கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Friday, March 10, 2006

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே

சின்னதா ஒரு பதிவு. ராஜாவின் தபேலாக்கள் பொதுவாக மென்மையான மெலோடிகளையே கொடுத்திருக்கிறது. தாளம் போட வைக்கும் தபேலாக்கள் சிலதே. அதில் எனக்கு பிடித்த ஒரு பாடல். 'காவல் கீதம்' படத்தில் இருந்து 'சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே'. கிட்டத்தட்ட இதுவும் 'கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச' பாடலும் ஒரே மாதிரி தான் (ஒரே ராகமா?). தபேலாவும் மிருதங்கமும் கலந்த ஒரு எளிமையான ஒரு தாள மெட்டு. மயக்கும் எஸ்.பி.பி-ஜானகி குரல். பாடலை கேட்டுக்கிட்டு இருங்க, நேயர் விருப்பத்தில் சந்திப்போம்




3 Comments:

At 3:44 AM, Blogger சிவா said...

வாங்க உஷா அக்கா! இந்த பதிவோட மானத்தை காப்பாத்திட்டீங்க :-)).
ஆமாம்! Typical Carnatic மாதிரி, ஆனா எனக்கும் ரசிக்கிற மாதிரி கொடுக்கிறதுக்கு ராஜாவை விட்டா யாரு இருக்கா. அதிலும் இந்த பாடல் ரொம்பவே தாளம் போட வைக்கும். கேட்டு உங்கள் கருத்தை சொன்னதற்கு ரொம்ப நன்றி.

அன்புடன்,
சிவா

 
At 3:13 AM, Blogger சிவா said...

வாங்க வீ.கே! திடீர் திடீர்னு வர்றீங்க. அப்புறம் காணாம போயிடறீங்க. புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஒரு பதிவு ஆரம்பிச்சீங்க. அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சி போன மாசம் வந்துட்டேன்னு சொல்லி ஒரு பதிவு போட்டுட்டு காணாம போய்ட்டீங்க. சீக்கிரம் ஆரம்பிங்க பாட்டுக் கச்சேரியை. உங்கள மாதிரி பழைய பாட்டு ஸ்பெசலிஸ்ட் யாரும் இல்லீங்க.

 
At 3:09 AM, Blogger கோவை ரவீ said...

ஹலோ சிவா சார்

சவுக்கியமா? சொக்கனுக்கு பதிவு தான் பார்த்துட்டிருக்கேன். மன்னிக்கவும் என்னோர ஸிஸ்டத்தில் பாட்டு கேக்க முடியாது முன்னமேயே கேட்டிருக்கேன். மிகவும் அருமையான பாட்டு. நன்றி - கோவை ரவீ

 

Post a Comment

<< Home