கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, January 30, 2006

இசைக் கதம்பம் - 3

இசைக்கதம்பம் போட்டு ரொம்ப நாளாச்சி. சரி இன்னைக்கு மறுபடி ஆரம்பிக்கிறேன். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.

ஹிட்டு பாட்டு:

'கன்னி ராசி'. சூப்பர் காமெடி படம். கவுண்டமணிக்காகவே இந்த படத்தை பார்க்கலாங்க. அதுவும் சோத்துக்குள்ள இருந்து முட்டையை தோண்டி எடுப்பாரே, அந்த ஒரு காட்சி போதும் படம் பார்க்க. அதில் ஒரு எஸ்.பி.பி-வாணி ஜெயராம் பாட்டு 'ஆள அசத்தும் மல்லியே மல்லியே' . ராஜாவின் ரெகுலர் 80ஸ் கலக்கல். படத்தில் ரேவதி சின்ன பொண்ணா இருப்பாங்க. அவங்க குதித்து குதித்து இந்த பாட்டுக்கு ஆடும் அழகே தனிங்க. அருமையான டிரம்ஸ் இசை. கேட்டு ரசிங்க.





அடுத்தாத்து ஆல்பட்:

இசையமைப்பாளர் ஆதித்யன் வரும் போது எனக்கு ரொம்ப எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. 'அமரன்' படத்தில் 'வசந்தமே அருகில் வா' ரொம்ப அருமையான பாட்டு. அவரது சீவலப்பேரி பாண்டி பாட்டு எல்லாம் நல்லா ஹிட்டாச்சி. அவர் இசையமைத்த 'உதவும் கரங்கள்' 'தொட்டில் குழந்தை' எல்லாம் என்னோட விருப்ப பாடல்களில் இருந்தது. சுட்டு போட்டாரா, இல்லை சொந்த சரக்கா என்றெல்லாம் தெரியவில்லை. திடிரென்று சடை வளத்துக்கிட்டு ஜெயா டி.வில சட்டி கிண்ட போய்ட்டார். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவர் இசையில் 'ரோஜா மலரே' படத்தில் இருந்து எனக்கு பிடித்த 'அழகோவியம் உயிரானது' . இது எஸ்.பி.பி பாட்டு. வேறேன்ன சொல்ல :-). எஸ்.பி.பி குரல் கலக்கலோ கலக்கல். பாட்டு இங்கே.





அக்கம் பக்கம்:

இன்று ராஜாவின் கன்னட பாட்டு ஒன்று கேட்கலாம். என்னிடம் சில கன்னட சி.டிக்கள் இருக்கிறது. ராஜாவின் மலையாள பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கிறேன். எனக்கென்னமோ கன்னட பாடல்கள் ரொம்பவே நல்லா இருக்கு. மலையாளத்தில் ராஜாவுக்கு அந்த அளவு சுதந்திரம் இல்லையோ என்று தோன்றும். முதலில் பாடகர் தெரிவிலேயே யேசுதாஸை விட்டா யாரும் பாடினா மலையாளிகளுக்கு புடிக்காது போல. இல்லை ஸ்ரீகுமார் மாதிரி கொஞ்சம் மலையாள் வாடை உள்ள ஆட்கள் தான் பாட வேண்டும். எஸ்.பி.பியே சுத்தமாக ஆகாது. அவரே ராஜா இசையில் ஒன்றோ இரண்டோ தான் மலையாளத்தில் பாடி இருக்கிறார். மனோ, அருண்மொழி - வெட்டு தான். :-). பெண் குரலிலும் அப்படி தான். சித்ரா வரும் வரை வேறு வழியில்லாமல் ஜானகியை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே மாதிரி குரலால் எனக்கு எல்லா பாடல்களும் ஒரே மாதிரி ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இசை அமைப்பிலும் ராஜாவின் முத்திரை அவ்வளவாக எனக்கு தெரியவில்லை (குரு, சிறைசாலை தவிர) கன்னடத்தில் நிறைய வித்தியாசமான பாடல்களை பார்க்க முடிகிறது. இது என் அபிப்பிராயம் மட்டுமே.

இன்று 'குலாபி' படத்தில் இருந்து ஒரு பாட்டு. 'கேளிசதே ப்ரேம வேதா'. ராஜா-எஸ்.பி.பி-சித்ரா குரலில். ஒரு தடவை கேட்டு தான் பாருங்களேன். ராஜாவின் தொடக்க குரல் அறுவடை நாள் பாடலை நினைவு படுத்தும். அருமையான மெலோடி பாட்டு.






காணவில்லை:

'பாரு பாரு பட்டணம் பாரு' இப்படி ஒரு படம் வந்ததாங்க. தெரிந்தவர்கள் சொல்லுங்க. கல்லூரி படிக்கும் போது ஊரில் உள்ள கடையில் கேசட் பதிந்து அடுக்கி வைத்திருப்பேன். ஒவ்வொரு கேசட்டுக்கும் கலெக்சனுக்கு ஏத்த மாதிரி தலைப்பு எழுதி வைத்திருப்பேன். அப்படி ஒரு கலெக்சனுக்கு 'யார் தூரிகை தந்த ஓவியம் - இளையராஜா' அப்படின்னு இந்த பாடலின் தொடக்கத்தை எழுதி வைத்திருப்பேன். ராஜாவின் தூரிகை தந்த ஓவியங்கள் தானே எல்லா பாடல்களும். அதிலும் இந்த பாடல் ரொம்ப அருமையான ஓவியம். என்னோட Favorite உமா ரமணன்-ம் எஸ்.பி.பியும் சேர்ந்து பாடும் ஒரு அருமையான பாட்டு. உமா ரமணன் குரலில் எப்போதும் எனக்கு ஒரு கிறக்கம் உண்டு :-) ரொம்ப வித்தியானமான கம்போசிங். வித்தியாசமான கிடார் இசை. சின்ன வயசில் இருந்தே என்னோட Favorite இந்த பாட்டு. உங்களுக்கு எப்படி?




15 Comments:

At 8:45 AM, Blogger குமரன் (Kumaran) said...

பாடல்களைக் கேட்டேன் சிவா. அதென்ன ஒரு பாட்டுக்கு மட்டும் இது என் அபிப்பிராயம் மட்டுமேன்னு டிஸ்க்ளைமர் போட்டிருக்கீங்க. இங்க நீங்க எழுதுறது எல்லாமே உங்க அபிப்பிராயம் மட்டும் தான்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன் :-)

 
At 9:04 AM, Blogger சிவா said...

வாங்க உஷா! வேலை கொஞ்சம் ஆதிகமாயிட்டதால கொஞ்சம் கேப் விழுந்து போச்சி. தினமும் நம்ம ப்ளாக்கை வந்து பார்ப்பதற்க்கு ரொம்ப நன்றி உஷா :-). உமா ரமணன் ஸ்பெசல் ஒன்னு ரெடி பண்ணிருக்கேன். என்னோட பேவரைட் பாடகி ஆச்சே :-)).

குமரன்! ஒரு பாட்டு நல்லா இருக்கு. அதுல இசை அமைப்பு நல்லா இருக்கு என்று சொல்வது என்னோட அபிப்பிராயம் என்று சொல்ல மாட்டேன். அது உண்மை. நீங்கள் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாட்டு வெறும் குப்பை என்று சொன்னால், சிரிக்க மட்டும் தான் முடியும். என்னால் விவாதம் பண்ண முடியாது :-). ஆனால் 'கன்னட பாடல்களில் ராஜாவுக்கு மலையாளத்தை விட சுதந்திரம் இருந்திருக்கலாம்' என்பது என்னோட அபிப்பிராயம் மட்டுமே. அதற்கு நேர் மாறாக கூட இருக்கலாம். அதனால் தான் அந்த டிஸ்கிளைமர். :-))) புரியுதா உங்களுக்கு

 
At 10:48 AM, Anonymous Anonymous said...

யார் தூரிகை தந்த ஓவியம் அட்டகாசமான பாடல். சில வருடங்களுக்கு முன்னால் வழியில் ஏதோ ஒரு ஆட்டோவில் இந்த பாடல் கேட்டேன். அதும் பாட்டின் நடுவில் ஏதோ ஒரு வரிதான் அதற்குள் ஆட்டொ பறந்துவிட்டது.

ஆனால் மனசுக்குள் அந்த வரி அப்படியே ஒலிச்சிக்கிட்டே இருந்தது. எப்படியோ கண்டுபிடிச்சிட்டேன். அதிலிருந்து அந்த பாடல் என்னோட favourite பாடலாயிடுச்சி.

அப்படி ஒரு படம் பெயர் அதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.. ஆனா மோகன் படம்னு மனசு சொல்லுது.. சரியா தப்பா தெரியலை

மயக்கும் இசை, பாடல்வரிகள், குரல்.

அன்புடன்
கீதா

(நான் கொஞ்சம் காலத்துக்கு 'காணவில்லை தான்'. ஊரிலிருந்து மாமனார், மாமியார் வராங்கோ இன்னிக்கு.. airport கெளம்பிட்டே இருக்கோம்.. :) )

 
At 3:04 PM, Anonymous Anonymous said...

ungluku inniya rasanai ,paraddukkal thodravum. Kannada, malayala, thlungup padalkal keedpathu kuraivu, een illai enlam;therivuseithu podunka.
nanri
johan-paris

 
At 7:49 PM, Blogger சிவா said...

கீதா! ரொம்ப பிசியா இருக்கீங்க போல. Enjoy பண்ணுங்க. மாமனார் மாமியார் வந்துட்டாங்களா?. இனி ப்ளாக் பக்கம் பார்க்க முடியாதோ :-)
ஆட்டோவுல இந்த பாட்டெல்லாம் போடுறாங்கலா..ஆச்சரியமா இருக்கே. நான் கானா பாட்டு தான் கேட்டிருக்கிறேன் :-))

ஜோகன்! முதல் வருகைக்கு நன்றி. உங்கள் பாரட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க. எனக்கு தெரிந்த பாடல்களை போடுகிறேன். கேட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ராஜான்னா எல்லா மொழியும் கேட்பதுண்டு. மொழி புரியவேண்டும் என்பது இல்லை. இசைக்கு மொழி ஏது. நீங்களும் கேட்டு பாருங்க.

 
At 10:06 PM, Blogger கைப்புள்ள said...

கன்னிராசி செம காமெடி படம்ங்க! ஏண்டி உன் தம்பிக்கு ஒரு முட்டை பண்ணை எனக்கு அரை முட்டையா?அக்கா மாமாவுக்கு பாயாசம் தரலை? ஜனகராஜ் பாட்டு சொல்லி தர்றது. இந்த காமெடியெல்லாம் நினைச்சா இப்ப கூட பயங்கர சிரிப்பு வந்துடும்.

நீங்க சொன்ன மாதிரி மலையாளத்துல யாரோட குரலைக் கேட்டாலும் KJஜேசுதாஸ் மாதிரி இருக்கறது எனுமோ உண்மை தான். சமீபத்துல ராஜா இசையில வந்த 'பொன்முடிபுழையோரத்து', 'அச்சுவிண்டே அம்மா','மனசினக்கரே' இதையெல்லாம் கேட்டு பாருங்க. ரொம்ப நல்லா பண்ணியிருக்காருனு நினைக்கிறேன்.

பொன்முடிபுழையோரத்துல அம்மை என்றுனு வர்ற பாட்டு அருமையான தாய்பாசம் பாட்டு. தமிழ் மாதிரி இருக்குற சில வார்த்தைகளை வச்சு நானே புரிஞ்சுக்கிட்டேன். அதே படத்துல 'ஒரு சிரி கண்டால்' சூப்பர் மெலடி. மனசினக்கரேயில் 'மரக்குடையால்' னு ஸ்ரீகுமார் பாடற பாட்டும் சூப்பர். ராஜாவோட கிராமத்து மணம் தெரியும். கேட்டு பாருங்க.

 
At 1:00 AM, Blogger முத்துகுமரன் said...

//நீங்கள் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாட்டு வெறும் குப்பை என்று சொன்னால், சிரிக்க மட்டும் தான் முடியும். என்னால் விவாதம் பண்ண முடியாது :-). //

சிவா நமக்கு கிச்சா கொடுங்க நான் விவாதிக்கிறேன். அதுல என்னன்ன இருக்குன்னு:-))

அது எப்படிப்பட்ட பாட்டு. அவதாரம் படத்தை ராசாவுக்காக 7 முறை பார்த்த ஆளய்யா நான்

 
At 3:51 AM, Blogger கைப்புள்ள said...

எங்கேயோ யுவன் சங்கர் ராஜா பேட்டியில சொன்னது - "தென்றல் வந்து தீண்டும்" மாதிரி ஒரு பாட்டு போட முடிஞ்சாக் கூட நான் ஒரு பெரிய சாதனை பண்ணதா நினைச்சுக்குவேன்".

கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிற பாட்டில்லையா அது?

 
At 8:04 PM, Blogger சிவா said...

கைப்புள்ள, மலையாள பாட்டு பட்டியல் போட்டு கலக்கறீங்க. உங்களை மாதிரி ஆளுங்களை பார்க்க சந்தோசமா இருக்கு. நீங்க சொன்ன அத்தனை மலையாள சி.டிக்களும் என்னிடம் இருக்கிறது. இல்லாதது 'Twingle Twingle Little Star' மட்டும் தான். முடிஞ்சா 'கொச்சு கொச்சு சந்தோசங்கள்' கேட்டு பாருங்க. அதுவும் சூப்பர் தான்.

கன்னி ராசி படம் தேடி தேடி பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்குது. ஜனகராஜ் பாட்டு சொல்லி கொடுக்கற சீன் எல்லாம் சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்.

முத்துகுமரன்! சீக்கிரம் 'தென்றல் வந்து' பாட்டு போட்டுடறேன் ஐயா. நீங்க நெறையா விளக்கம் வச்சிருப்பீங்க போல. கேட்க ஆவலாய் உள்ளேன். நாசர் படம் எல்லாத்துக்குமே (தேவதை, அவதாரம்) ராஜாவில் இசை ஒரு கலக்கல் தான். படம் தான் ஏனோ ஓடுவதில்லை :-(

 
At 10:10 PM, Blogger G.Ragavan said...

கன்னிராசி எனக்கும் மிகவும் பிடிச்ச படம். ரசிச்சுப் பாத்தது.

அதுல சுகராகமேன்னு ஒரு பாட்டு வரும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆள அசத்தும் மல்லிகா மல்லிகா பாட்டும் கலக்கல்.

இளையராஜா சரியாகப் பயன்படுத்தாத பாடகிகளில் வாணி ஜெயராமும் ஒருவர்.இத்தனைக்கும் ராஜா இசையில் வாணி பாடிய அத்தனை பாட்டுகளும் ஹிட். இருந்தாலும் எண்ணிக்கைகள் மிகக் குறைவு.

மலையாளக் கரையோரத்து ராஜாவை விட கன்னடக் காட்டு ராஜா சூப்பர் என்பதில் ஐயமில்லை. சிவா சொன்னது போல எல்லாம் ஒரே அச்சில் போட்டெடுத்த கொழுக்கட்டை போல் இருக்கும்.

மலையாள இயக்குனர்கள் தமிழ்ப் படம் எடுத்தாலும் அதில் ஏசுதாஸ்தான் பாடுவார். ஏனென்றே தெரியாது. இத்தனைக்கும் ஜெயச்சந்திரனும் அருமையான பாடகர். மலையாளிதான். ஆனாலும் தமிழைத் தமிழாகப் பாடுகிறவர். அவரையும் இளையராஜா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய கலையோ சிலையோ இது பொன்மான் நிலையோ என்ற பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

 
At 4:20 AM, Blogger சிவா said...

//** இத்தனைக்கும் ராஜா இசையில் வாணி பாடிய அத்தனை பாட்டுகளும் ஹிட். இருந்தாலும் எண்ணிக்கைகள் மிகக் குறைவு.**// உண்மை தான் ராகவன்.

//** மலையாளக் கரையோரத்து ராஜாவை விட கன்னடக் காட்டு ராஜா சூப்பர் என்பதில் ஐயமில்லை. சிவா சொன்னது போல எல்லாம் ஒரே அச்சில் போட்டெடுத்த கொழுக்கட்டை போல் இருக்கும். **// உண்மை உண்மை. எஸ்.பி.பி-யே புடிக்காத ஆளுங்க கேரளா ஆளுங்க தாம்பா. ஹும். ஜேசுதாஸ் ஒரே மாதிரி 10000 பாட்டு பாடினாலும் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. :-))). ராஜா அங்கே ஹிட் ஆனதே பெரிய விசயம் :-)

 
At 8:14 AM, Blogger Sundar Padmanaban said...

// 'அமரன்' படத்தில் 'வசந்தமே அருகில் வா' ரொம்ப அருமையான பாட்டு.//

நிறைய சிறந்த ஸ்டீரியோ பாடல்கள் வந்திருக்கலாம். ஆனால் ஸ்டீரியோ என்றாலே இசைக்கருவிகளை தனித்தனி ட்ராக்குகளில் இடவலமாகக் கேட்கவைப்பது என்பதே ட்ரெண்டாக இருக்கிறது இல்லையா? இந்தப் பாடல் விதிவிலக்கு. தயவு செய்து இதை இயர் போனில் கேட்கவும். பாலு இரண்டு காதுகளிலும் மாறிமாறி வந்து தேனை ஊற்றுவார். நான் கேட்ட பாடல்களில் ட்ராக்குகளைச் சிறந்த முறையில் உபயோகித்து பதிவு செய்யப்பட்ட பாடல் இது. கேட்கும்போது தனிமையும், நிசப்தமும் முக்கியம்.

//'ரோஜா மலரே' படத்தில் இருந்து எனக்கு பிடித்த 'அழகோவியம் உயிரானது' . //

இது இன்னொரு முத்து. மிகச் சிறந்த மெல்லிசைப் பாட்டு. lovely lisa.. mona lisaa.. என்று கடைசியில் ஒரு காதல் வேதனையுடன் இழுத்து கீழே வருவார் பாருங்க. அப்படியே "ம்..ஹும்..ம்..ஹூம்..ஹூம்..ஹூம்... அழகோவியம்" ன்னு பாடி முடிப்பார்! "சான்ஸே இல்லை"

சிவா.. தலைவர் பாடல்களைச் சொல்லி என்னை ரொம்பவே டென்ஷன் பண்றீங்க. வேற எதுவும் ஓட மாட்டேங்குது! :( :(

எங்கே அந்த ஆதித்யன்?

 
At 8:35 PM, Anonymous Anonymous said...

I am new to this site .The songs are really very good.Can I request songs from following movies.

1. Arunodhayam
2. Rasaathi varum naal

 
At 6:46 PM, Blogger சிவா said...

வாங்க திருகுமரன்! பாட்டெல்லாம் புடிச்சிருந்துதா..ரொம்ப நன்றி..
நீங்க சொன்ன பாடலில் அருணோதயம் என்பது பழைய படமா..கொஞ்சம் பாடல்களை சொல்ல முடியுமா..

 
At 3:03 AM, Blogger VSKumar said...

hai friends,

just view pannum podhu intha blog parthen...

vanthal usha akka kooda comment pannirukkanga. romba santhosam..

IR swamigal rasigargal anaivarukum KANNI RAASI movie romba pidikkum. Athula varugira movie BGM parkamamale intha moviethan kandupidikkalam. One of the Great movie from Pandiyarajan.

Ningal sonnathu pol Raja sir isai Tamilukku next Kannada songs than nalla panniruppar idhu en nedunalaya opinion aprum than Telugu, Malayalam & Hindi. Now Kannada cinemavukku namma Raja sir 7 new movies compose pannugirar. Avarakku angey neraya rasigargal vattaram athigam. Tamil & telugu orey mathiri konjam change panni compose pannuvar. Malayalam very different from culture & music. Athilum kodi katti innum no.1 angey. Avarukku angey nalla mariyathai undu. Malayalees innikku tamil nalla pesa, purinthu kolla orey karanakartha orey oruvar than avar NAM ISAIGNANI than idhanai entha idathilum entha malayaleesum accept pannuvargal.Idhu namakku perumai than. Last 10 years start from KOCHU KOCHU SANTHOSANGAL to INNATHE CHINTHA VISHYAM varai Mr. Sathyan anthikad/ Director nam Isaignani isaiyil movie ready pannuvar. Innikku sollallam 2015il sathyan anthikad movie vanthal athukkum Isaignani than Music Director. MADE FOR EACH OTHER COMBINATION. I like malayalam songs any time.

Paru paru pattanam paru nalla hit ana movie than. Mohan and Ranjani act panniruppargal. enakku Yar thoorigai thantha oviyam song & Thendral varum unnai azhaikkum.

yours friendly,

saravanakumar.

 

Post a Comment

<< Home