத்தனையும் ரசிக்கும் படி இருக்கும். ட்ரம்ஸ் ஆகட்டும், கிடார் ஆகட்டும், தபேலா ஆகட்டும், வீணை ஆகட்டும் அத்தனையும் அருமை. அதை விட பாடல் முழுவதும் வரும் பேஸ் கிட்டாருக்காக கேட்டுக்கிட்டே இருக்கலாம். ரொம்ப வித்தியாசமான கம்போசிசன். இளையராஜா-வைரமுத்து இணையில் இன்னொரு வைரம்.எஸ்.பி.பி-யால் மட்டுமே சில பாடல்கள் பாட முடியும். அதில் ஒன்று இந்த பாடல்.





'தேவதை இளம் தேவி'. அடிக்கடி கேட்க முடியாத பாடல். இந்த பாடல் வெளியான போது ரோட்டோர கடைகளில் பதிந்து கேட்ட பாடல்.அப்போது அடிக்கடி ரேடியோவிலும் கேட்கலாம். 'ஆயிரம் நிலவே வா' படத்தில் இருந்து. நான் கேள்வி பட்டவரை கார்த்திக் இறந்து விட்டார் என்று அவருக்கு பதிலாக வேறு யாரையோ சமாதியாக்கி விடுவார்கள் (எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா). இவர் பேயாக அலைந்து கொண்டிருப்பார். படம் பார்த்தவர்கள் கதை சொல்லிட்டு போங்க. பாடலில் கவிதை அருமை. எஸ்.பி.பி குரல் அருமை. குரலிம் என்ன ஒரு உருக்கம், என்ன ஒரு ஏற்ற இறக்கம். இசை அருமை. ஹம்மிங் அருமை. மொத்தத்தில் அருமையான பாட்டுங்க. மிஸ் பண்ணிடாதீங்க.




9 Comments:

At 4:30 AM, Blogger நிலா said...

சிவா,
எஸ்.பி.பி. மேல எனக்கு பக்தி:-)
அடுத்த ஜென்மத்தில அவருக்கு மகளா பிறந்து அவர் பாடற தாலாட்டில தூங்கணும்னு பேராசை:-))

தொடருங்க... அவரோட பழைய பாடல்களைப் போடுங்க. (ஒரு மல்லிகை மொட்டு, நந்தா என் நிலா போல)

நீங்க திரைப்பாடல்களுக்கு நல்ல பதிவாகப் போடறீங்க. நான் கேட்டு ரசிச்ச தனிப் பாடல்களை அப்பப்ப பதியப் போறேன். முதல் இன்ஸ்டால்மென்ட் இங்கே:

http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_15.html
நேரமிருந்தா பாருங்க

 
At 5:28 AM, Blogger G.Ragavan said...

சிவா, இந்த தேவதை இளம் தேவி பாட்டு கன்னடத்துல இருந்து தமிழுக்கு வந்தது. கன்னடத்துல கீதாங்குற படத்துல இளையராஜா போட்ட மெட்டுதான் தமிழில் பின்னாடி திரும்பப் பயன்படுத்தீருக்காரு. "கேளகே நிமகாகி"ன்னு தொடங்கும் பாடல். தமிழ் பாட்டுதான் நான் மொதல்ல கேட்டதுன்னாலும் எனக்கு கன்னட வெர்ஷன் ரொம்ப நல்லாருந்ததோன்னு தோணுது. கன்னடத்துலயும் எஸ்.பீ.பிதான்.

இதே படத்துல இன்னொரு பாட்டு. "நன்ன ஜீவா நீனே". எஸ்.பீ.பி பாடுனது. ஆனா தமிழுக்கு வரும் போது அத ஜெயச்சந்திரன் "தேவன் தந்த வீணை"ன்னு ஜானகியோட பாடினாரு. இதுல நன்ன ஜீவா நீனேய விட தேவன் தந்த வீணை நல்லாருக்கும்.

 
At 6:22 AM, Anonymous Anonymous said...

கலக்குங்க..

SPB அப்படின்னாலே எனக்கு 2 பாட்டு நியாபகம் வரும்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு..

நீங்க அதையும் போடுவிங்க..

இது ஒரு பொன் மாலை பொழுது
இளைய நிலா பொழிகிறது..

:)

 
At 9:04 AM, Blogger கைப்புள்ள said...

இளையராஜா சென்னையில் நடந்த கச்சேரியில் சொன்னது போல - பாலு எனது இசையில் பாடிய பாடல்களை வைத்து மூன்று நாட்களுக்கு கச்சேரி நடத்தலாம். நீங்க எஸ்.பி.பி-ராஜா கூட்டணி பாட்டுகளைப் போட்டு ஒரு ட்ரீட் வைக்கப் போறீங்கன்னு சொல்லுங்க!

சங்கீத ஜாதிமுல்லை - இந்த பாட்டையும் எஸ்.பி.பி மட்டுமே பாட முடியும்னு நம்பறேன். ஒரு பாட்டுல எத்தனை Variety?

 
At 6:58 PM, Blogger சிவா said...

நிலா! உங்க பக்திய பார்த்து அசந்து போய்ட்டேன். எனக்கும் கூட எஸ்.பி.பி என்றால் அப்படித் தான். அவர் பேசினாலே இனிக்கும். அப்படித்தான் ஒரு தெலுங்கு டப்பிங் படம். நாகார்ஜூன் நடித்தது. 'ஹலோ பிரதர்' தமிழில் நாகார்ஜூனுக்கு எஸ்.பி.பி குரல் கொடுத்திருப்பார் (எஸ்.பி.பி தயாரித்த படம் என்று நினைக்கிறேன்). அவர் டப்பிங் குரலை கேட்க அந்த படத்தை ரெண்டு மூனு வாட்டி பார்த்தேன். :-))
பழைய பாட்டு இல்லாமலா. அடுத்த பதிவில் போட்டுடலாம்.

ராகவன்! அட! அப்படியா! நான் கூட 'கீதா' படம் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். என்னிடம் கூட 'குலாபி' ப்ரேமராக ஹாடுஹெலதி' 'நம்முர மண்டார ஹூவே' என்று கன்னட ஒரிஜினல் சி.டி சில இருக்கு.'நம்முர மண்டார ஹூவே' படம் நம்ம ஊர்ல 'கண்களின் வார்த்தைகள்' எண்று வந்தது. சூப்பர் பாட்டுங்க.

 
At 7:03 PM, Blogger சிவா said...

கீதா! கலக்கிட்டா போச்சு :-). உங்கள் ஆதரவு இருக்கும் வரை.
அந்த பாட்டு இல்லாம எஸ்.பி.பி பதிவு போட முடியுமா. வரும் பதிவுகளில் கண்டிப்பாக வரும்.

கைப்புள்ள, தொடர் வருகைக்கு நன்றி. ஆமாங்க அவங்க எல்லாம் சேர்ந்து நமக்கு ட்ரீட் கொடுத்திருக்காங்க. நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 'சங்கீத ஜாதி முல்லை' நீங்க சொன்ன மாதிரி என்ன ஒரு Variations. அப்படியே புல்லரிக்கும் அந்த பாட்ட கேட்டா. நினைவு படுத்தியதற்க்கு நன்றி கைப்புள்ள.

 
At 7:39 PM, Blogger கைப்புள்ள said...

என்னைப் பொறுத்தவரை இளையராஜா வெறும் இசை அமைப்பாளர் கிடையாது. அவருடைய பல பரிமாணங்களைக் கண்டு மலைச்சுப் போயிருக்கேன். எதனால அவரை இந்த அளவுக்கு பிடிக்கும்னு சொல்ல தெரியலை. அதனால அவரைப் பத்தி இண்டு இடுக்குல ஒரு செய்தி கிடைச்சாலும் தேடி போயிடுவேன். இருந்தாலும் உங்களோட பதிவுகளிலிருந்து இன்னும் பல புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன். ரமண மாலையில் ராஜா பாடுவது போல "கோடி கோடி அடியவரில் நான் தான் கடை கோடி ஐயா". அதனால் எனது தொடர் வருகை நீடிக்கும்.

 
At 8:08 PM, Blogger சிவா said...

//**என்னைப் பொறுத்தவரை இளையராஜா வெறும் இசை அமைப்பாளர் கிடையாது. அவருடைய பல பரிமாணங்களைக் கண்டு மலைச்சுப் போயிருக்கேன். **// கரெக்டா சொல்லிட்டீங்க மோகன்ராஜ். அவர் அருமையை புரிந்து அவர் இசையை ரசிக்கவாவது நமக்கு அறிவை கொடுத்திருக்கிறானே ஆண்டவன். அதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நண்பரே.

 
At 3:24 PM, Blogger சிவா said...

சசிகலா! //நாங்கள் இந்த பாடலை அடிக்கடி பாடி மகிழ்ல்வோம். பாடல் அருமை. குரலோ வெகு இனிமை. தேனில் விழுந்த பலாவின் சுவை (பலா = பாலா). இது போன்ற படல்களை கேட்க்கும்போது நம் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.// மலரும் நினைவுகளா...ரொம்ப நல்லா இருக்கே :-)). தேன் ராஜாவின் இசை என்றால், அதில் விழுந்த பலா இந்த பாடும்நிலா பாலா. :-)

அன்புடன்,
சிவா

 

Post a Comment

<< Home