கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, October 22, 2005

பக்தி பாட்டு ஒன்னு

சரி! முதல் பாடலை வழக்கம் போல ஒரு பக்தி பாடலோடு ஆரம்பிச்சிரலாம். எனக்கு பக்தி பாடல்களில் T.M.S பாடிய முருகர் பாடல்கள், சீர்காழி கோவிந்தராஜனின் பிள்ளையார் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இவர்கள் இருவர் குரலிலும் அப்படி ஒரு பக்தி தவழும். "கணபதியே வருவாய்" என்று கணீரென்று விடியற்காலையில் பிள்ளையார் கோவிலில் கேட்கும் சீர்காழி கோவிந்தராஜனின் பாடல், "முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு" என்று உருக்கமான T.M.S பாடல் என்று பழைய பக்தி பாடல்களில் உள்ள தெய்வீகம் இப்போது வரும் பாடல்களில் ஏனோ காணாமல் போய்விட்டது. முஸ்லிம் பக்தி பாடல்களில் நாகூர் கனிபா பாடல்களில் இதே உருக்கத்தை நான் கேட்டிருக்கிறேன். இரு பாடல்கள் உங்களுக்காக,

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் யாரென்று தெரிந்தால் கூறுங்கள்.

பாடல் 1: கணபதியே வருவாய்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்








பாடல் 2: முருகனை கூப்பிட்டு
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்



7 Comments:

At 3:52 AM, Blogger குமரன் (Kumaran) said...

இரண்டு பாடல்களும் நன்றாய் இருந்தன சிவா...

TMSன் பாடல் அவரே இசையமைத்தது என்று எண்ணுகிறேன். எனக்கு தூரத்து உறவினர் அவர்.

 
At 5:49 AM, Blogger G.Ragavan said...

அருமையான பாட்டுகள் சிவா. எனக்குப் பிடித்த பாட்டுகளும் கூட.

இதனோடு ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் என்ற சீர்காழியின் பாடலும் மிகப் பிடிக்கும்.

 
At 11:52 AM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

TMS had composed music for most of the devotional songs sung by him
in the 60s and 70s.He composed music for this also.One famous devotional song sung by him was written by kuzhandaivelan while many other songs were by Tamil Nambi.

 
At 8:16 PM, Blogger சிவா said...

ராகவன், உங்களுக்கு முருகன் பாடல்கள் பிடிக்காமல் போகுமா?

ரவி, உங்கள் தகவலுக்கு நன்று. ஆச்சரியாமாக தான் இருக்கிறது. T.M.S இசை அமைத்தார் என்னும் போது. எவ்வளவு அருமையான, தெய்வீகத்தை கொண்டுவரும் இசை, குரல். எக்காலத்திலும் இப்பாடல்களுக்கு நிகரான ஒரு பக்தி இசை வரப்போவது இல்லை. பாமரனுக்கும் பக்தியை ஊட்டும் இசை, வரிகள், குரல்.

குமரன், TMS சொந்தகாரரா?. அவரை பார்த்திருக்கிறீர்களா?. நீங்களும் பாடுவீர்களோ?

 
At 8:49 AM, Blogger குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவா. TMS சொந்தக்காரர் தான். பலமுறை பார்த்திருக்கிறேன். நான் வெறும் பாத்ரூம் பாடகன் தான்.

 
At 8:45 AM, Anonymous Anonymous said...

மோஹன்,

கணபதியே வருவாய்..
பாடல்;உளூந்தூர்பேட்டை சண்முகம்
இசை;டி.பி.ராமச்சந்திரன்்

ஒ.கே!

 
At 8:21 PM, Blogger சிவா said...

அனானிமஸ்! விவரங்களுக்கு நன்றி! அடுத்த முறை வரும் போது பெயரை சொல்லுங்கள்.

 

Post a Comment

<< Home