கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, January 21, 2006

நான் ஒன்று கேட்டால் தருவாயா!!

நம்ம தமிழ் படத்தில் காதல் ஹீரோக்களை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒன்று 'நீ காற்று நான் மரம். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" (தலையாட்டி தானே ஆகணும்) வகை. அதாவது ரெண்டு சைடும் ஓகே ஆன காதலர்கள். இன்னொன்னு 'இதயமே! இதயமே! உன் மௌனம் என்னை கொல்லுதே'..இது நம்ம முரளி டைப் காதல். பசங்க ஒரு தலை காதல். இந்த பதிவில் மூனாவது வகை ஒன்னு பார்க்க போறோம். அதான் 'மயிலே நீ போ! வேணாம் வீராப்பு' வகை. புரியலையா. அதாங்க நம்ம ஹீரோ பரம ஏழையா இருப்பார், இல்லன்னா குவாட்டர் அடிச்சிட்டு கைல அருவாளோட சுத்துற பொறுக்கியா இருப்பார். நம்ம ஹீரோயின் ஹோண்டா சிட்டில வர்ற கோடிஸ்வரியா இருப்பாங்க. அப்புறம் லவ்வு தான். ஹீரோ பெருந்தன்மையா 'நான் குப்பை. நீ வானம். லவ்வு பண்ணாலும் வெளங்காதடி' அப்படின்னு அட்வைஸ் பண்ணி பார்ப்பார். அப்புறம் இடைவேளையோட ஏதாவது சூழ்நிலையில ஹீரோ கவுந்திடுவார். எனக்கு இந்த மூனாவது வகை மாதிரி முரளிய வச்சி யாராவது படம் எடுக்க மாட்டாங்களான்னு ஆசை. பாவம் அவரு எவ்வளவு நாள் தான் பொண்ணு பின்னாடியே சுத்துவார்.

சரி சரி புராணம் எல்லாம் வேண்டாம். பாட்டுக்கு போய்டலாம். மூனாவது வகைல ரெண்டு பாட்டு இன்று. இந்த வகை பாடல்களில் பொருள் புகுந்து வெளையாடும். "வெண்ணிலவிலே உன்னை குடியமர்த்த தோளில் இரு சிறகுகள் எனக்கில்லையே" என்று ஹீரே சொல்லுவார். அம்மணி "குடியிருக்கும் சின்ன குடிசையிலும் தேன்னிலவு தென்றலுடன் செல்வதில்லையோ' திருப்பி கொடுப்பாங்க. ரசித்து கேட்க வேண்டிய பாடல்கள் :-).

முதல் பாட்டு. ராஜா பாடிய பாடல். எதிர் பாட்டு ஜானகி. படம் 'மலையூர் மம்பட்டியான்'. ராஜா ரொம்ப அருமையாக பாடியிருப்பார். அதுவும் 'மனச தாள் போட்டு மயிலே நீ போ! வேணா வெளையாட்டு' வரியில் ரொம்பவே ராகம் நெளிந்து வரும். என்னை ரொம்ப கவர்ந்த இடம். நம்மை தாளம் போடவைக்கும் மெட்டு. கேட்டு ரசிக்க பாட்டு இங்கே.





போன பாட்டு கிராமம். இப்போ மாடர்ன். அதாங்க ரெண்டு பேரும் கல்லூரில படிக்கறாங்க. ரொம்ப அருமையான அரிய பாட்டு, இந்த படத்தில் எல்லா பாடல்களுமே ரொம்ப நல்லா இருக்கும். 'ராஜாவுக்கு டச் விட்டு போச்சுன்னு' மீடியா முதல் கொண்டு மக்கள் எல்லோரும் கத்திக்கொண்டிருந்த காலத்தில் வந்த படம். உங்களுக்கு டச் விட்டு போச்சுன்னா அவர் என்ன பண்ணுவார் :-). நமக்கு எதற்கு அந்த கதை. படம் இளைய ராஜாவின் 'இளைய ராகம்' . அருண் மொழியின் ஒரு சிறந்த பாடல். எதிர் பாட்டு இங்கே சித்ரா. முதல் சரணம் ரொம்ப அழகாக தாள வாத்தியங்கள் இல்லாமல், அமைதியாக கிட்டாரில் கொண்டு போயிருப்பார். ரொம்ப சூப்பராக இருக்கும். அதையே இரண்டாவது சரணத்தில் வித்தியாசமாக பீட்டோடு கொடுத்திருப்பார். அந்த கால கட்டத்தில் (அவர் சிம்பொனி இசை அமைத்து வந்தவுடன்) அவர் இப்படி சில பாடல்களில் வித்தியாசம் காட்டியிருப்பார். மீடியா எல்லாமும் வரிந்து கட்டிக்கொண்டு 'இசை ராஜாவாம். டைட்டிலில் போடுகிறார்கள்' என்று இப்படி நிறைய பாடல்களை அதல் பாதாளத்தில் தள்ளியது. ம்ம்ம்ம்ம்ம்...சரி சரி நான் வேற பொலம்ப ஆரம்பிச்சிட்டேன் பாட்ட கேளுங்க.




14 Comments:

At 6:40 PM, Anonymous Anonymous said...

Naan Onru KEdaaL is an excellent song. I am listening to it after the longest time. Chithra sounds so great, without any jarring instruments. Thanks.

 
At 7:37 PM, Blogger மாயவரத்தான் said...

தலைப்பை பார்த்தவுடன் நான் என்னவோ நீங்க 'கையகப்படுத்தப்போற' கேபிள் டி.வி. கம்பெனியை தான் கேக்குறீங்களோன்னு நெனச்சேன்!

 
At 3:43 AM, Blogger கைப்புள்ள said...

சிவா! மலையூர் மம்பட்டியான் படப் பாட்டோட ஆரம்ப வரிகளைச் சொல்லாம விட்டுட்டீங்களே! "சின்னப் பொண்ணு சேலை செண்பகப் பூ போல..." சூப்பர் பாட்டு.

"என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்லை
என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல
நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்னை நம்பி தானே ஒளிச்சு வச்சேன்"

பேச்சு வழக்கிலேயே பின்னி எடுக்குற பாட்டு.

உங்கப் பதிவுல பாட்டைக் கேட்கவும் முடியுமா? ஒவ்வொரு பாட்டைப் பத்தி நீங்க விளக்கம் கொடுத்ததும் ஏதோ ஒன்னு விட்டு போன மாதிரி எனக்கு தெரியுது.

 
At 5:38 AM, Blogger முத்துகுமரன் said...

மலையீர் மம்ப்பிட்டியான் படத்தில அதுவும் அந்த பட்டில ராசா வெளுத்து வாங்கியிருப்பாரே

 
At 5:39 AM, Blogger முத்துகுமரன் said...

அந்த பாட்டில் என வாசிக்கவும்

 
At 6:58 AM, Blogger சிவா said...

Anonymous நண்பரே! ஆமாங்க ரொம்ப நல்ல பாட்டு. சித்ராவின் குரலும் ரொம்ப இனிமை. என்னை போலவே பாட்டு கேப்பீங்க போல. உங்கள் பெயர் என்னவோ?

 
At 8:55 AM, Blogger சிவா said...

மாயவரத்தான். இப்படி ஒரு தலைப்பு உங்களை இங்கே வர வைத்ததில் சந்தோசம். :-))

வாங்க கைப்புள்ள! ஆமாங்க பாட்டோட முத வரிய சொல்லாம விட்டுட்டேன். பதிவ போட்டப்புறம் கவனித்தேன். சரி! மக்களே கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். மட மடன்னு எழுதறேனா, இப்படி சில விட்டு போகிறது. :-)

ஆமாம். நீங்க சொன்ன மாதிரி பேச்சு வழக்கில் பின்னி எடுக்கிற பாட்டு. ராஜாவின் குரல் அதற்கு ரொம்பவும் பொருந்துகிறது. ஜானகிய பத்தி சொல்லவும் வேண்டுமா.

//**உங்கப் பதிவுல பாட்டைக் கேட்கவும் முடியுமா? **// புரியலையே..பாட்டு கேட்க தானே இந்த ப்ளாக்கே. ஏன் உங்களுக்கு பாடல் வேலை செய்யவில்லையா. உங்கள் கணிணியில் ரியல் ப்ளேயர் இருக்கிறதா என்று பாருங்கள்.

//**ஒவ்வொரு பாட்டைப் பத்தி நீங்க விளக்கம் கொடுத்ததும் ஏதோ ஒன்னு விட்டு போன மாதிரி எனக்கு தெரியுது. **// நல்லது தானே :-). நானே எல்லாத்தையும் சொல்லிட்டா எப்படி. உங்களை போன்ற மற்ற ரசிகர்களும் அவர்களுக்கு தோன்றுவதை சொன்னால் தானே நன்றாக இருக்கும். என்ன நான் சொல்றது :-))

முத்துகுமரன்! எந்த பாட்ட சொல்றீங்க. 'காட்டு வழி போற பொண்ணே கவல படாதே' பாட்ட சொல்றீங்களா. ஆமாம். அதை பற்றி என்னுடைய 'இசைஞானி இளையராஜா' பதிவிலும் சொல்லியிருப்பேன்.

 
At 8:59 PM, Blogger கைப்புள்ள said...

//**ஒவ்வொரு பாட்டைப் பத்தி நீங்க விளக்கம் கொடுத்ததும் ஏதோ ஒன்னு விட்டு போன மாதிரி எனக்கு தெரியுது//

இல்லை சார்...நான் சொன்னது கருத்தை இல்லை...ஒவ்வொரு பாட்டைப் பத்தி நீங்க விளக்கம் கொடுத்ததும்...என்னோட சிஸ்டத்துல ஒரு டப்பா மாதிரி ஏதோ ஒன்னு தெரியும். அது தான் பாட்டைக் கேக்கற சுட்டி போலிருக்கு.

 
At 11:09 PM, Blogger பிரதீப் said...

அருமை
கிராமத்துப் பாட்டுன்னாலே சுகம், அதிலயும் ராசா பாட்டுன்னா சுகமோ சுகம், அதிலயும் அவரு பாடின பாட்டு (அவரு குரலு கிராமத்துப் பாட்டுகளுக்கும் இறைப் பாடல்களுக்கும் அவ்வளவு அருமையாப் பொருந்தும்) சுகத்திலும் சுகம்.
சின்னப் பொண்ணு சேலை சூப்பரப்பு.

 
At 4:33 AM, Blogger சிவா said...

கைப்புள்ள! அடடா! சீக்கிரம் ரியல் ப்ளேயரை இறக்கி கொள்ளுங்கள். நீங்க சொல்லும் டப்பா :-) ரியல் ப்ளேயர் இருந்தா ஒரு ப்ளேயர் மாதிரியே தெரியும். அப்போ தான் பாட்டு கேட்க முடியும்.

பிரதீப்! முதல் வருகைக்கு நன்றி. ஆமாம். ராஜாவின் குரல் கிராமத்து பாடலுக்கு எப்பவுமே சூப்பர். அதிலும் இந்த பாடலுக்கு ரொம்பவே சூப்பர். நீங்க சொன்ன மாதிரியே.

 
At 2:17 PM, Anonymous Anonymous said...

Great selections, Siva!! Raaja-Janaki what a chemistry!! Raaja's rustic voice always complements Janaki's konjals!! romantic indeed! thanks, Vinatha.

 
At 6:34 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! அப்போ அப்போ வர்றீங்க. என்னோட ப்ளாக்க நியாபகம் வச்சிருக்கறதுக்கு நன்றி. ஜானகியோட கொஞ்சல்...சூப்பர் இல்ல..ரெண்டு பேரும் சேர்ந்து தாக்கு தாக்குன்னு தாக்கிருப்பாங்க. கலக்கல் :-)

 
At 9:09 AM, Anonymous Anonymous said...

dear siva vanakkam ungalukku cine songs pidiththa mathiri unmai vazhkkaiyaiyum enni parungal ippothellam ingay u.s mappillai endralae payappadukirarkal karanam kattina wife panama kottanum endru ethirparppugal thaan. hear and enjoy cine songs yourself but it is not appreciable and nice to publish in web page. states cinemavellam ippadithan 25 person aaduvathu erandu pakkamum unda? hbo channelil terminator serial paarunga nat geo channel parunga uyirai panayam vaithu kadalukkullum kadukalukkulum edukkiranae? discovery channel parunga neenga vaelai seyyum software pudhumaikal idea kidaikkum enmael varuthapadavendam arivai valarkkum sinthani aaraichi pannunga ungalukkum uyarvu kidaikkum naattukkum nallathu namathu cinema ellam states pornography thanae? namathu thamilnadu h i v infection rate egirugirathu karanam enna? ungalukkae theriyum.vanakkam.

 
At 9:19 AM, Blogger சிவா said...

ஏங்க! தங்கம்னு பேருல ஏதோ சொல்றீங்க..ஒரு எளவும் எனக்கு புரியலை..தலையும் இல்லாம, காலும் இல்லாம இப்படி பொலம்பி இருக்கீங்க...சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலைங்க :-(. ஏதாவது சொல்லணும்னா தனி மடல் (g_siva_raja@yahoo.co.in) அனுப்புங்களேன் :-((

 

Post a Comment

<< Home