கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, January 02, 2006

நேயர் விருப்பம்- 5 & போட்டி எண் - 4

( போட்டி எண்-4 கீழே)

புது வருசம் எல்லாம் நல்லா கொண்டாடுனீங்களா?. மீண்டும் நேயர் விருப்பத்தில் சில ராஜா பாடல்கள் ரசிக்கலாம். பாடல் கேட்டதற்க்கு நன்றி. முதல் பாடல், நண்பர் முத்துகுமரன் அமீரகத்தில் (துபாய்) இருந்து 'இளையராஜா' பதிவில் 'எனக்கு புடிச்ச ராஜா பாட்ட கண்டுபுடிங்க' பாப்போம் என்று ஒரு குவிஸ் கொடுத்தார். குவிஸ் போடுற எனக்கே குவிஸ் போட்டுட்டு போய்ட்டார். "ராஜா தான் எல்லாமே. ஆனா படத்தில் ராஜா கெடையாது" என்று சொன்னார். ஐயா! எமக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். :-). சரின்னு அவரே பதில் சொல்லிட்டார். "இதயம் ஒரு கோவில்" இதயக் கோவிலில் இருந்து. ராஜா பாடியது. இப்போ..





அடுத்து, கீதாவின் விருப்பப் பாடல். பவித்ரன் என்று ஒரு இயக்குனர் இருந்தார். சரத்குமாரை வைத்து நிறைய படம் செய்திருப்பார் (வசந்தகால பறவைகள், சூரியன், ஐ லவ் இந்தியா). ரெண்டு பேருக்குமே கொஞ்சம் இசை ஞானம் அதிகம். இருவர் படங்களிலுமே அவ்வளவாக ராஜா இசையை பார்க்க முடியாது. அப்படி அபூர்வமாம வந்தது தன் 'ஐ லவ் இந்தியா". ராஜா ரொம்ப அருமையாக இசை அமைத்திருப்பார். "எங்கிருந்தோ என்னை" "காற்று பூவை பார்த்து" "குறுக்கு பாதையிலே" அப்புறம் "அடி ஆடி வரும் பல்லாக்கு". தீவிரவாதிகள் சரத்தின் தங்கையை அவர் கண் முன்னாடி காரில் இருந்து இறக்கி விட்டு ஓட விட்டு சுடுவார்கள். தேசிய கீதம் ஓடிக் கொண்டிருப்பதால், சரத் அட்டெண்சனில் இதை பார்த்து கொண்டிருப்பார். இப்படி நெறைய புல்லறிக்கும் காட்சியினால் படம் ஊத்திக் கொண்டது :-). கீதாவின் விருப்பமாக அடி ஆடி வரும் பல்லாக்கு. "ஜிங்கு ஜிங்கு ஜிக்கு ஜிய்யாலே" தாளம் போட்டுக்கிட்டே கேளுங்க.





அதே காலத்தில் ராஜா இதே போல இன்னொரு பாட்டும் கலக்கலாக போட்டிருந்தார். அது "விளக்கு வைப்போம்" ஆத்மாவில் இருந்து. அதையும் கேட்டு ஒரு ஆட்டம் போடுங்கள். இரண்டுமே S.ஜானகி பாடியது தான்.





மூன்றாவதாக, அக்கா மதுமிதா முதல் தடவையா "ஏண்டே! தென்பாண்டி சீமையிலே பாட்டு போடாம என்ன இளையராஜா பதிவு போடுற" என்று நம்ம போன பதிவில் சொல்லிருந்தாங்க. அக்காவின் விருப்பமாக இதோ 'தென்பாண்டி சீமையிலே" இளையராஜா ஆரம்பித்து வைக்க, கமல் தொடருவார். இது எப்படி பட்ட ஹிட் என்று சொல்ல தேவையில்லை. பாட்டு இதோ,





கடைசியாக, உஷா அக்காவின் விருப்பம். ஒரு பக்தி பாடல். "குரு ரமண கீதம்" ஆல்பத்தில் இருந்து "எங்கே சென்றாலும்". இது ஒரு டூயர் பாட்டுக்கு தான் சரியான தாளம். அதனால் தான் என்னவோ ராஜா இதை 'பொன்முடிபுழயோரத்" படத்தில் இதையே வைத்து கலக்கலாக ஒரு பாட்ட போட்டிருப்பார். ஏனோ! இதை பக்தி பாடலாக எடுத்து கொள்ள முடியவில்லை. சினிமா பாட்டு போல தான் இருக்கிறது. பாட்டு இதோ.





இதோ ஒரு கலக்கல் மலையாள பாட்டு. பக்தி பாட்டை ராஜா எப்படி டூயட் பாட்டாய் மாற்றி விட்டார் பாருங்கள். இது கேரளாவில் சமீபத்தில் பட்டையை கிளப்பிய பாட்டு. 'பொன்முடிபுழயோரத்" தில் இருந்து "ஒரு சிறி கண்டால்"






போட்டி எண் - 4:

கேள்வி கேட்டு நாளாச்சில்லா? அதான் இன்று போட்டாச்சு. இன்று Ludes எல்லாம் வேண்டாம். எளிதான பாட்டு ரெண்டு. பாட்ட கேளுங்க. பாட்டோட மொத வரி, பாட்டு என்ன படம் என்று சொல்லுங்க. சீக்கிரம் சொல்லுங்க, எளிது தான்.





2. S.P.Bக்கு அலம்பல் மன்னன் என்று ஒரு பட்டம் கொடுக்கலாம். நெனைச்சா ஹை பிச்-ல பாடுறதும், டக்குன்னு லோ பிச்-ல வருவதும், சிரிப்பதும். அடடா! கேட்டு பாட்ட கண்டு பிடிங்க. படமும் என்னன்னு சொல்லிறணும்.




16 Comments:

At 9:51 AM, Blogger சிவா said...

உஷா! சரியா சொல்லிட்டீங்களே! முதல் கேள்விக்கு விடை என்ன?.

 
At 12:27 PM, Blogger தங்ஸ் said...

Missed ur blog for a while..Ippathaan ella pathivukalayum paarthen..Very nice.

En Ilayaraja choice: 'vaanam paartha karisakkaadu' from 'karisa kaattu poove'..

 
At 6:53 PM, Blogger சிவா said...

வாங்க Thangs! ரொம்ப நாளா ஆளையே காணோமே என்று நெனைச்சிக்கிட்டு இருந்தேன். வந்தவுடன் நச்சுன்னு ஒரு பாட்டா சொல்லிட்டீங்க. எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு. அடுத்த பதிவுலேயே கேட்டுடலாம். அந்த பாடலின் கவிதை ரொம்ப அழகு. ராஜாவின் குரலும் அழகு.

உஷா! என்ன! பதில் மட்டும் சொல்லிட்டு போய்ட்டீங்க. மற்ற பாட்டுகளை பற்றி சொல்லவே இல்லை. நேரம் கிடைக்கும் போது கேட்டு சொல்லுங்க.

 
At 7:24 AM, Anonymous Anonymous said...

வணக்கம் சிவா! எப்படி இருக்கிங்க..

long weekend, நல்லா ஊர் சுத்தியாச்சு நாங்க.

பாட்டெல்லாம் சுப்பர். குறிப்பா 'விளக்கு வைப்போம் ' எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்... படக்காட்சியும் அழகா இருக்கும்.. பொதுவா இந்த மலை.. மலை சார்ந்த பாடலெல்லாம் அருமையா அமைஞ்சிடுது. ( மீன் கொடி தேரில், ஆசைய காத்துல தூது விட்டேன்..(சரிதானே?? ))

குருரமணகீதம் நான் ஒரு முறைதான் கேட்டிருக்கேன்.

போட்டி பாடல் தெரிஞ்ச மாதிரி இருக்கு..

இது சரியா பாருங்க..

பாடல் : ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
படம் : ஊரேல்லாம் உன் பாட்டு

(தப்புணு தான் நெனைக்கிறேன்.. ம்ம்)

அன்புடன்
கீதா

 
At 8:56 AM, Blogger சிவா said...

கீதா! ஊர் சுத்திட்டு வந்துட்டீங்களா?. நல்லது. நான் சில நன்பர்களை பார்த்ததோடு சரி. :-)
கேள்வி பாட்டு நல்லா கேட்ட பாட்டு மாதிரி இருக்குதா :-), ஆனா நீங்க சொன்ன பாட்டு இல்லை. க்ளு சீக்கிரம் கொடுக்கறேன். உங்க ராஜா பாட்டு பதிவுக்கு காத்திருக்கிறேன். சீக்கிரம் போடுங்க.

 
At 2:28 PM, Anonymous Anonymous said...

Folks,
Enjoy Raaja ‘s bhakthi bhava & simple orchestral artistry in ‘amma janani....’ and ‘kamakshi....’-album Geethanjali, ‘sadhaa sadhaa.....’,’vinnor thozhum....’, ’pichai pathiram.....’- simple violin, tabla, flute soothes your soul from the devotional album Raajavin Ramanamalai and I am listening to Geetha vazhipadu now- what a soulful singing by Raaja with apt elegant orchestration with veena, keyboard, tabla, guitar preludes, flute interludes - ‘aanandha vellam neeyandro....’, ‘vaigai nadhikkaraiyil....’-amazing aa yerukkum!!! ‘manikka silaiye...’ Raaja simply thaalattu-with veena, flute and tabla!! Geetha vazhipadu is my favorite album!!
vinatha

 
At 2:30 PM, Anonymous Anonymous said...

Raaja voda devotional nnu branch aaye poyetten, will be back to enjoy the songs Siva hosts....vinatha

 
At 3:23 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! உங்களை அடிக்கடி இங்கே பார்ப்பதில் சந்தோசம். நீங்க சொன்ன இரண்டு ஆல்பமும் இப்போ என்னிடம் இல்லை. இனி இந்தியா போகும் போது தான் வாங்கணும். நீங்க சொல்றத பாத்தா "குரு ரமண கீதம்"-தை விட மற்ற ரெண்டும் நல்லா இருக்கும் போல

 
At 3:25 PM, Blogger சிவா said...

என்ன உஷா அக்கா! மனோ-ஜானகி பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு. ஆனா டக்குன்னு எந்த பாட்டுன்னு தெரிய மாட்டேங்குதா. கஷ்டமாகவே கேட்கறேனா? என்ன?. சீக்கிரம் க்ளூ கொடுக்கறேன். முழு பாட்டையும் கேட்கலாம்.

 
At 6:23 PM, Anonymous Anonymous said...

Siva, Why wait???
Naan petra inbum neeyum peruga!!
check them out in
http://www.raaga.com/channels/tamil/devotional.asp
This day is a GREAT DAY !!!!

 
At 4:06 AM, Blogger சிவா said...

வினதா அக்கா! ராகாவுல போய் பாட்ட கேட்டேன். உண்மையிலேயே நீங்க சொன்ன மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. இத வாங்காம விட்டுட்டேனே. இந்த முறை கண்டிப்பா வாங்கணும். 'அம்மா பாமாலை' கேட்டீங்களா?

 
At 5:53 AM, Blogger Maravandu - Ganesh said...

//பாட்டோட மொத வரி, பாட்டு என்ன படம் என்று சொல்லுங்க. சீக்கிரம் சொல்லுங்க, எளிது தான்.//

படம் : எல்லாமே என் ராசாதான்
பாடல் : அழகான மாடப்புறா ?

சரியா ?


என்றும் அன்பகலா
மரவண்டு

 
At 6:51 AM, Blogger சிவா said...

கணேஷ்! பாட்டை கேட்டு முயற்சி செய்ததுக்கு நன்றி .அது அழகான மாடபுறா பாட்டு இல்லை. என்னோட இன்றைய பதிவில் கேள்விக்கான ஒரு க்ளு கொடுத்திருக்கிறேன். முயற்சி பண்ணுங்க :-)

 
At 10:11 AM, Anonymous Anonymous said...

Siva, Have you read the yahoo group mail from Project gem!! We are lucky, they are bringing Geetha vazhipadu and rest of the devotional gems in CD!! Please support projectgem!!
Friends, for Raaja's gems
visit
http://project-gem.tripod.com/

 
At 6:58 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! ப்ராஜக்ட் ஜெம்-ல அனைத்து வெளியீட்டையும் வாங்கி கொண்டிருக்கிறேன். 13 வரைக்கும் வாங்கியாச்சு. நேத்து தான் மறுபடி ஒரு 2000 ரூபா அனுப்பி வைத்தேன். சீக்கிரம் ப்ராஜக்ட் ஜெம் பற்றி ஒரு தனி பதிவு போட போகிறேன்.

 
At 7:04 PM, Blogger சிவா said...

போட்டியின் முதல் கேள்விக்கும் உஷா அக்கா பதில் சொல்லிட்டாங்க (அடுத்த பதிவில் சொல்லிருக்காங்க). பதில்: பாட்டு: பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு. படம்: தங்கமனசு காரன். அடுத்த பதிவில் முழு பாட்டையும் கேட்க தவறாதீர்கள். ரொம்ப அருமையான பாட்டு.

 

Post a Comment

<< Home