கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, October 25, 2005

மழை வருது..மழை வருது


இந்த வாரம் "ஒரு நாள் ஒரு கனவு" "அ..ஆ" எல்லாம் பார்த்து மண்டை காய்ந்து போய், கொஞ்சம் பழைய படம் பார்க்கலாம் என்று இரண்டு DVD எடுத்து பார்த்தேன். ரெண்டும் பிரபு படங்கள் - "ராஜா கைய வச்சா" " சின்ன மாப்ளே" . 90 களில் வந்த படங்கள் எவ்வளவோ தேவலாம் போல இருக்கு. பெரிசா ஒன்னும் இல்லைன்னாலும், ரொம்ப கொத்து என்றும் சொல்ல முடியாது. பாடல்களையாவது ரசிக்க முடியும்.

"ராஜா கைய வச்சா" வில் ரொம்ப புடிச்ச பாட்டு "மழை மழை வருது..குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே". அருமையான மெலோடி. K.J.ஜேசுதாஸ்-ம் சித்ராவும் பாடிய ஜோடி பாடல். வித்தியாசமான இசையில் செல்லும் பல்லவியும், அழகாக மெலெடியை தபேலாவில் கொண்டு வரும் சரணமும் அருமை. கேட்டுப் பாருங்கள்.

பாடல் : மழை வருது..மழை வருது
படம் : ராஜா கைய வச்சா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், சித்ரா
இசை : "இசைஞானி" இளையராஜா


மேலும் பாடல்களுக்கு இங்கே.8 Comments:

At 11:40 AM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Beautiful tune by IR.Beautiful picturisation also.Group dance kodumai illamal nimmmadhiya thaniya lovers duet!!!!!! Gowthami yum azhagu.
Lyrics also nice.Thanks for the song!!! IR al matumae ippadi tune poda mudiyum.

With Love,
Usha Sankar.

 
At 11:51 AM, Blogger சிவா said...

உண்மை தான் உஷா. இந்த பாடலை அழகாக படமாக்கி இருப்பார்கள். கௌதமியும் அழகோ அழகு, இந்த படத்தில். :-) . உங்கள் பழைய நியாபகங்களை இந்த பாடல் கொண்டு வந்தது கேட்டு சந்தோசம். அடுத்த பாடலில் பார்க்கலாம்.

 
At 12:20 PM, Blogger Thekkikattan said...

Siva, indhap paatu enna appadiye Nagercoil la irundhu Trivandrum Bus ride_la porapa nan CD-man la kettatha remind panniruchu. Very beautiful song. Appadi oru melody. Thanks pa.

Thekkikattan.

 
At 5:16 AM, Blogger G.Ragavan said...

ரொம்ப நல்ல பாட்டு. மெத்துன்னு இருக்கும் கேக்கும் பொழுதே. அதாவது மழைல நனைஞ்ச உணர்வு இருக்கும். நீங்க சொன்ன மாதிரி பாட்டு படமாக்கப் பட்ட விதமும் அழகு. கௌதமியும் அழகு.

 
At 5:37 AM, Blogger Maravandu - Ganesh said...

அன்புள்ள சிவா

கெளதமி நடித்துக்கொண்டிருக்கும் வரை அசிங்கமாத் தான் இருந்தார்.
நடிப்பதை நிறுத்திய பிறகுதான் அழகாக மாறினார் .

உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கமுடியாதவண்ணம் வைத்திருக்கிறீர்களே ? என்ன பொக்கிஷமா ?

 
At 6:52 AM, Blogger கீதா said...

அழகான, மனதை வருடும் பாடல்.

( பாடியவர் K J Yesudas என்பதற்கு பதில் K J Jesudas என்று குறிப்பிட்டுள்ளீர்கள். பெரும்பாலும் இப்படித்தான் மாற்றி எழுதுகிறார்கள். எனக்கும் சிறு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது.. இப்பொழுது இல்லை. அவர் பெயர் K J Yesudas)

கீதா

 
At 7:19 AM, Blogger சிவா said...

உஷா, ராகவன், தொக்கிக்காட்டான், கீதா, குமரன் எல்லோரும் என்னை போலவே பாடலை ரசித்து மகிழ்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

கீதா, //**எனக்கும் சிறு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. **// எனக்கும் இது ஆரம்பம் தானே. தகவலுக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன், அடுத்த பதிவில் இருந்து.
//**அதாவது மழைல நனைஞ்ச உணர்வு இருக்கும்.**// சரியாக சொன்னீங்க;

கணேஷ்! //**உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கமுடியாதவண்ணம் வைத்திருக்கிறீர்களே ? என்ன பொக்கிஷமா ?**// அதெல்லாம் இல்லை கணேஷ். நான் ஒரு ஆகாவலி Template-அ செலக்ட் பண்ணிட்டேன். அதுல பழைய பதிய List (Archives) பண்ண மாட்டேங்குது. அப்புறம் மத்த Template-la இருந்து கட் பண்ணி ஒட்டி, என்னோட Template ஒரு வழி ஆயிடுச்சி. Template-a மாத்த ஏதாவது வழி உண்டா. உங்கள் உதவி தேவை.

 
At 1:23 PM, Blogger சிவா said...

//**நடித்துக்கொண்டிருக்கும் வரை அசிங்கமாத் தான் இருந்தார்.
நடிப்பதை நிறுத்திய பிறகுதான் அழகாக மாறினார் .
**//
இதற்க்கு அர்த்தம் என்னவோ?, கௌதமிய நேரில் அடிக்கடி பாப்பீங்களோ. உங்க பக்கத்து வீடா. :-)

 

Post a Comment

<< Home