நேயர் விருப்பம் - 5
நேயர் விருப்பம் போட்டு கிட்டத்தட்ட 2 மாதம் ஆகி போச்சு. இன்று சில அருமையான பாடல்களை நேயர் விருப்பத்தில் கேட்கலாம். எல்லாமே ராஜா பாட்டுத்தான் (வேற பாட்டு தான் நம்ம கிட்ட கெடையாதுல்லா).
முதலில் உஷா அக்கா ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டிருந்தார்கள். 'நான் உந்தன் தாயாக வேண்டும்' ஜானகியின் குரலில் 'உல்லாச பறவைகள்' படத்தில் இருந்து. ஜானகியின் குரல், பாடும் விதம் இந்த பாடலில் ரொம்ப அருமை. உல்லாச பறவைகளில் மற்ற பாடல்கள் அளவுக்கு பாடல் ஏனோ பிரபலமாகவில்லை என்று நினைக்கிறேன். பாடலை பற்றி உஷா அக்கா நிறைய சொல்வார்கள் :-)
கீதா எங்கே இருந்து தான் பாட்ட புடிப்பாங்கன்னு தெரியலை. முன்பு 'அம்மா' என்று ஒரு படம் சொன்னாங்க..இப்போ 'சிவப்பு மல்லி' என்று ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலை கேட்டிருக்காங்க. நீங்க சொல்லி தான் இப்படி படமெல்லாம் நான் கேள்வி படறேன். எங்கே இருந்து புடிக்கிறீங்க. நான் உங்க ஆளவுக்கு பாட்டு கேட்டதில்லை கீதா :-). 'ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்..தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்' ரொம்ப நல்லா கேட்ட பாட்டு. ஆனால் என்னிடம் இல்லையே கீதா :-(.
அதனால் நீங்க ரொம்ப நாளைக்கு முன்பு கேட்ட 'இளையநிலா பொழிகிறது' கொடுக்கிறேன். சுந்தர் வநது 'பாடும் நிலா பாலு' வில் போடாம இங்கே போட்டு ஏன்யா ராஜா பாட்டா மாத்துறீங்க. அது எஸ்.பி.பி பாட்டுய்யா என்று சொல்ல போகிறார். இந்த பாடலை பற்றி எல்லோருக்கும் நிறைய தெரிந்திருக்கும். இந்த பாடலில் இரண்டாவது prelude-ல் வரும் தனி கிடார் இளையராஜாவே வாசித்தது என்று கேள்வி பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இப்போ பாட்டு.
நம்ம தங்க்ஸ் (Thangs) எல்லா நேயர் விருப்பத்திலும் அழகாக ஒரு பாடலை கேட்பார். 'யேசுதாஸ்' பதிவை பார்த்துவிட்டு அவர் கேட்டப் பாடல் 'என் ஜீவன் பாடுது..உன்னைத் தான் தேடுது' பாடலை கேட்டிருந்தார். 'நீ தானா அந்த குயில்' படத்தில் இருந்து ராஜாவில் இசையில். யேசுதாஸின் தொடக்க ஹம்மிங் அருமை. எனக்கும் பிடித்த ஒரு யேசுதாஸ் பாடல் இது.
இறுதியாக, வினதா அக்காவின் விருப்பத்தில் மீண்டும் ஒரு ஜானகி பாட்டு ( அது என்ன உஷா அக்காவும், வினதா அக்காவும் ஒரே மாதிரி ஜானகி பாட்டா கேட்டிருக்கீங்க). 'தந்துவிட்டேன் என்னை' படத்தில் இருந்து 'கண்களுக்குள் உன்னை எழுது'. டைரக்டர் மகேந்திரன் இயக்கத்தில் வந்த படம். இந்த பாட்டில் நிறைய இசை விசயம் இருக்கு என்று நினைக்கிறேன். வினதா அக்கா சொல்வார்கள். மற்ற படி ஒரு ரிப்பீட் பீட்டில் ராஜா ஒவ்வொரு இசையாக சேர்ப்பது ரொம்ப அழகாக இருக்கும் (interlude). ஜானகி ரொம்பவே அனுபவித்து பாடி இருப்பார். இதே போல இன்னொரு பாட்டு சொல்லனுமா 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' படத்தில் இருந்து 'காலை குயில்களே' பாடலை சொல்லலாம். இப்போ விருப்பப் பாடல்,
27 Comments:
//'தந்துவிட்டேன் என்னை' //
மகேந்திரன் படம் அல்ல. அது இயக்குநர் ஸ்ரீதர் கடைசியாக இயக்கிய படம். நடிகர் விக்ரமின் முதல் படம் என்பது கூடுதல் தகவல்.
வாய்தாவிற்கு மன்னிக்கவும் சிவா:-)))
சிவா,
"விழியில் மௌனமொழி பேசும் அன்னம் " & கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சுக்கும் நெஞ்சுக்கும் காதல் ( ஜேசுதாஸ் பாடியது) பாடல்கள் இருக்குங்களா..
தந்துவிட்டேன் என்னை படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். மிகச்சிறந்த தமிழ் இயக்குனர்களில் ஒருவர். அதுதான் அவர் இயக்கிய இறுதிப்படம் என்று நினைக்கிறேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அட்வான்ஸ் கொடுத்து புதுப்படம் இயக்க இருந்தார். ஆனால் பாவம்....அவரது உடல்நிலை இன்றுவரை ஒத்துளைக்கவேயில்லை. ஸ்ரீதரின் இசை ரசனையும் மிகச்சிறந்தது. விஸ்வநாதனுடன் பல இசைக்காவியங்கள் தந்தவர்...இளையராஜாவை வைத்தும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார்.
நான் உந்தன் தாயாக வேண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்திலேயே மிகவும் பிடித்த பாடல் இதுதான். அடுத்துதான் தெய்வீக ராகம். அடுத்தது ஜெர்மனியின் செந்தேன் மலரே. கடைசியாக எங்கெங்கும் கண்டேனம்மா....
சரி. சிவா...அதென்ன இளையராஜா பாட்டு மட்டுந்தான் நேயர் விருப்பத்துல போடுவீங்களா?
அப்ப எனக்கு
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ!
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ! பாட்டு போடுங்க. ஏசுதாசும் ஜானகியும் பாடியது. இளையராஜா இசை. படம் பேர் தெரியாது. அது இல்லைன்னா.....செல்லப்பிள்ளை சரவணன் பாட்டு போடுங்க.
Hey Siva, Thanks for 'kangalukkul....' very fast, mesmerizing,passionate Janaki solo! Even I am curious about the scene/picture info about this song! love, vinatha
முத்துகுமரன்! தகவலுக்கு நன்றி நண்பரே. ஸ்ரீதரா, மகேந்திரனா என்று ஒரு சின்ன குழப்பம் வந்தது. தப்பாக சொல்லி விட்டேன். அந்த படம் அந்த இயக்குனரின் கடைசி படம் என்றும் நினைவு இருந்தது. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி :-)
வாங்க பரணீ!
'கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்' (நினைக்கத் தெரிந்த மனமே) எனக்கு பிடித்த பாடல். கண்டிப்பா அடுத்த நேயர் விருப்பத்தில் உங்கள் விருப்பமாக பதிவிடுகிறேன்.
'விழியில் மௌனமொழி' பாட்டு தெரியலையே..என்ன படம் என்று சொல்லுங்களேன்.
ராகவன்! ஆமாம். 'தந்துவிட்டேன் என்னை' ஸ்ரீதரின் இறுதி படம் தான். நீங்கள் சொல்வது சரி தான்.
'நான் உந்தன் தாயாக வேண்டும்' உங்க பட்டியலில் முதலிடமா..ஆச்சரியமா இருக்கு. நெறைய பேர் தெய்வீக ராகத்தை தான் சொல்வார்கள். உண்மையிலேயே உஷா அக்கா கேட்ட பிறகு தான் எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது.
//**அதென்ன இளையராஜா பாட்டு மட்டுந்தான் நேயர் விருப்பத்துல போடுவீங்களா? **// எனக்கு தெரிஞ்சத பற்றி தானே பேச முடியும். சத்தியமா என்னிடம் வேறு இசை அமைப்பாளர் பாடல் ஒன்று கூட கிடையாது. (சில பழைய எஸ்.பி.பி முத்துக்கள் தவிர). தெரியாததை/இல்லாததை பற்றி ஒன்றும் பேச முடியாதே என்று தான் அப்படிச் சொன்னேன். :-))
என்ன ராகவன். நீங்க சொல்ற பாட்டு ஒன்னுமே எனக்கு புடிபட மாட்டேங்குது?. என்ன படம் என்று சொன்னால் எளிதா இருக்கும். தேடி பார்க்கிறேன். கிடைத்தால் உங்கள் விருப்பமாக போட்டுடறேன்.
வினதா அக்கா! நீங்க சொல்ற மாதிரி இந்த பாடல் 'very fast, mesmerizing,passionate பாட்டு தான். இந்த படத்தை பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கிறேன். மற்ற நண்பர்களும் சொல்லுங்கள்.
//'விழியில் மௌனமொழி' பாட்டு தெரியலையே..என்ன படம் என்று சொல்லுங்களேன். //
படத்து பேரு தெரியாதுங்களே சிவா, அம்பிகா நடிச்சிருப்பாங்க, பாலுவும் ஜானகி அம்மாவும் பாடியிருப்பாங்க.
பாட்டு "விழியில் மணிவிழியில் மௌன மொழி பேசும் அன்னம்" இப்படி தொடங்கும்.
சிவா , அது நூறாவது நாள் படத்தில் வரும் பாட்டுன்னு நினைக்கிறேன். ( மோகன் & நளினி பாட்டுன்னு ஞாபகம் - அம்பிகா இல்லை)
கூடவே இன்னொரு பாட்டு நேயர் விருப்பத்தில்.
"நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது " கொஞ்சம் புதுப்படம் படம் ஆனா பேரு தெரியாது. கண்டிப்பா இளையராஜாதான் இசையமைத்திருப்பார் அப்படின்னு ஒரு பயங்கர நம்பிக்கை ( அந்த பாட்டு கேக்கும் போது அப்படி ஒரு சுகம்).
சிவா, நேயர் விருப்பத்தில் இன்னும் சில ...
1.என் கண்மணி காதலி உனைப் பார்க்கையில் ஓர் ஆயிரம் - சிட்டுகுருவி ( சிவக்குமாரும் அவரது ஜோடியும் ஒரு பேருந்தில் பாடிச் செல்வார்கள் )
2. நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன் - படம் பேர் தெரியாது
3.தேன் பூவே பூவே வா தென்றலானேன் - அன்புள்ள ரஜினிகாந்த்
4. மீண்டும் மீண்டும் வா - விக்ரம்
5. பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன - படம் ஏணிப்படிகள் ????? ( இது ராஜ இசை அமைத்ததா என்று தெரியவில்லை )
இப்போதைக்கு அவ்வளவுதான் வேண்டுகோள் இன்னும் தொடரும். ஹி ஹி ....
பரணீ! இப்போ நினைவுக்கு வருது. ஆமாம். அது 'நூறாவது நாள்' பாடல் தான். கண்டிப்பாக உங்களுக்காக தருகிறேன். ராஜா தான் இசை.
நீங்கள் கேட்ட எல்லா பாடல்களும் என்னிடம் இருக்கிறது. உங்களுக்காக ஒரு தனி பதிவு (பரணீ விருப்பம் :-). போட்டுடறேன் :-)
'நானொரு பொன்னோவியம்' பாடலை ஏற்கனவே தனிபதிவாக போட்டிருக்கிறேன். இங்கே பாருங்கள்
http://geethamsangeetham.blogspot.com/2005/11/blog-post_23.html
அடிக்கடி வாங்க..நெறைய பாட்டு சொல்லுங்க..நிறைய பேசலாம்.
அன்புடன்,
சிவா
Dear Siva,
Thanks a lot for the great song!!!
Audio quality miga nanraga irukiradhu!!
IR padalai rasithu ketka, nichayam audio quality miga avasiyam - Unga telecost la adhu supera iruku!!
Pl continue your Service!!!
With Love,
Usha Sankar.
// 'நான் உந்தன் தாயாக வேண்டும்' உங்க பட்டியலில் முதலிடமா..ஆச்சரியமா இருக்கு. நெறைய பேர் தெய்வீக ராகத்தை தான் சொல்வார்கள். உண்மையிலேயே உஷா அக்கா கேட்ட பிறகு தான் எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. //
நம்புங்கள் சிவா...இந்தப் பாட்டு எனக்கு மட்டுமல்ல என் சகோதரிகளுக்கும் மிகவும் பிடிக்கும். மிகவும் அருமையான பாடல். தெய்வீகராகமும் அதே அளவிற்கு பிடிக்கும்.
// எனக்கு தெரிஞ்சத பற்றி தானே பேச முடியும். சத்தியமா என்னிடம் வேறு இசை அமைப்பாளர் பாடல் ஒன்று கூட கிடையாது. //
ம்ம்ம்....அதெப்படிங்க..இளையராஜா பாட்டு மட்டுந்தான் கேப்பீங்களா....
// எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ!
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ! பாட்டு போடுங்க. ஏசுதாசும் ஜானகியும் பாடியது. இளையராஜா இசை. படம் பேர் தெரியாது. அது இல்லைன்னா.....செல்லப்பிள்ளை சரவணன் பாட்டு போடுங்க. //
எங்கும் நிறைந்த பாட்டு - ஜெய்சங்கர், ஸ்ரீதேவி நடிச்சி இளையராஜா இசை. படம் தெரியாது.
செல்லப்பிள்ளை சரவணன் - படம் பெண் ஜென்மம் - முத்துராமன் நடிச்சது. இளையாராஜா இசை.
சிவா!
எல்லாமே நல்ல பாடல்கள்தான். ஆனாலும் "நான் உந்தன் தாயாக வேண்டும்"..... என்ற பாடல்
எனக்கு கூட மிகவும் பிடித்த பாடல். மனம் சோர்ந்து போகும் வேளைகளில் அமைதியாக இருந்து அந்தப் பாடலைக் கேட்டால் மனதில் உள்ள பாரம் நீங்க யாரோ அன்பாக அரவ ணைத்து தாலாட்டுவது போன்றதொரு உணர்வு எனக்கு பிறப்பதுண்டு.
ஆகவே அந்தப் பாடலை இங்கே தந்தமைக்காக நன்றிகள் சிவா.
உஷா அக்கா! பாராட்டுக்கு நன்றி :-).
நீங்க கேட்டப் பிறகு தான் இந்த 'நான் உந்தன்' பாடலை கேட்க ஆரம்பித்தேன். இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரே வருத்தம். இந்த பாடலை அறிமுக படுத்தியமைக்கு நன்றி :-)
//** Unga telecost la adhu supera iruku!! **// கொஞ்சம் காசு இருந்தா ராஜாவுக்கென ஒரு வானொலி நிலையம் ஆரம்பிச்சுடலாம் :-). நெறையா காசு இருந்தா ராஜாவுக்கென ஒரு தொலைக்காட்சியே ஆரம்பிக்கலாம். என்ன நாஞ்சொல்றது :-))
//** இளையராஜா பாட்டு மட்டுந்தான் கேப்பீங்களா.... **// இல்லை ராகவன். வெறும் ராஜா பாடல்கள் மட்டும் கேட்டுவிட்டு எனக்கு ராஜா தான் புடிக்கும் என்று சொல்வது முட்டாள் தனம் அல்லாவா :-).
நான் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறேன். (சமீபத்தில் வரும் குப்பைகள் தவிர). 'ஓடும் மேகங்களே' (ஆயிரத்தில் ஒருவன்) பாடலும் என்னுடைய விருப்பப்பாடல் பட்டியலில் உண்டு. 'குங்குமபூவே' (சந்திரபாபு)யும் உண்டு. ARR- யின் எல்லா பாடல்களையும் ஒரு தடவை கேட்பதுண்டு.(அவர் மலையாளத்தில் அடித்த படம் ஒன்று 'அசோகன்' என்று டப் ஆகி வந்ததே..அதை கூட கேட்டிருக்கிறேன்). 'Grahan' ல் (ஹிந்தி) கலக்கிய கார்த்க்திக் ராஜா, அப்புறம் காணாமல் போனது வருத்தம் தான். இப்படி எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் பரிட்சயம் உண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக ஏனோ புதுப்பாடல்கள் சுத்தமாக புடிப்பதில்லை (ராஜாவைவ் தவிர..ஹி..ஹி.ஹி). அதனால் ஒரு இரண்டு வருடமாக புதுப்பாடல்களை கேட்பதை நிறுத்தி விட்டேன். மற்ற படி பழைய டி.எம்.எஸ் பாடலில் இருந்து கேட்பதுண்டு. சேகரிப்பது மட்டும் ராஜா பாடல்கள் மட்டுமே (அப்புறம் பழைய எஸ்.பி.பி..சில பழைய பாடல்கள்)..ஏனோ ராஜாவின் இசை எனக்கு கொடுக்கும் உணர்வுகள் வேறு எதிலும் கிடைப்பதில்லை :-)).
நீங்க கேட்டிருக்கிற பாட்டு ஒன்றும் கேட்ட மாதிரி இல்லை (இதெல்லாம் நியாயமா..இப்படியா பாட்டு கேட்பது :-))..பாட்டு இருக்கிறவர்கள் உதவி பண்ணுங்கப்பா :-)
சத்தியா! நீங்கள் சொல்வது உண்மை தான். நானும் அதை கேட்கும் போதெல்லாம் உணர்கிறேன். ஜானகியின் குரல் அவ்வளவு அருமை. இந்த பாடலை கேட்ட உஷா அக்காவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
என்ன சிவா இப்படி கைவிரிச்சிட்டீங்க...ஹோன்னு அழனும் போல இருக்கு...ஐயா இளையராஜா ரசிகர்களே எனக்காக இந்த ரெண்டு பாடல்களையும் தேடிக் குடுங்கய்யா....புண்ணியமாப் போகும்.
உஷா அக்கா! 'போட்டேனே பூவிலங்கு' அருமையான பாடல். என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல் :-). கண்டிப்பாக உங்கள் விருப்பமாக வரும்.
ரெண்டாவது பாட்டு தெரியலையே..யோசித்துப் பார்க்கிறேன்.
'புன்னகையில் மின்சாரம்' பாடல் 'பரதன்' படத்தில் இருந்து. ரொம்ப வேகமான ஒரு பாடல். உங்கள் விருப்பமாக சீக்கிரம் போட்டுடறேன்.
Thanks Siva! Nice collection again...
சிவா,
எனக்குத் தெரியும் நான் கேட்ட பாட்டு கிடைக்காதுனு.. ம்ம்.. சரி பரவாயில்லை. என் விருப்பமா எனக்கு பிடிச்ச பாட்டாத்தான் போட்டிருக்கிங்க.. நன்று நன்று..
உல்லாச பறவைகள்-ல எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு அடுத்த பதிவுல போடறேன் பாருங்க.. எனக்கு பிடிச்ச பாட்டை.
அன்புடன்
கீதா
//ஆனால் கடந்த சில வருடங்களாக ஏனோ புதுப்பாடல்கள் சுத்தமாக புடிப்பதில்லை (ராஜாவைவ் தவிர..ஹி..ஹி.ஹி). அதனால் ஒரு இரண்டு வருடமாக புதுப்பாடல்களை கேட்பதை நிறுத்தி விட்டேன்.//
சமீப காலமாக யுவன்சங்கரின் பாடல்கள் நல்ல இருக்கு சிவா சார். கொஞ்சம் நீங்க கேட்டு தான் பாருங்களேன்... "கண்பேசும் வார்த்தைகள்", "ஒரு நாளில் வாழ்க்கை" எல்லாம் நல்ல பாட்டு.
உங்க கலக்-ஷன் ரொம்ப நல்லா இருக்கு. நான் கூட நிறைய ராஜா பாடல்கள் தேடிகிட்டிருக்கேன். நேயர் விருப்பம் சீக்கிரம் எழுதறேன்.
பொன்ஸ்! முதல் வருகைக்கு ரொம்ப நன்றி. /** உங்க கலக்-ஷன் ரொம்ப நல்லா இருக்கு. **// நன்றி :-))
நீங்க சொல்ற மாதிரி எனக்கும் யுவன் கொஞ்சம் புடிக்கும். அவரோட முதல் படம் 'அரவிந்தன்' ல் இருந்தே புடிக்கும். சமீபத்தில் 'ராம்' கூட புடிச்சது. ரெண்டு மூனு தடவை கேட்டால் அவ்வளவு தான். நான் பழைய ஆளா போய்டேன் போல :-))
அன்புடன் சிவாவுக்கு!
தங்கள் திரையிசைப் பக்கம் அப்பப்போ வருவேன் ;பதிலூட்டுவது முதற்தடவை;எம் எஸ் வி; கேவி எம்
காலத்தவனாக இருந்த பொழுதும் இளசையும் ,நன்கு பிடிக்கும். பாடலின் இசைக்காக மாத்திரமன்றி கருத்துக்காகவும், நான் இரசிப்பவன், இளைய நிலா பாடலில்; ஓர் அடி" முகிலினங்கள் அலைந்தனவே,முகவரிகள் தொலைந்தனவோ??? ;முகவரிகள் தொலைந்ததனால் ;அழுதிடுமோ!!!!
அவை மழையோ?, முகிலுக்கும்,மழைக்கும் முடுச்சுப் போட்ட கவிஞருக்கு "ஓ"" போடுங்க!!!தமிழ் இலக்கணத்தில், தர்க்குறிப்பேற்ற அணி என்பர். இயற்கையாக நடக்கும் நிகழ்வுக்கு, கவிஞர்கள் தங்கள் எண்ணத்தை ஏற்றிப்பார்த்தல்; நளவெண்பா,கம்பராமாயணத்தில் நிறைய உண்டு.
பாவம்;கவிஞர்களையும் பாராட்டுங்கள்.
நன்றி
யோகன்
பாரிஸ்
அன்பு நண்பர் ஜோகனுக்கு! பதில் அளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கனும். இனி கண்டிப்பாக கவிஞர்களுக்கு ஒரு 'ஓ' போட்டுடறேன். நேரம் இன்மை தான் விட்டுபோவதற்கு காரணம். உட்கார்ந்தோமா, பாடலை ஏற்றினோமா என்று பல நேரங்களில் ஆகிவிடுகிறது. பதிவு எழுதும் பாடலை கவனிக்க நேரம் இருப்பதில்லை. இனி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
தற்குறிப்பேற்ற அணி எல்லாம் 10ஆம் வகுப்பில் படித்தது. இப்போ சினிமா பாட்டோடு மறுபடி சொல்லி கொடுக்கறீங்க. நன்றி. அடிக்கடி ப்ளாக் பக்கம் வருவதுண்டுன்னு சொன்னீங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க. உங்களை வெளிகாட்டியதற்கு ரொம்ப நன்றி (முன்னமே சில பதிவுகளில் உங்கள் கருத்துக்களை சொல்லிருந்தீங்களே..அது நீங்க தானே).
"கண்களுக்குள் என்னை எழுது" மிக அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் பாடிய விதமும், இசையமைத்த விதமும் மனதை தாலாட்டும். நன்றி
Post a Comment
<< Home