கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, January 03, 2006

குயில் பாட்டு

இந்த பதிவில் சில என் விருப்பங்கள். நிறைய பேருக்கு புடிக்க வாய்ப்பில்லை :-). இருந்தாலும் என் விருப்பமும் போடணும்லா. என்ன சொல்றிய?. சில மென்மையான அருமையான சின்ன(இப்போ பெரிய குயிலாயிட்டாங்க) குயில் சித்ரா பாடல்கள். சித்ரா பாட்டு என்றால் சொல்லிக்கிட்டே போகலாம். பூவே பூச்சூடவா, சிந்து பைரவி இப்படி நிறைய (கமெண்ட் கொடுக்கும் போது கண்டிப்பா பட்டியல் போடுவீங்க). இவை எல்லாம் தவிர்த்து சில அறிய பாடல்கள். அவ்வளவாக கேட்காத பாடல்கள் இவை.

1. "புதிய ராகம்" பாடல்கள் எல்லாமே மிகவும் அருமையான பாடல்கள். நடிகையின் பெயர் ஜெயசித்ரா என்று நினைக்கிறேன் ( பணக்காரன்ல ரஜினிக்கு அம்மாவா வருவாங்களே). அவுங்களு ரொம்ப லேட்டா ஹீரோயினா நடிக்கணும் என்று வந்த ஆசையின் பயனே "புதிய ராகம்". ரகுமான் தான் ஹிரோ. இந்த படத்தை பார்க்க மறைந்த ராஜீவ் காந்திய வேற கூப்பிட்டதாக சொல்லிருந்தாங்க (அரசியல் செல்வாக்கு அதிகமோ?). படத்தின் மிக பெரிய புண்ணியம் ராஜாவின் இசை. சில பாடல்கள் கேட்க கேட்க போர் அடிப்பது மாதிரி தோன்றும். "புதிய ராகம்" பாடல்கள் எனக்கு அப்படி இல்லை. தினமும் கேட்பேன். கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் கேளுங்க.





2. ஒரு கிராமத்து குயிலின் பாட்டு. எங்க ஊரு காதல பத்தி என்ன நெனைக்கிற. இந்த குயில் பதில் சொல்கிறது. சித்ராவுக்கென்றே போட்ட பாட்டு போல. புது பாட்டு படத்தில் இருந்து.





3. 'சின்னப்பதாஸ்'. சத்யராஜ்-ராதா நடித்த படம். சாதா மசாலா படம். 'பாடும் பக்த மீரா' கேட்டிருக்கீங்களா?. இந்த படத்துல இன்னொரு அருமையான பாட்டு 'வானம் தொடாத மேகம். பாட்டு இங்கே.





4. 'இரவின் மடியில்' என்ற தலைப்பில் போட வேண்டிய பாட்டு இது. அமைதியோ அமைதி. எங்கேயுமே ஓங்கி ஒலிக்காத இசை. 'நினைவு சின்னம்' படத்தில் இருந்து. ராஜாவின் ஹம்மிங் நல்லா இருக்கு.






சூப்பர் டூப்பர் ஹிட் எல்லாம் எங்கேன்னு கேட்க கூடாது :-). வரும் பதிவுகளில் வரும். இப்போ கேட்ட பாட்டெல்லாம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

( போட்டி எண்-4 கேள்வி 1 க்கு ஒரு சின்ன க்ளூ. அது ஒரு முரளி படம். விடை அடுத்த பதிவில் வரும் :-)).

4 Comments:

At 11:49 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவா. குயில் பாட்டு நாலும் நல்லா இருக்கு. 1 & 2 ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருக்கேன். ரொம்பப் புடிச்சது.

 
At 6:55 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! மைனர் ஸ்கேல் பாட்டுன்னு சொல்லி கலக்குறீங்க. நானும் C.S.R சொல்லி கொடுத்தத இந்த புதுவருசத்துல தான் மறுபடியும் படிக்க ஆரம்பித்தேன். கீ போர்டையும் மறுபடி எடுத்திருக்கிறேன். எப்படி போகுதுன்னு பார்ப்போம். "வானம் தொடாத மேகம்" நீங்க சொன்ன மாதிரியே ரொம்ப அழகான கம்போசிசன். //** நல்ல ரசனை உங்களுக்கு **// :-)) ஆமாம். நம் எல்லோருக்குமே அப்படி தான். எல்லாம் ராஜா நமக்கு கொடுத்த சின்ன இசை ஞானம் :-)). இல்லையா!

முரளி படம்னு சொன்னவுடன் கண்டுபுடிச்சிருவீங்கன்னு தெரியும்
:-). இந்த பாட்ட நான் கேள்வியா போட்டதன் காரணமே அந்த சரணத்தின் அழகு தான். ரொம்ப அழகான பாட்டு இல்லையா! கண்டிப்பா அடுத்த பதிவில் முழு பாடலும் கேட்டு மகிழலாம்.

குமரன்! பாட்ட கேட்டதற்க்கு நன்றி. 2 வது பாட்டு அடிக்கடி கேட்டிருக்கீங்களா?. ஆச்சரியமா இருக்கே :-)

 
At 10:29 AM, Anonymous Anonymous said...

"வானம் தொடாத மேகம்.." அருமையான தேர்வு.

முதல் இரண்டு பாடலும் அருமை.

அன்புடன்
கீதா

 
At 8:10 PM, Blogger சிவா said...

கீதா! வாங்க. என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்?. உண்மை. 'வானம் தொடாத மேகம்' ரொம்ப நல்ல கம்போசிசன்.

 

Post a Comment

<< Home