கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, November 08, 2005

சிலுக்குத் தாவணி

கிருஷ்ண சந்தர். மிக சிறந்த பாடகர் என்று சொல்லும் அளவுக்கு பாடவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியவர் என்று உறுதியாக சொல்லலாம். இளையராஜா பொதுவாக சில பாடகர்களை அரிதாக பயன்படுத்தி இருப்பார். ஆனால் கொடுக்கும் பாடல்கள் சொல்லி வைத்து அடிப்பது போல இருக்கும். அதில் முதலில் வருபவர் கிருஷ்ண சந்தர். இதே போல் உமா ரமணன், சுனந்தா போன்ற பாடகிகளையும் சரியாக வேண்டிய பாடலுக்கு பயன்படுத்தியிருப்பார்.

கிருஷ்ண சந்தர் மொத்தமே இளையராஜா இசையில் 10ல் இருந்து 20 பாடல்கள் தான் பாடியிருப்பார். அத்தனையும் வந்த புதிதில் பட்டையை கிளப்பிய பாடல்களாக இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அந்த காலங்களில் இசையை ரசித்தவர்கள் சொல்லுங்கள்.

கிருஷ்ண சந்தர் பாடல்கள் சில பார்க்கலாம். இப்போது தெரியும் நான் சொல்வது உண்மை என்று.

1. ஏதோ மோகம்..ஏதோ தாகம்..நேற்று வர நெனைக்கலியே - கோழி கூவுது
2. அள்ளி வச்ச மல்லிகையே - இளமை இதோ இதோ
3. பூவாடை காற்றே..வந்து ஆடை - கோபுரங்கள் சாய்வதில்லை
4. ராஜா ராணி ராஜ்ஜியம் - அந்த சில நாட்கள்
5. தென்றல் என்னை முத்தம் இட்டது - ஒரு ஓடை நதியாகிறது.

இந்த பதிவில் ஒரு ஜாலி பாட்டு, கிருஷ்ண சந்தர் குரலில் கேட்கலாம். "அட! சிலுக்குத் தாவணி..காத்துல பறக்குது..பத்திரம் பத்திரம் பூங்கொடியே " . படம் 'கொம்பேறி மூக்கன்" என்று நினைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.





5 Comments:

At 7:50 AM, Blogger குமரன் (Kumaran) said...

கொம்பேறி மூக்கனும் பார்த்ததில்லை...சிலுக்குத் தாவணியும் கேட்டதில்லை...அறிமுகத்திற்கு நன்றி...:-)

 
At 7:59 AM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

If my memory is right he is the husband of vanitha.vanitha (not to be confused with vinitha) had acted in tamil films in the 1980s

 
At 8:15 AM, Blogger Jayaprakash Sampath said...

//If my memory is right he is the husband of vanitha//

yes, u are right. Krishnachandar is an actor too.. he has acted in the famous 'Eenadu' by IV Sasi.

Siva, your song selections are wonderful.. pls continue...

 
At 8:31 AM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

thanks prakash, if my memory was so correct in so many other things
how nice it would be :).

 
At 7:17 PM, Blogger சிவா said...

உஷா, அருண்மொழி பாடல் அடுத்த பதிவில் போட்டுடலாம். கிருஷ்ண சந்தர் பாடல் எல்லாமும் என்னிடம் இல்லை. கிடைக்கும் போது போடுகிறேன். நீங்களே ஒரு பாடல் எனக்கு அனுப்பி, அதற்கு ஒரு முன்னுரையும் எழுது அனுப்புங்களேன். இங்கே போட்டுடலாம். நம்ம க்ளப்பில் நிறைய பாடல் சொல்வீர்களே. ஒன்னு சொல்லுங்க.

குமரன், உங்களுக்கு கொம்பேரி மூக்கன் தெரியாதா. அபிராமி பட்டரும் விஷ்ணு சித்தரும் தெரிந்திருக்கு, நம்ம கொம்பேரி மூக்கன், கரிமேடு கருவாயன், தீச்சட்டி கோவிந்தன் பற்றி தெரியாதுன்னு சொல்லறீங்களே :-) (சும்மா ஒரு வெளாட்டுக்கு தான்)

ரவி ஸ்ரீனிவாஸ், உங்கள் தகவலுக்கு நன்றி. எனக்கு இந்த தகவல்கள் புதிது.
தங்களின் வருகைக்கு நன்றி.

பிரகாஷ், கிருஷ்ண சந்தர் நடித்திருக்கிறாரா?. தகவலுக்கு நன்றி. கிருஷ்ண சந்தர் புகைப்படம் கிடைத்தால் அனுப்புங்கள். இளையராஜா இசையே அற்புதம் தான். நான் எனக்கு பிடித்தவற்றை போடுகிறேன். உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

அடுத்த பதிவில் ஒரு 90 களில் வந்த அரிய பாடல் ஒன்றை பார்க்கலாம்.

 

Post a Comment

<< Home