சிரிப்பு வருது..சிரிப்பு வருது
பொதுவா இந்த பசங்ககிட்ட பொண்ணு 'உங்கிட்ட எனக்கு காதல் இல்ல. கா' அப்படின்னு சொல்லிட்டுன்னு வச்சிக்கோங்க. பார்ட்டி நம்ம கிட்ட வந்து "மாப்பிள்ள! நான்னா அவளுக்கு உசுருடா! எல்லாம் அவ அப்பன் காரன் பண்ணுற வேல" அப்படின்னு பொலம்புவானுங்க. அப்பவும் அப்பா மேல பழிய போட்டுட்டு பெண்ண விட்டு கொடுக்க மாட்டானுவ. எல்லா இடத்துலயும் இப்படி இடி வாங்குறது பொண்ண பெத்த அப்பன் தான்.
சினிமாவிலும் அதே தான். 'ஏன் சோக கதைய கேளு தாய்குலமே" பாட்ட மறக்க முடியுமா. அப்படி ரெண்டு பாடல்கள் இந்த பதிவில்.
கஸ்தூரி ராஜாவின் படங்களில் ராஜா நாட்டுப்புற இசைக்கு ஒரு புது இலக்கணம் வகுத்தார் என்றே சொல்லலாம். சினிமாவில் நாட்டுப்புற பாடல்களை உச்சத்திற்க்கு கொண்டு சென்றார். 'ஒத்த ரூவா' (நாட்டுபுறப் பாட்டு) ஊரெல்லாம் கலக்கியதை மறந்திருக்க மாட்டோம். இன்னும் 'வீர தாலாட்டு" 'கரிசகாட்டு பூவே" "கும்மி பாட்டு" போன்ற கஸ்தூரி ராஜா படங்களுக்கு ராஜாவின் இசையே தனி. இன்று வீரதாலாட்டில் இருந்து "வாடிபட்டி மாப்பிள்ள எனக்கு". கங்கை அமரன்-சைலஜா குரல் இந்த பாட்டிற்க்கு செம பொருத்தம். நான் முதல் பத்தியில் சொல்லியது போல "கூடலுரு கோணக்கண்ணன், கூட நக தாரமுன்னு கொழப்பிப்புட்டன் எங்கப்பன் மனச! ஆச ராசாவே" என்று பொண்ணு கூற "எல்லா உங்கப்பன் பண்ணுண வேல தானா" என்று இவரு வரிக்கு வரி அப்பனை வாரு வாருன்னு வாருவதும், சிரித்துக்கொண்டே கேட்கலாம். நேற்று ராஜாவின் பாட்டு DVD ஒன்ன தட்டிவிடும் போது, இந்த பாட்டில் மனசு மாட்டிக்கிட்டு. செம ஆட்டம். அப்படியே இன்று பதிவா போட்டச்சு. ஆடாம பாட்ட கேளுங்க :-)
இப்போ சின்ன வயசுல பாடிக்கிட்டே திறிஞ்ச ஒரு பாட்டு. தூரல் நின்னு போச்சு படத்தில் இருந்து 'ஏன் சோக கதைய கேளு! தாய்குலமே". இதுவும் ஊரெல்லாம் ஒலித்த பாட்டு. இந்த படமே இரு கிளாசிகல் காமெடி படம். T.M.S நம்பியாருக்கு 'மன்னாதி மன்னனை எல்லாம் பார்த்தவன் நான்" என்று தொடங்கும் ஆரம்பமே கலக்கல். மலேசியா வாசுதேவனுக்கு ஏற்ற பாடல். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பாக்கியராஜ் ரொம்ப அழகாக காண்பித்திருப்பார் (அந்த பாட்டி பாக்யராஜிடம் 'மாப்ள மாப்ள' என்று சைடு சப்போட்டு கொடுக்கும் காட்சிகள் சூப்பர்). இவரும் "அப்பனோட பேச்ச மட்டும் பெரிசாக நெனைக்கிறா" என்று அப்பனை வம்புக்கு இழுக்கிறார். "மங்களத்த பெத்தனே! ஒம்மனச மாத்திக்கடா" என்று கோரிக்க வேற வைக்கிறார். சிரித்து மகிழ பாடல் இதோ,
12 Comments:
இளையராஜா இசையில TMSஆ? நம்ப முடியலை. ஆனா பாட்டு நல்லா இருந்துச்சு. TMS கணீர் குரலும்.
சின்ன வயதில் பள்ளி நாடகமொன்றில் (கல்லாமை) இதே பாடலுக்கு வார்த்தைகளை மாற்றி போட்டு பாடியது பல வருடங்களுக்கு பின் இன்று உங்கள் பதிவு மூலம் பழைய ஞாபகங்கள் ,பின்னோக்கி எண்ணங்கள்.... சந்தோஷம் நன்பரே!
என்ன குமரன்! அப்படி சொல்லிட்டீங்க. 25க்கும் மேலான பாடல்கள் TMS ராஜா இசையில் பாடி இருக்கிறார். கேட்டிருப்பீர்கள். ஆனால் ராஜாவில் இசை என்று தெரிந்திருக்காது. "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு" (தியாகம்) 'நண்டூருது நரியூருது" (பைரவி) "அந்த புரத்தில் ஒரு மகராணி" (தீபம்)..இப்படி நிறைய இருக்கிறது.
வாங்க சிங்கு! என்னோட கீதம் ப்ளாக்கிற்கு முதல் வருகை. நன்றி. இந்த பாட்ட மாற்றி எல்லா இடத்திலும் பாடலாம். :-)
எனன சிவா, பாட்டெல்லாம் பலமா இருக்குதே, வெற ஏதும் இல்லீயே :)
குமரன், ஆச்சரியப்படாதீர்கள். இளையராஜா இசையில் ஆரம்பகாலத்தில் டீ.எம்.எஸ் நிறைய பாடியிருக்கின்றார். அன்னக்கிளியிலிருந்து. நிறைய பாடல்கள் இருக்கின்றன. இளையராஜ-டீ.எம்.எஸ் காம்பினேஷன்ல வந்த அத்தன பாட்டும் சூப்பர்.
சிவா சொல்லாத சில பாட்டுகள நானும் நினைவு படுத்துறேன்.
ஐம்பதிலும் ஆசை வரும்
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
அன்னக்கிளி உன்னைத் தேடுதே
இன்னும் நிறைய இருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வரவில்லை.
தியாகம் படத்தில் வரும்
தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
பைரவீல வரும் கட்டபுள்ள குட்ட புள்ள பாட்டும் உண்டே.
தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி....வெற்றிக்கு ஒருவன்
டண்! வெறும் பாட்டு தாங்க. வேற ஒன்னும் இல்லை ஐயா. நான் குடும்பஸ்தனுங்க. இந்த காலத்தை எல்லாம் கடந்து வந்தாகிவிட்டது :-))
ராகவன்! பழைய பாட்டுன்னா கரெக்டா ஆஜராகிடுறீங்க. எப்படி பழைய பாட்டெல்லாம் பொளந்து கட்டறீங்க. நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாமே நானும் கேட்டிருக்கிறேன். சிவாஜியின் கடைசி (கதாநாயகனாக) படங்கள் பலவற்றுக்கு ராஜாவின் இசை. அதில் TMS பாடியிருப்பார். உங்கள் பட்டியலுக்கு நன்றி ராகவன்
TMSஐத் தட்டிவச்சது ராஜா தான்னு ஒரு பேச்சு இருக்குல. அதனால அப்படி சொன்னேன். நானும் நீங்க சொன்ன பாடல்கள் நிறைய கேட்டிருக்கேன் சிவா & இராகவன். அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே மனதில் நிற்கும் பாடல்.
the singer is Kovai Krishnamurti not TMS.he has imitated the voice of TMS.Raja stoppes giving chances to TMS after he,i.e TMS ridiculed a song (Orombo, orombo, Rukimni Vandi Varuthu) in Ponnu OOruku Puthusu.
அதானே பார்த்தேன். TMS ஆவது IR இசையில பாடறதாவது. ஆரம்பத்துல பாடியிருக்கலாம். பின்னாடி சண்டை வந்திருச்சு.
ரவி! ரொம்ப ஆச்சரியமான தகவல்கள் சொல்லிருக்கீங்க. நம்பவே முடியலை. அது டி.எம்.எஸ் இல்லையா. தகவலுக்கு நன்றி.
யாருப்பா அது! இங்கே கலகம் உண்டு பண்ணுவது. குமரனா :-))
Post a Comment
<< Home