கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, February 01, 2006

உச்சி வகுந்தெடுத்து ( S.P.B தனி ஆவர்த்தனம் - 3)

நண்பர்களே! S.P.B தனி ஆவர்த்தனம் மூன்றாவது பதிவை ஆரம்பிக்கிறேன். போன பதிவில் ராஜாவின் இசையில் S.P.B பாடிய சில பழைய பாடல்களை பார்த்தோம். இன்று அதே காலகட்டத்தில் ( 70S இறுதியில்) வந்த மற்ற இசை அமைப்பாளர்களின் சில அழியா வரம் பெற்ற பாடல்களை கேட்கலாம்.

இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு இரண்டு விஷயங்கள் பிரமிப்பை உண்டு பண்ணும். ஒன்று, இவ்வளவு எளிமையான இசையிலும் எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பே தட்டாத கம்போசிங். இரண்டாவது எஸ்.பி.பி. மனுசன் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் பாடும் போது கொடுக்கும் உணர்வு என்ன, அழகு என்ன!. வெறுமனே எஸ்.பி.பி எப்படி பாடுகிறார் அப்படின்னு மட்டும் கவனித்து ஒவ்வொரு பாட்டையும் கேளுங்கள். இப்படி ஒரு பாடகர் கிடைக்க நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இப்போ பாட்டுக்கு போகலாம். நமக்கு பழைய பாட்டு எல்லாம் கேட்பதோடு சரி, இசை அமைப்பாளர், இசை பற்றி சுத்தமாக அறிவு கிடையாது. எனவே நேரே பாட்டு தான். அடிக்கடி கேட்டு பாருங்க. மிஸ் பண்ணிடாதீங்க :-).

1. முதலில் ராஜா இசையிலேயே தொடங்குகிறேன். 'உச்சி வகுந்தெடுத்து.. பிச்சிப்பூ வச்ச கிளி'. 'ரோசாப்பூ ரவிக்கைக் காரி' படத்தில் இருந்து.





2. 'எதிர்ப் பார்த்தேன்..இளங்கிளியே காணலியே
இளங்காத்தே...ஏன் வரல தெரியலையே...
வா..ரா..ளோ என் மாது..பூங்காற்றே போ தூது"
- அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை





3. 'அவள் ஒரு மேனகை..என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை..
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்..'
- நட்சத்திரம்





4. ' வாடாத ரோசாப்பூ..நா ஒன்னு பார்த்தேன்..
பாடாத சோகத்தோட..பாட்டும் பாட கேட்டேன்'
- கிராமத்து அத்தியாயம்





5. 'பொன்னை நான் பாத்ததில்லை..பெண்ணை தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை...பூவையை கண்டதுண்டு..
இந்த பூமியின் இன்ப தேவதை..அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்..காதல் தீபம் நீயே தான்'
- கண்ணாம்பூச்சி




31 Comments:

At 9:59 PM, Blogger G.Ragavan said...

என்ன சிவா...எல்லாம் எஸ்.பி.பி பாட்டுகளா போட்டுத் தாக்குறீங்க.

உச்சி வகுந்தெடுத்து ரொம்ப நல்ல பாட்டு. புலமைப்பித்தன் எழுதுனது. நல்ல கவிஞர். என்னவோ அவருக்கு வாய்ப்புகள் நெறைய இல்லை. பாட்டு வரிகள் ரொம்ப எளிமையா, ஆனா ஆழமா இருக்கும்.

எதிர்பார்த்தேன் பாடலும் நல்ல இதமான பாடல்.

அவள் ஒரு மேனகை.....இதுவும் ஒரு மைல்கல் பாட்டு. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தது. தாசரி நாராயணராவ் இயக்கிய படம். தெலுங்குல சக்கரவர்த்தி இசை. இந்தப் பாட்டைத் தமிழில் சங்கர் கணேஷ் அப்படியே பயன்படுத்திக்கிட்டாங்க.

கிராமத்து அத்தியாயப் பாட்டும் கண்ணாமூச்சி பாட்டும் நான் முந்தி கேட்டதில்லை.

 
At 1:11 AM, Blogger முத்துகுமரன் said...

உச்சி வகுந்தெடுத்து சாகவரம் பெற்ற பாடல். அருமையான வரிகள். வரிகளின் உயிர்ப்பு பாலுவின் குரலில் மெருகேறி இருக்கும். உயிரைக் கரைக்ககூடிய பாடல் அது.

வாடாத ரோசாப்பூவும் ஆர்ப்பாட்டமில்லாத இசை. பாலுவின் ராஜாங்கம்தான் முழுசா இருக்கும் அந்த பாட்டுல.....

 
At 1:24 AM, Blogger பரஞ்சோதி said...

சிவா,

இப்பதிவில் நீங்க தனி ஆவர்த்தனம் செய்றீங்க.

எனக்கு இசை ஞானம் சுத்தமா கிடையாது, ஆனால் நல்ல பாட்டு என்றால் மெய்மறந்து ரசிப்பேன்.

அதில் நீங்க சொன்ன எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் நிறையவே உண்டு.

(ஆமாம், நான் அனுப்பிய ஈ கடிதம் யாகூ புறா கொண்டு வந்ததா?)

 
At 6:00 AM, Anonymous Anonymous said...

உச்சி வகிடெடுத்து அற்புதமான பாட்டு சிவா,

prelude அவ்வளவு அற்புதமா இருக்கும்.

"பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்" இந்த பாட்டும் கேட்டுப் பாருங்களேன்.. இது சங்கர் கணேஷ் இசை என்று நினைக்கிறேன்..

ஏற்கனவே சொல்லி இருப்பேன்.. "பட்டு வண்ண ரோசாவாம்.." பாடலை பாட ஆரம்பித்தால் "உச்சி வகிடெடுத்து.." பாட்டில் போய் முடியும்.. எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியாது..

கேட்டுப்பாருங்க..

அதிலும் prelude அசத்தலா இருக்கும்.

அன்புடன்
கீதா

 
At 12:29 PM, Blogger Sundar Padmanaban said...

"சங்கரையா தின்னுருக்க ஞாயமில்லே.. அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்லே"... சிவகுமாருக்கு ஒரு படி மேலான நடிப்பும் bhaவமும் தலைவர் குரலில்! கலக்கல் பாட்டு.

தொடர்ந்து தனியாவர்த்தனம் செய்யுங்கள் சிவா.

பாராட்டுகள்.

 
At 12:54 PM, Blogger தங்ஸ் said...

Super patthu...Thalavaroda kalakkals-la ithuvum onnu..

 
At 3:08 PM, Anonymous Anonymous said...

porukki eduthulleerkal; thodarungal
johan
paris

 
At 7:41 PM, Blogger சிவா said...

ராகவன்! எல்லோருக்கும் புடிச்ச ஒரே பாடகர் எஸ்.பி.பி தான். அதான் அவரோட தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சிட்டேன். பழைய பாட்ட போட்டாத் தான இந்த பக்கமே எட்டிப்பாக்கறியே :-). 'உச்சி வகுந்தெடுத்து' கவிஞர் பற்றிய தகவலுக்கும், 'அவள் ஒரு மேனகை' இசையமைப்பாளர் பற்றிய தகவலுக்கும் ரொம்ப நன்றி ராகவன். எப்படித்தான் இவ்வளவு தகவல்கள் தெரிஞ்சி வச்சிருக்கீங்களோ. அப்போ அப்போ சொல்லிட்டு போங்க நானும் தெரிஞ்சிக்கறேன்.

கண்ணாம்பூச்சி பாட்டு ரொம்ப அருமையான பாட்டு ராகவன். ரெண்டு தடவை கேட்டு பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.

 
At 7:46 PM, Blogger சிவா said...

முத்துகுமரன்! பாலுவின் ராஜாங்கம் இப்படிப்பட்ட பழைய பாடல்களில் ரொம்பவே இருந்திருக்கிறது. கேட்பதற்கு சுகமோ சுகம். வேலைப்பளு எல்லாம் ஓய்ந்துவிட்டதா?

பரஞ்சோதி! இங்கேயும் இசை ஞானம் எல்லாம் கிடையாது. நானும் உங்களை மாதிரி தான். ராகவன் சொன்ன மாதிரி (அவரு ப்ளாக்ல்) 'நல்ல விருந்து சாப்பிட, சமையல் தெரிந்திருக்க வேண்டியதில்லை'. சரி தானே.

 
At 7:52 PM, Blogger சிவா said...

கீதா! கொஞ்ச நாள் இந்த பக்கம் வர உங்களுக்கு நேரம் இருக்காது என்று நினைத்தேன். வீட்ல பிஸியா இருப்பீங்களே. Prelude ரொம்ப அருமை, நீங்க சொன்ன மாதிரி. Interlude-ல வரும் Female Humming ரொம்ப அருமையா இருக்கும்ங்க. 'பட்டு வண்ண ரோசாவாம்' இதே வகை பாட்டு தான். ரெண்டுமே ஒரே வேகத்தில் செல்லும் பாடல். அதனால் குழப்பம் வர தான் செய்யும்.உங்க பாட்டு என்னாச்சி?. நேரம் இல்லையா?

நன்றி சுந்தர். எஸ்.பி.பி பதிவு ஆரம்பித்ததில் இருந்தே ரெகுலரா வர்றீங்க. அதில் இருந்தே உங்களுக்கு எஸ்.பி.பி எவ்வளவு புடிக்கும் என்று தெரியுது. தொடர்ந்து வாங்க.

 
At 7:54 PM, Blogger சிவா said...

வாங்க தங்ஸ்! தலைவரோடது எல்லாமே கலக்கல் தானே. அதில் இரு ஒரு சூப்பர் கலக்கல் :-))

வாங்க ஜோகன்! பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வர்றீங்க. சந்தோசம்.

 
At 9:38 PM, Anonymous Anonymous said...

Gramathu Athyaayam is a vintage Raaja album! Raaja has given 4 evergreen folk tunes in this album!
Oodha kaathu ..... a passionate folkish duet by Jayachandran & Janaki
Aathu metula.... Cheerful song by Malaysia Vasudevan & perky Janaki
‘Enthusiasm is contagious!’ appadingaradhu indha pattuyellamdhaan!
poovey idhu poojaikkalamey....a Sasireka solo-What a breezy tune, vintage Raaja percussion, orchestration!
Amazing aa yerukkum!
Thanks for the feast, Siva! love, Vinatha

 
At 11:55 PM, Blogger G.Ragavan said...

// ராகவன்! எல்லோருக்கும் புடிச்ச ஒரே பாடகர் எஸ்.பி.பி தான். அதான் அவரோட தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சிட்டேன்.//

எனக்கும் எஸ்.பி.பி பிடிக்கும். ஆனா ரொம்பப் பிடிச்ச பாடகர்னு அவரச் சொல்ல மாட்டேன். அந்த பதவி ஜெயச்சந்திரனுக்கு. :-) அதுக்காக நான் எஸ்.பி.பி எதிரி இல்லை.

// பழைய பாட்ட போட்டாத் தான இந்த பக்கமே எட்டிப்பாக்கறியே :-). //

இந்தப் பாட்டெல்லாம் நான் சின்னப் பிள்ளையா வந்ததுக. அப்பக் கேட்டதில்லை. பின்னால கேட்டதுதான். பொதுவாவே ரொம்ப நல்ல பாட்டாத்தான் நான் ரசிப்பேன். அதுனால பழசுல நெறையாவும் புதுசுல கொறையாவும் இருக்கும். எனக்குத் தீப்பிடிக்க மாதிரி பாட்டும் பிடிக்கும். ரகுமான் டாப்புல இருந்தப்ப....கேசட்..சீடீன்னு வாங்கி வாங்கி அடுக்கினேன். இப்பக் கொறஞ்சு போச்சு. படம் வந்து பாட்டு ஹிட்டானாத்தான் இப்பல்லாம் கேசட்டே வாங்குறது.

// 'உச்சி வகுந்தெடுத்து' கவிஞர் பற்றிய தகவலுக்கும், 'அவள் ஒரு மேனகை' இசையமைப்பாளர் பற்றிய தகவலுக்கும் ரொம்ப நன்றி ராகவன். எப்படித்தான் இவ்வளவு தகவல்கள் தெரிஞ்சி வச்சிருக்கீங்களோ. அப்போ அப்போ சொல்லிட்டு போங்க நானும் தெரிஞ்சிக்கறேன் //

நீங்க வேற. எனக்குத் தெரிஞ்சதே கொஞ்சம். ஆனாலும் தெரிஞ்சதைச் சொல்றேன்.

 
At 6:58 AM, Blogger Sundar Padmanaban said...

Siva,

Just a thought process... There are so many SPB Fans... and I'm just wondering if it's feasible to make this as a Group blog and some of us can enrol as members. We can contribute something...

You know there is a huge yahoo group with hundreds of members for SPB (spbfans) where everybody contributes and share their experience..

If you feel that this blog is meant for all singers/music directors; may be we can create one exclusively for SPB...

What say?

Cheers
Sundar

 
At 10:56 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா, நானும் பாடல்கள் எல்லாம் கேட்டேன். சில ஏற்கனவே கேட்டவை. சில புதியவை. பாட்டுகளைப் பத்தி தான் மேல பெரியவங்க எல்லாம் சொல்லியிருக்காங்களே. இராகவன் சொன்னது, முத்துகுமரன் சொன்னது, கீதா சொன்னது, பரஞ்சோதி சொன்னது, சுந்தர் சொன்னது, எல்லாத்துலயும் நான் சொல்ல நினைத்தது இருக்கு. அதனால அதுல இருந்து கொஞ்சம் இதுல இருந்து கொஞ்சம்ன்னு எடுத்துக்கோங்க. :-)

 
At 4:36 AM, Blogger G.Ragavan said...

// பாட்டுகளைப் பத்தி தான் மேல பெரியவங்க எல்லாம் சொல்லியிருக்காங்களே. இராகவன் சொன்னது, முத்துகுமரன் சொன்னது, கீதா சொன்னது, பரஞ்சோதி சொன்னது, சுந்தர் சொன்னது, எல்லாத்துலயும் நான் சொல்ல நினைத்தது இருக்கு. அதனால அதுல இருந்து கொஞ்சம் இதுல இருந்து கொஞ்சம்ன்னு எடுத்துக்கோங்க. :-) //

குமரன், போற போக்குல பின்னூட்டக்கலைல ஒங்களுக்குக் கவுரவ மருத்துவர் (அதாங்க டாக்டர்) பட்டம் குடுத்தாலும் குடுத்துருவாங்க. :-)

 
At 4:09 AM, Blogger சிவா said...

வினதா அக்கா! 'கிராமத்து அத்தியாயம்' படம் பற்றி தகவலுக்கு நன்றி. உங்களை அடிக்கடி ப்ளாக் பக்கம் பார்ப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். 'ஊட காத்து' சூப்பர் பாட்டு ஆச்சே.

ராகவன்! அது என்னங்க பெங்களூர்ல இருக்கறவங்க எல்லாம் ஜெயசந்திரன் ரசிகர்களாய் இருக்குறீங்க ( மரவண்டு கணேஷ்). ஜெயசந்திரன் நீங்க சொன்ன மாதிரி அருமையான பாடகர். நேரத்த பாத்தீங்களா, அவரை கேரளாவே சரியாக பயன் படுத்திக்கொள்ள வில்லை. சின்னப் பிள்ளையா இருக்கறப்போ நிறைய பாட்டு கேட்டுருக்கீங்க போல. அப்போ அப்போ வந்து தெரிஞ்ச தகவல்களை சொல்லிட்டு போங்க.

குமரன்! ஒன்னுமே சொல்லாம, ஒரு பத்திக்கு பின்னோட்டம் இட்ட உங்கள் திறமையே திறமை ஐயா..இதை அடுத்த பதிவிலும் ரிப்பீட் பண்ணுணீங்க்கன்னா, நான் மனுசனா இருக்க மாட்டேன் :-))

 
At 4:15 AM, Blogger சிவா said...

உஷா! //** .Konjam alatshyama ignore panni iruken **// எனக்கு எஸ்.பி.பி சிவரஞ்சனி அப்படின்னு ஹை பிட்ச்ல போவாரே அது ரொம்ப புடிக்கும். எஸ்.பி.பி பாடினா, அந்த கால பாடல்கள் எதுவானாலும் கேட்பதுண்டு. நீங்க சொன்ன மாதிரி இந்த கால பாடல்களை பார்க்கும் போது, 70ஸ் 80ஸ்-ல விஜய.ராஜேந்தரே ஒரு கலக்கல் இசை அமைப்பாளர் தான் :-)))

'உல்லாச பறவைகள்' வைரமுத்தா..தகவலுக்கு நன்றி. 'நான் உந்தன் தாயாக வேண்டும்..நீ எந்தன் சேயாக வேண்டும்' அடுத்த நேயர் விருப்பதில் (இந்த வாரமே) கண்டிப்பா உண்டு, உங்கள் விருப்பமாக.

 
At 7:11 AM, Blogger குமரன் (Kumaran) said...

// அடுத்த பதிவிலும் ரிப்பீட் பண்ணுணீங்க்கன்னா, நான் மனுசனா இருக்க மாட்டேன்//

சிவா. அப்படி மனுசனா இருக்க மாட்டேன்னா போங்க. நான் தெய்வமே, தெய்வமேன்னு பாடிட்டுப் போறேன் :-)

 
At 7:37 AM, Blogger Dubukku said...

I have linked this post in Desipundit. Hope you dont have any objections.

http://www.desipundit.com/2006/02/05/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

 
At 7:51 AM, Blogger சிவா said...

டுபுக்கு (சாரிங்க உங்க பேரு தெரியலை)! இந்த ப்ளாக் லிங்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. தாராளமா கொடுங்க நண்பரே. இந்த ப்ளாக்கை கண்டு கொண்டதற்கு நன்றி.

 
At 3:28 AM, Anonymous Anonymous said...

I don't think MD of film "Nakshatram" i.e Aval oru menagai... song vara film is shakar ganesh. If I'm not wrong it was by MSV.

Thanks
ksr

 
At 3:32 AM, Anonymous Anonymous said...

I very recently came across this blog.A very good work by d moderator. Kudos to Mr.siva!!! I hope to continue my visits and comments to this blog whenever i find time.

Thanks.
ksr.

 
At 8:54 AM, Blogger Sivabalan said...

Good Work!!!

 
At 10:30 AM, Blogger Sivabalan said...

Mr. Siva,

Can you please post this song - En Thayaenum Koyilai.. - Aranmanai Kili - by Ilayaraja.

I can't find this song anywhere in the web.

So, Kindly post song for me.

 
At 10:34 AM, Blogger சிவா said...

வாங்க சிவபாலன்! கண்டிப்பா அந்த பாடலை உங்களுக்காக கொடுக்கிறேன். முதல் பக்கத்தில் நேயர் விருப்பத்தில் நாளை கொடுக்கிறேன்.

அன்புடன்,
சிவா

 
At 10:35 AM, Anonymous Anonymous said...

கேட்டேன் ,மீண்டும் ரசித்தேன்;கலக்குங்க!!! சிவா!
வெங்கட் என்பவர் ,இளய ராஜா பாடல் பற்றி ;"சொர்க்கமே என்றாலும்" என்று பதிவிட்டுள்ளார்; கட்டாயம் படியுங்கள். நீங்கள் கட்டாயம் ரசிப்பீர்கள்
யோகன்
பாரிஸ்

 
At 4:35 AM, Blogger சிவா said...

ஹலோ ksr! வருகைக்கு நன்றிங்க. எனக்கு பழைய பாடல் பற்றி அவ்வளவா ஞானம் கெடையாது. நட்சத்திரம் படத்திற்கு இசை யார் என்று எனக்கு சரியா தெரியலைங்க. நீங்க சொல்றத கேட்டு தெரிஞ்சிக்கறேன் :-)

உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி ksr. நேரம் கெடைக்கும் போது கண்டிப்பா வாங்க.

அன்புடன்,
சிவா

 
At 4:36 AM, Blogger சிவா said...

நன்றி சிவபாலன்! என்னிடமும் 'என் தாயெனும் கோவிலை' பாடல் இல்லீங்க. கிடைத்தால் கண்டிப்பாக கொடுக்கிறேன். இருக்குன்னு சொல்லிட்டேன். மன்னிக்கனும் :-)

 
At 4:37 AM, Blogger சிவா said...

ஹாய் யோகன்! நீங்க மேஸ்ட்ரோ மேஜிக் வெங்கட் பதிவையா சொல்றீங்க..இல்ல டொமினிக்கன் ப்ளாக்கை சொல்றீங்களா..ரெண்டையும் போய் பாத்துடறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி யோகன்.

 
At 9:35 AM, Blogger Sivabalan said...

No Problem Siva. Thanks for your consideration.

I am also trying to get the song.

The sad part is, to my knowledge, there in no full-fledged Audio CD Shop for Tamil songs at Chicago.

 

Post a Comment

<< Home