உமா ரமணன்
சில பேரை நமக்கு ஏன் புடிக்குது? எதுக்கு புடிக்குது என்றேல்லாம் சொல்ல முடியாது. ஆனால் எல்லோரையும் விட அவரை ரொம்ப புடிக்கும். அப்படி எனக்கு புடித்த பாடகி என்று யாராவது கேட்டால் உமா ரமணன் என்று சொல்வேன். ஏன் புடிக்கும்?. தெரியாது. ஏன். அதை விட ஜானகி, சித்ரா எல்லாம் திறமையான பாடகிகள். அப்படி இருக்க உமா ரமணன் புடிக்க காரணம். தெரியாது?. ஏனோ புடிச்சி போச்சு.
இப்படித்தான் என் அண்ணன் டெல்லியில் இருக்கும் போது ஒரே ஹிந்தி கேசட்டா கொண்டு வருவான். சுத்தமா புரியலைன்னாலும், கேட்பதுண்டு. அப்படி கேட்டு கேட்டு Alka Yagnik-ம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு. ரெண்டு மூனு வருசமா Alka Yagnik பாட்டு எங்க கெடைச்சாலும் தேடி கேட்பேன். அப்புறம் அப்படியே விட்டாச்சி.
இப்படித்தான் நம் மனசுக்கு புடிக்க ஒருவர் No.1 இடத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி எனக்கு புடிச்ச உமா ரமணன் பாடல்கள் சில இந்த பதிவில்.
உமா ரமணன் என்றவுடன் 'பூங்கதவே' பாடல் எல்லாருக்குமே நினைவுக்கு வரும். ஒரு காவிய பாடல் இது. ராஜாவின் இசை ராஜாங்கம். அந்த prelude..அப்பப்பா..அப்புறம் தீபன் மற்றும் உமாவின் தெளிந்த நீரோடை போல குரல். சரணத்தில் ஒருவர் பாட, மாற்றவர் 'ம்ம்ம்ம்' என்று பாடிக்கொண்டே வருவது ரொம்பவே அழகாக இருக்கும். பாடல் இங்கே.
இரண்டாவது பாடல். சேர்ந்து பாடுவது உன்னி மேனன். 'ஒரு கைதியின் டைரி'யில் இருந்து 'பொன்மானே..கோபம் ஏனோ'. அலுக்காத ஒரு பாடல். பாடலின் முடிவில் (பல்லவி) யேசுதாஸின் குரலுக்கு ('பொன்மானே' என்று ஆரம்பிக்கும் போது) ஒரு சிணுங்கல் குரல் கொடுப்பார். சூப்பரா இருக்கும். இப்போ பாட்டு.
இறுதியாக, 80S-ல இருந்து அப்படியே 90S-க்கு வறேன். கிட்டத்தட்ட 'மாசிமாசம்' (தர்மதுரை) பாடல் போல ஒரு பாடல். 'எங்க தம்பி' படத்தில் இருந்து அருண்மொழியோட கலக்கல் குரலோடு 'இது மானோடு மயிலாடும் காடு'.
கடைசியா எனக்கு ரொம்ப புடிச்ச உமா பாடல் ஒன்று. மலேசியா வாசுதேவனுடன் செம ஸ்பீடா ஒரு பாட்டு. 'மல்லு வேட்டி மைனர்' படத்தில் இருந்து 'ஒன்ன பார்த்த நேரத்துல ஒலகம் மறந்து போனதடி'..ஐயோ..பாட்டு என்ன ஒரு ஓட்டம்..உமா இரண்டாவது சரணத்தில் 'நீராடும் நேரம் பார்த்து' அப்படின்னு தொடங்கும் போது சும்மா ஜிவ்வுன்னு போகும் பாட்டு.
'ஆனந்த ராகம்' 'செவ்வந்தி பூக்களில்' 'நில் நில் நில்' 'பூபாளம் இசைக்கும்' என்று இன்னும் நிறைய பாடல்களை சொல்லலாம். மெதுவா இந்த பாடல்களை போடுகிறேன்.
42 Comments:
Siva,
Thanks for the Songs. Uma RamaNan is my fav. singer too :)
"Ponmaanae" from kaidhiyin diary was sung by Unni menon, His name at that time was vijay or something similar, I forgot the exact name :(
N. Chokkan,
Bangalore.
வாங்க சொக்கன்! முதல் வருகைக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கும் உமா ரமணன் புடிக்குமா :-). சந்தோசம்.
ஆமாம் சொக்கன்! அது உன்னி மேனன் தான். நான் தான் சரியா கவனிக்கலை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போ சரி பண்ணிட்டேன்.
அன்புடன்,
சிவ
actually my friend 'lalitha' ram teases, that I am also a 'uma ramaNan' .. my wife's name is uma - LOL :) and 'ramaNan' means husband or something like that - im not sure - thats what he told me :)
N. Chokkan,
Bangalore.
Dear Siva,
Thanks a lot for these songs!!!
Enakum Uma Ramanan romba pidikum.Pon manae - en all time favourite one. Indha song padinadhu - Vijay nu dhan cassette la irundhadhu.
IR in music il innum rare Uma Ramanan songs podunga Siva!!
With Love,
Usha Sankar.
சிவா, முதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். கடைசி இரண்டு பாட்டுக்களும் கேட்பது இது தான் முதல் முறை.
She has a fablous voice.I dont know why she did not get many songs to sing or did not become
very popular despite having such a voice. Perhaps she would have done very well had there been no Chitra.
IR used her voices in the 1980s but less frequently in the 1990s.Thanks for posting them here.
உண்மையில் "எங்க தம்பி" படத்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடல் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் நன்றாய் இருக்கும்.
பிரசாந்த படம் என்பதாலயே படமும் ஓடவில்லை பாடல்களும் பிரபலமாகவில்லை.
இளையரஜா இசையமைத்த மணிவண்ணனின் "ராசா மகன்" பாடல்களும் நன்றாய் இருக்கும்.
சொக்கன்! ஓ! நீங்களும் 'உமா' ரமணனா :-). நீங்க பாட்டு பாடுவீங்களா? :-)
உஷா அக்கா! உங்களுக்கு உமா புடிக்கும்னு ஏற்கனவே தெரியும் :-). அவங்களோட rare பாடல்கள் எல்லாம் நேரம் கெடைக்கும் போது போடறேன். உங்கள் விருப்பம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். என்னிடம் இருந்தால் போடுகிறேன்.
'பொன்மானே' பாட்டுல நீங்க சொல்றது சரி தான். விஜயை தான் உன்னி மேனன் அக்கிருப்பாங்களோ?. தெரியலையே.
வாங்க குமரன்! பாடல்களை கேட்டதுக்கு நன்றி :-)
ரவி! ரொம்ப நாள் கழிச்சி உங்களை பார்க்கிறேன். நீங்க சொல்றது ரொம்ப உண்மை. ராஜா இசையில் அவர் பாடிய 50 பாடல்களும் ரொம்ப அருமை. அப்படி இருந்தும் கொஞ்சம் தான் பாடல் கொடுத்திருக்கிறார். மற்ற இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்தது ரொம்ப கொஞ்சமே என்று நினைக்கிறேன். ஆனால் சித்ராவுக்கு பதிலாக உமா வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். சித்ராவும் சுஜாதாவும் ஒத்துப்போகும். உமாவும், சுனந்தாவும் ஒத்துப்போகும்.
உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி ரவி.
தயா! முதல் வருகைக்கு நன்றி.
நீங்க சொல்வது சரி தான். 'எங்க தம்பில எல்லா பாடல்களுமே அருமை. சொல்ல போனால், பிரசாந்த் படம் எல்லாத்துக்குமே ராஜாவின் இசை அருமை. ஆனால் 'எங்க தம்பி' ஓடாததுக்கு பிரசாந்தை விட, நம்மை சோதிக்கும் திரைக்கதை,இயக்கமும் தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
ராசாமகன், ஆணழகன், செந்தமிழ் செல்வன் - இப்படி எல்லா படங்களும் பாடல்கள் அருமை. சரி தானே.
சிவா,
அருமையான பாடல் சிவா..
பூங்கதவே தாழ் திறவாய்.. prelude super.. அப்படியே வழுக்கிட்டே போகுது.. ஆஹா.. எத்தனை முறை கேட்டாலும் புதுசா கேட்பது போல ஒரு உணர்வு.. ஒரு freshness..
பொன் மானே கொஞ்சம் fastல..
அருமை
அன்புடன்
கீதா
வாங்க கீதா! பூங்கதவே பாடல் நீங்க சொன்ன மாதிரி அப்படியே Fresh-a இருக்குல்லா :-).
மற்ற ரெண்டு பாட்டையும் பற்றி ஒன்றும் சொல்லாம போய்ட்டீங்களே :-(
>>> நீங்க பாட்டு பாடுவீங்களா? :-)
AaaLai vidunga swamy, kaetkiRathoda sari :)
N. Chokkan,
Bangalore.
எல்லாமே அருமையான பாட்டா போட்டிருக்கீங்க சிவா!
உமா ரமணன் அப்படியே ஆடாம அசையாம அட்டென்ஷன்ல பாடுறது அவங்க பாடறதுல இன்னொரு தனித்துவம்.
எனக்கும் அவங்களோட குரல் பிடிக்கும். எனக்கு பிடிச்ச ரெண்டு பாட்டு
1. செவ்வரளி தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
சிவா...கொஞ்ச நாள் விட்டு இந்தப் பதிவுல பின்னூட்டம் போடுறேனேன்னு கோவிச்சுக்கிறாதீக. நேரமில்லாமத்தான்.
உமா ரமணன் எனக்கும் மிகவும் பிடித்த பாடகி. பூங்கதவே ஒன்று போதுமே. கோடு போட்ட மாதிரி குரல். சில பாடகிகள் போல எஃபெக்ட் என்கிற பேர்ல அங்க இங்க ஓடாது.
அவரோட குரல்ல வந்த பாட்டுகளைக் கொடுத்ததுக்கு நன்றி. (நான் ரெண்டு பாட்டு கேட்டேனே.......)
ஒங்களுக்கு ஒரு புதிர். இந்தப் பாட்டை நீங்க கண்டு பிடிச்சிப் போட்டா..........போடாட்டியும் இளையராஜா ரசிகர்தான்.
இளையராஜா இசையில் மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் மூவரும் பாடிய பாடல்.
சொக்கன்! 'kaetkiRathoda sari :)
' எல்லோரும் தப்பிச்சோம்னு சொல்லுங்க (சும்மா! ஜாலியா தான்) :-))
வாங்க கைப்புள்ள! //** உமா ரமணன் அப்படியே ஆடாம அசையாம அட்டென்ஷன்ல பாடுறது அவங்க பாடறதுல இன்னொரு தனித்துவம். **// எனக்கு ரொம்ப நாள் ஆசைங்க..அவங்கள டி.விலயாவது பாக்கணும் என்று..ரொம்பவே ஆசை..இன்னும் நிறைவேற வில்லை..உங்களிடம் உமா புகைப்படம் இருந்தால்/கிடைத்தால் கொடுங்களேன்.
ஆகாய வெண்ணிலாவே க்ளாஸ் பாட்டு இல்லையா. 'செவ்வரளி தோட்டத்துல ஒன்ன' யும் ரொம்ப நம்ம பாட்டு..
வாங்க ராகவன்! ஒங்களுக்கு என்னைய மாட்டி விடுவதே வேலையா போச்சி :-). எங்க இருந்துய்யா இப்படி எல்லாம் பாட்ட புடிக்கிறீங்க..சத்தியமா தெரியலை..( நான் ராஜா ரசிகன் தானே :-)). நீங்களே சொல்லிப்புடுங்க..
//** கோடு போட்ட மாதிரி குரல். சில பாடகிகள் போல எஃபெக்ட் என்கிற பேர்ல அங்க இங்க ஓடாது. **// உண்மை..அந்த குரலுக்கு நான் அடிமை ஐயா :-))
நேரம் கிடைக்கும் போது மெதுவா வந்து படிங்க..எங்க போயிட போவுது...ராகவன் மேல எல்லாம் கோவம் வருமா..என்ன இப்படி சொல்லிட்டிய :-))
// வாங்க ராகவன்! ஒங்களுக்கு என்னைய மாட்டி விடுவதே வேலையா போச்சி :-). எங்க இருந்துய்யா இப்படி எல்லாம் பாட்ட புடிக்கிறீங்க..சத்தியமா தெரியலை..( நான் ராஜா ரசிகன் தானே :-)). நீங்களே சொல்லிப்புடுங்க.. //
என்ன சிவா....கண்டு பிடிச்சிருவீங்கன்னு நெனச்சேன். இப்பிடியே போச்சுன்னா ஒங்களுக்கு நெறைய புதிர் போடலாம் போல. :-)
நான் சொல்றது தாய் மூகாம்பிகை படத்துல வர்ர பாட்டு. பாலமுரளி முதல்ல கலைமகளைப் போற்றிப் பாடுவாரு. அடுத்து விஸ்வநாதன் அலைமகளைப் போற்றிப் பாடுவாரு. அடுத்து சீர்காழி மலைமகளைப் போற்றிப் பாடுவாரு. ரொம்ப நல்லாயிருக்கும். அது சரி....இது இளையராஜா இசையில் சீர்காழி பாடிய முதல் பாட்டு இல்லைன்னு தெரியுமா?
//ஒங்களுக்கு ஒரு புதிர். இந்தப் பாட்டை நீங்க கண்டு பிடிச்சிப் போட்டா..........போடாட்டியும் இளையராஜா ரசிகர்தான்.
இளையராஜா இசையில் மெல்லிசை மன்னர், பாலமுரளி கிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன் மூவரும் பாடிய பாடல். //
"தாயே மூகாம்பிகே...ஜகன் மாயே லோகாம்பிகே" என்ற பாட்டு. படம் தாய் மூகாம்பிகை?
சிவா,
உமாவும் ரமணனும் இருக்கும் படம் இங்கு உள்ளது.
http://www.hindu.com/fr/2004/01/09/stories/2004010901171200.htm
ரொம்ப நன்றி பரணீ! சேமித்து வைத்துக்கொண்டேன். நிஜமாகவே எனக்கு சந்தோசம். கொடுத்தமைக்கு நன்றி.
// "தாயே மூகாம்பிகே...ஜகன் மாயே லோகாம்பிகே" என்ற பாட்டு. படம் தாய் மூகாம்பிகை? //
அதே அதே...கைப்புள்ள..கையப்புடிங்க...சரியாச் சொன்னீங்க...
ராகவன்! நான் 80ல் கொஞ்சம் (ரொம்பவே) வீக் ஐய்யா! இப்படி சின்ன பையன் கிட்ட ஒரு 90 க்கு அப்புறம் வந்த பாடலை பற்றி ஒரு புதிர் போடுறது :-)
நீங்க சொன்ன இந்த பாடல் கேட்டிருக்கிறீனா என்று கூட தெரியலையே..என்னிடம் பாட்டு கேசட் கூட இல்லியே :-((
//**இப்பிடியே போச்சுன்னா ஒங்களுக்கு நெறைய புதிர் போடலாம் போல. :-) **//
போடுங்க போடுங்க..பாட்டு ப்ளாக் ஆரம்பிக்க போறீங்கன்னு சொன்னீங்களே..வாழ்த்துக்கள். அதுல இப்படி போட்டியா போடுங்க. கண்டிப்பா கலந்துக்கறேன்.
மோகன்ராஜ் (கைப்புள்ள)! கண்டுப்புடிச்சிட்டீரேவே :-))
ராகவன்!
//** இது இளையராஜா இசையில் சீர்காழி பாடிய முதல் பாட்டு இல்லைன்னு தெரியுமா? **// இப்படியே கேட்டீங்கன்னு வச்சீக்கோங்க..இன்னும் ரெண்டு நாளைல எல்லா பயலுவலும் 'நீ எல்லாம் என்ன ராஜா ரசிகன்' அப்படின்னு சொல்லிருவானுவ :-). அந்த முடிவோட தான் செயல்படுறிய போல :-)).
எனக்கு ராஜா இசையில் சீர்காழி பாடி இருக்கிறார் என்ற விசயமே நீங்க சொல்லி தான் தெரியும் ஐயா..இப்படி அதுல கேள்வி வேற கேட்டுப்புட்டியலே..சரி..சரி..அப்படியே விடையையும் சொல்லிடும் :-))
// ராகவன்! நான் 80ல் கொஞ்சம் (ரொம்பவே) வீக் ஐய்யா! இப்படி சின்ன பையன் கிட்ட ஒரு 90 க்கு அப்புறம் வந்த பாடலை பற்றி ஒரு புதிர் போடுறது :-) //
சிவா...என்னைக் கேட்டால் 70களின் கடைசியிலும் 80களிலும் இளையராஜா செய்த சாதனைகளும் சோதனைகளும் எக்கச்சக்கம். 90களில் அவர் கொஞ்சம் தேங்கினார் என்பது என் கருத்து. அது அவருடைய இசைத்திறமைக்குக் குறைவு என்று சொல்ல முடியாது. விஸ்வந்தானுக்கு 80களில் நேர்ந்தது இளையாராஜாவுக்குத் 90களில் ஆனது. அவ்வளவே. அவர்கள் பயணிக்க வேண்டிய சாலை இன்னும் மேலானதாக இருக்க...திரையிசையிலேயே கிடந்ததன் சோர்வுதான் அது. (அது சரி...சந்தடி சாக்குல ஒம்ம சின்னப் பயன்ட்டீரு. வாழ்க வாழ்க.
// போடுங்க போடுங்க..பாட்டு ப்ளாக் ஆரம்பிக்க போறீங்கன்னு சொன்னீங்களே..வாழ்த்துக்கள். அதுல இப்படி போட்டியா போடுங்க. கண்டிப்பா கலந்துக்கறேன். //
சிவா...இதுக்கு ஒம்ம ஒதவி வேணுமேவோய்....என்னோட gragavan அட்டு ஜீமெயிலுக்கு ஒரு கடுதாசி போடும்யா....செல சந்தேகங்க இருக்கய்யா!
// இப்படியே கேட்டீங்கன்னு வச்சீக்கோங்க..இன்னும் ரெண்டு நாளைல எல்லா பயலுவலும் 'நீ எல்லாம் என்ன ராஜா ரசிகன்' அப்படின்னு சொல்லிருவானுவ :-). அந்த முடிவோட தான் செயல்படுறிய போல :-)). //
அட! அங்கதான இருக்கு சூக்குமம். ராஜாவோட இசைரசிகனா இருக்கனுமய்யா...
// எனக்கு ராஜா இசையில் சீர்காழி பாடி இருக்கிறார் என்ற விசயமே நீங்க சொல்லி தான் தெரியும் ஐயா..இப்படி அதுல கேள்வி வேற கேட்டுப்புட்டியலே..சரி..சரி..அப்படியே விடையையும் சொல்லிடும் :-)) //
ஆசை தோசை அப்பள வடை.....அந்தப் பாட்டு எங்கிட்ட ஈ-வடிவத்தில் இல்லை. ரொம்ப நல்ல பாட்டு. விடையச் சொல்லலைன்னா பத்திரகாளியாட்டம் ஆடுவீரோ....
அது சரி.....இளையராஜா இசையில பி.பி.சீனிவாஸ் ஒரே ஒரு பாட்டு பாடியிருக்கார் தெரியுமா?
(அனேகமா கைப்புள்ள வந்து விடையச் சொல்லீருவாருன்னு நெனக்கேன்.)
//** அது சரி.....இளையராஜா இசையில பி.பி.சீனிவாஸ் ஒரே ஒரு பாட்டு பாடியிருக்கார் தெரியுமா? **// இது எனக்குத் தெரியுமே! அடிக்கடி நம்ம ராஜா யாகூ க்ரூப்ல இந்த பாடலை சொல்வார்கள். அது 'கடவுள் அமைத்து வைத்த மேடை' படத்தில் இருந்து 'தென்றலே நீ பேசு'..சரியா ராகவன். ( இந்த படத்துல இருந்து ஜென்சி பாட்டு 'மயிலே..மயிலே' ஏற்கனவே போட்டாச்சி).
//** ராஜாவோட இசைரசிகனா இருக்கனுமய்யா... **// சைடு கேப்ல தாக்கிட்டு போய்ட்டீங்களே..
நீங்க சொல்றத பாத்தா சீர்காழி பாட்டு ஒன்னு பத்ரகாளில இருக்கு போல
:-)). என்ன பாட்டுவோய்? எடுத்து விடும்யா..
ராகவன்!
//**80களிலும் இளையராஜா செய்த சாதனைகளும் சோதனைகளும் எக்கச்சக்கம். **// ஆமாம் சாமி..ஆமாம்..இப்படித்தான் எனக்கும் வினு அக்காவுக்கும் பெரிய பிரச்சினை..நான் 90-ல் ராஜாவும் நல்லா தான் இருந்ததுன்னா எனக்கு ஆதரவா யாருமே வரமாட்டேங்கிறாங்க..இனி ராஜாவை தான் ஆதரவுக்கு சேர்க்கணும் :-))
நல்ல பாட்டெல்லாம் பெரிய குழி தோண்டி போட்டுட்டு, வெறும் இரைச்சலை கேட்க ஆரம்பித்தால், ராஜா என்னையா செய்வார். ஒன்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன்..சமீபத்திய ராஜா (2000-க்கு அப்புறம்) அவ்வளவாக திருப்தி இல்லை..(விருமாண்டி தவிர)..ஏனோ கொஞ்சம் இயற்கை மணம் குறைந்து, கொஞ்சம் செயற்கை தனம் தெரிகிறது (synth-instruments :-((.
உமா ரமணன், எனக்கும் ரொம்ப புடிக்கும். 'ஆகாய வெண்ணிலாவே', 'ஆனந்த ராகம் கேட்கும் நேரம்', 'கண்ணனே நீ வரக்காத்திருந்தேன்' எல்லாம் எவ்வளவு அருமை. நீங்க சொன்னதுபோல் தெளீந்த நீரோடை மாதிரி குரல். நீரைப்போலவே எப்படிவேண்டுமானாலும் அந்த குரல் வளையும்,நெளியும்...
'ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது' பாடலில் ராஜாவுடன் பாடியது உமா ரமணனா என்று எனக்கு நீண்ட நாள் சந்தேகம்...
சிவா, 90-லயும் ராஜா பாட்டு நல்லாதன் இருந்தது. நான் சொல்றேன், கவலைப் படாதீங்க. நாமெல்லாம் தண்ணி சாப்பாட்டோட ராஜா இசையும் கேட்டுதானே அப்போ வளர்ந்தோம். 'செம்பருத்தி', 'தளபதி', குணா, சின்னக் கவுண்டர், வீரா மற்றும் ராஜ்கிரனின், ராமராஜனின் அனைத்துப் பாடல்கள் எல்லாம் 90-ல் வந்தவை தானே?? (இது ஒரு மிகச்சிரிய லிஸ்ட் தான்)
சாணக்கியன்! பழைய பதிவை பார்த்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம். உமாவோட குரல் நிறைய பேருக்கு புடிக்கும். நீங்க சொல்ற 'ஒரு ஜீவன் அழைத்தது' சித்ரா பாடியது.
நீங்க நம்ம ஆளு :-)) (90ஸ் ராஜா). நானும் 1995 அப்புறம் தான் ராஜா என்று தனியாக பிரித்துப் பார்த்து கேட்க ஆரம்பித்தேன். எனக்கு 80ஸ்ம் 90ஸ்ம் ஒன்றே..சும்மா வீம்புக்காக சொல்லவில்லை. 90ஸ் அப்படி ரசிப்பேன் நான். நீங்க சொன்ன அத்தனையும் அருமையான படங்கள். இன்னும் காணாமல் போன படங்கள் நிறைய இருக்கிறது.
அன்புடன்,
சிவா
Uma has a wonderful voice and sings great. Of the 100+ songs she has sung for IR, most are hits. I would say, about 90 percent. Trouble is that she wasn't used by other music directors. On the other hand, KSC's voice was well used by Malayalam industry from 86-present, so it's just a matter of luck and fortune.
I agree that IR made some gems even in the 90's. But it is a torture to call an album like Oru Naal Oru Kanavu as a good one and have him do songs from it on stage.
-Kajan
சிவா'அருமையான பாட்டுக்களை தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்கள்!
நானும் உமாவின்ரசிகைதான் 'செவ்வந்திபூக்களில்' பாட்டை சீக்கிரம் எடுத்து போடுங்கள் அந்த பாட்டை இப்பல்லாம் ரேடியோவில(ஏராளமான பழைய பாடல்கள் போடுகிறார்கள் ஆனால்)கூட இந்த பாட்டு கேக்க முடிவதில்லை
ரொம்ப நாளா உங்க பதிவு படிச்சிட்டு வரேன்
(பின்னூட்டம்தான் வைப்பதில்லை :)) எல்லாமே நல்ல பதிவுகள்!
கஜன்! நீங்கள் சொன்னது சரி தான்! ராஜாவிடம் உமா பாடிய பாடல்கள் அனைத்துமே (90%) ஹிட் தான். ராஜா அப்படி தெரிந்தே தேர்வு செய்வார் என்பது என் கருத்து. இதை ஜென்சிக்கும் சொல்லலாம். ஏன்! மற்ற இசையமைப்பாளர்கள் அவரை அவ்வளவாக பயன் படுத்த வில்லை (அவ்வளவு ஹிட்டுகளுக்கு அப்புறமும்). ஒரு வேளை ஈகோவாக கூட இருக்கலாம். எப்படியோ! உமாவை முழுவதுமாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டது திரை உலகம். சித்ராவின் குரல் எல்லோருக்கும் பொருந்தும் ஒரு குரலாக இருந்தது அவரின் அதிஷ்டம்.
'ஒரு நாள் ஒரு கனவு' படத்தில் 'காற்றினில் வரும் கீதமே' நன்றாக தானே இருக்கிறது. மற்ற பாடல்கள் எனக்கும் கொஞ்சம் சோதனை தான்.ம்ம்ம்ம்.
வாங்க மீனா! உங்களை வெளிக்காட்டிக்கொண்டதுக்கு ரொம்ப நன்றி. நீங்களும் உமா ரசிகை தானா. நிறைய என்னை போல உமா ரசிகர்களை பார்ப்பதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. 'செவ்வந்தி பூக்களில்' பாடல் நம்ம நேயர்விடுப்பத்தில் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக போடுகிறேன்.
பின்னூட்டம் நேரம் இருந்தால் கொடுங்கள். எனக்கும் உற்சாகமாக இருக்கும். மற்ற படி, கண்டிப்பாக பதிவுகளை படியுங்கள். அது போதும். உங்கள் பாராட்டு அனைத்துக்கும் நன்றி மீனா.
அன்புடன்,
சிவா
பத்ரகாளி
நட்சத்திரங்கள்: மேஜர் சுந்தர் ராஜன், ராணி சந்திரா, சிவக்குமார், பவானி, மனோரமா
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடல்கள்
வ.எண் பாடல் வரிகள் பாடியவர்கள் கவிஞர்
1 ஆனந்த பைரவி வாலி
2 கண்ணன் ஒரு கைக் குழந்தை பி.சுசிலா, யேசுதாஸ் வாலி
3 கேட்டேளே இங்கே பி.சுசிலா வாலி
4 ஓடுகின்றாள் நீர் என்றும் சீர்காழி கோவிந்தராஜன் வாலி
5 ஒத்த ரூபாய் ஜானகி, மலேசியா வாசுதேவன் வாலி
நன்றி :
http://www1.gangapark.com/magic/tamil
பாலராஜன் கீதா! பத்ரகாளி படம் பற்றிய தகவலுக்கு நன்றி. நானெல்லாம் பொறக்க்குறதுக்கு முந்தி வந்த படம் போல :-)).
'கேட்டேளா அங்கே' பாடல் நல்ல பிரபலம்.
Siva ,
you reminded me some beautiful gems .
Thanks
கார்த்திக்வேலு ! ரொம்ப பழைய பதிவை பார்த்து கமெண்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உமாவோட பாட்டு எல்லாமே ஜெம்ஸ் தான்
Post a Comment
<< Home