கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, March 13, 2006

இளையராஜா - எஸ்.பி.பி

இதுல என்ன விசேஷம் இருக்கு. இளையராஜா இசையில எஸ்.பி.பி பாடுவது வழக்கம் தானே என்று கேக்கறீங்களா. இது ராஜாவும் பாலுவும் சேர்ந்து பாடிய பாடல்களை பற்றிய பதிவு. நம்ம சினிமாவுல இரு பெண்குரல் பாடல்கள் நிறைய இருக்கிறது. கதாநாயகியுடன் தோழியும் சேர்ந்து பாடுவது போல நிறைய பாடல் இருக்கிறது. ஆனால் இரு ஆண்குரல் பாடல்கள் கொஞ்சம் கம்மி தான். காரணம் இரு கதாநாயகர்கள் படங்கள் குறைவு. அதிலும் ரெண்டு பேரும் சேர்ந்து பாடினா பெரும்பாலும் எழுச்சி பாடல்களாக, போட்டி பாடல்களாக தான் இருக்கும் (என்னம்மா கண்ணு, ஏ ராஜா ஒன்றானோம் இன்று).

ராஜாவும் பாலுவும் சேர்ந்து மிஞ்சி போனால் ஒரு ஐந்து பாடல் பாடி இருப்பார்கள். அதில் சிலவற்றை (அஞ்சில என்ன சிலது என்றீங்களா :-) இந்த பதிவுல பார்க்கலாம்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இந்த படத்தை பற்றி ஏற்கனவே நிறைய சொல்லி விட்டேன். 'ஒரு படப் பாடல்' என்று இந்த படத்தில் உள்ள மொத்தமாக எல்லா பாடலையும் போட ஆசை தான். எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' வில் இருந்து 'வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்'. B.R.விஜயலட்சுமியின் இயக்கத்தில் வந்த படம் என்று நினைக்கிறேன். இவர் ஒரு பெண் கேமிரா(உ)மேன். அப்புறம் இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையும் உண்டு.

ஹீரோயின் லாவண்யாவை எஸ்.பி.பியும் ரகுமானும் நினைத்துப் பாடுவதாக வரும் பாடல். ஒரு சரணம் இளையராஜா. இரண்டாவது சரணம் எஸ்.பி.பி. இசையை பொருத்தவரை ரொம்ப கலவையான ஒரு பாடல். மொத்த பாடலும் தபேலாவில் சென்றாலும், அங்கங்கே வித்தியாசமாக போகும் ('பூம்பாவையின் சேவைகள்' தொடங்கும் போதில் இருந்து). கலக்க பாடல்..உங்களுக்காக இங்கே.


இரண்டாவது. இந்த படத்தில் முத்துப்போல இரண்டு எஸ்.பி.பி பாடல் இருந்ததால், இந்த பாடல் அவ்வளவாக ஹிட் ஆகவில்லை. 'புது புது அர்த்தங்கள்' படத்தில் இருந்து 'எடுத்து நான் விடவா என் பாட்டை'. ஒருவகையில் ஜனகராஜ் ரொம்ப கொடுத்து வச்ச நடிகர். ராஜா அழகாக ஜனகராஜ் மாதிரி பாடக் கூடியவர். ஜனகராஜுக்கு ராஜாவின் குரலில் நிறைய பாடல்கள் இருக்கிறது. அதில் இந்த பாடல் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும். காரணம், இதில் ஜனகராஜ் திக்குவாய் காரராக நடித்திருப்பார். எனவே பாடலிலும் நிறைய இடத்தில் இவர் திக்குவதும், எஸ்.பி.பி (ரகுமான்) 'வரலன்னா வுட்டுட்டு' அப்படின்னு கலாய்ப்பார். பாடல் இங்கே.


இறுதியாக, நிறைய பேர் கேட்டிருக்காத ஒரு அரிய அருமையான பாடல். 'உடன் பிறப்பு' படத்தில் இருந்து 'சோழர்குழ குந்தவை போல்'. சத்தியராஜ்-ரகுமான் நடித்த படம். இப்படி ஒரு சத்தியராஜ் படத்துக்கு இப்படி ஒரு பாடலா?. அதுவும் சத்தியராஜும் ரகுமானும் வேட்டிய காட்டிக்கிட்டு ரொம்ப இலக்கியத்தனாமா பாடிக்கிட்டு இருப்பாங்க. ஏனோ படத்திலும் ஒட்டவில்லை..பாடலும் காணாமல் போய் விட்டது. இரண்டு உயிர் நண்பர்கள். உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, அவர் பதிலுக்கு உனக்கு நான் இப்படி பெண் பார்க்கிறேன் என்று சொல்ல, ரொம்ப கவித்துவமான பாடல். பாடலின் வரிகளையும், ராஜாவும் பாலாவும் பாடும் விதத்தையும் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இது என்னோட விருப்பப் பாடல். கேட்டுப்பாருங்கள்.


இந்த மூன்று பாடல்களிலும் ரகுமான் இருக்கிறார். கடைசில ரகுமான் படப்பாடல்கள் மாதிரி ஆகி போச்சி :-).

இனி இரண்டு நேயர் விருப்பங்களை பார்க்கலாம். (தனி பதிவாக போடுவதை விட, இப்படி எல்லா பதிவிலும் சேர்த்து போடலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லா பதிவிலும் நேயர் விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டது போல இருக்கும் அல்லவா).முதலில் உஷா அக்கா விரும்பி கேட்ட 'போட்டேனே பூவிலங்கு'. 'பூவிலங்கு' படத்தில் இருந்து. முரளியின் ஆரம்ப கால படங்களில் ராஜாவின் இசை அபாரமாக இருக்கும். அதில் ராஜா பாடினா சூப்பர் ஹிட் என்று ஒரு சென்டிமென்டும் உண்டு. இந்த பாடல் ஜானகி பாடியது. இது எல்லா பெண்களுக்கும் (எங்க வீட்டுலயும :-) செண்டிமெண்டாக புடிக்குது. அது ஏன் என்று உஷா அக்கா சொல்வாங்க என்று நினைக்கிறேன். என் மனைவியின் பேவரைட் பாடலும் கூட. இங்கே.

அப்புறம் பரணி விரும்பி கேட்ட பாடல் ஒன்றையும் பார்க்கலாம். 'மீரா' படத்தில் இருந்து 'ஓ! பட்டர்ஃப்ளை'. ராஜா ஏன் இப்படி இப்போது கொடுப்பதில்லை என்று கேட்க வைக்கும் ஒரு கிளாசிகல் பாடல். விக்ரமோட முதல் படம் இதுவா. சரியா தெரியலை. ரொம்ப எதிர்ப்பார்ப்போட வந்து ஊத்தும் படங்களில் இதுவும் ஒன்று. மற்றபடி பாடல்கள் கலக்கலோ கலக்கல். 'புது ரோட்டுல தான்' யேசுதாஸ் மெலோடியும், 'லவ்வுன்னா லவ்வு..மண்ணெண்ண ஸ்டவ்வு' என்ற தத்துவபாடலும் இதில் தான். பாடல் இங்கே.


( நண்பர்களே! வேலை கொஞ்சம் அதிகமாகி விட்டதால் இனி வாரம் ஒரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன். வாரம் திங்கள் கிழமை தோறும் ஒரு பதிவாக கொடுக்கிறேன். உங்களுக்கும் தினமும் வந்து பார்க்க வேண்டியதில்லை அல்லவா - அன்புடன் 'சிவா')

10 Comments:

At 11:11 PM, Blogger தாணு said...

சிவா
நல்ல தேர்வு. எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் பாடிய பாடல்கள் ஏதாவது இருக்குதா?

 
At 4:08 AM, Blogger கைப்புள்ள said...

அண்ணே! நீங்க சொன்ன மாதிரியே ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கறேன். வழக்கம் போல எல்லாமே டாப் கிளாஸ் - நானும் ரசித்த பாடல்கள்.

 
At 3:34 PM, Blogger சிவா said...

தாணு அக்கா! 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' (தளபதி) இருக்கே :-)

கைப்புள்ள! வருகை பதிவு செய்யப்பட்டது மோகன்ராஜ் :-))

 
At 7:41 PM, Anonymous Anonymous said...

பாடலுக்கு மிக்க நன்றி சிவா, விக்ரமின் முதல் படம் "தந்து விட்டேன் என்னை" ஸ்ரீதர் படம் என்று நினைக்கிறேன்.

 
At 4:00 AM, Blogger சிவா said...

வாங்க உஷா அக்கா! உங்களுக்கு எல்லா பாட்டும் புடிச்சதில் (புடிக்காம போய்டுமா) ரொம்ப சந்தோசம். இன்னும் உங்கள் விருப்பம் சில இருக்கிறது. அடுத்த பதிவில் போடுகிறேன்.

நன்றி பரணி! ஆம்! நீங்க சொல்றது சரி தான். 'தந்துவிட்டேன் என்னை' பற்றி மேலும் ஒரு நண்பர் முந்தைய பதிவுகளில் கூறி இருந்தார். நான் தான் மறந்து விட்டேன்.

 
At 7:32 AM, Blogger முத்துகுமரன் said...

//இது எல்லா பெண்களுக்கும் (எங்க வீட்டுலயும :-) //..

எல்லாம் ஒரு ஆளை ஆயுள் கைதியாக்கிவிட்ட ஒரு வெற்றி களிப்புதான். வேறென்ன:-)))

தெரிஞ்சும் தெரியாதமாறி கேக்குறிங்க பாருங்க அதுதான் எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு சிவா...

உங்களிடம் நிறையவே இசைக்கடன்பட்டுள்ள
முத்துகுமரன்

 
At 6:30 AM, Anonymous Anonymous said...

Dear Siva,
I very recently came across this blog.Since then I'm making freq visits. This truely is a very good work from ur part. Keep up ur this service for all music lover especially IR lovers like me... ;0) And... I really don hav any words for this beautiful collection of Urs. kudos!!

Thanks.
ksr

 
At 11:59 PM, Anonymous Anonymous said...

thanu,
"en kaadhali yaar sollavaa"
apdinnu oru pazhaiya paattu kIdhu

 
At 7:39 PM, Blogger சிவா said...

முத்துகுமரன்! பதில் அளிக்க ரொம்ப தாமதமாக ஆகிவிட்டது. மன்னிக்கனும் நண்பரே.

ரொம்ப நாள் காணாம போய்ட்டீங்க..மறுபடி வந்திருக்கீங்க. உங்களை மறுபடி பார்ப்பதில் ரொம்ப சந்தோசம் முத்துகுமரன்

 
At 7:39 PM, Blogger சிவா said...

KSR! உங்கள் பாராட்டுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home