கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, November 26, 2005

இந்த பாட்டுக்கு நான் அடிமை & போட்டி-2

(போட்டி எண்-2 விவரங்கள் கடைசியில்)

ராமராஜன் படத்திற்க்கு இளையராஜா இசை எப்பவுமே விஷேசம் தான். அப்படி என்ன இரண்டு பேருக்கும் பொருத்தம் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து இரண்டு பேரும் சேர்ந்து பேசியது போல புகைப்படம் கூட நான் பார்த்ததில்லை. ஒரு வேலை, ராமராஜன் படத்தின் கிராமத்து பிண்ணனி, ராஜாவிற்க்கு பிடித்திருக்குமோ? என்னமோ?

பொதுவாகவே ராமராஜன் பாடல்களில் ராஜா அவ்வளவாக வித்தியாசமான முயற்சிகள் செய்தது கிடையாது. பொதுவாகவே கிராமத்து பிண்ணனி என்பதால், டிரம்ஸ், ட்ரம்பட்,பியானோ என்று பயன்படுத்த முடியாது. ரெண்டு டூயட், ராமராஜனின் அத்தை பொண்ணு பாடும் தனி பாட்டு, அம்மா பாட்டு இப்படி ஒரு வட்டத்துக்குள்ளேயே அமைந்துவிடும். அதில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான களம் கொடுத்தப்படம் "பாட்டுக்கு நான் அடிமை". ராமராஜன் கிராமத்தில் இருந்து ஒரு பெரிய இசை கலைஞராவது போல போகும் படம். "How to Name it" ல் இருந்து நிறைய இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

இந்த படத்தில் இருந்து ஒரு பாடல். ரயிலின் சத்தத்தை வைத்து அவர் அமைத்த "தாலாட்டு கேட்காத பேர் இங்கு" பாடல். ரயிலின் ஓட்டமே ஒரு தாலாட்டு தான். அதன் 'தடக் தடக்' சத்தமும், ஆட்டமும் எல்லோரையும் தாலாட்டுவது நிச்சயம். அதில் ராஜாவில் இசையும் கலந்தால், கேட்கவா வேண்டும்.

"டடக்..டக் டடக்...டக்" என்று ஒரே பீட்டில் பாடல் ஒரே சீராக போக, "சிக்குபுக்கு சிக்குபுக்கு" என்று இன்னொரு சத்தமும் சேர்ந்து ஓடி வர, அங்கே அங்கே அதே ஓட்டத்தில் இணைந்து கொள்ளும் வயலின் அழகோ அழகு. Second interlude-ல் ரயிலின் விசில் சத்தமும் அதற்க்கு பதில் சொல்வது போல் வரும் வயலினும் (கொட்டங்கச்சி!!!) என்னை கவர்ந்தவை. முதல் பல்லவி முடியும் போது "எரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு" என்று மனோ முடிக்கும் போது, அவர் ரயிலின் விசில் சத்தத்தை ஒரு வாத்தியமாக பயன்படுத்தி இருக்கும் விதம் அலாதி.

பாடலின் பொருளும், மனோவின் குரலும் இப்பாடலுக்கு சில கூடுதல்கள். மனோ, ராஜாவால் ஒரு சிறந்த பாடகராக்க பட்டவர். தன் குரலால் இவ்வளவு தான் முடியும் என்ற வட்டத்துக்குள் அடக்கி வாசித்து ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் நன்றாக பாடியிருப்பார். இந்த பாடல் வந்த புதிதில் நான் திடீரென்று மனோ ரசிகனாகி மனோ பாடல்களாக சேர்க்க ஆரம்பித்தேன்.

சரி! இப்போ பாட்ட கேட்டு மகிழுங்கள்.

படம்: பாட்டுக்கு நான் அடிமை
பாடல்: தாலாட்டு கேக்காத
பாடியவர்: மனோ
இசை: இளையராஜா






போட்டி எண்-2

முதல் போட்டிக்கு கீதா சரியான பதில் சொல்லியிருந்தாங்க. இந்த பதிவில் இரண்டாவது போட்டிய பார்க்கலாம். கீழே உள்ள கிடார் இசையை கேளுங்கள். இது இடம் பெற்ற பாடல்களின் முதல் வரியை கூறுங்கள். வழக்கம் போல பரிசாக உங்கள் விருப்ப இளையராஜாவின் பாடல் அடுத்த பதிவில் போடப்படும். அதிக கேள்விகளுக்கு பதில் சொல்றவங்களுக்கு பரிசு (மூன்று கேள்விகளுக்கும், அல்லது குறைந்தது இரண்டு).

கேள்வி-1





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கேள்வி-2





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

கேள்வி-3





ரியல் பிளேயர் வேலை செய்யாதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.


2 Comments:

At 7:04 AM, Blogger சிவா said...

உஷா! சரியான பதில். எனக்கு தெரியும் நீங்கள் விடை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று. மூன்றுக்கும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நினைத்தேன். மூன்றாவது பாடலின் விடை "ரோஜா ஒன்று...உள்ளங்கையில் பூத்தது". "ஓ! மானே! மானே" படத்தில் இருந்து (மோகன், ஊர்வசி). உங்கள் விருப்பப் பாடலை சொல்லுங்கள். அடுத்த கேள்வி மிக விரைவில்.

 
At 11:22 AM, Blogger குமரன் (Kumaran) said...

இந்த பாட்டுக்கு நானும் அடிமை சிவா. பாடல் நன்றாய் இருக்கிறது. :-)

 

Post a Comment

<< Home