நானொரு பொன்னோவியம் கண்டேன்
போட்டி-1 ல் சரியான பதிலை சொல்லிய கீதாவின் விருப்பப் பாடல் "கண்ணில் தெரியும் கதைகள்" படத்தில் இருந்து "நானொரு பொன்னோவியம் கண்டேன்" பாடல். S.P.B, P.சுசிலா, S.ஜானகி பாடியது.
பாடலை கேக்கறதுக்கு முன்னாடி, சில தகவல்கள். "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்க்கு இசை அமைத்தவர்கள் ஐந்து பேர். இளையராஜா, சங்கர் கணேஷ், GV வெங்கடேஷ், TR பாப்பா, KV மகாதேவன். ஆளுக்கு ஒரு பாட்டு. இந்த ஐந்து பேரில் வெற்றி பெற்றவர்கள் இரண்டு பேர். "நானொரு பொன்னோவியம்" போட்ட இளையராஜா, "நான் உன்ன நெனைச்சேன். நீ என்ன நெனைச்சேன்" போட்ட சங்கர் கணேஷ். ரெண்டுமே பட்டையை கிளப்பிய பாடல்கள். மற்ற மூன்று பாடல்கள் என்ன என்று தெரியவில்லை.
இது தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இனைந்து இசையமைத்த முதல் படமாக இருக்க வேண்டும். சமீபத்தில் "சுயம்வரம்" என்று ஒரு படத்தில் சாதனை பண்ணுகிறேன் பேர்வழின்னு, ஊர்ல இருக்கற இசை அமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் எல்லோரையும் மொத்தமாக போட்டு ஒரு படம் செய்தார்கள். அது ஒரே நாளில் முடித்த படம் என்ற ஒரே ஒரு சாதனையை மட்டுமே செய்தது :-(
கீதா! சரியாக இளையராஜா பாடல் என்று இந்த பாடலை கேட்டிருக்கீங்க. உங்களுக்கு மேலே சொன்ன தகவல்கள் தெரிந்திருக்கும். சரி தானே!
சரி. இப்போ பாட்டு. பாட்ட கேட்டா பெரு மூச்சு தான் வருது..ம்ம்ம்.. அதெல்லாம் அந்த காலம்..
அடுத்த போட்டியை சீக்கிரம் பார்க்கலாம். பாட்ட கேட்டுட்டு இந்த ப்ளாக் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
16 Comments:
நல்ல பாடல் சிவா மற்றும் கீதா. இந்தப் பாடலை நான் சிறு வயதில் நிறைய முறை கேட்டிருக்கிறேன்.
என் விருப்பப்பாடல் போட்டதற்கு நன்றி சிவா :)
அற்புதமான பாடல்
ஆமாம் நீங்கள் மேற்கூறிய தகவல்கள் எனக்கும் தெரியும், அதோட அந்த காலகட்டத்துல 'நான் உன்னை நெனைச்சேன்.. நீ என்ன நெனைச்ச.." பாடல் பயங்கர பிரபலமாம். இளையராஜா அவர்கள் இசையமைச்ச "நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்.." என்ற இந்த பாடலை அது பயங்கரமா dominate பன்னிருச்சின்னு மக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.
அது உண்மைதான்னு நினைக்கிறேன் ஏன்னா இப்பவும் "உன்னை நெனச்சேன் " பாடல் தான் பெரும்பாலும் பலருக்கு தெரிஞ்சிருக்கு.
---
நேயர் விருப்பம் போடுவிங்களா? சரி முதல்ல நான் கேட்டுடறேன்
பாடல்: "ஓ வசந்த ராஜா.. தேன் சுமந்த ரோஜா.."
படம்: நீங்கள் கேட்டவை
அப்படியே இந்த பாடலின் சிறப்பையும் மக்களுக்கு சொல்லுங்க
நன்றி
வசிகர்! எல்லோருக்கும் பாடல் வேலை செய்கிறது. ஒரு வேலை உங்கள் இனைப்பு மெதுவாக இருக்கிறதோ என்னமோ?. இதையும் முயற்ச்சி செய்து பாருங்கள்.
http://www.geocities.com/iirpithan/Geetham/NaanoruPonnoviyam.rm
சிவா - கொஞ்சம் நாட்களாக இங்கே வந்து கருத்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமே கிடைப்பதில்லை. நல்ல பாடல்கள்;
இந்தப் பாடலைப்பற்றிய என்னுடைய பழைய பதிவு இங்கே:
http://www.domesticatedonion.net/blog/?item=400&category=music
வெங்கட்! அட நீங்க நம்ம ஆளா (பாட்டு கேக்கறதுல). உங்க இனையம் போய் பார்த்தேன். பொளந்து கட்டுறீங்க. உங்க மாதிரி எனக்கு இசை ஞானம் கிடையாது. இளையராஜா பாட்டு நல்லா ரசிப்பேன். வாத்திய கருவிகள் பயன் படுத்திய விதம், ஓட்டம் இப்படி நிறைய ரசிப்பதுண்டு. ஆனால் விளக்கி சொல்ல தெரியாது. சரி நம ரசிக்கிறத மத்தவங்களும் ரசிக்க போடலாம்னு தான் இதை ஆரம்பித்தேன். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.
நானொரு பொன்னோவியம் பற்றி தூள் டாட் காமில் எழுதியது நீங்க தானா?. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள். நானும் படித்து மகிழ்கிறேன்.
கீதா! அழகழகா பாட்டு சொல்லறீங்க. 'ஓ வசந்த ராஜா' சீக்கிரம் போட்டுடலாம். அந்த பாடல் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்.
குமரன்! சின்ன வயசு நியாபகம் வந்ததா?, சந்தோசம். ஒவ்வொரு பாடலும் அந்த கால கட்டத்தை, நாம் அப்போது எப்படி இருந்தோம் என்பதை நினைவுக்கு கொண்டு வரும். அது தான் பாடல்களின் மகிமை.
உஷா! ராகமெல்லாம் சொல்லி கலக்கறீங்க. அடியேனுக்கும் சொல்லி கொடுங்கள் (நிஜமா தான்). ராஜாவினால் விளைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. நான் 90ல் வெளிவந்த அரிய பாடல்கள் போடலாம்னு தான் நினைக்கிறேன். ஆனால் எல்லோருக்கும் உங்களை மாதிரி 80 ல் வந்த பாடல்கள் தான் புடிக்குது. சீக்கிரம் நம்ம ரசனையையும் போடுகிறேன். உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நினைக்கிறேன்.
வசிகர்! உங்களுக்கு பாடல் கேட்க முடிந்ததா. சொல்லுங்கள்.
சிவா,
நானும் ரொம்ப நாளா பின்னூட்டம் இடனுமுன்னு பார்த்து மறந்து போது.
நல்லா இருக்கு உங்களின் பாடல் பதிவு.
நல்ல பாடல்கள்.
நன்றி.
நன்றி கல்வெட்டு, உங்கள் பின்னூட்டத்திற்கு. நீங்கள் பாடல்களை கேட்பது அறிந்து மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது வந்து பாட்ட கேட்டுட்டு கருத்துக்களை சொல்லுங்க.
Good going !
As far as I know, the speciality in the 'Oh Vasantha Raaja' song lies in the orchestration of the whole song.
If you closely listen to its prelude and the interludes, you can clearly see it.
In the First interlude and the first charanam, Raaja sir has used Tabla / Mridangam etc in the background score. but as the second interlude starts, it takes you into a whole different set of western instruments. mostly 'Drums'. The background music also is pure western music thereafter.
Have a close attention to the song, you will appreciate it a lot more better.
Also, the song is based on Some variety of Kalyani Raaga, I believe. Experts can confirm on that.
Thanks.
Keep up the good work !
சதிஷ், வாழ்த்துக்களுக்கு நன்றி. நானும் உங்களை மாதிரி தான். Prelude, interlude எல்லாம் கவனித்து ரசிப்பது உண்டு. 'ஓ வசந்த ராஜா' பாட்டுக்கு அழகாக நிறைய விசயங்கள் சொல்லிவிட்டீர்கள். நன்றி. பாடல் போடும் போது இதையும் சேர்த்துவிடுகிறேன். நீங்கள் அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களையும், பாடலை பற்றி விசயங்களையும் கூறுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
நான் உன்ன நினைச்சேன்
நீ என்ன நினைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா?
மூன்று பேர் பாடுவதாக அமைந்த பாடல்-னு நினைக்கிறேன்.
சரத்பாபு,ஸ்ரீ ப்ரியா,வடிவுக்கரசி???
மதுமிதா! இப்போதான் இங்கே உங்களை பார்க்கிறேன். வருகைக்கு நன்றி. ஆமாம். அது மூன்று பேர் பாடுவது தான். கீதா சொன்ன மாதிரி, அந்த பாடல் அந்த காலத்தில் மிகவும் பிரபலமாமே?. அப்படியா?
வாங்க விஜய்..வாங்க வாங்க. மொத மொத வந்திருக்கீங்க. வெளாட்டுல தாராளமா கலந்துக்கலாம். நமக்கு தான் இந்த ப்ளாக்கே. ஒரு உண்மை என்னன்னா, இந்த பாட்டு போடுற ஐடியாவே உங்க ப்ளாக்க பாத்து தான் வந்தது. அதான் உங்க கிட்ட மெயில் அனுப்பி ஐடியா கேக்கலாம்னு முயற்ச்சி பண்ணினேன். முடியலை. அப்புறம் வேற இடத்துல இருந்து சுட்டு போட்டு தொடங்கியாச்சி :-)
ஒரு உண்மைய சொல்லட்டா..எனக்கு தமிழ்மணம் அறிமுகமாகும் முன்னமே உங்க அல்வா சிட்டி எனக்கு அறிமுகம். எனக்கு ப்ளாக் பத்தி என்னன்னே தெரியாது. அதனால் தினமும் படித்தாலும், கமெண்ட் போட்டதில்லை (கமெண்ட் போடுற விசயமே புரியலை அப்போது). உங்க திரை விமர்சனம் எனக்கு ரொம்ப பிடித்தது.
உங்களை என்னோட ப்ளாக்ல பார்க்க சந்தோசம். அடிக்கடி வாங்க..ஐடியா சொல்லுங்க. அதுபடி பண்ணிறலாம்.
உங்க குறுந்தகடு வரிசையை பார்த்தேன். நீங்களும் பாட்டு கேக்கறதுல நம்ம ஜாதின்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
- சிவா
சம்மி! அல்வாசிட்டீன்னு பாத்தவுடனே விஜய்னு நெனச்சிட்டேன். மன்னிக்கனும் :-).
நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே இருக்கு. வரும் பதிவுகளில் பார்க்கலாம். வாங்க! வாங்க! பாட்டு நெறைய கேக்கலாம்.
சிவா அண்ணா! ஆமாம். முதல் சரணம் சுசிலா, இரண்டாவது மற்றும் மூன்றாம் சரணம் ஜானகி. இதில் தான் நீ குழம்பி இருப்பாய் என்று நினைக்கிறேன். மீன் கொடி தேரில் பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றி. சீக்கிரம் பார்க்கலாம்.
என்ன சிவா மற்றும் சிவாவின் அண்ணா சிவா. ரெண்டு பேரும் வலைப்பதிவின் மூலமா பேசிக்க ஆரம்பிச்சிட்டீங்க? என்ன நடக்குது? :-)
Post a Comment
<< Home