கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, February 22, 2006

உயிரே! உயிரே! உருகாதே! ( யேசுதாஸ்- 1)

யேசுதாஸ். கர்னாடக சங்கீதத்திலும், அதே சமயத்தில் திரை இசையிலும் கோலோச்சிய ஒரு ஜாம்பவான். அவரோட குரலுக்கு உருகாதவர் இருக்க மாட்டார்கள். என்னோட புடிச்ச பாடகர் பட்டியலில் ஏனோ எஸ்.பி.பி, அருண்மொழி, ஜெயசந்திரனுக்கு அப்புறம் தான் யேசுதாஸ் வருகிறார். அதற்கு ஒரே காரணம், எனக்கு கொஞ்சம் கர்னாடிக்கா இருந்தாலே என்னோட அறிவுக்கு அப்பாற்பட்டது போல் ஆகி விடுகிறது. நம்ம அறிவு அவ்வளவு தான். என்ன பண்ணுறது :-)

இந்த யேசுதாஸையே குத்தாட்டம் போட வைத்த ராஜா வாழ்க :-) ( 'தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நானு' - சிந்து பைரவி). செம பாட்டு. சிரிச்சிக்கிட்டே கேட்க ஒரு பாட்டு. யேசுதாஸும் கலக்கி இருப்பார்.

கர்னாடக சங்கீதம் அலர்ஜியான என்னை போல பாமரனும் ரசிக்கும் வகையில் கர்னாடக சங்கீதம் கொடுக்க ராஜாவை விட்டா யார் உண்டு?. இந்த பதிவில் ஒரே படத்தில் இருந்து அப்படி ரெண்டு கிளாசிகல் பாட்டு..கேட்கலாமா..

'ஒருவர் வாழும் ஆலயம்'. சிவகுமார்-ரகுமான் - பிரபு நடித்து நல்ல கதையோடு வந்த படம். இதில் சிவகுமார் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியார். பாட்டு வாத்தியார் என்றாலே ஒரு அழகான பொண்ணு இருக்கணுமேன்னு கேக்கறீங்களா...அதே..கை கொடுங்க..தமிழ் சினிமா என்ன மாதிரியே நெறைய பாப்பீங்க போல...அப்புறம் நம்ம ஹீரோவுக்கு என்ன வேலை..அதே..பாட்டு கத்துக்கொடுங்க மாஸ்டர் (மாமா :-) அப்படின்னு போய் நிற்க வேண்டியது..அப்புறம்..எல்லாம் தெரியும் தானே..

இப்படி பட்ட படங்களில் ஒரே புண்ணியம்..நல்ல பாட்டுக்கு உத்திரவாதம் கொடுத்திருவாங்க. இந்த படத்தில் சிவகுமார் பாட்டு வாத்தியார். பாட்டு கத்துக்க போகும் மாணவன் ரகுமான். பொண்ணு பேரு தெரியலைங்க. பாட்டு அத்தனையும் அருமையோ அருமை..இங்கே கொடுக்க போகும் யேசுதாஸ் பாட்டு ரெண்டு..மனோவின் 'சிங்கார பெண் ஒருத்தி' மலேசியா- சித்ரா குரலில் 'மலையோரம்..விளையாடும் ' (கீதா ஏற்கனவே இதை போட்டுட்டாங்க), எஸ்.பி.பி-யின் 'பல்லவியே சரணம்' 'வானின் தேவி வருக'..இப்படி ஒரே படத்தில் எல்லோருக்கும் தீனி..நமக்கும் சேர்த்து தான்..

அதில் இருந்து இரண்டு தான் இந்த பதிவில்.

முதல் பாடல். 'நீ பௌர்ணமி..என்றும் என் நெஞ்சிலே'. இறந்து போன மனைவியை நினைத்து சிவகுமார் பாடும் பாட்டு. கண்ண மூடிக்கிட்டே கேட்டு பாருங்க. உங்களை எங்கோ எடுத்துச் செல்லும் இந்த பாட்டு. அருமையான வீணை, தபேலா இசை. யேசுதாஸ் குரலில் பாடல் கம்பீரமாக ஒலிக்கும். ராகதேவனின் இன்னொரு ராஜகீதம். இங்கே.





இப்போ தலைப்பு பாடல். 'உயிரே! உயிரே! உருகாதே'. எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடலில் முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். உயிரை உருக்கும் ஒரு பாடல். இந்த பாடலை ரொம்ப உருக்கமாக படத்தில் படமாக்கி இருப்பார்கள். சிவகுமார் சாவின் விளிம்பில் இருந்து பாடும் பாடல். எதிர்பாட்டு அவரது மகளாக வருபவர் பாடுவது போல வரும். யேசுதாஸ் ரொம்பவே அழகாக குரலில் சோகத்தை, இயலாமையை கொண்டுவந்திருப்பார். ஜானகியை சொல்லவும் வேண்டுமா..ராஜாவின் டாப் 100ல் இந்த பாடலையும் வைக்கிறேன். உயிரே! உயிரே உருகாதே..உருகாமல் இருக்க முடியுமா..முயற்சி பண்ணுங்க..இங்கே..





இப்போதெல்லாம் இப்படி சங்கீத படங்கள் வருவதில்லை..ம்ம்ம்ம்ம்ம். :-(

28 Comments:

At 8:03 PM, Blogger G.Ragavan said...

என்னுடைய பட்டியலிலும் ஏசுதாஸ் கொஞ்சம் பின்னால் வருகிறார். ஆனாலும் அவருடைய பாடல்கல் பல பிடிக்கும்.

உயிரே உயிரே பாட்டும் நல்ல பாட்டுதான்.

ஏசுதாஸ் பாடிய இன்னொரு டப்பாங்குத்துப் பாட்டு...அடிக் கானக் கருங்குயிலே கச்சேரி வெக்கப் போறேன்

 
At 9:50 PM, Blogger Chandravathanaa said...

சிவா
நல்ல நல்ல பாடல்களைத் தருகிறீர்கள்.
நன்றி.

 
At 12:13 AM, Blogger NONO said...

ஏசுதாஸ்(யேசுதாஸ்?)சின் பாடல்களில் எனது பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது "துள்ளித் துள்ளித் போகும் பெண்ணே..."

இரண்டாவது "ஒரு தெய்ய வீணையே நீ பேசினால் என்ன"

முன்றாவதுதான் இந்த உயிரே உயிரேபாடல்!!

4. ராச்சியம்தான் ஏதுமில்ல..

5. பாட்டு ஒன்று நான் பாடட்டுமா...!!!

 
At 7:08 AM, Blogger தங்ஸ் said...

"En jeevan paaduthu..Unnai thaan theduthu.." - Intha paattu one of my Jesudass favourite..Neyar Viruppathula podunga thalaiva:-)

 
At 9:01 AM, Anonymous Anonymous said...

http://geeths.info/archives/89

தாங்கள் tag செய்யப்பட்டுள்ளீர்கள் :)

Geetha

 
At 9:30 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா, யேசுதாஸ் - 1ன்னு போட்டிருக்கீங்க. தொடராக் கொடுக்கப் போறீங்களா? அப்ப எனக்கு ஜாலி தான்.

யேசுதாஸ் என்னோட சினிமா பாடகர்கள் லிஸ்ட்ல மொதோ ஆள். அருமையான குரல். சில நேரம் டப்பா பாட்டுங்க கூட அவர் பாடுனா அருமையா இருக்கிற மாதிரி எனக்குத் தோணும். :-)

 
At 10:22 AM, Blogger Unknown said...

// ** பொண்ணு பேரு தெரியலைங்க ** // நிஷாந்தி-னு நினைக்கிறேன்

 
At 6:15 PM, Anonymous Anonymous said...

I love KJJ. His voice is par excellence and holds the listeners captive!

Oruvar vaazhum aalayam!

What a Classical album from Raaja!!!!!

1.Nee pournami..... What a stunner! I am always fascinated by KJJ’s ability to sing pleasantly through different octaves, his voice is a beautiful blend of weight, range and resonance! Listen ... he glides effortlessly at the end singing swaras and lyrics alternatively! Amazing composition by Shri.Ilayaraja!
2.uyirey uyirey....KJJ, Janaki-What a pathos!
More of my picks from this album....
3.Malaiyoram mayiley.... melodious duet by Vasu and Chithra, Vasu singing folkish while Chithra singing more elongated, carnaticaa paaduvo!
4.Vaanin devi varuga.... Ayyo what a song in !!! Song starts with haunting humming by Balu and Janaki!! From second interlude, the pattu is dramatic, grand finish!!!
Fantastic album!
thanks, Siva!
Love, Vinatha!

 
At 7:15 PM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! முத இடம் ஜெயசந்திரன் என்று சொல்லீட்டீங்க
:-). ஆமாங்க..கான கருங்குயிலே மறந்தே போச்சு...அதுவும் நல்லா டப்பாங்குத்து பாட்டு தான்..அதுக்கும் ராஜா தான் இசை.. மெதுவா ஒவ்வொரு பாட்டா எடுத்து வுடறேன்..கேட்டு சொல்லுங்க

 
At 7:18 PM, Blogger சிவா said...

சந்திரவதனா! முதல் வருகைக்கு நன்றி..பாராட்டுக்கு நன்றி.நான் கூட உங்க பாட்டு கச்சேரியை படித்திருக்கிறேன். :-)

 
At 7:18 PM, Blogger சிவா said...

சந்திரவதனா! முதல் வருகைக்கு நன்றி..பாராட்டுக்கு நன்றி.நான் கூட உங்க பாட்டு கச்சேரியை படித்திருக்கிறேன். :-)

 
At 7:21 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! யேசுதாஸ் ராஜாவோட இசையில் புடிக்காம போகுமா என்ன?. ராஜாவும் யேசுதாஸும் சேர்ந்து சின்ன கர்னாடிக் கச்சேரி நிறைய (பாட்டு தான்) கொடுத்துள்ளார்கள்..அதுவும் நானெல்லாம் ரசிக்கும் வகையில் :-))

 
At 7:23 PM, Blogger சிவா said...

ஒளியினிலே! உங்க பட்டியல் நன்றாக இருக்கிறது. அதில் உயிரே உயிரே பாடலும் இருக்கிறதை பார்க்க சந்தோசம். :-)

ரெண்டாவது பாட்டு எனக்கு தெரியலையே..என்ன படம்னு சொல்லுங்களேன்..

அன்புடன்,
சிவா

 
At 7:28 PM, Blogger சிவா said...

வாங்க கீதா! உங்களுக்கு யேசுதாஸை ரொம்ப புடிக்குமா :-). எனக்கு உங்களை விட கொஞ்சம் கம்மியா தான் புடிக்கும் :-))..

உங்க யேசுதாஸ் பதிவை பார்த்திருக்கிறேன்..ராஜான்னு ஆரம்பிச்சி அவரை அப்போன்னு விட்டுட்டீங்க :-(..யேசுதாஸையாவது கொஞ்சம் கவனிங்க.. என்னோட விருப்பமா 'ஏழிசை கீதமே' இருந்தா போடுங்க கீதா..

என்னையும் Tag பண்ணிட்டீங்களா? இப்படி என்ன இழுத்து விட்டூட்டீங்களே...சரி சரி..சீக்கிரம் நாலு வார்த்தை சொல்லிடறேன்.

 
At 7:32 PM, Blogger சிவா said...

வாங்க தலைவா (தங்ஸ்)..நேயர்விருப்பம் போட்டே ரொம்ப நாளாச்சி.உஷா அக்கா ஒரு பாட்டு கேட்டிருந்தாங்க..இப்போ நீங்க..அடுத்த பதிவு நேயர்விருப்பம் தாங்க..மறக்காம கேட்டுருங்க :-)

 
At 7:36 PM, Blogger சிவா said...

குமரன்! பதிவு போடும் போது பக்கத்துல 1 போட்டுக்கிட்டோம்னா வசதி பாருங்க..பின்னாடி இதே மாதிரி பதிவு போடணும்னா 2 போட்டு விட்டுடலாம்..அதனால 1 போட்டு விட்டேன்..உங்களுக்கு புடிக்கும்னு தெரிஞ்சப்புறம் பாகம்-2 கண்டிப்பா வரும்..

நீங்க கொஞ்சம் விசயம் (இசை) உள்ள ஆளு..அப்புறம் யேசுதாஸ புடிக்காம இருக்குமா :-)

 
At 7:44 PM, Blogger சிவா said...

ராஜ்குமார்! (Chiper) அது நிஷாந்தி மாதிரி தான் எனக்கும் நியாபகம்..இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருக்கு :-)

 
At 8:01 PM, Anonymous Anonymous said...

Siva, Neyar viruppathula, Can you please host the song 'kangalukkul....'from Thanthu vitten yennai, if you have! It is a mesmerizing, Janaki solo! love, vinatha

 
At 8:04 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! உங்களுக்கு இங்கே வர நேரம் இருந்ததை பார்க்க சந்தோசம். நீங்க நாலு வார்த்தை சொன்னீங்கன்னா எவ்வளவு அருமையா இருக்கு.. :-).

வானின் தேவி வருக - நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அருமையான பாட்டு..சீக்கிரம் அந்த பாடலையும் வலையில் பதிகிறேன்..

உங்கள் வருகைக்கு நன்றி அக்கா.

அன்பு தம்பி,
சிவா

 
At 8:15 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! உங்கள் விருப்பமா 'கண்களுக்குள் என்னை எழுது' அடுத்த பதிவில் நிச்சயமாக வரும். நேயர் விருப்பம் கேட்டத்துக்கு நன்றி.

நண்பர்கள் உங்கள் விருப்பங்களையும் சொல்லிச் செல்லுங்கள்.

அன்பு தம்பி,
சிவா

 
At 10:46 AM, Anonymous Anonymous said...

சிவா,

ராஜாவை அம்போனுலாம் விடலை.. உங்களைப்போல வருமா.. ம்ம்.. எனக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்ல.. :)

அன்புடன்
கீதா

 
At 10:51 AM, Anonymous Anonymous said...

சிவா..

எனக்கு ஒரு பாட்டு வேணும்.. நேயர் விருப்பமாவும் போடுங்க.. எனக்கு தனிமடலிலும் அனுப்புங்க

யார்கிட்டயுமே இல்லை.. தேடி தேடி களைச்சு போயிட்டேன்

சிவப்பு மல்லி படத்துலருந்து " ரெண்டுகன்னம் சந்தனக் கின்னம்..."

மக்களே! இந்த பாட்டு யார்கிட்ட இருந்தாலும் உடனே g e e t h s @ g m a i l . com க்கு அனுப்புங்க.. புன்னியமா போகும்.

அன்புடன்
கீதா

 
At 6:51 PM, Blogger சிவா said...

கீதா! சீக்கிரம் ராஜா பதிவையும் ஆரம்பிங்க. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியவைல்லை (எங்க இருந்து இப்படி பாட்ட புடிக்கிறிய :-)). ரொம்ப நாளைக்கு முன்பு நீங்கள் கேட்ட பாடல் ஒன்று போட்டிருக்கிறேன். கேட்டு சொல்லுங்க.

 
At 6:27 AM, Blogger சாணக்கியன் said...

சிவா, இந்த மாதிரி பாட்டுக்கள் எல்லாம் எங்க புடிக்கிறீங்க... அப்பா.. ரென்டாவது பாட்டுல சோகத்தை எப்படி குரல் வித்தைல வெளிப்படுத்துறாரு. இப்போல்லம் யாராவது இருக்காங்களா இப்படி பாவத்தோட பாட?

 
At 7:32 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! ரெண்டாவது பாடல் என்னோட ஆல் டைம் பேவரைட். கேட்க கேட்க அலுக்காத ஒரு சோக ராகம். இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் அவ்வளவாக வெளியே தெரியாமல் போனது நமது துரதிஷ்டம் தான்.

 
At 8:10 PM, Blogger Sivabalan said...

நல்ல பாடல்! நன்றி!!

 
At 4:19 PM, Blogger நாமக்கல் சிபி said...

சிவா,

யேசுதாஸின் "அன்பே வா அருகிலே, என் வாசல் வழியிலே"
என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா? மிகவும் அருமையானது.

படம்: கிளிப்பேச்சு கேட்கவா!

 
At 7:18 PM, Blogger சிவா said...

தங்கள் வருகைக்கு நன்றி சிவபாலன்!

வாங்க சிபி ! ஆமாம். 'அன்பே வா அருகிலே' ரொம்ப நல்ல பாடல். ஒரு பதிவில் கூட போட்டிருந்தேன். எல்லோருக்கும் புடிச்சப் பாட்டு. பழைய பதிவெல்லாம் பாக்கறீங்க. நன்றி சிபி.

 

Post a Comment

<< Home