ஓ..வசந்த ராஜா ( நேயர் விருப்பம்)
அடுத்த நேயர் விருப்பம். கீதாவின் விருப்பமாக "நீங்கள் கேட்டவை" படத்தில் இருந்து "ஓ..வசந்த ராஜா" பாடல். இந்த பாடலின் சிறப்பு பற்றி நண்பர் சதிஷ் அழகாக கூறி இருந்தார். முதல் Interlude and சரணம் மிருதங்கம்/தபேலா வில் அமைத்திருப்பார். இரண்டாவது Interlude-ல் இருந்து சரணம் முடியும் வரை Western-ல் அமைத்திருப்பார். கவனித்து கேட்டு மகிழுங்கள்.
படம்: நீங்கள் கேட்டவை
பாடல்: ஓ...வசந்த ராஜா
பாடியவர்கள்: S.P.B & S.ஜானகி
இசை: 'இசைஞானி' இளையராஜா
7 Comments:
வாவ்! எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த பாடல்
ஐயா
உங்களுக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...என் பேரு சதீஷ் -ங்க ஐயா...
செந்தில் இல்லீங்க ஐயா.
குறிப்பிட்டமைக்கு வந்தனமுங்கய்யா ! வாரேனுங்க !
- சதீஷ் -
மன்னிக்க வேண்டும் சதிஷ்! இப்போது சரியாக உங்கள் பெயரை போட்டு விட்டேன். ஏதோ நியாபத்தில் தவறுதலாக போட்டு விட்டேன் :-)
வாத்திய கருவிகளின் மீது விளையாடி இருக்கும் ஜானகியின் குரலைப் பத்தி சொல்லாமல் விட்டுடீங்களே......
உஷா! இந்த பாடல் காட்சி சரியாக நினைவுக்கு இல்லை எனக்கு. இடங்களை சொன்னதற்க்கு நன்றி. அடுத்த தடவை பார்க்கும் போது கவனிக்கிறேன்.
முத்துக்குமரன், //**வாத்திய கருவிகளின் மீது விளையாடி இருக்கும் ஜானகி **// உண்மை தான். ஜானகியின் குரலே ஒரு வாத்தியம் தான். நினைவு படுத்தியமைக்கு நன்றி
என் விருப்பப்பாடலை போட்டதற்கு நன்றி. :)
நான் இன்னோரு பாடல் சொல்றேன். ரொம்ப அருமையான பாடல். ஆனா எனக்கு எங்கயும் கிடைக்கலை. உங்ககிட்ட இருந்தா தயவுசெய்து பதிவுல போடுங்க இல்லை எனக்கு தனி மடலில் அனுப்புங்க. இப்ப இல்லைனாலும் எப்ப கிடைக்குதோ அப்ப.
பாடல்: பூ முகம் சிவக்க சோகம் என்ன நான் இருக்க
பாடியவர்: சுஷீலா P
படம்: அம்மா
இசையமைப்பாளர்: இளையராஜா (என்றுதான் நினைக்கிறேன்)
இவ்வளவு விவரம் இருந்தும் பாடல் கிடைக்கவில்லை.
:)
உங்களிடம் இருக்கிறதா?
geeths@gmail.com
நான் குறிப்பிட்ட "அம்மா" படத்தில் இன்னொரு பாடலும் உள்ளது
பாடல்: மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
பாடியவர்: S P B
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
(இந்த படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர் மட்டுமா இல்லை வேறு சிலர் இசையமைத்திருக்கிறார்களா தெரியவில்லை)
மழையே மழையே பாடல் எனக்கு கிடைத்தது ஆனால் " பூ முகம் சிவக்க" பாடல் கிடைக்கவில்லை
உங்களிடம் இருந்தால் பதிவில் இடவும் அல்லது எனக்கு தனிமடலாக இட்டாலும் மிகுந்த மகிழ்ச்சி.
:)
Post a Comment
<< Home