கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, February 21, 2006

காதல் ஓவியம்

இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா. நம்மை ஏங்க வைக்கும் ஒரு கூட்டணி. அதில் ஒரு மகுடம் இந்த காதல் ஓவியம். 1982-ல் வந்த படம். இன்று வரை எனக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றியடையாதது ஏன்?. என்ன கதை?. எங்கே இவர்கள் தோற்றார்கள்?. விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். வைரமுத்து இந்த படத்தை பற்றி 'நாங்கள் படத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் பாடலில் ஜெயித்தோம்' என்று கூறியிருப்பார். உண்மை தான். அந்த வெற்றிக்கு இந்த மூவரை தவிர இன்னொருவருக்கும் பங்கு உண்டு. அது பாடகர் எஸ்.பி.பி. இந்த நான்கு பேரில் யார் பங்கு அதிகம் இருந்ததென்று கேட்டால், அனைவருமே அவர்களுடைய முழுத்திறமையையும் காட்டி இருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

படத்தில் மொத்தம் 8 பாடல்கள். இப்படி ஒரு படத்தை இயக்கி, ராஜாவிடம் பாடல் வாங்கிய பாரதிராஜா, அத்தனை பாடல்களையும் கவிதையாக்கிய வைரமுத்து, பாடலின் வரிக்கு வரி உயிர் கொடுத்து பாடிய எஸ்.பி.பி. இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ?.

முத்துகுமரன் ரொம்ப நாளாக இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து இந்த படத்தை, பாடல்களை பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்.

மொத்தம் 8 பாடல்களில் 6 பாடல்கள் எஸ்.பி.பி. ஒன்று ஜானகியின் தனிப்பாடல் (நாதம் என் ஜீவனே). 'பூஜைக்காக' மட்டும் தீபன் சக்கரவர்த்தி. அத்தனை பாடல்களையும் கொடுக்கிறேன் (முதன் முதலாக. என்னால் சில பாடல் என்று தேர்வு செய்ய முடியவில்லை).

இந்த இடத்தில் கவிதை நன்றாக இருக்கிறது. இந்த இடத்தில் எஸ்.பி.பி நன்றாக பாடி இருக்கிறார். இந்த இடத்தில் இசை நன்றாக இருக்கிறது என்று பிரிக்க முடியாத காவியம் இது. அதனால் பாடலை அப்படியே போடுகிறேன். உங்களுக்கு தெரிந்ததை, தோன்றுவதை சொல்லி விட்டுச் செல்லுங்கள் (முக்கியமா முத்துகுமரன் :-)

1. வெள்ளிச சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது.






2. ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது..
என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
(அம்மா அழகே)






3.நாதம் ஒன்று போதும்..எந்தன் ஆயுள் கோடி மாதம்..
தீயில் நின்ற போதும்..அந்த தீயே வெந்து போகும்.
( பூவில் வண்டு)






4. விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
( சங்கீத ஜாதி முல்லை)
( இந்த பாடலை பற்றி பேச நிறைய இருக்கும். இல்லையா?)






5. நாதம் என் ஜீவனே..வா வா என் தேவனே






6. குயிலே..குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ.






7. சலங்கை ஓசை போதுமே..எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
(நதியில் ஆடும் பூவனம்)






8. பூஜைக்காக வாழும் பூவை ( இது தீபன் சக்கரவர்த்தி பாடியது)






28 Comments:

At 8:50 AM, Blogger G.Ragavan said...

சிவா....பாடல்கள் நல்ல பாடல்கள். அதிலும் எனக்குப் பூவில் வண்டு பாட்டு மிகவும் பிடிக்கும். ஆனால் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. படம் தொலைக்காட்சியில் வந்த பொழுது உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அங்கங்கு பாரதிராஜாவின் டச் தெரியும்.

பூஜைக்காக பாடலும் மிகக் கடினமான பாடலே...அத்தனை பாட்டுகளையும் பாலுவுக்குக் கொடுத்து விட்டு...தீபன் சக்கரவர்த்தியை இந்தப் பாட்டிற்குத் தேர்ந்தெடுத்தது...என்ன சொல்வது..நல்ல முடிவுதான். இந்தப் பாடலுக்கு தீபன் விருது வாங்கினார் என்று நினைக்கிறேன்.

 
At 11:46 AM, Anonymous Anonymous said...

ராகவன்,

'பூஜைக்காக வாழும் பூவை' பாடல் கூட SPBக்குதான். அதற்கு டிராக் பாடியவர் தீபன் சக்கரவர்த்தி. டிராக் பாடலை கேட்டுவிட்டு பாலுதான் அதையே வெளியிட்டுவிடுங்கள் தீபன் மிக அருமையாக பாடியிருக்கிறார் என்று சொன்னார். அதன் பின்புதான் டிராக் பாடியதே திரையிலும் வந்தது. இதை ஒரு பேட்டியில் தீபன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கதை அப்படி ஒன்றும் அருமையான கதை இல்லை.. நாயகனுக்கு பார்வை இல்லை.. நாயகிக்கு(ராதா) அவரின் குரல்வளமும் அவரையும் பிடிக்கும்.. காதல் அரும்ப.. பின்னர் ஏனோ ராதா(நாயகனுக்கு பார்வை கொடுக்க வேண்டி என்று நியாபகம்) வேறொருவரை மணம்புரிந்துகொள்வார். கடைசியில் நாயகனுக்கு பார்வை வரும்.. அவர் நாயகி இருக்கும் ஊரிலேயே பாட்டு பாட வருவார்.. அவர் பாட ராதா ஆட.. கிளைமாக்ஸ்.. இரண்டு பேரும் பரலோகம்.

"விழியில்லை எனும்போது.. பாட்டுதான் கிளைமாக்ஸ்.."

(இப்படித்தான் பார்த்ததாக நியாபகம்)

சிவா,

பாடல் எதுவும் கேட்கமுடியவில்லை..(அத்தை மாமா தூங்கறாங்க.. :) )

அதனால என்ன எத்தனை முறை கேட்டிருக்கேன்..

சூப்பர்.. முடிந்தால் ஞாயிறன்று வந்து பாடல் கேட்டுவிட்டு மறுபடி ஒரு பின்னூட்டமிடுகிறென்.

அன்புடன்
கீதா

(எத்தனை வேலை இருந்தாலும் சிவா போட்ட போஸ்ட் படிக்காம இருக்க முடியுமா.. அதானே)

அன்புடன்
கீதா

 
At 12:01 PM, Blogger முத்துகுமரன் said...

சிவா நன்றி. பாடல்கள் வரிசை மாற்றிப் போட்டு இருக்கிறீர்கள்.
நான் விரும்பிய வரிசையில் அமைத்து ஒவ்வொரு பாடலையும் பற்றி எனது கருத்தை சொல்கிறேன். கொஞ்சம் நேரம் பிடிக்கும். அவசரகதியில் எழுத விரும்பவில்லை.
பாடல்கள் வந்திருக்க வேண்டிய வரிசை:
1.நதியில் ஆடும் பூவனம்
2.நாதம் என் ஜீவனே
3.பூவில் வண்டு
4.வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
5.அம்மா அழகே
6.குயிலே குயிலே
7.பூஜைக்காகும் வாழும்
8. சங்கீத ஜாதிமுல்லை
பி.கு:
சிவா இந்த படத்திற்கு எனது உறவினர்கள் அனைவருமே அடிமை.
எங்களது உரையாடல்களில் பலமுறை இந்தப்படமும், இதன் பாடல்களும் இடம் பெறுவது உண்டு. இளையராஜா மீதான எங்கள் ஈர்ப்புக்கு இந்தப்படம்தான் அடித்தளம்

அதனால் பதில் ரசிகத்தனமாய்தான் இருக்கும்.

*
ராகவன்படத்தின் திரைக்கதை சிறப்பாகத்தான் அமைத்திருந்தார். பாரதிராஜாவினால் கலைப்படம்(தரமான) படங்கள் எடுக்க முடியாது என்று சொன்னதற்காக சவலாக பாரதிராஜா செய்த படம்.
கதாபாத்திரங்கள் அவற்றிற்குரிய எல்லைகளை தாண்டி எந்த விதமான செயல்களையும் செய்திருக்க மாட்டார்கள்.. என்னைப் பொறூத்தவரை இது நேர்த்தியான படம். இதுவரை 20முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஒருமுறைகூட இடையில் எழுந்து போனதே இல்லை:-)

 
At 1:17 PM, Blogger குமரன் (Kumaran) said...

பாட்டுக்களை மட்டும் இப்ப கேட்டேன் சிவா. பதிவுல என்ன எழுதியிருக்கீங்க, நண்பர்கள் பின்னூட்டத்துல என்ன சொல்லியிருக்காங்கன்னு இன்னொரு நாள் படிக்கிறேன்.

 
At 4:46 PM, Blogger Sundar Padmanaban said...

சிவா..
சிவா..
சிவா...

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை சிவா..

haunting என்று சொல்வார்களே.. அதுபோல ஒரு ப்ரேம் கூட படத்தைப் பார்க்காவிட்டாலும், கேட்டாலே ஒரு இன்ம் புரியாத துன்பத்தைத் தரும் பாடல்கள் இவை.

கூட்டணி என்று என்னதான் சொல்லிக்கொண்டாலும் விஞ்சி நிற்பவர்கள் மூவரே - இசைஞானி, பாலு, ஜானகி. எனக்கு பாரதிராஜாவோ வைரமுத்துவோ தெரியவில்லை.

படம்: பார்த்தேன். நிறைய இடங்களில் பொறுமையைச் சோதித்த படம். பார்வையற்றவர் என்றாலே கண்களை மேலே செருகிக் கொள்ளுதல் என்ற சித்திரவதையை இப்படத்திலும் கதாநாயகன் செய்வான். தமிழ்ப் படங்களில் எனக்குத் தெரிந்து பார்வையற்றவர்களை யதார்த்தமாகப் பார்த்த படம் ஆட்டோகிராப் (இதில் வரும் 'ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடல் காட்சியில் வரும் இசைக் கலைஞர்கள்!) ஏன் என்று விளக்கம் வேறு சொல்லவேண்டுமா? (ராஜபார்வை-யையும் குறிப்பிட நினைத்தேன். அதில் வரும் சில காட்சிகள் அசாத்தியமான காட்சிகள். குறிப்பிட்டால் 'வண்ட்டான்யா.. மகாரசிகன்' என்று முணுமுணுப்புகள் கிளம்பும் என்பதால்...ஜூட்)

என்னமோ போங்க. விரயமான அசுர உழைப்பில் காதல் ஓவியமும் ஒன்று. காலத்தை வென்று நிற்கும் பாடல்கள் இதன் சாதனை!

படம் ஏன் ஓடவில்லை என்று கேட்கும்போது முதல் மரியாதை ஏன் ஓடியது என்பதையும் நினைத்துக் கொண்டால் பாரதிராஜா எதைக் கோட்டை விட்டார் என்று புரியும்.

"அழகே மலரே அறிவா...யா...." - சில வினாடிகள் என் மூச்சை நிறுத்திய குரல் பாவங்கள்..

அது சரி! இதெல்லாம் ஒரே பதிவுல போட உங்களுக்கு எப்படிக் கட்டுபடியாகுது? கொஞ்சம் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க! :)

 
At 4:56 PM, Blogger Sundar Padmanaban said...

//அழகே மலரே அறிவாயா?//

சின்ன திருத்தம்.

அழகே மலரே வருவாயா? என்றிருக்க வேண்டும்.

 
At 6:50 PM, Blogger சிவா said...

நண்பர்களே (ராகவன், கீதா, முத்துகுமரன், குமரன், சுந்தர்)!

நிறைய விசயங்கள் சொல்லிட்டீங்க. நன்றி.

ராகவன்! //** படம் தொலைக்காட்சியில் வந்த பொழுது உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. **// எனக்கு அந்த கொடுப்பினை கூட இல்லை :-(. சில படங்கள் ராஜாவுக்காக பார்க்கலாம் என்று நினைத்து பார்க்க உட்காருவேன். 'இனிமே அப்படி நெனைப்பியால' அப்படின்னு செருப்பால அடிக்கிற மாதிரி படம் இருக்கும். அப்புறம் போங்கடே அப்படின்னு படத்தை நிப்பாட்டிட்டு வந்திருவேன் :-)).

தீபன் சக்கரவர்த்திக்கு விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..


தீபன்

 
At 6:54 PM, Blogger சிவா said...

//** எத்தனை வேலை இருந்தாலும் சிவா போட்ட போஸ்ட் படிக்காம இருக்க முடியுமா.. அதானே **// கீதா! எனக்கு இன்னைக்கு வேலையே ஓடலை போங்க :-)). நன்றி நன்றி..

கதை சொன்னதுக்கு நன்றி கீதா! இப்போ பாட்டோட வரிசை புரியுது. டிராக் பாடின பாட்டா 'பூஜைக்காக்'. தகவலுக்கு நன்றி. அதை விட்டுக்கொடுத்த எஸ்.பி.பி-யின் மனசு பெரிசு.

//**இரண்டு பேரும் பரலோகம் **// படமே ரொம்ப பொறுமையை சோதிக்கும்னு சொல்லிட்டீங்க..இதுல இது வேறயா..முத்துகுமரன் சொன்ன மாதிரி கலைப்படமாக முயற்சி செய்திருக்கலாம்..எல்லோரும் டி.வி-ல தான் பாத்தீங்களா..நான் எப்படி மிஸ் பண்ணினேன் :-(

 
At 7:01 PM, Blogger சிவா said...

வாங்க முத்துகுமரன்! உங்களுக்காக போட்ட பதிவுய்யா இது..சரியான நேரத்தில் வந்ததற்கு நன்றி.

பாடல் வரிசையை எனக்கு பிடித்த வரிசையாக போட்டேன் முத்துகுமரன். இப்போ நீங்க சொன்ன வரிசையே கதை சொல்லுது. நன்றி.

//** இளையராஜா மீதான எங்கள் ஈர்ப்புக்கு இந்தப்படம்தான் அடித்தளம் **// நிறைய பேருக்கு அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

//** ஒவ்வொரு பாடலையும் பற்றி எனது கருத்தை சொல்கிறேன். **// சீக்கிரம் சொல்லுங்கையா..காத்திருக்கிறேன்..

எல்லோரும் ஒரு தடவைக்கே பொறுமையை சோதிக்கும் என்று சொல்றாங்க..நீங்க 20 தடவையா..அதுவும் ஒரு தடவை கூட இடையில் எழுந்து போனதே இல்லையா..யோய் நீங்க தான்யா உண்மையான ராஜா ரசிகன். நானும் ராஜா பேர பார்த்து சில படத்துக்கு (முக்கியமா 'டைம்' என்று ஒரு படம்)..ஐயகோ...கட்டி வச்சி 'இனி பிரபுதேவா படத்துக்கு வருவியால' அப்படின்னு அடிச்சாங்கையா :-))

பாரதிராஜா படம் எல்லமே தரமான படம் தானே (என்னை பொருத்தவரை 'டிக் டிக் டிக்' கூட)..இது ரொம்ப தரமான படமா இருக்கும் :-)

 
At 7:01 PM, Blogger சிவா said...

குமரன்! பாட்ட கேட்டதுக்கு நன்றி. நேரம் இருந்தால் நம்ம ராகவன், முத்துகுமரன் என்ன சொல்றாங்கன்னு வந்து பாருங்க.

 
At 7:08 PM, Blogger சிவா said...

சுந்தர்!

ஐயோ..ஐயோ அப்படின்னு நீங்க வருவீங்கன்னு தெரியும் :-))

//** ஒரு ப்ரேம் கூட படத்தைப் பார்க்காவிட்டாலும், கேட்டாலே ஒரு இன்ம் புரியாத துன்பத்தைத் தரும் பாடல்கள் இவை. **// எனக்கும் அதே.

//** (ராஜபார்வை-யையும் குறிப்பிட நினைத்தேன். அதில் வரும் சில காட்சிகள் அசாத்தியமான காட்சிகள். **// உண்மை..ஆனா நம்ம ஆளுங்களுக்கு கனவுலையாவது ரெண்டு குத்தாட்டம் போட்டா தானே படம் ஓட வைப்பாங்க :-)).

//** படம் ஏன் ஓடவில்லை என்று கேட்கும்போது முதல் மரியாதை ஏன் ஓடியது என்பதையும் நினைத்துக் கொண்டால் பாரதிராஜா எதைக் கோட்டை விட்டார் என்று புரியும். **// காதல் ஓவியம் இன்னும் பார்க்கவில்லை..பார்த்தால் புரியும் :-(

//** அழகே மலரே அறிவா...யா...." - சில வினாடிகள் என் மூச்சை நிறுத்திய குரல் பாவங்கள்.. **// நிறைய இடங்களில் அப்படித்தான்...

//** இதெல்லாம் ஒரே பதிவுல போட உங்களுக்கு எப்படிக் கட்டுபடியாகுது? கொஞ்சம் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க! :) **// முதலில் ஒரு ரெண்டு பாட்டு போடலாம்னு தான் பதிவை எழுதினேன்..எந்த ரெண்டு பாட்டு என்பதில் ரொம்ப குழப்பம்..எந்த பாட்டை விட்டாலும் 'யோய் அந்த பாட்ட எங்கைய்யா' அப்படின்னு ஆளுக்கு ஆளு கழுத்தை புடிப்பாங்க...அதான் முதன் முதலாக ஒரு படத்தில் இருந்து எல்லா பாடலையும் போட்டுட்டேன்..வேற வழி எனக்கு தெரியலைய்யா :-)).

 
At 7:14 PM, Blogger மதுமிதா said...

நன்றி சிவா
தனிபதிவுதான் போடணும்
பாடலின் இசைக்கும்,பாவனையின் நயத்துக்கும்.

மறுபடி வர்றேன்.

வாழ்க அருமையான பாடல்கள்

கால்சதங்கை ஒலி கேட்டு கதாநாயகன் அறிந்து கொள்வானென்று ராதா ஒலியை மறைக்கப் படும்பாடு.இசையினை இருவரும் ரசிக்கும் விதம்!!!

பாடல்கள் இனம் புரியா உணர்வுகளை படம் பார்க்காது கேட்கையிலேயே உருவாக்கும்.

பாடலுக்கு இடையில் ஒரு பாஸ் வரும் அந்த ஒலியில்லாத ஒரு சிறு மௌனம்.
அருமைம்மா அருமை

மீதி மீண்டும் பார்க்கலாம்

 
At 3:56 AM, Blogger சிவா said...

வாங்க மதுமிதா அக்கா!

//**கால்சதங்கை ஒலி கேட்டு கதாநாயகன் அறிந்து கொள்வானென்று ராதா ஒலியை மறைக்கப் படும்பாடு. **// நான் இன்னும் படமே பார்க்கவில்லை பாருங்க..சீக்கிரம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

//பாடல்கள் இனம் புரியா உணர்வுகளை படம் பார்க்காது கேட்கையிலேயே உருவாக்கும்.**// இது 100% உண்மை..அந்த வெற்றி எஸ்.பி.பி-க்கு தான் சேரும். குரலில் தான் நீங்க சொன்ன மாதிரி என்ன ஒரு பாவம், உணர்வுகள். அது தான் மொத்தமாகவே சொல்லி விட்டேன். இது ஒரு காவியம் என்று.

நாள் முழுவதும் இந்த பாடல்களை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இல்லையா .

உங்கள் வருகைக்கு நன்றி

 
At 4:05 AM, Blogger சிவா said...

உஷா அக்கா!

ராகம் எல்லாம் சொல்லி கலக்கிட்டீங்க. உங்க கிட்ட ராகம் எல்லாம் கத்துக்கலாம் போலயே..நேரம் இருந்தால் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :-)

இந்த பாடல் எல்லாமே ஒரே ராகம் (ஒவ்வொன்றும்) என்ற தகவலுக்கு நன்றி. பொதுவாகவே இப்படி கர்னாடிக் வடிவில் அனைந்த பாடல்களில் ராஜா சுத்தமான ராகத்தை கொண்டு வருவார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே..

படம் ஊற்றிக்கொண்டதற்கு நீங்க சொன்ன செண்டிமெண்ட் பொருந்தும். ஆனால் காசி போல குப்பை (கதையா அது...நானும் படம் தொடங்கியவுடன் ஏதோ வித்தியாசமாக சொல்ல போகிறார்கள் என்று நினைத்தால், வழக்கமான மசாலா..வில்லன்..சே)..ஓடினால் தான் ஆச்சரிய படவேண்டும்..

ராஜபார்வை தோற்றது ரொம்பவே வருத்தம் தான்..

நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் ஹீரோயிசம் இருக்கணும்..இல்லன்னா கஷ்டம் தான் :-)

 
At 4:18 AM, Blogger முத்துகுமரன் said...

சிவா தாமதத்திற்கு மன்னிக்கவும். நம்ம ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்னு நினைக்கிறேன். வேலை முதலில் உங்கள் நட்சத்திர வாரத்தின் போது பழிவாங்கியது. இப்போது இரண்டாவது முறையாக இப்போதும் தொடர்கிறது. அதிமுக்கிய பணியில் ( important tender) சிக்கிக் கொண்டுள்ளேன். இன்றிரவு அல்லது நாளை மாலையில் பதிவு செய்து விடுகிறேன்.

நான் சொல்ல நினைத்த ஒரு விசயத்தை மதுமிதா அக்கா சொல்லிவிட்டார்கள்.

மறுபடியும் மன்னித்து கொள்ளுங்கள் அய்யா:-))).

 
At 1:41 AM, Blogger தாணு said...

siva
காதல் ஓவியம் பாடல்களின் ஈர்ப்பு படத்தில் இல்லாதது குறைதான். ஆனாலும் பாடல்கள் எல்லா மட்டத்து மக்களையும் போய்ச் சேர்ந்துவிட்டது படம் வந்த காலத்திய வெற்றி. ஏனோ அந்தப் பாடல்களைப் படத்தின் நாயகனோடு ஒப்பிட்டு ரசிக்க முடியவில்லை. ஆடியோ மட்டும்தான் கேட்க முடிகிறது. பாரதிராஜா நாயகிகளை உருவாக்கிய அளவு நாயகர்களின் தேர்வு சரியாக இருப்பதில்லை. கார்த்திக் தவிர!!!

 
At 7:51 PM, Blogger சிவா said...

முத்துகுமரன்! இன்னும் என்னோட நட்சத்திர பதிவு நீங்க படிக்கலை :-) நெனைவிருக்கட்டும் :-))

வேலைய முடிச்சிட்டு மெதுவா வாங்க..எங்கே ஓடிட போவுது..மெதுவா பேசலாம்.. :-))

 
At 7:53 PM, Blogger சிவா said...

ஜேஸ்ரீ! நன்றி!

வைரமுத்து வரிக்கு வரி தெரியறார்..சுந்தர்-கிட்ட நீங்க தாராளமா சண்டைக்கு போகலாம் :-))

 
At 7:57 PM, Blogger சிவா said...

தாணு! நீங்க சொல்றது 100/100 உண்மை..என்னிடம் 'நாதம் என் ஜீவனே' 'வெள்ளிச் சலங்கைகள்' ரெண்டு பாட்டும் வீடியோ இருக்கு (DVD) . நீங்க சொல்ற மாதிரி பாடலை பார்க்கும் போது சுத்தமாக ஒன்றும் தோன்றுவது இல்லை. தனியாக கேட்டால் தான் அதில் உள்ள உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும்..ஹீரோவுக்கு எஸ்.பி.பி கொடுக்கும் குரலின் உணர்ச்சிகள் பொருந்தவில்லை என்றே சொல்வேன்..சுத்தமாக மனசு ஒட்டவில்லை..

//** பாரதிராஜா நாயகிகளை உருவாக்கிய அளவு நாயகர்களின் தேர்வு சரியாக இருப்பதில்லை. கார்த்திக் தவிர!!! **/// உண்மை..ஆனால் அவரது சமீபத்திய படங்களில் அதுவும் உருப்படவில்லை..மனோஜை வச்சி ரொம்ப தான் கஷ்டபடறார் மனுசன்..பாவம் :-)

 
At 8:00 PM, Blogger சிவா said...

சினேகன் & மாசிலன்! முதல் வருகைக்கு நன்றிங்க. அண்ணான்னு எடுத்தவுடனே சொல்லிட்டீங்க :-))

//** katha nayakan than pudikkama padame pudikalaine ninaikiran **// உண்மை..தாணு அக்காவுக்கு சொல்லியிருக்கிற பதிலை பாருங்க..அது தான் உண்மை என்று நினைக்கிறேன்.

//** anna kathail ethao miss ana mathiri therium etthaiyo solla vanthu maraithnu poyurukkum padathai parkkum pothu **// எனக்கு இன்னும் படத்தை பார்க்க கொடுத்து வைக்கவில்லை..சீக்கிரம் பார்த்துவிட்டு நானும் என் கருத்தை சொல்கிறேன் நண்பரே.

 
At 3:23 PM, Blogger Sundar Padmanaban said...

Jsri,

//சுந்தர் டூ

வரிக்கு வரி எடுத்துப் போட்டு வாதாட நான் தயாரில்லை. //

வாதாடவே தேவையில்லை. சிவா மட்டும் இந்தப் பதிவு போடலைன்னா நான் ஏழு பதிவுகளா (8-பூஜைக்காக) பாடும் நிலா பாலுவில் வரிக்கு வரி போட்ருப்பேன். :)

வைரமுத்து தெரியவில்லை-ங்கறது கொஞ்சம் உயர்வு நவிற்சின்னு வச்சுக்குங்களேன் (பாலுவினால் வந்த மயக்கம்!).

//"அழகே மலரே அறிவா...யா...." - சில வினாடிகள் என் மூச்சை நிறுத்திய குரல் பாவங்கள்..
//

அப்படீன்னு சொல்லிருக்கேனே - அதுல வைரமுத்து மறைஞ்சாவது இருக்காரில்லையா!

சமாளிக்கவெல்லாம் இல்லை. உண்மையிலேயே "ஏட்டிக்குப் போட்டியா" பாடல் எழுதாம, நிஜமாகவே அற்புதமாக எழுதியிருக்கார் வைரமுத்து. Order of priority -ல மூவர் கூட்டணின்னு யோசிச்சதுல Ilu, janaki, balu-வும் வந்துட்டாங்க!

ஆனா பாரதிராஜா தெரியவில்லைங்கற கருத்துல எந்த மாற்றமும் இல்லை!

 
At 9:06 PM, Blogger ஜென்ராம் said...

பலமுறை பார்த்த படம். அனைத்தும் திரையரங்கம் சென்றுதான்.

நன்றி பாடல்களை மீண்டும் நினைவு படுத்தியதற்கு..

"வானத்து நிலவைத் தண்ணீரிலே
சிறைவைத்த கதைதான் உன் கதையே"

மற்றும்

"சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா"

என்ற குயிலே குயிலே பாடலின் வரிகள் என்று எப்போது கேட்டாலும் உருகச் செய்கின்றன.

 
At 7:09 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சும்மா இருக்கிற ஆளுங்களை இந்தமாதிரிப் பாட்டெல்லாம் போட்டு ஏம்பா பேஜாராக்குறீங்க. :)

எனக்குப் பிடித்த சில பாடல்களைக் கேட்க முடிந்தது. நன்றி!

-மதி

 
At 6:58 PM, Blogger சிவா said...

சுந்தர்! முத்துகுமரன் ரொம்ப நாளா இந்த பதிவை கேட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே சொன்ன மாதிரி எந்த பாடலையும் விட முடியாமல் மொத்தமா போட்டுட்டேன் :-)).

பாரதிராஜா தெரியமாட்டார் பாடலில். ஆனால் இந்த மாதிரி பாடலையும் ஒரு இசையமைப்பாளரிடம் இருந்து வாங்க ரொம்ப ரொம்ப திறமை வேண்டும். அதையாவது ஒத்துக்கொள்கிறீர்களா :-))

 
At 6:59 PM, Blogger சிவா said...

வாங்க ராம்கி!

//**குயிலே குயிலே பாடலின் வரிகள் என்று எப்போது கேட்டாலும் உருகச் செய்கின்றன **// உண்மை தான் ராம்கி. 'குயிலே குயிலே' பாடலின் சரணம் ரொம்ப சின்னது (சில வரிகளே) ஆனால் மொத்த பாடலும் ரொம்ப உருக்கமாக இருக்கும்.

வருகைக்கு நன்றி ராம்கி

 
At 7:01 PM, Blogger சிவா said...

வாங்க மதி! முதல் தடவையா கீதம்ல பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

//** சும்மா இருக்கிற ஆளுங்களை இந்தமாதிரிப் பாட்டெல்லாம் போட்டு ஏம்பா பேஜாராக்குறீங்க. :) **//
:-))) . என்ன! பாட்டு கேட்டவுடனே 'இலங்கை வானொலி நிலையம்' எல்லாம் நினைவுக்கு வருதா :-)

 
At 6:22 PM, Blogger சிவா said...

சசிகலா! நீங்க பழைய பதிவுகளை தேடி கேட்பதை பார்க்க ரொம்ப சந்தோசம். நீங்க சொல்ற மாதிரி 80ஸ் ராஜா + Viramuthu + SPB + S.Janaki எப்பவுமே சூப்பர் தான். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக இந்த பக்கம் வாங்க.


நீங்க தமிழில் எழுத வேண்டும் என்றால் இங்கே போய் பாருங்க.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அதில் இரண்டு கட்டங்கள் இருக்கும். இரண்டுக்கும் இசையில் 'தெரிவு செய்க' வில் Thanglish-a க்ளிக் பண்ணிட்டு, மேலே கட்டத்தில் உங்க cursor-அ வைத்து உங்க கீபோர்டில் ammaa என்று எழுதினால் கீழே 'அம்மா' என்று வரும்..இப்படி நீங்க என்ன வேண்டுமானாலும் எழுதி முடித்த பின், கீழே இருக்கும் கட்டத்தில் இருப்பதை copy பண்ணி,ப்ளாக்கில் paste பண்ணிட வேண்டியது தான். முயற்சி செய்து பாருங்கள். ஏதும் சந்தேகம் வந்தால் gsivaraja@gmail.com க்கு ஒரு மடல் தட்டி விடுங்க.




அன்புடன்,
சிவா

 
At 3:14 PM, Blogger சிவா said...

சசிகலா! அடடா! தமிழ்ல டைப் பண்ண கத்துக்கிட்டீங்களா..நல்லது. 'தனிமையிலே....ஒரு ராகம்..ஒரு தாளம்' பாடல் கேட்ட மாதிரி இருக்கிறது..யேசுதாஸ் பாடலா, ஜெயசந்திரன் பாடலா? ஐயோ..சட்டம் ஒரு இருட்டறை படம் என்னிடம் இல்லையே..நம்ம சிவகுமாரிடம் கேட்டுப் பார்க்கிறேன். கொடுத்தால் கேட்டுடலாம்.

உங்கள் பாராட்டு அத்தனைக்கும் என்னுடைய கோடி நன்றி :-)

அன்புடன்,
சிவா

 

Post a Comment

<< Home