அண்ணன்-தங்கை பாசம்..
இந்த அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் காலகாலமாய் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு வந்த பாசமலரில் இருந்து நேத்து வந்த சிவகாசி வரை இந்த சென்டிமென்டுக்கு மவுசோ மவுசு. நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். பொதுவாகவே நமக்கு இளையவதாக கூட பிறந்தது யாராவது இருந்து விட்டால், நமக்கு பாசம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விடும். அதிலும் அக்கா-தம்பி என்றாலோ, அண்ணன்-தங்கை என்றாலோ, பாசமழை தான். தங்கைக்காக சேர்த்து வைக்கும் ஒரு ஆரஞ்சு மிட்டாயிலிருந்து, கல்யாணம் ஆகி தங்கைக்கும் ஒரு குழந்தை பிறந்து 'தாய் மாமன்' என்ற உரிமையில் அதை கொஞ்சும் வரை அண்ணன்-தங்கை பாசம் ஒரு தொடர்கதை தான்.
தங்கைக்கு குழந்தை பிறந்தவுடன் பறி போவது தாய் மாமனின் வேட்டி தான் (தாய் மாமனின் வேட்டி/கைலி- யில் தூங்கினால் தான் குழந்தைக்கு உடம்பு வலிக்காதாம்). இப்படி சின்ன சின்ன விசயத்திலும் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் நிறைய வைத்திருக்கிறார்கள், நம் பெரியவர்கள். அந்த குழந்தை வளர்ந்து அதன் கல்யாணத்திலும் 'தாய்மாமன் சடங்கு' என்று தாய்மாமனுக்கு முக்கியத்துவம் வைத்திருக்கிறோம். இப்படி நம் வழக்கத்தில் அண்ணன்-தங்கை பாசத்திற்க்கு , திருமணத்திற்கு அப்புறமும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த பதிவில் எனக்கு பிடித்த அண்ணன்-தங்கை பாடல்கள் இரண்டு பார்க்கலாம். இரண்டுமே S.P.B யின் குரலில். இரண்டு பாடல்களிலுமே எளிமையான இசை, வளமையான குரல், செழுமையான வரிகள்....கேட்டு மகிழுங்கள்.
முதல் பாடல் வரிகள் தங்கை பாடுவதாகவே அமைந்தது. எனக்கு S.P.B பாடிய Version பிடிக்கும் என்பதால் அதையே போடுகிறேன். முதல் பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.
கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்க்கு..அண்ணன் மொழி கீதை அன்றோ...அதன் பேர் பாசமன்றோ.
படம்: அண்ணன் ஒரு கோவில்
பாடல்: அண்ணன் ஒரு கோவில் என்றால்...
படம் : ராஜராஜேஸ்வரி
பாடல்: என் கண்ணின் மணியே..
6 Comments:
முதல் பாட்டை நான் பலமுறை கேட்டுள்ளேன் சிவா. இரண்டாவது பாட்டை கேட்பது இது தான் முதல் முறை. இரண்டு பாடல்களும் நன்றாய் இருந்தன.
Anbe naan annan alla,unnai eanra annai naane - Naan sigappu manithaan. Eppadi namma selection?
தங்கம். மிக அருமையான பாடல்ங்க அது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.
குமரன்! எல்லா பாடலும் கேட்டுடறீங்க. நன்றி. இரண்டாவது பாடலும் கொஞ்சம் பிரபலமான பாடல் தான். ரேடியோ மட்டும் இருந்த காலத்தில் நெறைய கேட்டிருக்கிறேன்.
முதல் பாடல் நான் கேட்டுள்ளேன். அதை சுசீலாவின் குரலில் கேட்டுள்ளேன். மிகவும் அருமையான பாடல். எஸ்.பி.பீயின் குரலில் இதுதான் முதன்முறை.
"தென்கிழக்குச் சீமையிலே" பாட்டைப் பாடி என் தங்கையை எந்த வேலையைச் சொன்னாளும் அவள் செய்வாள். அதை மிஸ்யூஸ் செய்ததும் உண்டு. அந்த வயதில் நடப்பதுதானே.
உஷா அக்கா! இரண்டாவது பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. எஸ்.பி.பி ரொம்ப அருமையாக பாடியிருப்பார் (முக்கியமாக "செந்தூர பொட்டிட்டு பூச்சூட்டவா.." என்று ஆரம்பிக்கும் போது ரொம்ப அருமையாக இருக்கும். "ஒரு தங்கரதத்தில்' பாட்டு இருந்தா பார்க்கிறேன்
ராகவன்! "தென்கிழக்கு சீமையிலே" பாட்டுக்கு அப்படி ஒரு பயன் இருக்கிறதா?. நான் தான் வீட்டில் கடை குட்டி, முயற்ச்சி செய்து பார்க்க வழி இல்லை.
Post a Comment
<< Home