இளையராஜா - 2
இரண்டாவது இளையராஜா பாடல் பதிவு. முதல் பதிவுல நிறைய பேர் நிறைய பாட்டு மிஸ் ஆகுதே அப்படின்னு சொல்லிருந்தீங்க. என்னால் முடிந்த அளவு இந்த பதிவில் பாடல் போடுகிறேன். உங்க பாட்டு வரவில்லை என்றால் கூறுங்கள். வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
ஒரு அறிதான பாடல். 'உதிரி பூக்கள்' படம் நான் பார்க்கவில்லை. ஆனால் ரொம்ப நல்ல படம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். மகேந்திரன் படமா?. தெரிந்தவர்கள் படத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். இந்த படத்தில் எல்லாமே பெண் குரல் பாட்டு தானே என்று நினைக்கிறீங்களா?. ராஜா பாடின ஒரு அருமையான தலைப்பு பாட்டு ஒன்னு இருக்கு. பாடிக்கிட்டே இருக்கலாம் இந்த பாட்ட. ரொம்ப சிம்பிளாக தோன்றும் ஒரு பாட்டு. ராஜாவின் தொடக்க கால குரல். அழகிய கண்ணே பாட்டின் prelude இந்த பாட்டிலும் prelude -ஆக வருவது நன்றாக இருக்கிறது. பாட்ட கேட்டு பாருங்க.
ஒரு துள்ளல் பாட்டு. முரளி தொடக்க படங்களில் இருந்தே ராஜா பாடினால் பாட்டு/படம் சூப்பர் ஹிட் என்று ஒரு சென்டிமெண்ட் இருந்தது. அது சமீபத்தில் வந்த பூமணி, பூந்தோட்டம் வரை தொடர்ந்தது. அப்படி ஒரு ஹிட் படத்தில் இருந்து ஒரு ஹிட் பாடல். "பூவிலங்கு" படத்தில் இருந்து "ஆத்தாடி பாவாட காத்தாட".
இந்த பாட்டு இந்த படத்திலா என்று கொஞ்சம் சந்தேகம் வரும். "தாய்க்கு ஒரு தாலாட்டு" படத்தில் இருந்து "காதலா! காதலா! கண்களால் எனை தீண்டு". இந்த படத்தில் சிவாஜி தான் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பர். ரொம்ப நல்ல படம். இந்த பாடல் அவரது வேலைகாரனாக (தத்துப்பிள்ளை??) வரும் பாண்டியனுக்கு வரும் பாடல் என்று நினைக்கிறேன். சித்ராவின் குரல் கூடுதல் கவர்ச்சி. இதுவும் "பூமாலையே தோள் சேரவா" போல மிக அருமையான பாடல். ஆனால் ஏனோ அந்த அளவுக்கு மக்களை எட்டவில்லை.
இறுதி பாடல், தங்கம் (Thangs) விருப்பமாகவும், என் விருப்பமாகவும் "வானம் பார்த்த கரிசக்காடு" பாட்டு. கஸ்தூரிராஜாவின் கரிசக்காட்டுபூவே படத்தில் இருந்து. பாட்டோட வரிகள், இசை, ராஜாவின் உருக்கும் குரல் என்று எல்லாமே இந்த பாடலின் சிறப்பம்சங்கள் தான். பாட்ட கேட்டு மகிழுங்க.
12 Comments:
துள்ளல் பாட்ட கேக்லாம்னு ஒடோடி வந்தா... எனன சிவா பாட்டு லிங்க் ஒர்க் ஆக மாட்டிங்குது. எனக்கு மட்டும்தான் பிரச்சனையா ???
அருமையான பாடல்கள் தேர்வு. என்னுடைய விருப்பத்தையும் என்றாவது நிறைவேற்றுங்கள். முதல் மரியாதையிலிருந்து 'வெட்டி வேரு வாசம்..."எந்த மனநிலையில் கேட்கிறோமோ அந்த மனநிலைக்கு ஏற்ப அமையும் ஒரு அற்புதமான பாடல்.
ஓட்டு போட்டாச்சு. பாட்டு நாளைக்குக் கேட்கிறேன். இப்போது தூங்கப் போகணும்; மணி 11:30 ஆகிவிட்டது :-)
டண்! உங்க கம்யூட்டரில் ரியல் ப்ளேயர் இருக்குதான்னு பாருங்க. இருந்தா கண்டிப்பா வேலை செய்யுமே. இல்லன்னா ரியல் ப்ளேயர் இலவசமாக இறக்கி கொள்ளுங்கள்.
சிவா.
நேற்று ஓட்டு போட்டாச்சு.
இன்று பாட்டு கேட்டாச்சு.
வழக்கம் போல இருந்தது பாடல்கள். அதாங்க நல்லா இருந்துச்சுன்னு சொல்றேன். :-)
"ஆதாடி பாவாட காத்தாட.." இந்த ப்பாடல் எனக்கு பிடிக்கும். ரொம்ப சிரமப்படாம ஒருவித அலட்சியத்துடன் பாடினது போல இருக்கும் கேட்க ரொம்ப எளிமையா இருக்கும். ஆனா உண்மையில் அப்படி இல்லைணு நினைக்கிறேன்
"ஆத்தாடி" பாடும்போது ஒரு அளவு "பாவாடைக்கு" இன்னும் கொஞ்சம் ஹை பிட்ச் "காத்தாட"க்கு வேற
பாடல் முழுதுமே நல்ல variations இருக்கும்..
சரியா தெரியலை.. எனக்கு அப்படித்தான் தோணுது.
அன்புடன்
கீதா
கைப்புள்ள (சூப்பர் பேருங்க)! முதல் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கு நன்றி. என்றாவது என்ன, சீக்கிரமே உங்கள் விருப்பம் 'வெட்டி வேரு வாசம்' போட்டு விடுகிறேன்.
குமரன்! வழக்கம் போல இருந்ததுன்னு சொல்லி பொடி வச்சி அப்புறம் நல்லா இருக்குன்னு சொல்லறீங்க. வர வர பொடி வச்சி பேச கத்துக்கிட்டீங்க :-))
ஆத்தாடி பாவாடைல இருக்கிற variations பற்றி நீங்க சொன்னவுடன் நானும் அப்படியே கேட்டு பார்த்தேன். உண்மை தான். என்னை போலவே நிறைய அனுபவித்து பாட்ட கேக்கறீங்க :-). நீங்க சொல்றத பாத்தா, உங்க லிஸ்ட்ல இந்த பாட்டு இருக்கு போல? :-). அந்தா அந்தான்னு பாட்ட போட மாட்டேங்கறீங்களே :-)
Siva, it used to work, i heared the songs last time, not sure what happened to my player lately. anyway, did you get my mail ?
டண்! உங்க கம்யூட்டர்ல என்ன பிரச்சினை?. மறுபடி முயற்சி செய்து பாருங்க.
உஷா! கரிசகாட்டு பூவே பாட்டு இப்போ தான் கேட்கறீங்களா?. அடடா ரொம்ப மிஸ் பண்ணிருக்கீங்களே. இந்த படத்தில் 'ஆயிரம் கோடி சூரியன் போலே' (ஹரிஹரன்) பாட்டு கேட்டிருக்கீங்களா?. இன்னொரு அருமையான பாட்டு.
பாட்டுக்கு மேலும் தகவல்கள் கிடைத்தால் எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Thanks Siva! Konjam velai athigam..Adikadi vara mudiyalai..Sorry!
Thanks again for the Songs!
வாங்க தங்க்ஸ். எப்படி இருக்கீங்க. வேலைப்பளுவுக்கு இடையிலும் இசையை கேட்க வந்ததற்க்கு நன்றி. நேரம் இருக்கும் போது கண்டிப்பா இந்த பக்கம் வாங்க.
உஷா! ஆயிரம் கோடி பாட்டு அடிக்கடி டி.வில போடுவான். இந்த வானம் பார்த்த பாட்ட தான் கேட்க வாய்ப்பு கம்மி. அதனால மிஸ் பண்ணிருப்பீங்க. எப்படியோ இப்போ கேட்டுட்டீங்களே.
Post a Comment
<< Home