கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, January 11, 2006

கீதம்...சங்கீதம்..

என்னடா ப்ளாக் பேரையே தலைப்பா வச்சிருக்கான்னு பாக்கறீங்களா?. ப்ளாக் ஆரம்பிக்கும் போது என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்கும் போது இந்த பாட்டு தான் மனதில் வந்தது. அதையே ப்ளாக் பேராக வச்சாச்சி. சில பாடல்கள் தனிபதிவாக மட்டுமே போடுவேன். பத்தோடு பத்னொன்றாக போட மனசு வராது. அப்படி ஒரு பாடல். 'கொக்கரக்கோ' படத்தில் இருந்து 'கீதம்...சங்கீதம்'. அருமையான தாளம். எஸ்.பி.பி-யின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இடம் பெறும் பாடல். படம் சில நேரம் ராஜ் டி.வியிலோ, விஜய் டி.வியிலோ போடும் போது பார்க்காமல் விட்டு விட்டேன். இப்போ பார்க்கலாம்னு தேடு தேடுன்னு தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. பாடலின் தொடக்கத்தில் பாடும் பெண் குரல் S.P.சைலஜா. கேட்டு மகிழுங்கள்.




7 Comments:

At 1:22 AM, Blogger முத்துகுமரன் said...

இளையராஜாவின் பாடல்களில் கீ வரிசை மிகவும் குறைவு. ஆனால் இருக்கும் பாடல்கள் அனைத்தும் மிக அருமையானவை. இந்த கீதம் பாடலே சோகமாக ஒருமுறை வரும். அது எனக்கு ரெம்ப பிடிக்கும்...

 
At 4:44 AM, Blogger சிவா said...

வாங்க முத்துகுமரன்! அடடா! அதனால் தான் இந்த பாட்டுக்கு கூடுதல் இனிமை இருக்கிறதா?. உண்மை தான் போல. கேட்டு பார்த்தால் 'கீதம்' 'கீரவாணி' இப்படி ஆரம்பிக்கும் பாடல் அருமையான பாடல்களாக தான் இருக்கிறது. ஆமாம் சோக பாடலும் நன்றாக இருக்கும். அதன் ஹம்மிங் ரொம்ப நல்லா இருக்கும்.

 
At 3:15 PM, Blogger சிங். செயகுமார். said...

சிவா இந்த பாட்டெல்லாம் போடாதீங்க எனக்கு ஞாபகம் எங்கெங்கோ போகுது!

 
At 2:18 AM, Blogger G.Ragavan said...

இது எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு.

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்.....நல்ல எளிய இனிய வரிகளும் கூட.

 
At 4:37 AM, Blogger சிவா said...

சிங்கு! இது உங்களுக்கு யாராவது போட்ட பாட்டா :-)). அந்த சைலஜாவோட தொடக்க சிரிப்பு உங்களை எங்கயோ கொண்டு போவுதுன்னு நெனைக்கிறேன். அத பத்தி சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்லா :-)

ராகவன்! ஆமாங்க ரொம்ப எளிமையன வரி, தாளம் போட வைக்கும் இசை. யாரையும் மயக்கிவிடும்.

 
At 10:04 AM, Anonymous Anonymous said...

சிவா,

"விஜய் டி.வியிலோ போடும் போது பார்க்காமல் விட்டு விட்டேன்" - பார்க்காமல் விட்டதற்கு கஷ்டப்படவேண்டாம் சிவா.. பாடல் அருமை.. ஆனால் picturization அவ்வளவு அருமை இல்லை. ஒரு parkல் சுரேஷ் பாட இளவரசி ஆடுகிறார். அவ்வளவுதான்.

பாட்டு அருமை.

அன்புடன்
கீதா

 
At 7:16 PM, Blogger சிவா said...

உஷா! ஆமாம். நம்ம ப்ளாக் பாட்டு அது தான் :-)) வினு அக்கா சொல்ற மாதிரி 80ஸ் ராஜாவோட பாட்டு எப்பவுமே விசேஷம் தான். அனா 90ஸ் பாட்டிலும் நிறைய இருக்கிறது (நான் எப்படி விட்டு கொடுப்பேன்)
:-))).

கீதா! அது சுரேஷ் இல்லை. வேறு ஒரு நடிகர். இளவரசியா அது. நல்ல இருக்காங்க. பாட்டு நல்ல எடுத்த மாதிரி தான் இருக்கு. ரெண்டு பேரோட முகபாவனைகள் துடுக்குதனம் எல்லாம் ரொம்ப இயற்க்கையா இருக்கும். நான் ரொம்ப ரசித்து பார்க்கும் பாட்டு இது :-)) ( படம் தான் பார்க்க முடியவில்லை).

 

Post a Comment

<< Home