கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Wednesday, December 28, 2005

தெய்வீக ராகம். தெவிட்டாத பாடல் (ஜென்சி)

குழந்தை தனமான குரல். மலையாளம் கலந்த சுமாரான தமிழ் உச்சரிப்பு. இருந்தாலும் ஒரு பாடகியை உச்சத்திற்கு கொண்டு போக முடியும் என்று ஜென்சி மூலம் நிருபித்தவர் ராஜா. மொத்தமே 50-க்கும் குறைவான பாடல். அத்தனையும் ராஜாவின் டாப் 100-ல் தாராளமாக வைக்கலாம். "ஜானி" பாடல்களை யாராவது மறக்க முடியுமா?. அருமையான பாடல்கள். ஜென்சியும் எந்த பாடலிலும் நன்றாகவே பாடியிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது குரல் நமக்கு பிடித்து போனதென்னவோ உண்மை. பாடலை தவிர்த்து, இசையை பார்த்தாலும், ராஜா ஜென்சி பாடல்களில் இசைக்கும் மிக மிக முக்கியம் கொடுத்திருப்பார். ஜென்சி பாடல்களில் இசை அவரது மற்ற பாடல்களை விட வித்தியாசமாக இருக்கும். அவரது பாடல்கள் சில,

"காதல் ஓவியம்" - அலைகள் ஓய்வதில்லை
"ஒரு இனிய மனது" - ஜானி
"என் வானிலே" - ஜானி
"மீன் கொடி தேரில்" - கரும்பு வில்
"மயிலே மயிலே" - கடவுள் அமைத்த மேடை
"இரு பறவைகள்" - நிறம் மாறாத பூக்கள்
"ஆயிரம் மலர்களே" - நிறம் மாறாத பூக்கள்
"என்னுயிர் நீதானே" - ப்ரியா
"தெய்வீக ராகம்" - உல்லாச பறவைகள்.

முதல் பாடல் "மயிலே மயிலே உன் தோகை எங்கே". நிறைய 80S பாடல்களை நினைவுக்கு கொண்டுவரும் இசை. S.P.B-ஜென்சி பாடியது. இந்த பாடலில் ரொம்பவே குழந்தை தனம் தெரிகிறது (முதல் பாடலா?). அதுவும் நன்றாக தான் இருக்கிறது.






இரண்டாவது, "மீன்கொடி தேரில்". ராஜாவின் இசை ராஜாங்கம் என்று சொல்லலாம். "அடிச்சி பட்டைய கெளப்புங்க" என்று ராஜா தன் ஆர்கெஸ்ட்ராவிடம் கூறியிருப்பார் போல. ஏன் சொல்கிறேன் என்றால், சரணம் முடிந்தவுடன் "மீன்கொடி தேரில் மன்மதராஜன்" என்று பல்லவி மறுபடி வரும் போது, ஒரு அடி வரும். பாடலின் ஓட்டத்தில் இருந்து சற்று வேறுபட்டு வரும். அது பொதுவாக ராஜாவின் இசையில் நான் பார்ப்பதில்லை. இந்த பாடல் ரொம்ப ஜாலியாக இசை அமைத்திருப்பார் போல. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "கலக்கிட்டீங்க தலைவா".






எல்லா பாடலும் போட ஆசை தான். இருந்தாலும் மூன்றோடு நிறுத்திக் கொள்ளலாம். தெய்வீக ராகத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம். "தெய்வீக ராகம். தெவிட்டாத பாடல். கேட்டாலும் போதும். இளநெஞ்சங்கள் வாடும்." உண்மை தான். பாடல் இதோ.




19 Comments:

At 8:20 AM, Anonymous Anonymous said...

அருமயா சிலாகித்து விமர்சித்திருக்கீஙக.வாழ்த்துக்கள்.

 
At 8:39 AM, Anonymous Anonymous said...

சிவா,

நேத்துதான் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே..' பாடலை பதிவிறக்கம் செய்து ரசித்துக் கொண்டிருந்தேன்.. இன்று உங்கள் பதிவில்.. என்ன ஒரு கோஇன்சிடென்ஸ்.ம்ம் :)

சொற்பமேயானாலும் அற்புதமான பாடல்களை பாடிய பெருமை ஜென்சிக்கு உண்டு.

புதிய வார்ப்புகளில் 'தன் தன தம் தன தாளம் வரும்...' இதுவும் பயங்கர ஹிட் தானே..விட்டுட்டிங்களே.. ஜென்சியுடன் வேறு யாரோ பாடி இருப்பார்கள். வசந்தா என்று படித்ததாக நியாபகம்.

அன்புடன்
கீதா

 
At 12:15 PM, Blogger முத்துகுமரன் said...

அடப் போங்கய்யா. ஆயிரம் மலர்களையும், ஒரு இனிய மனதை விட்டுட்டு ஜென்சி பாட்டா?
ஏத்துக்க முடியாது.

இளையராஜாவின் மிகச் சொற்பமாக பயன்படுத்திய பெண் பாடகிகள் அனைத்தும் மிக மிக அற்புதமான பாடல்களே. மற்றவர்களை விட ஜென்சி பாடல்களை கேட்கும் போது நம்மையறியாமல் தனிமை நம்மீது ஒட்டிக் கொண்டு நம்மை கரைத்துவிடுவதை கவனித்து இருக்கிறீர்களா

 
At 12:16 PM, Blogger முத்துகுமரன் said...

தெய்வீக ராகம் போட்டதால மன்னிச்சு விடுறேன்:-)

 
At 12:21 PM, Blogger சிவா said...

சரி! சரி! டென்சனாகாதிங்க முத்துகுமரன்! எல்லாவற்றையும் போட ஆசை தான். அது பிறகு பதிவு மாதிரி இருக்காது இல்லையா! அப்புறம் ஏதோ பட்டியல் மாதிரி ஆகிவிடும். 'ஆயிரம் மலர்களே" பாடல் உங்க விருப்பமாக அடுத்த நேயர்விடுப்பத்தில் போட்டு விடுகிறேன். மன்னிச்சிக்கிடுங்க நண்பரே :-)

 
At 1:53 PM, Blogger குமரன் (Kumaran) said...

மூணும் முத்தானப் பாடல்கள் சிவா. தெய்வீக ராகம் பாடல் மட்டும் இப்போது தான் முதன்முதலில் கேட்கிறேன்.

 
At 2:23 PM, Blogger சத்தியா said...

கேட்போர் மனதை ஏதோ ஓர் வகையில்
ஈர்த்து வைத்துக் கட்டிப் போடும் குரல்
வளம் ஜென்சியிடம் இருக்கிறது. ஜென்சியின் பாடல்களை நானும் விரும்பி ரசித்தேன்.

நன்றிகள்.....

 
At 8:16 PM, Blogger சிவா said...

அனானிமஸ்! உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பெயரை சொல்லுங்க, இனி வரும் போது.

கீதா! "Great People think alike" அப்படிம்பாங்க. அது நம்க்கு ஒத்து வராத வாசகம் என்றாலும் "ஒரே குட்டைல ஊரிய மட்டை" என்று ஒன்று சொல்வார்கள். அது உண்மை தான். ராஜா இசையை ரசிப்பதில் நாம் ஒரே மாதிரி தானே. இருந்தாலும் அந்த கோஇன்சிடண்ட் குறித்து சந்தோசம் :-)
//**சொற்பமேயானாலும் அற்புதமான பாடல்களை **// அட! எதுமை மோனைல கலக்கறீங்க :-)

முத்துகுமரன்! எல்லா பதிவும் படிச்சி கருத்து சொல்வதற்க்கு நன்றி. மன்னிச்சிருங்க பாஸ்! இனி இப்படி நடக்காம பாத்துக்கறேன். பாடலை பார்த்து போடறேன் :-))

குமரன்! 'தெய்வீக ராகம்' கேட்டதில்லையா? நீங்க எந்த கிரகத்தில் இருந்து வர்றீங்க குமரன்? :-). முத்துக்கள் மூன்று தான்.

சந்தியா! உங்கள் முதல் வருகைக்கு நன்றி! ஜென்சி குரலில் நம்மை கட்டி போடும் கலை இருப்பது உண்மை தான். நன்றிகளுக்கு நன்றி. உங்களுக்கு பிடித்த பாட்டு வேற இருந்தால் கூறுங்கள். பதிவேற்றி கலந்துரையாடலாம்.

 
At 8:48 PM, Blogger முத்துகுமரன் said...

//குமரன்! 'தெய்வீக ராகம்' கேட்டதில்லையா? நீங்க எந்த கிரகத்தில் இருந்து வர்றீங்க குமரன்? :-). முத்துக்கள் மூன்று தான்.//

இப்ப எனக்கு அந்த சந்தேகம் வருது சிவா

 
At 8:52 PM, Blogger பரஞ்சோதி said...

சிவா,

நான் அதிகமாக சினிமாப்பாடல்களை கேட்பதில்லை.

ஆனால் ஜென்சி அவர்களின் சில பாடல்கள் என்னை தாலாட்டியிருக்கிறது, அவர்களின் பாடல் என்றால் முழுப்பாடலையும் கேட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன்.

சமீபத்தில் கூட அவர்களின் பேட்டியை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன்.

குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கிறார், பழைய நினைவுகளை சொல்லும் போது கண்ணீர் வந்து விட்டது. இளையராஜாவை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்று சொன்னார்.

 
At 2:25 PM, Anonymous Anonymous said...

Deiveega raaga...... Wow! sure is a divine tune by Raaja! Jency, I love her voice, Raaja gave her some haunting melodies, sure she fulfilled the Maestro's expectations!!
My favorite Jency solo is....
Adi penney..... mullum malarum! what a joyous song! Gramathu innocent girl ooda happy enthusiatistic moments, fantastic picturization too! Raaja's enchanting orchestration, listen to that percussion, flute postlude!!!
geetha sangeetha....with JC
Kadhal oviyam...with God Himself
are my other fav jency pattu! thanks siva!
Happy Newyear!!!
love, vinatha

 
At 3:58 PM, Blogger சிவா said...

பரஞ்சோதி! சினிமா பாடல்களில் தேர்ந்தெடுத்து கேளுங்க. இசை ரொம்ப நல்லதுங்க. இந்த டி.வி பார்க்கறதை விட. ஜென்சி பாடல் உங்களை கீதம் பக்கம் இழுத்துவிட்டதை பார்க்க சந்தோசம் :-)

உஷா! ர்ர்ரா என்று ஜென்சி உச்சரிப்பு நமக்கு பிடித்து போனதென்னவோ அவருடைய குரலின் வசீகரம் தான். "மயிலே மயிலே" பாட்டுல "உறவுகள் வழராதோ" என்பாரே அந்த 'வழராதோ" கூட அழகு தான் :-)) மற்ற பாடல் தானே, கேட்டுடலாம். அடுத்த பதிவிலேயே ஒன்று வருகிறது நாளைக்கு :-)

வினதா அக்கா! இப்போ தான் இங்கே வர கண் தெரிந்ததா? :-). உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். "அடி பெண்ணே" பாட்டு லேசா நியாபம் வருது. "காதல் ஓவியம்" கிளாசிகல் பாட்டு அல்லவா. தலைவர் கலக்கி இருப்பாரே. அடிக்கடி வருவது தானே.

 
At 5:11 PM, Blogger Vijayakumar said...

சிவா! இப்போது தான் தங்கள் பதிவுக்கு வந்து பார்த்தேன். இசைக்கதம்பமே உங்கள் பதிவாக கலக்கியிருக்கிறீர்கள். NICE work தலீவா! ஜென்சி பற்றி நம் வலைப்பதிவர்கள் நிறைய பேர் கொஞ்ச நாள் முன்பு சிலாகித்துக் கொண்டிருந்தோம். எந்த பதிவு என்று ஞாபகம் இல்லை. ஒரே வாக்கியத்தில் ஜென்சியை பத்தி சொல்லனும்னா "Simply super". அப்புறம் சொற்ப பாடல்கள் தான் அவர்கள் தமிழில் பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதை யாராவது தொகுத்து மொத்தமாக வெளியிட்டாலும் நல்ல இருக்கும்.

 
At 6:07 AM, Blogger சிவா said...

வாங்க விஜய்! முதல் தடவையா இந்த பக்கம் வந்திருக்கீங்க. தலைவர் பாட்டுன்னா சும்மாவா. உங்கள் பாராட்டுக்கு நன்றி. ஜென்சி ராஜாவின் இசையில் தான் நிறைய பாடியிருக்குறார் என்று நினைக்கிறேன். வேறு யார் இசையிலாவது பாடிய பாடல்கள் தெரிந்தால் கூறுங்கள். அடிக்கடி வாங்க. பாட்ட கேளுங்க. ஆமா! சம்மி எங்கே? ஆள காணோமே?.

 
At 6:21 AM, Anonymous Anonymous said...

சிவா,

எனக்குத் தெரிஞ்சு ஜென்சி இந்த பாடல் (வேறு இசையமைப்பாளருக்காக) பாடி இருக்கிறார்..

பாடல்: மணியோசை கேட்டதா
படம்: இருளும் ஒளியும்
பாடியவர்: ஜெயசந்திரன், ஜென்சி
இசை: கோபி பாஸ்கர்

பாடலும் நன்றாக இருக்கும்

அன்புடன்
கீதா

 
At 8:13 PM, Blogger சிவா said...

தகவலுக்கு நன்றி கீதா!

 
At 7:45 AM, Blogger சத்தியா said...

"சந்தியா! உங்கள் முதல் வருகைக்கு நன்றி! ஜென்சி குரலில் நம்மை கட்டி போடும் கலை இருப்பது உண்மை தான். நன்றிகளுக்கு நன்றி. உங்களுக்கு பிடித்த பாட்டு வேற இருந்தால் கூறுங்கள். பதிவேற்றிகலந்துரையாடலாம்"

நன்றி சிவா!...

நான் "சந்தியா" இல்லை "சத்தியா". ஓகே பரவாயில்லை. நான் ஒரு பாடலை அதிக நாட்களாகத் தேடுகின்றேன் கிடைக்கவில்லை. அதாவது "பட்டக் கத்தி பைரவனில்"... இருந்து "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்... என்ற பாடல் முடிந்தால்
எனக்காகத் தாருங்களேன்... பிளீஸ்!...

 
At 8:06 AM, Blogger சிவா said...

வாங்க சத்தியா! (பேரை தப்பா சொன்னதுக்கு மன்னிக்கனும் :-) அடடா! என்னிடம் அந்த பாட்டு இல்லீங்களே. ஊருல இருந்தா தேடி கண்டுபிடிக்க எனக்கு நிறைய கடைகளை தெரியும். இங்கே வந்து மாட்டிக்கிட்டு ஒன்னும் நடக்க மாட்டேங்குது. கிடைத்தால் கண்டிப்பா சொல்கிறேன். உங்கள் மெயில் ஐடி குறித்து வைத்துள்ளேன். என்றாவது ஒரு நாள் கண்டிப்பா எனக்கு கிடைக்கும். மறக்காமல் அனுப்பி வைக்கிறேன்.

 
At 5:35 AM, Blogger சத்தியா said...

நன்றி சிவா.

 

Post a Comment

<< Home