நினைக்க தெரிந்த மனமே (யேசுதாஸ் - 2)
'நினைக்க தெரிந்த மனமே'. மோகன்-ரூபிணி நடிப்பில் வெளிவந்த படம். மோகன் படங்களுக்கு தன் வழக்கமான வகையறாக்களை தவிர்த்து, இந்த படத்தில் ராஜா ரொம்ப வித்தியாசமான இசையை கொடுத்திருப்பார். நிறைய பேருக்கு இது மோகன் பாட்டு என்றால் நம்ப முடியாது. அதனால் தானோ என்னவோ, படமும் சரியாக ஓடவில்லை.
முதன் முதலாக ஒரு மோகன் படத்துக்கு முழுவதும் யேசுதாஸை பயன்படுத்திய படம் என்று நினைக்கிறேன். மொத்தம் 5 பாடல்களில் 4 யேசுதாஸ். ஒன்று சித்ராவின் தனி பாடல். எஸ்.பி.பி குரலிலேயே மோகன் பாடலை கேட்டுவிட்டு, யேசுதாஸ் குரல் மோகனுக்கு (எஸ்.என்.சுரேந்தருக்கு :-)). இரவல் குரல் தானே). அவ்வளவாக ஒட்ட வில்லை என்பது உண்மை.
மற்றபடி பாடல்கள் என்று பார்த்தால், ராஜா வழக்கத்துக்கும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருப்பார். அத்தனை பாடலையும் ஒரு மெல்லிய ட்ரம்ஸ் இசையில் ஓட விட்டிருப்பார்.
இன்று இரண்டு பாடல்களை பார்க்கலாம். முதலில் 'கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்'. யேசுதாஸின் குரலில். இந்த பாடல் நம்ம பரணீ, சென்ற நேயர்விருப்பத்தில் தன் விருப்பமாக கேட்டிருந்தார். அவர் விருப்பமாகவும் இந்த பாடலை போடுகிறேன். இந்த பட பாடல்களுக்கு கவிஞர் யாரென்று தெரியவில்லை (இசை அமைப்பாளர், பாடகர் பெயர் போடும் 'Oriental Records', ஏனோ கவிஞர் பெயரை விட்டு விடுகிறார்கள்). தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எல்லா பாடல்களிலுமே பாடல் வரிகள் அழகா இருக்கும். ரொம்பவே ஒரு மென்மையான பாடல். யேசுதாஸின் குரலின் இன்னும் கொஞ்சம் பாடல் வழுக்கி ஓடுவது உண்மை.
இரண்டாவது. 'எங்கெங்கு நீ சென்ற போதும்'. தொடக்க கிடார் (prelude) ரொம்ப அழகு. சித்ராவின் குரலிலும் யேசுதாஸின் குரலிலும் தான் என்ன குழைவு. First interlude-ல் ட்ரம்ஸ் ரொம்பவே கலக்கலாக இருக்க்ம். சட்டென்று சரணத்தில் கஜல் டைப் தபேலா இசைக்கு பாடல் தாவுவதும், அப்புறம் பல்லவில் பேஸ் ட்ரம்ஸ் மாதிரி ஒரு இசைக்கு தாவுவதும் ரொம்பவே அழகு. கேட்டுப்பாருங்களேன்.
14 Comments:
சிவா. முதல் பாடலை இதுவரை கேட்டதில்லை. இரண்டாவது பாடலைக் கேட்டிருக்கிறேன்.
ரெண்டுமே அருமையான பாட்டு சிவா.. நான் பாட்டை நிறைய முறை கேட்டிருக்கேன்.. ஆனா அது மோகன் பாட்டுனு இப்பதான் தெரியுது.. :)
ரெண்டு பாட்டுக்குமே ஏதோ ஒற்றுமை இருக்குறா மாதிரி தெரியுது.. ஒரே ராகம்.. இதுபோல ஏதாவதா?? தெரிஞ்சவங்க சொல்லுங்க.
மிக்க நன்றி சிவா,
ஓ பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை ( படம் - மீரா )பாட்டு இருக்குதா உங்ககிட்ட ?
பரணீ! 'ஓ! பட்டர்பிளை' உங்கள் விருப்பமாக அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன். வந்து பதிவை படித்ததற்கு நன்றி.
yengengu nee serndha podhum.... is a pleasing Jonpuri! Vinatha
Hey Usha,
kannukkum kannukkum..... sounds like a song that goes like this
en anbey en anbey nenjam neethaana...... Janaki solo- not 100% sure of even lyrics! Private aa I asked Siva, he is of NO USE!Can you people help me!!
If I am wrong, please pardon my ignorance!! Silly Vinu!
//**Private aa I asked Siva, he is of NO USE **// என் நேரம் :-)). வினு அக்கா..நீங்க ஒங்க பாட்டி காலத்து பாட்ட இந்த சின்ன பையன்கிட்ட கேட்டீங்கனா..நான் எங்கே போவேன் :-((. உஷா அக்கா! படம் பேர சொல்லாம விட்டுட்டாங்க..படம் பேரு, 'நேரம் நல்ல நேரம்' (என் நேரத்த தவிர :-)). இப்படி எனக்கு தெரியாத படத்தை கேக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு. :-))
குமரன்! எல்லா பதிவிலும் ஒரு பாதி பாட்டு நீங்க கேட்ட பாட்டா இருக்கு..மிச்ச பாதி நீங்க கேக்காத பாட்டா இருக்கு :-)). கேக்காத பாடலை கேட்டதுக்கு நன்றி.
வாங்க கீதா! பாத்தீங்களா..உங்களுக்கே இப்போ தான் மோகன் பாட்டுன்னு தெரியுது..நான் சொன்ன மாதிரி, யேசுதாஸ் குரலை கேட்டுவிட்டு யாருக்கும் மோகன் பாடல் என்று நினைக்க வராது.
ராகமா :-))..அடியேனுக்கு ஒன்றும் தெரியாது..வேறு யாராவது சொல்லுங்கப்பா..
உஷா அக்கா! நான் என்னக்கா பெரிசா செஞ்சிட்டேன்..இருக்கிற பாட்ட எடுத்து விடறேன். நீங்க மறக்காம வந்து பாட்ட கேட்டுட்டு ஊக்கம் கொடுக்கறீங்களே..அது தான் பெரிசு.
'ஒரு இனிய மனது' பாடல் அடுத்த பதிவில் கண்டிப்பா உங்கள் விருப்பமாக வரும். உங்கள் விருப்பம் இல்லாமலா :-))
வினு அக்கா ஒன்னு கேட்டிருக்காங்க பாருங்க உங்க கிட்ட..பாருங்க..
என்னைய அவங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க.. :-))
நல்ல பாடல்கள்.
இரண்டும் எனக்குப் பிடித்த பாடல்கள்.
வாங்க சந்திரவதனா! உங்களுக்கு புடிச்ச பாடலை போட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
சிவா,
பாடலாசிரியர் யாரோ,'காமகோடியான்'-ஆம். இங்க போய் பாருங்க.
www.cinesouth.com/film/ ninaikka%20therindha%20maname.html
கவிதை வரிகள் ரொம்ப மென்மையா தொடுவதுபோல் இருக்கும்.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதிகம் ஹிட் ஆகாத அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றோ?
சாணக்கியன்! பழைய பதிவுகளை எல்லாம் தேடி பிடித்து கேட்டு கருத்து சொல்றீங்க. நன்றி.
ஓ! காமகோடியனா..நானும் கூட கேள்வி பட்டிருக்கிறேன். ஆனா நமக்கு கவிஞர்கள் அளவில் அறிவு கம்மி. தகவலுக்கு நன்றி சாணக்கியன்
Post a Comment
<< Home