கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Saturday, November 12, 2005

மாசறு பொன்னே வருக


"தேவர் மகன்" படத்தில் இருந்து ஒரு சிறிய பாடல் இந்த பதிவில். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அலுத்துப் போகாத இசை. இந்த மூன்று நிமிட பாடலில் இருக்கும் தெய்வீகம் மிகவும் அற்புதமானது. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், இளையராஜா ஏன் இப்படி ஒரு எளிய முயற்சி செய்ய கூடாது என்றே தோன்றும். 'எளிய' என்று இங்கே சென்னது, இசையை அல்ல, திருவாசகத்திற்கு போட்ட பணமும், பல பேரின் உழைப்பும், காலமும் மிக மிக அதிகம். அதை வைத்து தான், இது போன்ற நம் பாடகர்கள், நம் இசையை வைத்தே திருவாசகத்தை விட பல மடங்கு அழகான இசையை இளையராஜாவால் கொடுக்க முடியும். அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம். கேட்டுப் பாருங்கள்.பாடல்:

மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!!
கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு)

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!

பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)


நண்பர் குமரனிடம் இந்த பாடலை போட்டு காண்பித்தேன். அவருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது. பாடலின் வரிகளை எழுதி தாருங்கள் என்றேன். அதோடு விளக்கத்தையும் சேர்த்தே கொடுக்கிறேன் என்று எழுதி கொடுத்தார். (நன்றி குமரன்) பாடலை மேலும் ரசிக்க, முழு பொருளையும் தெரிந்து கொள்ள - இங்கே:

மாசறு பொன்னே வருக! - குறையில்லாத தங்கமே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக! - திரிபுரம் எரித்து அதில் வாழ்ந்த அசுரர்களை அழித்த சிவபெருமானின் உடலில் பாதியாய் நிற்பவளே வருக
மாதவன் தங்காய் வருக - மாதவனாம் கண்ணனின் தங்கையே வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் - அழகான முகமும்
குறுநகையும் - புன்சிரிப்பும்
குளிர் நிலவென
நீல விழியும் - கருவிழியும்
பிறைநுதலும் - நிலாப்பிறை போன்ற நெற்றியும்
விளங்கிடும் எழில் - கொண்டு விளங்கிடும் அழகிய
நீலியென - கருநிறம் கொண்டவள் என
சூலியென - திரிசூலம் தரித்தவள் என
தமிழ்மறை தொழும் (மாசறு)

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனது ஆணைத் தனை
ஏற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே! - உலகம் புகழும் தேவாரமும் ஆழ்வார்கள் பாடிய தமிழ் மாலைகளும் அழகானவளே (சிவபெருமானாகவும் திருமாலாகவும் நிற்கும்) உன் பாதங்களைப் போற்றுகின்றன.

திரிசூலம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
உனைத் துதித்திட
பாவம் விலகும்
வினை அகலும்
ஞானம் விளையும்
நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)

7 Comments:

At 5:08 AM, Blogger ENNAR said...

நன்றாக உள்ளது பாடலும் விளக்கமும்

 
At 7:56 AM, Blogger குமரன் (Kumaran) said...

சூப்பர் பாட்டு சிவா...இதையே என்னோட 53வது பதிவா வச்சுக்கலாமா? :-)

விளக்கம் நன்றாய் இருந்தது என்று சொன்னதற்கு நன்றி என்னார்.

 
At 8:29 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

Siva arumaiyana pattu nanbar kumaranin vilakkamum arumai.nandri TRC

 
At 9:10 AM, Blogger குமரன் (Kumaran) said...

viLakkam nanRAi irunthathu enRu sonnatharkku nanRi thiru TRC avarkalE. :-)

 
At 6:39 PM, Blogger சிவா said...

என்னார்! பாடல் கேட்டு உங்கள் கருத்துக்கு நன்றி

TRC அவர்களே! குமரன் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். தங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு திரை பாடல்கள் பிடிக்கும் என்றால் அடிக்கடி வாருங்கள். என்னுடைய சிவபுராணம் ப்ளாக்கில் குமரன் எழுதிக் கொடுத்த திருவாசக விளக்கமும் போட்டிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 
At 5:25 AM, Blogger Usha Sankar said...

Dear Siva,
Thanks for the song.Devar magan songs ellam fantastic list!!!!

This song is simply super.IR in music il sila songs ellam ketka simple aga irukum.Anal unmaiyil simple illai.Ketka ketka than composing vaule theriyum.Andha madhiriyana oru song idhu. I feel.

Dear Kumaran,
Vilakam nanraga irukiradhu.Adhanal songin inimai konjam adhigam anadhu.

With Love,
Usha Sankar.

 
At 7:24 AM, Blogger குமரன் (Kumaran) said...

உஷா. பாடலின் விளக்கம் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்த சிவாவுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home