கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, November 22, 2005

ஒரு கிளி உருகுது (போட்டி-1)

(போன தடவை இந்த பதிவில் சில பாடல்கள் வேலை செய்யாததால், மறுபதிவு செய்கிறேன்)

இரு பெண் குரல் பாடல்கள் மிக மிக குறைவு தான். இந்த பதிவில் இளையராஜாவின் இசையில் 'இரு பெண் குரல்' பாடல்கள் இரண்டை கேட்போம். 80-ல் இருந்து ஒன்று. 90-ல் இருந்து ஒன்று.

1. "ஆனந்த கும்மி" படத்தில் இருந்து 'ஒரு கிளி உருகுது...உரிமையில் பழகுது..ஓ மைனா...மைனா". S.ஜானகியும் சைலஜாவும் பாடியது.




2. "புதுப்பட்டி பொன்னுத்தாயி" படத்தில் இருந்து "ஊருறங்கும் சாமத்திலே". உமா ரமணன், சுவர்ணலதா குரலில்.



கண்டுபுடிங்கடே:

சரி நாமும் ஏதாவது கேள்வி கேக்கலாம் என்று தோன்றியது. கீழே உள்ள பாட்டும் 'இரு பெண் குரல்' வகை தான். என்ன பாட்டு?. என்ன படம்?. என்று சொல்லுங்கடே. பரிசாக சரியான பதில் சொல்றவங்களுக்கு அடுத்த பதிவுல அவங்க விருப்ப பாடலை (இளையராஜா பாட்டா சொல்லுங்கடே) போட்டுடலாம். என்ன சொல்றிய?






24 Comments:

At 7:15 AM, Blogger Jayaprakash Sampath said...

சிவா... என்கிட்ட இப்ப sound card வேலை செய்யலை.. பாட்டோட மொத வரியைச் சொல்லுங்க..

 
At 7:31 AM, Blogger சிவா said...

நன்றி பிரகாஷ்

பாட்டோட மொத வரியை கண்டுபிடிக்க சொன்னா நீங்க மொத வரியை சொல்ல சொல்றீங்க..
சரி..இத வச்சி கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க..
( இது சரணம்..)

"வான வில்லை எடுக்கவா சேலையாக உடுக்க..
மின்னல்கள் கொன்டு நான் சங்கு கழுத்துக்கு பொன்னாரம் ஒன்று போடவா..
நட்சத்திரம் எடுத்து முத்து கால்களில் சங்கீத கொலுசு சூடவா.."

ஓரு பாடகி பவதாரினி..
யாரும் பதில் சொல்லலன்ன மொத வரி சொல்லிடறேன்..

 
At 7:46 AM, Blogger Jayaprakash Sampath said...

பவதாரிணியா... சாரி நான் கொஞ்சம் பழைய ஆளு :-)

 
At 7:50 AM, Blogger Jayaprakash Sampath said...

இருகுரலிசை- பெண்கள் ன்னா முக்கியமான ஒரு பாட்டு இருக்கே...

இதோ... இதோ என் நெஞ்சிலே
ஒரே பாடல்...
( வட்டத்துக்குள் சதுரம்)

கெடச்சுதுன்னா எடுத்துப் போடுங்க... ரொம்ப பேஜாரான மூட்ல கேக்கும் போது... முடியெல்லாம் எந்திரிச்சு நிக்கும்...

 
At 8:50 AM, Blogger Radha Sriram said...

the other singer sadhana sargam??

just a guess!!!romba pudhiya paatu pola irukku......

cheers
radha

 
At 9:16 AM, Blogger சிவா said...

ராதா

ஆமாம்! அது சாதனா சர்கம் தான். 2003 ல் வந்த படம். நாளைக்கு சொல்லிடறேன்

 
At 10:29 AM, Blogger கீதா said...

"ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது.."

படம் : பொன்மேகலை
இசை : இளையராஜா

 
At 10:37 AM, Blogger சிவா said...

கீதா! சரியான பதில்.
பாடல் 'ஆலாபனை செய்யும் மாலை பொழுது'. படம்: பொன்மேகலை.
படம் டிரெயிலர் பாக்கும் போது ஏதோ இசை சம்பந்தப்பட்ட படம் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு குப்பை சஸ்பென்ஸ் படம். இப்படி ஒரு குப்பை படத்துக்கு இப்படியெல்லாம் பாட்டு போடுகிறார் இளையராஜா. ஆண்டவனுக்கே வெளிச்சம்.

உங்களுக்கு புடிச்ச இளையராஜா பாட்டு ஒன்னு சொல்லுங்க அடுத்த பதிவுல போட்டுடறேன். .(பாட்டு என்னிடம் இல்லன்ன, அதே மாதிரி பாட்டு ஒன்னு போட்டுடறேன்)

 
At 12:09 PM, Blogger குமரன் (Kumaran) said...

Oru kizi uruguthu song is good Siva....

 
At 1:20 PM, Blogger கீதா said...

:)

எனக்கு பிடிச்ச பாட்டு நிறைய இருக்கே..

அதுல முதன்மையானது இது.

இது ஒரு பொன் மாலைப் பொழுது..
படம்: நிழல்கள்

நன்றி

 
At 1:26 PM, Blogger கீதா said...

அந்த பாட்டு இல்லாம இருக்காது

இருந்தாலும் இன்னொரு choice

பாடல் : நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரில்..

படம்: கண்ணில் தெரியும் கதைகள்

நன்றி

 
At 2:10 PM, Blogger சிவா said...

நன்றி கீதா!

நிழல்கள் பாட்டை சொன்னவுடன் எளிதாக சொல்லிட்டீங்களேன்னு பார்த்தேன். நீங்களும் என் ஜாதி தான்னு 'கண்ணில் தெரியும் கதைகள்' பாட்டை கேட்டவுடன் புரிஞ்சுக்கிட்டேன். அடுத்த பதிவில் போடுகிறேன். அடிக்கடி வந்து உங்கள் ரசனையை சொல்லுங்கள்.

- சிவா

 
At 3:37 PM, Blogger Radha Sriram said...

என்ன ஷிவா,.......நாந்தானே முதலில் பாடியவர் பெயர் சொன்னது.எனக்கு ஒரு பரிசும் கிடையாதா?? பரவா இல்ல மனச தேதிக்கரேன்........

eppadikku.disappointed

Radha

 
At 6:56 PM, Blogger சிவா said...

ஹலோ ராதா! என்னங்க இது. 'disappointed' என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு. பாட்டுக்கா பஞ்சம். போட்டுட்டா போச்சு. உங்களுக்கு எப்போ, என்ன பாட்டு வேணும்னாலும் சொல்லுங்க. கண்டிப்பா போட்டுடறேன்.

எல்லாருக்கும் இதனால் தெரிவிப்பது என்னன்னா! மக்கா! உங்களுக்கு பாட்டு வேணும்னா சொல்லுங்க. 'நேயர் விருப்பம்' உடனே நிறைவேற்றப் படும்.

 
At 7:02 PM, Blogger சிவா said...

பிரகாஷ்! உங்கள் தொடர் வருகைக்கு நன்றி. இளையராஜாவின் புது பாடல்கள் கேட்பதில்லையோ?.

உஷா அக்கா! இளையராஜா பாடலில் உங்களிடம் கேள்வி கேட்டால், தெரியாதா என்ன?. பொளந்து கட்டிட மாட்டீங்களா என்ன?. நமக்கு தான் தண்ணி பட்ட பாடாச்சே ராஜாவின் பாடல்கள் :-)

 
At 7:49 PM, Blogger சிவா said...

ராஜ்! தங்கள் வருகைக்கு நன்றி. "உங்களின் பாட்டு" என்று சொல்லியிருக்கிறீர்கள். எல்லாம் இளையராஜாவின் பாட்டு :-) எல்லோருக்கும் நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து கேட்க நேரம் இருப்பதில்லை. சரி! நாம தேர்ந்தெடுத்து கொடுக்கலாமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த ப்ளாக். அடிக்கடி வந்து பாட்டு கேளுங்க. நிறை/குறைகளையும் சொல்லுங்க.

 
At 7:36 AM, Blogger தங்ஸ் said...

Iru Pen Kuralkal list-la,
1.Mottu Vitta Mullai Kodi - Inru Nee Naalai Naan - Janaki&Shailaja
2.Poongaaviam - Katpoora Mullai -
Jesudas,Suseela,Chitra

intha rendu paatukalaiyum podunga..

 
At 7:39 AM, Blogger சிவா said...

தங்கம். வருகைக்கு நன்றி. ரெண்டு பாடல்களுமே மிகவும் நல்ல பாடல். நினைவு படுத்தியமைக்கு நன்றி. சீக்கிரம் போட்டுவிடுகிறேன்

 
At 8:04 AM, Blogger ஜெயஸ்ரீ said...

amudhe tamizhe ...
koyil pura

 
At 1:29 AM, Blogger ஜெயஸ்ரீ said...

punnagai mannan poovizhi kannan


- iru kodugal

 
At 1:30 AM, Blogger ஜெயஸ்ரீ said...

isayarasi ennalum neeye - thai mookambigai

 
At 2:58 AM, Blogger சிவா said...

ஜெயஸ்ரீ! வருகைக்கு நன்றி. நெறைய பாட்டு சொல்லிருக்கீங்க. நன்றி. சீக்கிரம் போட்டு விடுகிறேன். பாடலை பற்றி ஏதாவது விசேச தகவல்கள் இருந்தால் கூறுங்கள்.

 
At 6:58 AM, Blogger ஜெயஸ்ரீ said...

kelviyin nayagane - apoorvaragangal

 
At 12:21 PM, Blogger மதுமிதா said...

சிவா பாடல் நெட்டில்கேட்கத் தெரியல.

பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப்போல் அவனை வந்து சேரச்சொல்லடி.
படம்:சொல்லத்தான் நினைக்கிறேன்.

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

சுதாவுக்கும் எனக்கும் பிடித்த பாடல்.

 

Post a Comment

<< Home