கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Thursday, January 12, 2006

இன்றைய பாடல் - உங்கள் கருத்து

நண்பர்களே!

இன்றைய பாடலை கேட்டீர்களா?. புடிச்சுதா?. நேரம் இருந்தால், ஏதாவது இன்றைய பாடலை பற்றி சொல்லணும்னா இங்கே பின்னூட்டம் இடுங்கள். அந்த பாடலை பற்றி விவாதிக்கலாம்.

அன்புடன்,
சிவா.

137 Comments:

At 9:18 AM, Anonymous Anonymous said...

நல்ல யோசனை சிவா..

ஆனாலும் பாட்டு என்ன படம், இசை யாரு, பாடியவர்.. இதெல்லாம் தெரிஞ்சதுன்னா நல்லா இருக்கும். இல்லாத பாட்டா இருந்தா வலையில தேடி பதிவிறக்கம் செய்துக்க வசதியா இருக்கும்.

உங்கள் கருத்துல முதல் கருத்தா இந்த தகவல்களை நீங்களே போடலாமே.

இன்றைய பாட்டு நல்லா இருக்கு.. அதன் தகவல்களை போடுங்க ப்ளீஸ்

அன்புடன்
கீதா

 
At 9:27 AM, Blogger சிவா said...

ஏனுங்க கீதா! இல்லாத பாட்டுன்னா உடனே வலைல போய் பதிவிறக்கம் செய்யணுமா..கொஞ்சம் சி.டி கெடைச்சா வாங்க முயற்சி பண்ணுங்களேன். புண்ணியமா போகும். தேடியும் கிடைக்க வில்லை என்றால் பரவாயில்லை. அண்ணணோட சின்ன வேண்டுகோள். தப்பா எடுத்துக்காதீங்க.

சரி இந்த பாடல் நெசமாவே தெரியாதா..சரி..அருண்மொழியோட நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று.
அமைதியான இசை. அழகான வரிகள். படம் 'சந்திரலேகா'. இசை வேற யாரு. கேட்டாலே தெரியுதா :-))

நேரம் கெடைக்கும் போது வந்து அன்னைக்கு என்ன பாட்டுன்னு கேட்டு பாருங்க.

 
At 10:10 AM, Anonymous Anonymous said...

சிடி வாங்கறதை பத்தி ஒன்னுமில்லிங்கண்ணா.. முதல்ல கிடைக்கணும் அதுக்கு ரொம்ப அலையணும் அதுவும் நம்ம ஊருன்னாலும் பரவாயில்லை.. ம்ம்

இது எனக்கு ரொம்ப சுலபமா இருக்குங்களேண்ணா என்னா செய்யுறது :)

 
At 4:02 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! தினமும் பாடலை கேட்டுடறீங்க. சந்தோசமா இருக்கு. நான் சொல்லாம விட்டுடறதால நீங்களே படம், பாடல் விவரம் சொல்லிடறேங்க. நன்றாக இருக்கு. கீதாவுக்கு உதவி பண்ணறீங்களா..
:-))

இந்த பாடலில் மலேசியாவையும் சைலஜாவையும் விட்டுட்டீங்க.

இந்த படத்தில் எல்லாமே அருமையான பாடல்கள் தான், நீங்க சொன்ன மாதிரி. கேட்டு கருத்து சொன்னதுக்கு நான் தான் ரொம்ப நன்றி சொல்லணும். நன்றி :-)

 
At 4:32 AM, Blogger Chandravathanaa said...

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே...

ஜேசுதாசின் குரலில் ஒலிக்கும் மெல்லிய சோகம் இழைந்த அமைதியான பாடல்.
எந்த வித
ஆராய்ச்சியுமின்றிப் பாடலைக் கேட்கும் போது காதல் கலந்த பிரிதலின் ஏக்கமும்
சோகமும் தெரிகிறது.

அளவான இசையும், ஜேசுதாசின் அமைதியான குரலும் சேர்ந்ததில் பாட்டு
இதமாக உள்ளது.

 
At 4:52 AM, Blogger சிவா said...

வாங்க சந்திரவதனா! நீங்க 'இன்றைய பாடல்' கேட்டீங்க்ளா. ரொம்ப சந்தோசம். வருகைக்கு நன்றி.

ஆமாங்க! 'அன்பே வா' அருகிலே, சோகமும் சுகமும் கலந்து, அதை உறுத்தாத இசையோடு கலந்த ஒரு அருமையான பாடல். கேட்டு கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க.

//** எந்த வித ஆராய்ச்சியுமின்றிப் **// நான் எழுதறத சொல்றீங்களா.
:-)). இன்றைய பாடல் வாரத்துக்கு 7 நாளும் வெறும் பாடல் தான்.வேற ஆராய்ச்சி எல்லாம் எழுதலை.ம்ம்ம்
பொழச்சு போங்க :-).

 
At 11:30 AM, Anonymous Anonymous said...

I also like "Thoppil oru nadagam nadakuthu". Thanks for sharing this song.

 
At 8:02 PM, Blogger சிவா said...

வாங்க சுரேஷ்! இன்றைய பாடலை கேட்டீங்களா. நன்றிங்க. ரொம்ப சந்தோசம். அடிக்கடி வாங்க. பாடலை கேளுங்க.

அன்புடன்,
சிவா

 
At 4:51 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! மொத்தமா பாடலை கேட்டு சொல்லிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி.

வர வர பாடகர் யாருன்னு ரொம்ப தான் என்னைய குழப்பறீங்க. :-)). 'மஞ்சப்பொடி' பாட்டுக்கெல்லாம் சந்தேகம் கேட்டா, நான் எங்க போவேன்..ஹா ஹா ஹா..அது எஸ்.பி.பி.

'அன்பே வா அருகிலே' நீங்க சொன்ன மாதிரி சோகத்தை பொதிந்து வரும் ஒரு அருமையான பாடல். இதே பாடல் ஜானகி பாடினதும் இருக்கு.

இன்றைய பாடல் 'தந்துவிட்டேன் என்னை' தான். சரியா சொல்லிட்டீங்க. மறுபடி பாடினது யாருன்னு சந்தேகமா.. :-) அது அருண்மொழி, உமா ரமணன். ஆமாம் இந்த படப்பாடல்கள் அனைத்தும் அருமை.

இன்றைய பாடலை தொடர்ந்து கேட்டு வருவதற்கு நன்றி அக்கா.

ஒரு உதவி. நம்ம லேட்டஸ்ட் போஸ்ட்ல ராகவன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். என்னிய காப்பாத்துங்க.. :-)

 
At 8:02 AM, Blogger G.Ragavan said...

முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா....நல்ல பாட்டு...எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

உமாரமணனும் அருண்மொழியுமா! நல்ல பாட்டு....இளையராஜா இசைன்னு கேட்டாலே தெரியுது..என்ன படம்?

சிவா, சில பாடல்கள் தேடியும் கிடைக்க மாட்டேங்குது. கெடைக்கிற பாட்டுன்னா வாங்கீரலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை. பெங்களூர்ல குறிப்பிட்ட அளவுதான் தேட முடியும்.

 
At 5:06 AM, Blogger சிவா said...

ராகவன்! ஆமாம் அது அருண்மொழியும் உமாவும் தான். கலக்கலா இருக்குல்லா :-)
படம் 'தந்துவிட்டேன் என்னை' இயக்குனர் ஸ்ரீதரின் கடைசி படம். நடிகர் விக்ரமின் முதல் படம் என்று நினைக்கிறேன்.

//** சிவா, சில பாடல்கள் தேடியும் கிடைக்க மாட்டேங்குது. கெடைக்கிற பாட்டுன்னா வாங்கீரலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை. பெங்களூர்ல குறிப்பிட்ட அளவுதான் தேட முடியும். **/

'சில பாடல்கள்' அல்ல..பல பாடல்கள் மார்கெட்டில் கிடையவே கிடையாது. எனக்கு ராஜாவின் 95S ரொம்ப புடிக்கும். போனதடவை ஒரு 50 பட பட்டியலை எடுத்துக்கொண்டி சென்னை, கோவையில் கடை கடையா தேடினேன். ம்ம்ம்..ஒன்னு கூட கெடைக்கலை. நிலமை இது தான். இங்கே US-ல கூட இனையத்தில் நிறைய கிடைக்கிறது. இந்தியாவில் தான் கஷ்டம். கிடைப்பதை வாங்கி கேட்கவேண்டியது தான். என்ன செய்றது. :-(

 
At 7:24 AM, Blogger G.Ragavan said...

// ராகவன்! ஆமாம் அது அருண்மொழியும் உமாவும் தான். கலக்கலா இருக்குல்லா :-)
படம் 'தந்துவிட்டேன் என்னை' இயக்குனர் ஸ்ரீதரின் கடைசி படம். நடிகர் விக்ரமின் முதல் படம் என்று நினைக்கிறேன். //

கலக்கலோ கலக்கல். ஸ்ரீதர் படங்களில் பெரும்பாலும் பாடல்கள் நன்றாக இருக்கும். யார் இசையமைத்தாலும் பாடல்கள் சிறப்பாக இருக்கும். எனக்குத் தெரிந்து மோசமான பாட்டுகள் உள்ள ஸ்ரீதர் படம் இல்லவேயில்லை. தந்து விட்டேன் என்னைதான் அவர் இயக்கிய இறுதிப் படம். இப்பொழுது கைகால்கள் முடங்கிக் கிடக்கிறார். மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. விக்ரமின் முதல் படம் அதுதான். ஆனால் அவருக்கு வாழ்வு கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்துதான் வந்தது.

 
At 9:26 AM, Blogger தங்ஸ் said...

Siva,
Today only,I cud hear all the songs..all are nice.
'Manja Podi theikayile' enna padam boss?..Jesudaas choice melliya sogam ilayodum paadalkal..

Theivangal Kan Paarthathu - Mano-va?

 
At 9:31 AM, Anonymous Anonymous said...

Poove Sempoove song is a very beautifull song. This is one the songs which i can hear again and again. Keep up the good work.

My request: Can u post songs from the film "kadhal kavithai". I liked all the songs from that movie.

regards
Suresh

 
At 9:41 AM, Blogger சிவா said...

வாங்க தங்கம்! எல்லா பாடல்களையும் கேட்க முடிஞ்சதா! சூப்பர். 'மஞ்சள் பொடி' 'செண்பகமே செண்பகமே' படம். நம்ம ராமராஜன் படம் தான் (ராமராஜன் - ரேகா ). இன்னொரு பாடல் 'வாசலிலே பூசணி பூ வச்சிப்புட்டா.' இது ஏற்கனவே கீதம்ல கேட்டாச்சு.

ஆமாம்! 'தெய்வங்கள் கண் பார்த்தது' மனோ - ஜானகி. படம் 'புதிய ராகம்'

யேசுதாஸ் பாட்டு ரெண்டுமே நீங்க சொல்ற மாதிரி மெல்லிய சோகம் தான். சோகத்திலும் ஒரு சுகம் இருக்கு இல்லையா :-)

நேரம் இருக்கும் போது பாட்ட கேட்டு சந்தோசமா இருங்க :-)

 
At 9:45 AM, Blogger சிவா said...

சுரேஷ்! உங்க வருகைக்கு நன்றி! உங்க பாராட்டுக்கு நன்றிங்க.

'காதல் கவிதை' பாட்டு எல்லாமே சூப்பர் தான். முடிந்தால் 'நேயர் விருப்பம்' என்று ஒரு பாடல் சேர்க்க முயற்சி பண்ணுகிறேன். 'கொஞ்சி பேசு கோபம் கொண்ட கண்ணம்மா' போடலாமா ' டயானா! டயானா' போடலாமா. உங்கள் சாய்ஸ் என்ன சுரேஷ்.

 
At 3:54 PM, Anonymous Anonymous said...

If u ask me, add both the songs from "Kathal Kavithai". Both of them are great ones.

regards
Suresh

 
At 4:51 PM, Anonymous Anonymous said...

Glad I peeked in today to check on your blog, Mr!!

Poovey Sempoovey.....!! What a High Class composition from Raaja!
I love this song forever! Raaja’s haunting flute with guitar stringing sets the mood.... then starts the pallavi- KJJ’s lovely, enchanting voice effectively communicates the mood!! Tabla, good amount of veena, violin, great guitaring throughout the song, soothing flute, both the charanams followed by pallavi before the dramatic interludes !! Don’t forget to enjoy the guitaring at the back through out the song and postlude haunting flute with the same!!

I thoroughly adore the lyrics.....
naan seydha paavam ennoadu poagum
nee vaazhndhu nandhaan paarththaalae poadhum
innaalum ennaalum ullaasamae.....
What a beautiful, consoling (uplifting) tale of romance!!
nizhal poala naanum nadai poada neeyum
thodarginra sondham nedungaala bandham
kadal vaanam kooda niram maarak koodum
manam konda paasam thadam maaridaadhu
naan vaazhum vaazhvae unakkaagaththaanae
naal dhoarum nenjil naan aendhum thaenae
ennaalum sangeedham sandhoashamae
vaai paesidum pullaanguzhal
needhaanoru poovin madal....Poovey...

Raaja’s unhurried approach to melody , music fully conveys the mood!!

Hey Siva, Seriyaana pattu pottey nee, semathiyaa ketten naan several times! Thanks!
Love, Vinatha!

 
At 5:49 PM, Anonymous Anonymous said...

Dear Siva,

Anbey vaa arugiley....- Evocative song from Shri.Ilayaraja - Kili pechu ketkavaa!!

Powerful KJJ’s voice with depth oozes that fascinating aura of mystery....

Amazing song linger in your heart forever! Great! Vinatha.

 
At 7:05 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! என்னடா ஆளையே காணோம் என்று இன்று தான் நினைத்தேன். வந்துட்டீங்க :-)

'பூவே செம்பூவே' ரொம்ப கிளாசிகல் பாட்டு. அப்பா! பாடல் முழுவதும் வரும் அந்த கிடார், நம்மை மெய் மறக்கச்செய்யும். இரண்டு எடிட்டர்கள் 'லெனின்-விஜயன்' இயக்கிய படம் என்று நினைக்கிறேன். அநியாயத்துக்கு நம் பொறுமையை சோதிக்கும் படம். இந்த படத்தில் இப்படி பாடல்களா என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். மனோவுக்கு 'தேன் மொழி' , ஜெயசந்திரனுக்கு 'எனது விழி', ராஜாவின் 'வாயகட்டி வயத்த கட்டி', மலேசியாவின் 'குயிலுக்கொரு நெறம் இருக்கு'..அப்படா..இப்படி ஒரு ஆல்பம்..இப்படி ஒரு படத்தில்
:-(

ஒவ்வொரு பாட்டிலும் வரிகள் நீங்க கொடுத்த மாதிரியே ரொம்ப அழகான கவிதைகள். கவிஞர் யாரு?. வைரமுத்துவா?.

நிறைய தடவை கேட்டீங்களா..வெரி குட். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்க..கலக்கிடலாம் :-))

'அன்பே வா அருகிலே' (இன்று வரிசையில் இருந்து வெளியேறிவிட்டது :-(. இன்னொரு யேசுதாஸ் உருக்கம். ம்ம்ம்ம்..இனி அந்த காலம் எல்லாம் வருமா :-(

 
At 7:06 PM, Blogger சிவா said...

சுரேஷ்! இன்றைய பாடலில் உங்கள் விருப்பமான 'காதல் கவிதை' பாடல் போட்டிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்,
சிவா.

 
At 9:58 AM, Anonymous Anonymous said...

Hi siva
Thanks for uploading "Diana Diana" from kadal kavithai. I am sure i will be listening to it multiple times. The humming in the background adds a nice touch to this song. The saxaphone blends well with hariharan's voice.

I think this song did not become the hit it deserves to be. Thanks siva

Suresh

 
At 7:21 AM, Blogger தங்ஸ் said...

Ada..Thottam Konda raasave - Pagalil Or Iravu..Nalla paattu. Ilayaraja voice super..

 
At 7:59 AM, Blogger G.Ragavan said...

ஓ பகலில் ஒரு இரவு..........தோட்டம் கொண்ட ராசாவே....கொஞ்சம் வித்தியாசமான படமும் கூட. ஐ.வி.சசி படம். இந்தப் பாட்டு இளையராஜாவும் ஜென்சியும். எல்லாருக்கும் பொதுவாய்ப் பிடிக்கும் பாடல்..இளமை எனும் பூங்காற்று. ஆனால் எனக்கு இந்தப் பாட்டும், ஜானகி பாடும் தாம்ததீம்த பாட்டும் ஜெயச்சந்திரன் பாடும் கலையோ சிலையோ பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.

 
At 2:07 PM, Anonymous Anonymous said...

I know this gets repetitive. Thanks for "thottam konda raasave" and keep up the good work.

Suresh

 
At 6:52 PM, Blogger சிவா said...

சுரேஷ்! 'டயானா டயானா' பாடல் நீங்க சொல்ற மாதிரி அதற்குண்டான மதிப்பை பெறவில்லை. என்ன செய்ய! அது வந்த போது எல்லாம் கானா பாட்டு தான் பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்தது. அருமையா ஹரிஹரன் பாடும் போது இணைந்து வரும் சாஸ்க் ரொம்ப அழகா இருக்கும். இந்த படத்தில் எல்லா பாடலுமே ஒவ்வொரு விதமா கொடுத்திருப்பார். ஓரளவுக்கு எல்லாமே ஹிட் ஆச்சு. அகத்தியன் காதல் கோட்டையின் தாக்கத்தை தவிர்க்க முடியாமல் கோட்டை விட்ட ஒரு படம்.ம்ம்ம்ம்..

 
At 6:57 PM, Blogger சிவா said...

வாங்க தங்கம்! தினமும் பாடல் கேட்பதற்கு ரொம்ப நன்றி :-). நேரம் இருந்தால் அப்படியே ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்டுங்க :-). இந்த பாடலில் ராஜாவின் குரல் நீங்க சொன்ன மாதிரியே எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப இளமையா இருக்கும்.

 
At 6:58 PM, Blogger சிவா said...

ராகவன்! //** எனக்கு இந்தப் பாட்டும், ஜானகி பாடும் தாம்ததீம்த பாட்டும் ஜெயச்சந்திரன் பாடும் கலையோ சிலையோ பாட்டும் ரொம்பப் பிடிக்கும் **// இந்த பாட்டு போட்டவுடனேயே நீங்க 'கலையோ சிலையோ' சொல்வீங்கன்னு தெரியும் :-)). சீக்கிரம் அந்த பாடலையும் கொடுத்துடறேன்.

 
At 6:59 PM, Blogger சிவா said...

சுரேஷ்! //** I know this gets repetitive. **// அதெல்லாம் ஒன்னுமே இல்லீங்க. நீங்க கேக்கறீங்கன்னு தெரிஞ்சாலே நான் சந்தோசமாயிருவேன். அதனால ஒரு வார்த்தை நேரம் இருக்கும் போது சொல்லிட்டு போங்க :-).

 
At 8:27 AM, Blogger தங்ஸ் said...

Oorellam Un Pattu - Ramarajan padam..Aana 'Swarnalatha' padum thani paattu romba nalla irukkum..

 
At 8:47 AM, Blogger சிவா said...

வாங்க தங்கம்! பாட்ட கேட்டீங்களா.. நான் முதலில் யேசுதாஸ் பாடியது தான் போட்டேன். உஷா அக்காவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ராஜா Version இருக்கு என்றேன். அதையும் போடுங்க என்று கேட்டாங்க. அதான் இன்று ராஜா பாடல் கொடுத்தேன். ஆமாம் சுவர்ணலதா பாடலும் நன்றாக இருக்கும். அடுத்து சுவர்ணலதா பாடலை, ஒரு நேயர் விருப்பமாக கொடுத்து விடுகிறேன் :-)

 
At 12:44 PM, Blogger தங்ஸ் said...

Thanks Siva! IR, KJ, Swarnalatha moonu version-kkum nanri!!

Dhevan Koil-um ketten..Matrumoru nalla paadal..

 
At 6:41 PM, Blogger சிவா said...

பாடல் கேட்டதுக்கு நன்றி தங்கம். சுவர்ணலதாவும் போட்டதில் எல்லா Version-ம் போட்டாச்சு :-))

 
At 6:47 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! 'பொன்மனி பொன்மனிக்கு நானே' செம பீட்..நீங்க சொல்ற மாதிரி அருவி மாதிரி தொடங்கினதில் இருந்து முடியும் வரை சீரான ஓட்டம். எஸ்.பி.பி-சித்ரா கூடுதலாக மயக்கும். பொதுவாக ராஜா நிறைய பாடல்களை இப்படி ஜிவ்வுன்னு ஆரம்பிச்சு, டொக்குன்னு சரணத்தில் தபேலாவில் கொண்டுவிடுவார்.. எனக்கு வரும் பாருங்க ஆத்திரம் :-))(அடுத்ததா அதே மாதிரி ஒரு பாட்டு கொடுக்கறேன்). இந்த பாடலின் அப்படி எந்த ஏமாற்றமும் இல்லை..சூப்பர்.

படம் 'அண்ணனுக்கு ஜே' அர்ஜூன் படம். Project Gem-ல வந்தது. அண்ணனுக்கு ஜே-நியாயம்-மனைவி ரெடி சேர்ந்து வந்தது. அப்படி வந்த படமே கிட்டத்தட்ட 97 இருக்கு.. :-)
Project Gem பற்றி ஒரு பதிவு போடலாம்னா நம்ம பிரசாந்த் ஒரு மெயில் போட்டா நாலு மாசம் கழிச்சித்தான் பதில் போடறார். அது தான் யோசிக்கிறேன் :-(

 
At 5:40 PM, Blogger Suresh Ramasamy said...

சிவா,
"ஊஞ்ஞல் மனம் உலா வரும்" மிக அருமை. WOW!!! இந்த பாடல் எந்த படத்தில் வருகிறது?

மிக்க நன்றி
சுரேஷ் ராமசாமி

 
At 5:44 PM, Blogger Suresh Ramasamy said...

Hi siva
From ur "siva puranam" blog came to know that u are also from MIT. I did my BTech Elex 1994-1997 in MIT. U are from which department?

Nice to know that a fellow alumnai is very good at writing and has good music taste also.


regards
Suresh

 
At 7:17 PM, Blogger சிவா said...

ஹாய் சுரேஷ்! நீங்க எனக்கு சீனியர். அநேகமா என்னை ராகிங் பண்ணியதில் ஒரு ஆள் நீங்களாக கூட இருக்கலாம்..ஹா ஹா ஹா :-)). நான் 1996-1999 செட். Production Engr. நீங்க என்ன dept?
சிவபுராணம் படிச்சி 'லே! என்னியையா வஞ்சிக்கிட்டு இருக்கிறே' அப்படின்னு சண்டைக்கு வந்திராதிய :-). ஒரு மெயில் தட்டி விடுங்க (gsivaraja@gmail.com).

'ஊஞ்சல் மனம் உலாவரும்' அருமையான ஜெயசந்திரன் பாடல். படம் 'கொம்பேரி மூக்கன்'

 
At 5:59 PM, Blogger சிவா said...

ஆமாம் சதீஷ்! அது கவிதை பாடும் அலைகள் தான். தினமும் பாட்டு கேக்கறீங்களா. நன்றி நண்பரே. நான் தோன்றுவதை தினமும் போடுகிறேன். கேட்டு நன்றாக இருந்தா சொல்லுங்க :-).

 
At 4:54 AM, Blogger சிவா said...

சதீஷ்! நீங்க சொல்ற மாதிரி 'நீயா அழைத்தது' ரொம்ப அருமையான பாடல். ஜானகி பாடலா. பார்த்து சொல்றேன். பட்டாக்கத்தி பைரவன் என்னிடம் இல்லையே பாஸ். கிடைத்தால் சொல்கிறேன்.

நீங்களும் உங்களுக்கு புடிச்ச பாடலை சொல்லுங்க. சேர்ந்து கேட்கலாம்.

 
At 7:12 AM, Blogger தங்ஸ் said...

Kavithai Paadum Alaigal - Nalla pattu.As satheesh said, Kanne en Kanmaniye-um nalla irukkum..

Neeya Azhaithathu - SPB-Janaki..
Pattu Nalla irukku..I dont know any other details abt this song:-)

 
At 11:03 AM, Anonymous Anonymous said...

DEar Siva,
1.Unnai parkamal naan edhu

2.Neeya azhaithadhu

3.Kannnanae nee vara kathirundhen

Ella padalum keten.Nalla choices !!!!

Keep it up Siva!!!

With Love,
Usha Sankar.

 
At 1:32 PM, Anonymous Anonymous said...

What a lovely duet by JC & SJ - oonjal manam .... komberi mookkan!!
Kanmani nee vara...... what an orchestration, rhythm, Cheerful singing by Uma and KJJ!!

Good afternoon, Siva! Vinatha

 
At 6:40 PM, Blogger சிவா said...

தங்கம்! 'கண்ணே என் கண்மணியே' இருக்குதான்னு பார்க்கிறேன். ரெண்டு பேரும் சொல்றத பார்த்தா ரொம்ப நல்லா இருக்கும். 'நீயா அழைத்தது' எனக்கும் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத பாடல். எனக்கு 80ஸ் எல்லாமே அப்படித்தான் :-)

 
At 6:42 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! வருகைப் பதிவு எடுக்கப்பட்டது :-)). நீங்க பாட்டு கேட்டால் அதுவே போதும், போட்டதுக்கு பலன் கெடைச்ச மாதிரி :-)

 
At 6:44 PM, Blogger சிவா said...

சதீஷ்! சூப்பரா ஒரு பட்டியல் கொடுத்துட்டீங்க. அத்தனையும் அருமையான பாடல்கள். எனக்கும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது போடுகிறேன். தீர்த்த கரையினிலே படப்பாட்டு மட்டும் நினைவுக்கு வரமாட்டேங்குது..

அன்புடன்,
சிவா

 
At 6:45 PM, Blogger சிவா said...

வாங்க வினதா அக்கா! எங்கே போய் இருந்தீங்க. எல்லா பாடலும் கேட்டீங்களா..வெரி குட். நிறைய 80ஸ் போடுறேன்னு ரொம்ப சந்தோசமா இருக்கா... :-))

 
At 3:21 PM, Blogger சிவா said...

சதீஷ்!
பாட்டு கேட்டீங்களா? ரொம்ப சந்தோசம். இப்படி பிரபலம் ஆகாத படங்களில் நல்ல பாட்டெல்லாம் நிறைய இருக்கு. எனக்கு தோன்றியதை போடுகிறேன். உங்க பாராட்டுக்கு நன்றி சதீஷ். தொடர் வருகைக்கு நன்றி. திங்கள் தோறும் ஒரு பதிவு போடுவேன். மறக்காம வந்து பாத்திருங்க :-)

'சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே' பாடலுக்கு தனி பதிவே போட்டு இருக்கிறேன். பாத்தீங்களா?. 'தென் பொதிகை காற்றே' சித்ரா பாட்டு தானே. போட்டுடறேன்.

நீங்க சொன்ன 'தீர்த்த கரையினிலே' மெதுவா வீட்டுக்கு போய் யோசிச்சு பார்க்கறேன். அப்புறம் சொல்றேன்.

 
At 6:03 PM, Blogger சிவா said...

சதீஷ்! 'கண்ணுக்கொரு வண்ணக்கிளி' என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் 'இன்றைய பாடல்' தொடங்கியதும் முதலில் போட்ட பாடல் 'உன்னை நான் பார்த்ததும்' தான். தனியாக 'நேயர் விருப்பம்' ஆரம்பிக்கிறேன். முதல் பக்கத்தில் பார்க்கவும்.

 
At 4:38 AM, Blogger சிவா said...

சதீஷ்! 'கண்ணுக்கொரு வண்ணக்கிளி' யில் இதே பாடல் யேசுதாஸ் பாடியதும் இருக்கிறது (சோலோ). இன்னும் சில அருமையான பாடல்களும் இருக்கிறது. நான் இந்த பாடல் வெளியான போதெல்லாம் கேட்டதில்லை. சமீபத்தில் தான் சி.டி வாங்கினேன்.

நேயர் விருப்பம் என்று தனிப்பதிவாக கொஞ்ச நாள் போட்டுக்கொண்டிருந்தேன். இப்போ பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அதை தொடர முடியவில்லை. அதனால் தான் தனியாக ஒரு தலைப்பை சேர்த்து விட்டேன். :-)

தொடர்ந்து பாட்டு கேட்டு கொடுக்கும் உற்சாகத்திற்கு நன்றி சதீஷ்.

 
At 7:03 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! உங்க கம்யூட்டர் என்ன வாரத்துக்கு ரெண்டு நாள் தான் வேலை செய்யுமா :-)).
'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்' நான் முதன் முதலில் 'இன்றைய பாடலில்' போட்ட பாடல். நீங்க கூட கேட்டுட்டு 'இது ராஜாவா..ஏதோ மிஸ் ஆகுது' என்று சொன்னீங்க. அதுக்கு நான் 'இது வெளி வராத படம். அதனால் புதிதாக கேட்பதால் அப்படி தோன்றும்' என்று சொன்னேனே. நினைவுக்கு வருகிறதா.

சில பழைய நேயர் விருப்பங்கள் இன்னும் இருக்கிறது (உங்களதும் சேர்த்து). மெதுவாக போடணும். நேயர் விருப்பம் எப்பவும் இருக்கிறது. :-). 'வருது வருது இளங்காற்று' பிரம்மா படம். உங்கள் மற்ற விருப்பங்களும் மெதுவாக போடுகிறேன்.

 
At 5:34 AM, Blogger சாணக்கியன் said...

siva,
From our office I am not able to listen to your songs. All streaming media are blocked by websense. So, if you give just the film and song detail, I can hear it from my collection, if I have... :-)

 
At 8:21 PM, Anonymous Anonymous said...

Siva, Can you host the following songs for me if you have them!!!!

1.pada kolusu... thirumathi palanichami

2. ingeyum yengeyum..... Sathya
love, vinatha

 
At 11:10 PM, Blogger G.Ragavan said...

இரு பறவைகள் மலை முழுவதும்....ஆகா! கண்ணதாசனும் இளையராஜாவும் இணைந்த இசைக்கொத்து. எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்களில் இது சிறப்பானவைகள் வரிசையில் இடம் பெறும்.

எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்...

இதை விடக் காதலை அழகாகச் சொல்ல முடியுமா?

வெள்ளை ரோஜாவில் உள்ள மானே மானே மானே பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.

 
At 8:17 PM, Blogger சிவா said...

சதீஷ்! விழியில் ஒரு கவிதை படித்தேன்..ஹோ. கேட்டீங்களா..மனோவின் குரலே அப்படி தான்..இதில் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது என்று நினைக்கிறேன்.

 
At 8:17 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! உங்கள் கணிணியில் ரியல் ப்ளேயர் இருக்கா என்று பாருங்கள். இருந்தால் பாடல் வேலை செய்யும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும், நான் ஒவ்வொரு பாடலுக்கும் படம் பெயர் கொடுத்திருக்கேன். அது போதும் என்று நினைக்கிறேன். வேறு விவரங்கள் வேண்டும் என்றாலும் கேளுங்க.

 
At 8:17 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! 'பாத கொலுசு' (திருமதி பழனிச்சாமி) பாடலை கேட்பது எங்க வினதா அக்காவா..நம்பவே முடியலையே :-)). கண்டிப்பாக நாளை நேயர் விருப்பத்தில் கொடுக்கிறேன். அந்த பாடலின் அப்படி என்ன விஷேசம். சொல்லுங்க. 'இங்கேயும் எங்கேயும்' சத்யாவா...புரியலையே..

 
At 8:17 PM, Blogger சிவா said...

ராகவன்! இன்றைய பாடல்களையும் கேட்டு கருத்து சொல்வதற்கு ரொம்ப நன்றி. உங்களை பார்த்தால் உண்மையிலேயே பொறாமையா இருக்கு. கவிஞர்கள் பெயர் எல்லாம் சொல்லி கலக்கறீங்க. விவரங்களுக்கு நன்றி ராகவன். ஆமாம் அந்த பாடல் ஒரு இசை காவியம் தான் :-)

 
At 6:36 AM, Blogger சாணக்கியன் said...

சிவா,
ரியல் ப்ளேயர் இன்ஸ்டால் பண்ணியாச்சு...

இப்போ நீங்க போடற பாட்டெல்லாம் கேக்க முடியது. ஆஹா, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..

 
At 5:00 AM, Blogger சிவா said...

சாணக்கியன்! ரியல் ப்ளேய் ரெடி ஆகிட்டா..கலக்கல்..பாட்ட கேட்டு என்ஞாய் பண்ணுங்க :-)

வினதா அக்கா! தூள் லிங்க் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா! போய் படித்து பாட்ட கேட்டு பார்த்தேன். சூப்பர். உங்கள் விருப்பமாக பாத கொலுசு பாட்டு போட்டிருக்கிறேன். பாத்தீங்களா..

சதீஷ்! வாட வாட்டுது ராஜாவோட குரல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். அமைதியான, எளிமையான இசை. அனுபவிச்சி பாடி இருப்பார் ராஜா.

கீதம் ப்ளாக் முதல் பக்கம் என்னையும் கொஞ்சம் படுத்தியது. காரணம், நம்ம ராஜா பாடல் போட்டி என்று நினைக்கிறேன். நிறைய லிங்க் கொடுத்ததால், பக்கம் லோட் ஆக திணறுது என்று நினைக்கிறேன். இப்போ பாட்டு போட்டி பதிவு அத்தனையையும் நீக்கிவிட்டேன் :-(((. இப்போது எப்படி வருகிறது..சொல்லுங்க

 
At 10:04 AM, Blogger G.Ragavan said...

காளிதாசன்.....கண்ணதாசன்.....இளையராஜா இசையில் ஜெயச்சந்திரனும் பிசுசீலாவும் சேந்து பாடுனது ரொம்பக் கொறச்சல்....எனக்கு மூனு நாலு பாட்டுகதான் நெனவுக்கு வருது. ஆனா அத்தனையும் தேன். இந்தப் பாட்டு மாதிரி. என்ன கொஞ்சல் பாருங்க....ரெண்டு பேர் குரல்லயும். இந்த மாதிரி பாடகர்கள் குரல்ல கொண்டு வர்ர குழைவுதான் நாம பாடும் போது ஒழுங்கா வராதது....

சிவா....கவிஞர் பேரெல்லாம் சொல்றதுக்குப் பொறாமையா...என்னங்க இது....ஒரு பாட்டோ படமோ பிடிச்சா...முடிஞ்ச வரைக்கும் அது தொடர்பா தெரிஞ்சிக்கிறது வழக்கம்..அதான்..

 
At 10:05 AM, Anonymous Anonymous said...

Thanks a lot, Siva! This is a describing pattu! Simple orchestration, serene tune, as always Balu carries the song gracefully! Nice. Now I am listening to 'ennavendru solvathamma....'-RAJAKUMARAN!-same category! Nice. Vinatha.

 
At 10:16 AM, Anonymous Anonymous said...

iru paravaigal...Shri.Ilayaraja's finest!! Energy, energy in the air! Can't get enough of 'kaalidhasan....' & 'vaada vaattudu...'!! Great job, siva! Vinatha

 
At 10:53 AM, Blogger சிவா said...

ராகவன்! நீங்க முன்னமே சொன்னது மாதிரி ராஜா இசையில் ஜெயசந்திரன் பாடல்கள் அனைத்துமே தேன் தான். அதில் இது ரொம்பவே இனிமையானது.

//இந்த மாதிரி பாடகர்கள் குரல்ல கொண்டு வர்ர குழைவுதான் நாம பாடும் போது ஒழுங்கா வராதது....// நாம பாடும் போதா...ஹா ஹா..ரொம்ப தான் நக்கலு ஒங்களுக்கு :-)). நீங்க நல்லா பாடுவியலோ :-)

/முடிஞ்ச வரைக்கும் அது தொடர்பா தெரிஞ்சிக்கிறது வழக்கம்// என்னோட புத்தி இசை யாரு என்று தெரிஞ்சிக்கற வரைக்கும் தான் இருக்கு..ம்ம்ம்..

 
At 10:59 AM, Blogger சிவா said...

வினதா அக்கா! 'பாத கொலுசு பாட்டு' பாடலை கேட்டீங்களா. ரொம்ப சந்தோசம். ஆமாம்! தலைவரோட வழக்கமான சிம்பிள் தபேலா தான். ஆனால், ட்யூன் மனசை கொள்ளை அடிக்கும். எஸ்.பி.பி பாடலை இன்னும் (ரொம்பவே) மெருகூட்டுவார். இது என்னுடைய விருப்பம் கூட.
'என்னவென்று சொல்வதம்மா' வும் கேட்கறீங்களா..அடடா..இன்னொரு பதிவுக்கு தலைப்பு கெடைச்ச மாதிரி தெரியுது :-))

'இரு பறவைகள்' பாட்டும் கேட்டீங்களா..கீதம் ப்ளாக்ல ஏதோ பிரச்சினை என்று ஐந்து பாடலை மூன்றாக குறைத்து விட்டேன். :-(

 
At 11:09 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! 'வருது வருது இளங்காற்று' கேட்டீங்களா..உங்கள் மற்ற விருப்பங்களும் வரிசையா கொடுக்கறேன்.

'வாட வாட்டுது' சிப்ளி சூப்பர். தலைவரோட வித்தியாசமான குரல், கலக்கலான பாடும் விதம்..இது ஒரு ப்ளாப் படமா..ம்ம்ம்...பாட்டு எப்படி..ஹிட்டா?

 
At 11:13 AM, Blogger சிவா said...

ஹலோ சிவகுமார்! மன்னிக்கணும் நண்பரே. பதில் சொல்ல பிந்தி விட்டது. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க கேட்ட ரெண்டு பாடலும் வினதா அக்கா கொடுத்த தொடுப்பில் இருக்கு..கேட்டு மகிழுங்கள். இங்கே பாருங்க ( நன்றி வினதா அக்கா)

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4379


அடிக்கடி வாங்க...பாட்டு கேளுங்க. முடிஞ்சா தனி மடல் ஒன்னு போடுங்க. (gsivaraja@gmail.com)

அன்புடன்,
சிவா

 
At 2:26 PM, Blogger தங்ஸ் said...

Kaalidasan Kannadasan - S.Singakutti..mm..Antha padathula ippadi oru arumaiyaana paattu.

Paatha Kolusu - SPB Thaani Aavarthanthulla ithuvum oru special...Thirumathi Palanichamy-la
Nadu Saamathula-um romba nalla irukkum..

 
At 7:40 PM, Blogger சிவா said...

தங்கம்! 'பாத கொலுசு' எஸ்.பி.பி யோட தனி ஆவர்த்தனம் தான். இப்படி வருணனை பாட்டுன்னா அவர் அனுபவிச்சி பாடுவார். 'திருமதி பழனிசாமி'ல எனக்கு 'குத்தால குயிலே' ரொம்ப புடிக்கும்.

 
At 7:44 PM, Blogger சிவா said...

ஆமாம் சதீஷ். அதற்கு பின்னணி இசை தேவா தான். ராஜாவிற்கு நேரம் இல்லாததால் தேவாவை பயன்படுத்தினார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். 'விடிஞ்சா கல்யாணம்' கூட பாடல் ராஜா..பின்னணி இசை எம்.எஸ்.பி...அந்த படத்தில் எம்.எஸ்.வி பின்னணி இசைல சும்மா பின்னி எடுத்திருப்பார்..நான் அசந்து போய்ட்டேன்.

'கட்டுமரக்காரன்'-ல ஒரு பாடலை தவிர (பனானா..பனானா) எல்லா பாடலுமே ரொம்ப நல்ல பாட்டு..பொதுவா கடலை ஒட்டி வரும் படங்கள் ஓரளவாவது வெற்றி பெறும். ஆனா ரொம்ப டப்பாவா போன படம் இது தான்..ம்ம்ம்ம்ம்..எல்லாம் வாசுவோட சூப்பர் டைரக்க்ஷன் தான் :-))

 
At 11:27 PM, Blogger சாணக்கியன் said...

இன்றைய நேயர் விருப்பம் கேட்டது நான்தான். ஒலிபரப்பியதற்கு நன்றி சிவா. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் !

 
At 11:47 PM, Blogger சாணக்கியன் said...

தங்கள் நன்றிக்கு நல்வரவு உஷா. எனக்கும் அது ஸ்வர்னலதா என்று தான் தோன்றியது. நீங்கள் கேட்டவுடன் வலையில் தேடி உறுதி செய்துவிட்டேன். படம் ஆணழகன். 1995 வாக்கில் வெளியாகி உள்ளது. 'கண்ணே என் கல்யாணக்கதை கேளடி' என்ற இன்னொரு சிறப்பான பாடலும் அந்த படத்தில் உள்ளது. தபேலா தாளங்கள் இந்தப் பாட்டில் மிகவும் வித்தியாசமாக சிறப்பாக உள்ளது.

'நில்லாத வெண்ணிலா' வில் கவனித்தீர்களானால், இசைக்கேற்ப, 'நில்லாத வெண்' என நிறுத்தி, பின் 'ணிலா' என வெட்டி வெட்டிப் பாடுவது கேட்பதற்கு ஒரு இனிய அனுபவம்.

 
At 4:22 AM, Blogger சிவா said...

சாணக்கியன்! 'நில்லாத வெண்ணிலா' கேட்டதுக்கு ரொம்ப நன்றி. உஷா அக்காவுக்கு 90ஸ்-ல ஒரு புது பாட்டு அறிமுக படுத்தியாச்சு :-)

 
At 4:24 AM, Blogger சிவா said...

சதீஷ்! இளையராஜா-பிரசாந்த் என்று ஒரு பதிவு கூட போடலாம். இளம் கதாநாயகளில் ராஜா ரொம்ப நல்ல பாட்டா கொடுத்தது பிரசாந்துக்கு தான். நீங்க சொன்ன படப் பட்டியல் அத்தனையும் அருமை. என்ன! படம் தான் குப்பையா இருக்கும் :-))

எப்பவுமே ராஜா ராஜா தான் :-)))

 
At 4:25 AM, Blogger சிவா said...

சிவகுமார்! என்னிடம் 'எச்சில் இரவுகள்' படப்பாடல் இல்லீங்களே..இருந்தால் கொடுத்திருப்பேன். மன்னிக்கனும். அது ரொம்ப அரிய படமா போய்ட்டு..ஆனா நெறைய பேர் பேசிக்கறாங்க...ம்ம்ம்

 
At 4:28 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! இன்றைய பாடல் கேட்டீங்களா..சந்தோசம். மனோ-ஜானகி பாட்டு. நேயர் விருப்பம், நம்ம ராகவனோடது. பாடலை கேட்க முடிந்ததா..அந்த பாடலில் சந்தம் எவ்வளவு கஷ்டமா தெரியுது (வளைந்து நெளிந்து ஓடுது)..ஜானகி ரொம்ப அருமையா பாடி இருப்பாங்க.

 
At 10:13 AM, Blogger G.Ragavan said...

மழை வருவது மயிலுக்குத் தெரியும்........நன்றி சிவா.....

இந்தப் படம் ரிஷிமூலம். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இந்தப் படத்துல டீ.எம்.எஸ்க்கு ரெண்டு பாட்டு. பி.சுசீலாகூட ஒரு டூயட். நேரமிது நேரமிதுன்னு. அப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும். பிறகு சிவாஜிக்கு ஜெயச்சந்திரன் பாடிய நெஞ்சில் உள்ள காயம் ஒன்று. அப்புறம் எஸ்.பி.ஷைலஜாவோட பாட்டு...அப்புறம் இந்தப் பாட்டு....எல்லாமே நல்ல பாட்டுகள்.

 
At 5:09 AM, Blogger சிவா said...

உஷா அக்கா! 'மழை வருவது' உங்களுக்கு புடிக்காம போய்டுமா
:-)). என்னிடம் இந்த பாடலின் வீடியோ இருக்கிறது. இந்த பாடலை ஜானகி எவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார்கள். 9, 10 படிக்கும் போதெல்லாம் இது பிடிப்பது கஷ்டம் தான் :-)

 
At 5:10 AM, Blogger சிவா said...

ராகவன்! உங்கள் விருப்பம் என் விருப்பமும் :-) இளையராஜா சிவாஜி படத்திற்கு இசை அமைத்த பட்டியல் உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்

 
At 5:12 AM, Blogger சிவா said...

ராகவன்!

ரிஷிமூலத்தில் மேலும் சில பாடல்களும் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லா பாடலும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகு கேட்காமல் இருக்க முடியுமா :-)

 
At 11:13 AM, Anonymous Anonymous said...

Fantastic Siva, what a lilting, energy packed gem from Good Old Raaja! My favorite is breezy poomely veesum poonkaatre... I used glue to vivdhbharathi/ our home’s backside-sandhu tea kadai to listen to these songs... Sure they aired them often!! Please host poomely veesum.... as my request if you have it! Lots of love to my dear Raaja, vinatha

 
At 1:42 PM, Anonymous Anonymous said...

vizhiyiley......SPB solo

What a peerless composition by Early Ilayaraja!! Melodious tune, unparallel orchestration, youthful SPB– idhunna high class pattu!!!! Very happy Siva, you are hosting songs from pre-80s too! love, vinatha

 
At 7:20 AM, Anonymous Anonymous said...

Dear siva,
I wud like to tell abt a song. I'm notsure how many have noticed this.Anyway...this song proves Raja's talent of using chorous. U may feel its quite an obvious and usual one.
But..this song is Quite more special coz he's used only chorous instead of any musical instrument.
And...truely u'll never feel its(instruments)absence.Now breaking d suspense...The film is "Mayabazar 1995" and d song starts like this... "Naan porandhu vandhadhu raja vamsathilae..." .
Hear 4 urself and confirm. ...If I was right and if possible pls post this song in ur blog.

Thanks.
ksr.

 
At 9:28 AM, Blogger G.Ragavan said...

அருமையான பாடல்....சித்திரச் செவ்வானம்.....ஜெயச்சந்திரனின் துள்ளல் மிகுந்த காதல் பாடல். எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

 
At 4:37 AM, Blogger சிவா said...

நன்றி சிவகுமார்! ராஜாவின் அரிய பாடல்களை கூட நாலு பேருக்கு தெரிய வச்சா எனக்கு சந்தோசம் தான் :-)

 
At 4:40 AM, Blogger சிவா said...

வாங்க வினதா அக்கா! நேரம் கெடைச்சா தவறாம வந்துடறீங்க. நன்றி :-))என்னிடம் 'பூமேலே வீசும்' இல்லையே அக்கா..கெடைச்சவுடனே கண்டிப்பா கொடுக்கறேன். அதற்கு முன் உங்கள் விருப்பம் 'வானம் இடி இடிக்க' சீக்கிரம் போடுகிறேன்.

'விழியிலே' பாடலா...ம்ம்ம்..70ஸ் 80ஸ் நான் எப்பவுமே கேட்பேன்..உங்களை எல்லாம் வர வைக்க அதிகமா அந்த கால கட்ட பாடல்கள் போட வேண்டிய இருக்கு :-)).

 
At 4:42 AM, Blogger சிவா said...

சதீஷ்! பூத்தமள்ளிகை கொடுத்து உதவி பண்ணியது சிவகுமார். ரொம்ப நல்ல பாடல்..ம்ம்ம்.. இதெல்லாம் ஒரு நாள் ஓடிய படங்களில் இருக்குது :-((

நேயர் விருப்பம் தானே..கொடுங்க..கொடுங்க..

 
At 4:48 AM, Blogger சிவா said...

ksr! உங்கள் பாராட்டு அனைத்துக்கும் நன்றி :-). 'நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்திலே' பாடல் நான் கல்லூரி படிக்கும் போது வந்தது. கேசட்டில் பதிந்து வைத்திருந்தேன் (அப்போவெல்லாம் கேசட் வாங்க காசு கெடைக்காது :-). இப்போது அது என்னிடம் இல்லையே :-((

ஆம்! நீங்க சொல்வது எல்லாம் சரி! இசை கருவிகளே இல்லாம, வெறும் கோரஸ் வைத்தே பண்ணி இருப்பார். ஆனால் நமக்கு அந்த வித்தியாசம் தெரியாது..அது தான் ராஜாவோட திறமை..ராஜா-கேயார் கூட்டணி என்றால் பாடல் எல்லாம் கலக்கல் தான். உங்களுக்கும் நிறைய பாடல் தெரிகிறது..இன்னும் எடுத்து விடுங்கள்..நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

 
At 4:49 AM, Blogger சிவா said...

ராகவன்! ஜெயசந்திரன் பாடல் போட்டா ராகவனுக்கு புடிக்காம போய்டுமா :-)). என்ன நாஞ்சொல்றது.

 
At 4:53 AM, Blogger சிவா said...

சதீஷ்! அந்த பாடல் ( 'பொன் பூவே..பொன் பூவே.) ஒரு மலையாள படத்தின் டப்பிங். பாசில் படம். படம் 'PapayudE Swantham Appoos'. தமிழில் 'பூவே பொன் பூவே' என்று வந்தது. மம்முட்டி-ஷோபனா நடித்தது. ராஜாவின் இசையில் வந்த ஒரு சில பாசில் மலையாள படங்களில் இதுவும் ஒன்று (பாசில் தமிழில் மட்டும் தான் ராஜாவை பொதுவாக வைத்துக்கொள்வார் :-))

உங்கள் நேயர் விருப்பம் பட்டியலை எடுத்து பார்த்தேன். எனக்கும் சித்திர செவ்வானம் கேக்கணும் போல இருந்தது..எடுத்து போட்டுட்டேன். :-))

 
At 1:11 PM, Anonymous Anonymous said...

Aahaa!! ‘kurinji malarin....’
Listen to the mood set by the prelude-flute, guitar... mesmerizing, romantic VIOLIN VIOLIN thullal tune, arumaiyaana tempo, Balu’s boyish yekkam, Vani Jayaram’s flawless exuberance... Songs like this brings out 16yr old in me with joy! Manasu appadiye santhoshathula butterfly maari excite aayedum!
Happy happy Joy joy!!
Vinatha!

 
At 8:13 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! 80ஸ் பாடல் போட்டா தூண்டில் போட்ட மாதிரி கரெக்டா ஆஜர் ஆகிடறீங்க :-)). பாருங்க..உங்களுக்காக நான் 80ஸ் நிறைய கேட்க ஆரம்பிச்சுட்டேன் :-).

 
At 8:20 PM, Blogger சிவா said...

சதீஷ்! நான் சும்மாவா சொன்னேன்..ஒன்று கேட்டால் 100 கொடுப்பீர்கள் என்று :-)) (Just Kidding).

கொஞ்சம் பழைய பாடல்களும் கொடுத்தா தானே அக்காக்களுக்கெல்லாம் புடிக்குது :-)). அதனால் தான் கொஞ்சம் early 80ஸ் பக்கம் போறது.

நீங்க கொடுத்த பட்டியல் அருமை. இதில் மூன்று பாடல்கள் மட்டும் இது வரை போட்டிருக்கிறேன்.

5) Oru Naal Unnodu Oru naal - Uravaadum Nenjam (SPB & SJ)
12) Mayile Mayile Un Thogai - Kadavul Amaitha Medai (SPB & Jency)
13) Manjal Nilaavukku - Muthal Iravu (Jeyachandran & P.Susheela)

மற்றவை..சீக்கிரமே கொடுக்கிறேன். என்னிடம் அத்தனையும் இருக்குமா என்று தெரியவில்லை..இருப்பதை.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக கொடுக்கிறேன். நேரம் செலவழித்து பாடலை பட்டியல் போட்டு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சதீஷ்.

 
At 5:46 AM, Anonymous Anonymous said...

Dear Siva, thanks for hosting 'thaalattum poonkatru....' for me! Hope Usha listened to ti and enjoyed it! love, vinu.

 
At 11:29 AM, Anonymous Anonymous said...

Dear Siva,
Indha week songs ellam keten.

1.vizhiyilae malarndhadhu - ennudiaya alltime favourite

.Kurinji malarin - beautiful composition by IR!!!
Indha padathil varum naanae naa song ai oru naal host pannunga siva!! Enaku eppodhum pidithu kondae irukum song idhu!!!

3.Sadhish in neyar virupam - chithira sevvnam?

Mono track il ippadi oru tharanama sound ai kodutha Rajavin greatness ai
andha period la irundhu irundhal dhan unara mudiyum.I am proudly said that i am a gifted person lived in those period!!!! Enna oru expectation udan ketta song idhu theiryuma? ADhuvum radio vil matumae ketka mudiyum!!!

{Pootha malligai = idhu yar virupam? Nice song.naan idhu varai ketadhae illai indha padalai! Meyar virupamaga ketta Neyaruku ennudaiya spl thanks!!

Poovae pon poovae film in song lyrics theirya vilai.Indha pada padal ellam
en son and ennudaiya sila situation nal
rombavae pidikum.IR in motherhood feeligs songs inai avarae dhan!! Ellam gem dhan!!!

Today song - simple but nice one!! Padinadhu SPB? Mano nu oru doubt um vandhadhu. Lyrics nalla iruku.Enna film idhu?

Siva - ella songs um kettu en opinion solli viten enru ninaikiren!!!!!!!!!!!!!!!

Thanks a lot for your service!!!!

With Love,
Usha Sankar.

 
At 10:46 AM, Anonymous Anonymous said...

Oh, God!! 97 or even before I heard this song at Nungambakkam... Ipoodhaan kekkaren!!
Madhura marikozhundhu... mettu is very contagious! Though the orchestration and tempo of that song is GRAND !! maanam............ Balu duet is no less brilliant!
Back to back play panniyaachu!! Love you Ilayaraja, vinatha

 
At 11:10 AM, Anonymous Anonymous said...

Siva, simple orchestration, manasai kollai yedukkum mettu,singers smooth singing always linger in our heart for ever.. that's HIS nobility!

Please host " kathuyerukken kathuyerukken kadhavai theradi....." too someday for me! love, vinatha

 
At 3:59 AM, Blogger சிவா said...

வினதா அக்கா! இப்போ அடிக்கடி வந்து பாட்டு கேக்கறீங்க. நன்றி நன்றி :-)). 'மானம் இடி இடிக்க' பாடல் போட்டாச்சு. நானும் ரொம்ப ரசித்தேன்..அது என்ன 'மானம்'..'வானம்' தானே சரி?

 
At 4:05 AM, Blogger சிவா said...

உஷா அக்கா!
எல்லா பாடலையும் கேட்டு அனைத்துக்கும் நேரம் கிடைக்கும் போது மொத்தமா கருத்து சொல்றீங்க. நீங்க எனக்கு கொடுக்கும் உற்சாகத்திற்கு ரொம்ப நன்றி அக்கா.
'விழியிலே மலர்ந்தது' 80ஸ் மக்களுக்கு புடிக்காம போய்டுமா :-))

சித்திர செவ்வானம் சதீஷோட நேயர் விருப்பம் தான். பூத்த மல்லிகை பாடல் சிவகுமார் விருப்பம். அவர் தான் அந்த பாடலை அனுப்பி உதவி செய்தான். நான் சில முறை கேட்டதாக நினைவிருக்கிறது. ஆனாலும் மறுபடி கேட்டாலும் புதிதாகவே இருக்கிறது.

'பொன் பூவே..பொன் பூவே' பாடலும் 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல'வும் ஒரே வகை பாடல் தான்..இல்லையா..எல்லா தாய்க்கும் புடிக்கும் :-).

நீங்கள் கேட்ட 'உன்னை பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல' இடம் பெற்ற படம் 'இரட்டை ரோஜா'. படத்தில் இந்த பாடல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ராம்கி படம். கேயார் படங்களுக்கு ராஜாவின் இசை எப்பவுமே ஸ்பெசல் தான். அதில் ஒன்று இந்த படமும்.

(பதில் அளிக்க தாமதமாகி விட்டது.மன்னிக்கணும்)

 
At 12:20 PM, Anonymous Anonymous said...

Ival yaro....truely a good song to hear at night hrs.Thanks! for reminding. It's really been long since i heard this song.

ksr.

 
At 7:56 PM, Blogger சிவா said...

அடடா! அது யாரு நம்ம ப்ளாக் பக்கம். சங்கர் சாரா! நெசமாவா. நம்பமுடியலையே..ரொம்ப சந்தோசமா இருக்கு சார். நம்ம CSR ப்ளாக் படிச்சப்புறம் நீங்க என் மனசுல எங்கேயோ போய்ட்டீங்க. ஊருக்கு வந்து நேரில் பேசிக்கறேன் :-).

உங்க பழைய நினைவுகள் அருமை. முடிஞ்சா நான் ஊருக்கு வரும் போதும் reproduce பண்ணி காட்டுங்க. நானும் ரசிக்கிறேன்.
இந்த பாடலை கேட்டது உஷா அக்கா தான். கடைசில அது உங்க விருப்பமா இருந்திருக்கு :-).

உங்க வருகைக்கு ரொம்ப நன்றி சார். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க.

அன்புடன்,
சிவா

 
At 7:58 PM, Blogger சிவா said...

ஹலோ ksr! வாங்க வாங்க. ஆமாம்..ராஜாவின் பார்வையிலேல இன்னொரு பாடல் 'ஒரு சுடர் இரு சுடர்' பாடலும் இரவு கேட்பதற்கு ரொம்ப நல்ல பாடல். கேட்டு கருத்து சொன்னதுக்க் ரொம்ப நன்றி.

 
At 11:07 AM, Anonymous Anonymous said...

Poovizhi vasalil..... Deepam! Fantastic request from Sathish!! What a class song! Thullal romantic tune! Dreamy orchestration , amazing tempo, percussion arumaiyaa patting at the back while singers are flirting....Happy Ilayaraja!
Love, vinatha.

 
At 6:50 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! 70ஸ் 80ஸ் என்றால் நீங்க சொல்ற விதமாக (Thullal romantic tune! Dreamy orchestration , amazing tempo, percussion arumaiyaa patting at the back while singers are flirting.) கேட்டுப் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது. பேசாம உங்கக்கிட்ட 70ஸ் 80ஸ் பாட்டெல்லாம் விளக்கச் சொல்லி கேட்கலாம் போல.

 
At 6:55 PM, Blogger சிவா said...

சதீஷ்! எங்கடா ஆளையே காணோம்னு பார்த்தேன். உங்க தனி மடல் வந்தது சதீஷ். பேசாம உங்களுக்கு 'பட்டியல்' சதீஷ் என்று பேர் வச்சிடலாம் போல :-). நீங்க கொடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை தலைவா. அந்த மடலுக்கு பதில் மடல் நாளை அனுப்புகிறேன். தாமதத்திற்கு மன்னிகணும்.

ஆமாம் சதீஷ்! விஜய்க்கு ராஜாவில் ஸ்பெசல் எப்பவும் உண்டு. ராஜாவின் பார்வையிலேல எல்லாமே அருமையான பாடல்கள். படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. என்ன படமோ.

இன்றைய பாடல் 'பாட்டு வாத்தியார்' தான். ஆமாம் அனைத்தும் யேசுதாஸ் தான். அதில் நன்றாக தெரிந்த பாடல் 'நீ தானே நான் பாடும்' யேசுதாஸ்-ஸ்வர்ணலதா. ஆனால் எனக்கு இன்றைக்கு போட்ட பாடல் என்னவோ மனசுக்குள் போய் பாடுற மாதிரி ஒரு டச்சிங். யேசுதாஸ் அருமையா பாடி இருப்பார். அதான் எடுத்து போட்டேன்.

 
At 10:18 PM, Blogger சாணக்கியன் said...

indraiya neyar viruppathil sathish keatirunda isai mikavum arumai. iNtha isiayai paRRi chollunGalEn

 
At 6:57 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! அந்த பாடல் (இசை) 'செல்வி' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். 'இளமனது பல கனவு' என்று போகும். இது ஒரு டப்பிங் படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

 
At 5:41 AM, Blogger சிவா said...

சதீஷ்! நம்ம ராகவன் கேட்டா அது பழைய பாட்டா தான் இருக்கணும் :-). அவரு 90ஸ்-ல ரொம்ப வீக் :-)).

செல்வி படம் எனக்கும் டி.வில பாடல் பார்த்ததா நியாபகம் இருக்கு. ரெண்டு நாய்க்கு கண்ணாடி, ட்ரெஸ் எல்லாம் போட்டு, கொடுமையான ஒரு பாடல் (பார்க்க). அதான் ஒரு வேள டப்பிங் படமா இருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வந்தது. தகவலுக்கு நன்றி சதீஷ்

 
At 12:52 PM, Blogger தங்ஸ் said...

Aalamaram Melamarum from Senthooram(Devyani nadicha padam) was one of our hostel life favourites..Unnikrishnan romba arumiya paadi irupaar..

 
At 7:23 PM, Blogger சிவா said...

தங்கம்! 'ஆலமரம்' பாடல் கேட்டீங்களா..எனக்கும் கூட உன்னிக் கிருஷ்ணன் ரொம்ப நல்லா பாடி இருக்கிற மாதிரி இந்த பாடல் தோன்றும். நானும் பாடல்/படம் வெளியானவுடன் ரொம்ப கேட்டு மகிழ்ந்த பாடல் இது.

 
At 9:43 PM, Anonymous Anonymous said...

Dear Siva,
Daily padalgal kettu kondu irukiren.

Analum inraiya padal - rasathi manasil and neyar virupam - vaan megangalae
irandum dhan manadhuku migavum pidithadhu.(Village brougt up nale irukalam)

Oh vennilavae - arumaiyana padal.Indha padathai tv il parthen.Picturisation
parthu nondhu ponen.

Ungal Audio Quality is very special Siva !!!

Thank you for your service !!!

With Love,
Usha Sankar.

 
At 7:03 PM, Anonymous Anonymous said...

Kuthaala kuyiley Kuthaala kuyile..... Aahaa! Mellifluous Vasu! What this man can do to me with his 'aasaiyaana'konjals in his voice!! Sneham, paasam, mogum yellam appadiye thadhumbum!! That's DEEP, not a fling!
Namba gramathu aasa rasa tune & orchestration! The mood HE creates is unparallel! Vasu executes it with GRACE & CLASS! love, Vinatha.

 
At 7:24 PM, Blogger சிவா said...

சதீஷ்! 'ராசாத்தி மனசுல' பாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும். ராமராஜன் பாட்டு. துவக்கம் எங்கே படத்தில் இருக்காது என்று நினைக்கிறேன். சுகன்யா கமலை ஜெயிலில் பார்க்கப் போகும் போது பாடல் கொஞ்சம் ஓடும் என்று நினைக்கிறேன்.

போட்டியா...ரொம்ப ஆர்வமா இருக்கீங்க..நேரம் கிடைக்கணும். உங்களுக்கு நடத்த விருப்பம் என்றால் சொல்லுங்க. கலக்கிடலாம்.

 
At 7:28 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! டெய்லி பாட்டு கேக்கறதுக்கு நன்றி. ராசாத்தி மனசுல ராமராஜன் கிராமத்து கெட்டப்பில் பாடல் பாக்கறதுக்கு நல்லா இருக்கும். வான் மேகங்களே சதீஷோட விருப்பம் தான். நேயர் விருப்பம் நாளைக்கு மறுபடி ஆரம்பிக்கணும். பட்டியல் தேடி எடுக்கணும். சீக்கிரம் போட்டுடறேன்.

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி அக்கா. உங்கள மாதிரி எல்லோருடைய தொடர் வருகை தான் எனக்கு ஒரு பெரிய உற்சாகம் :-))

 
At 2:42 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! கொஞ்ச நாள் கழிச்சி வந்திருக்கீங்க. உங்களை பார்க்க சந்தோசம். குத்தாலக் குயிலே பாடலோட Flow ரொம்ப நல்லா இருக்கும். வாசுவும் மின்மினியும் நல்லா பாடி இருப்பாங்க. நீங்க சொன்ன மாதிரியே கிராமத்து ராஜா நம்மோட ஆசை ராஜாவாச்சே :-))

 
At 7:39 PM, Blogger சிவா said...

சதீஷ்! சுட்டும் சுடர்விழி பாடலோட ஆர்கெஸ்ட்ரா ரொம்ப அருமையா இருக்கும். அதனாலயே இந்த பாடல் தான் சிறை சாலைல ரொம்ப புடிக்கும். மற்ற அனைத்துப் பாடல்களுமே அருமையா இருக்கும். (செம்பூவே, மன்னன் கூரை சேலை, ஆலோலங்கிளி).

கண்ணீர் தூளி - படத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.

ஏகாந்த வேளை பாடல் எஸ்.பி.பி-யும் ஜானகியும் அருமையா பாடி இருப்பாங்க.

நேயர் விருப்பம் காணாம போறதுக்கு நேரமின்மை தான் காரணம் சதீஷ். நேயர் விருப்பம் லிஸ்ட்-ஐ தனியா எடுத்து வைக்கல. அதை தேடி அப்புறம் பாடலை தேடி போட நேரம் இல்லாமல் கொஞ்சம் கஷடமா போச்சு. அதான் எடுத்துட்டேன். சீக்கிரம் சேர்த்து விடுகிறேன்

 
At 10:36 PM, Blogger சாணக்கியன் said...

இன்றைய பாடல் ஹிந்தில ஹிட் ஆச்சுதே! எது முதலில் வந்தது? இரண்டு மொழிகளிலும் ஒரே இசை அமைப்பாளரா இல்ல சுடப்பட்டதா?

 
At 4:17 AM, Blogger சிவா said...

சாணக்கியன்!

இன்றைய பாடல் (கண்மணி உன்னை நான் கொஞ்ச) பாடலோட Original ராஜாவின் இசையில் தெலுங்கில் வந்த 'Jagadeka Veerudu Atiloka Sundari ' படத்தில் உள்ளது. சிரஞ்சீவி-ஸ்ரீதேவி நடித்த அந்த படம் தமிழில் 'காதல் தேவதை' என்று டப் ஆகி வந்தது. இந்த பாடலை தான் ஹிந்தியில் வேறு ஒரு இசை அமைப்பாளர் அப்படியே காப்பி அடித்து BETA படத்தில் Dhak Dhak என்று அடித்து செம ஹிட் ஆச்சு. கடைசில அதுக்கு இசை ராஜா என்பதே யாருக்கும் தெரியாம போச்சு. நேரத்த பாத்தீங்களா.

 
At 11:20 AM, Anonymous Anonymous said...

I prefer to listen 'abbanee.....'JVAS!! Tamil song ley lyrics yedho squeeze panninaa maari yerukku!! Catchy tune, foot tapping beats, Balu's boyish perk & chithra's sweet voice appeal to me better!! Good choice!! vinatha!

http://www.raaga.com/channels/telugu/movie/A0000136.html

I have seen the movie! Sri Devi ROCKS!!!

 
At 7:23 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! தெலுங்கு ஒரிஜினல் நீங்க சொல்ற மாதிரி நன்றாக இருக்கும். தமிழில் டப்பிங் தானே. பாடல் வரிகள் இந்த அளவாவது மரியாதையா இருக்கிறதே..சில டப்பிங் பாட்டெல்லாம் கேட்டா எங்கயாவது முட்டிக்கலாம்னு தோன்றும்..'காதல் தேவதை'ல எல்லா பாடலுமே ஓரளவுக்கு நன்றாக டப்பிங் செய்திருப்பார்கள்.
//I have seen the movie! Sri Devi ROCKS!!!// நானும் டி.வில பார்த்திருக்கிறேன்.

 
At 8:31 PM, Anonymous Anonymous said...

indriya patal kartril karintha vasani pola

 
At 10:28 PM, Blogger சாணக்கியன் said...

//இந்த பாடலை தான் ஹிந்தியில் வேறு ஒரு இசை அமைப்பாளர் அப்படியே காப்பி அடித்து BஏTஆ படத்தில் Dஹக் Dஹக் என்று அடித்து செம ஹிட் ஆச்சு.//

அப்படியா சங்கதி! காப்பி அடிச்ச ஹிந்தி MD யாரோ? அவங்க கிட்ட எல்லம் கேர்புல்லா இருக்கனும்... அதே மாதிரி இன்னொரு ராஜா பாட்டும் ஹிந்தில செம ஹிட், 'அந்த கோழி கூவும் நேரம் குக்குக்குக்கூ குக்கு குக்குகுக்கூ' அப்படின்னு தமிழ்-ல வரும். அதுவும் காப்பி தானா? இல்ல ஹிந்திலயும் ராஜ இசைலயே வந்துச்சா?

 
At 1:45 AM, Anonymous Anonymous said...

a very koool song.... I have not heard to this madavilakke b4.But, this gave me a totally different feeling on hearing. Thanks! for uploading this song.

ksr.

 
At 4:25 AM, Blogger சிவா said...

சாணக்கியன்!
/./அப்படியா சங்கதி! காப்பி அடிச்ச ஹிந்தி MD யாரோ?// ஆனந்த் மிலன் - ஆ இருக்கும் என்று நினைக்கிறேன்.

//அதே மாதிரி இன்னொரு ராஜா பாட்டும் ஹிந்தில செம ஹிட், 'அந்த கோழி கூவும் நேரம் குக்குக்குக்கூ குக்கு குக்குகுக்கூ' // 'அந்த கோழி கூவும் நேரம்' இசை சங்கர் கணேஷோ, பாக்கியராஜோ என்று நினைக்கிறேன். ராஜா இல்லை. அந்த பாடலையும் நீங்க சொல்ற மாதிரி அப்படியே தூக்கிப் போட்டு நல்ல ஹிட்டு.

 
At 4:27 AM, Blogger சிவா said...

மாடவிளக்கே பாடலை நிறைய பேர் முதலில் கேட்கும் போது ஒதுக்கிவிட வாய்ப்பு இருக்கிறது (என்னடா பழைய பாடல் மாதிரி சோகமா இருக்கு என்று). ஆனால் பாடலும் சரி, கமல் படத்திலும் சரி, ரொம்ப அழகாக கொடுத்திருப்பார். கேட்க கேட்க அலுக்காத ஒரு பாடல்.

 
At 8:40 PM, Anonymous Anonymous said...

Maalaiyil yaaro.....Chathriyan!! What a serene, passionate solo by Swarna!! Suddha dhanyasi raga!! Along with Maalaiyil yaaro... I can add vizhiyil vizhundhu, manasu mayangum... as my favorites!!! vinatha.

 
At 8:31 AM, Blogger சிவா said...

அன்புள்ள உஷா அக்காவுக்கு,

கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் பார்க்க முடியவில்லை. மறுபடி பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்த பாடலை போட்டு உங்களை இந்த பக்கம் இழுத்ததில் மகிழ்ச்சி. உங்கள் மலரும் நினைவுகள் ரொம்ப அருமை. படிக்கும் போது அதை உணர முடிந்தது. ஒரு வயது குழந்தை ராஜாவின் இசையால் ஆட்கொள்ளப்பட்டதை கேட்கும் போது ராஜாவின் ரசிகனாய் நானும் சந்தோசப் பட்டேன். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி.

ராஜாவின் version - ம் ரொம்ப நன்றாக இருக்கும். சீக்கிரம் கொடுக்கிறேன்.

அன்புடன்,
சிவா

 
At 1:20 AM, Blogger சாணக்கியன் said...

Siva,
I heard today's song, "voorellam samiyaga paarkkum unnai" from Deiva vakku. 90's IR songs la Nammalukku neraiya same songs pudichu irukku. Chinna vayasula keatu padinju poochu. Inda songslam yedavadu velai seyyum podu munumunuthu kittu iruppen. Yenda ippadi Nanga keatte illada paattellam padi torchar pandrenu friends solluvanga :-). From the same film, 'valli valli ena vandan'-m music nalla irukkum..

anbudan,
chanakyan

 
At 5:20 AM, Blogger சிவா said...

சாணக்கியன்! இன்றைய பாடல் தவறாம கேட்பதற்கு ரொம்ப நன்றிங்க. நாம எல்லாம் 90ஸ் கோஷ்டி. அதனால நம்ம ரசனை ஒத்து போகுது :-)). 'வள்ளி வள்ளி' பாடல் கேட்டா ரொம்பவே உற்சாகமா இருக்கும். பாட்டு சும்மா ஜெட் மாதிரி பறக்கும் :-))

 
At 11:33 PM, Blogger G.Ragavan said...

இளையராஜா அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

கொண்டச் சேவல் கூவும் நேரம் பாடலுக்கு இசை சங்கர் கணேஷ். அதே திரைப்படம் இந்திக்குப் போன பொழுது டியூனும் போனது.

 
At 10:12 PM, Blogger G.Ragavan said...

ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் உன்னை....நல்ல பாட்டு. கார்த்திக் ரேவதி நடிச்ச படம். இந்தப் பாட்ட விட எனக்கு "வள்ளி வள்ளி என வந்தான்" பாட்டு ரொம்பவும் பிடிக்கும். ஒரு மாதிரி துள்ளல் மிகுந்த காதல் பாட்டு.

 
At 3:47 AM, Blogger சிவா said...

ராகவன்!
//கொண்டச் சேவல் கூவும் நேரம் பாடலுக்கு இசை சங்கர் கணேஷ். அதே திரைப்படம் இந்திக்குப் போன பொழுது டியூனும் போனது.// தகவலுக்கு நன்றி ராகவன். நிறைய பேர் அதை ராஜாவின் இசை என்றே நினைக்கின்றார்கள்.

//ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் உன்னை....நல்ல பாட்டு. கார்த்திக் ரேவதி நடிச்ச படம். இந்தப் பாட்ட விட எனக்கு "வள்ளி வள்ளி என வந்தான்" பாட்டு ரொம்பவும் பிடிக்கும். ஒரு மாதிரி துள்ளல் மிகுந்த காதல் பாட்டு.// ஆமாம்! 'வள்ளி வள்ளி' வழக்கமான ராஜா-ஜானகி கூட்டுப் பாடல். ரொம்ப வேகமான, அதே சமயம் அழகான ஒரு ஓட்டத்தோடு மனதை மயக்கும் பாடல். சீக்கிரம் 'இன்றைய பாடல்' லில் கொடுத்திடறேன் :-)

 
At 3:49 AM, Blogger சிவா said...

உஷா அக்கா!
இசையில் பிறந்த நாள். மறக்குமா :-)
ராஜா பிறந்த நாளுக்கு தினமும் ஒரு ராஜா பாடல் கொடுக்கிறேன். கேக்கறீங்களா?

 
At 10:06 AM, Blogger G.Ragavan said...

வள்ளி வள்ளி பாட்டு போட்டுட்டீங்க. :-) ரொம்ப நன்றி.

புத்தம்புதுக்க்காலை பாட்டு தட்டுலயும் கேசட்டுலயும் உண்டு. ஆனா படத்துல கிடையாது.

 
At 8:38 PM, Blogger சிவா said...

உஷா அக்கா பதில் கொடுக்க தாமதமாகி விட்டது. மன்னிச்சுக்கோங்க. எனக்கு ராஜா பிறந்த நாள் பார்த்து வேலை ஆகி விட்டது. அதான் உடனே பாடல் கொடுக்க முடியவில்லை. 'வள்ளி வள்ளி' எல்லோருக்கும் பிடித்த ஒரு பாடல். புத்தம் புது காலை நம்ம ப்ளாக்கில் சசிகலா கேட்டிருந்தாங்க. அதான் கொடுத்தேன். நீங்க சொல்ற மாதிரி தான். இந்த பாட்ட கேட்டாலே, காலைல அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று இயற்கையை ரசிச்ச மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும். ராஜாவின் இசை அல்லவா :-)

 
At 8:41 PM, Blogger சிவா said...

சிவகுமார். 'வள்ளி வள்ளி' படத்தில் பார்க்க அவ்வளவு கொடுமையா என்ன :-). நம்ம ஊருல எத்தனை பாடல் படத்தில் ரசிக்கும் படி செய்திருப்பார்கள்.ம்ம்ம்.

 
At 8:43 PM, Blogger சிவா said...

ராகவன். 'வள்ளி வள்ளி' எல்லோருக்கும் புடிச்ச பாட்டு தானே..அதுவும் அந்த ஜெயசந்திரன் பாடலை விட இது புடிக்கும்னு சொல்லிட்டீங்க :-)). அப்புறம் போடாம இருப்பேனா.. :-))

//புத்தம்புதுக்க்காலை பாட்டு தட்டுலயும் கேசட்டுலயும் உண்டு. ஆனா படத்துல கிடையாது. // உண்மை..படத்தில் இல்லை. ஏனோ..தெரியவில்லை..

 
At 8:45 PM, Blogger சிவா said...

சிவகுமார்! மங்கை நீ மாங்கனி ரொம்ப சிம்பிளா ஒரே தபேலாவில் ரொம்ப எளிமையா, அழகா போகும் பாடல். முதல் வரிகளை பாடியது எஸ்.என்.சுரேந்தர் என்று நினைக்கிறேன். அவரையும் முழுவதும் பாட வைத்து இன்னொரு பாடல் எடுத்திருக்கலாம். நீங்க சொல்ற மாதிரி நன்றாக இருந்திருக்கும்..

 

Post a Comment

<< Home