நானே நானா! யாரோ தானா!
வாணி ஜெயராம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன். மிகவும் ஒரு நல்ல பாடகி. ஏனோ இளையராஜா இசையில் மிக சில பாடல்களே பாடி இருக்கிறார். அதில் இருந்து ஒரு பாடலை இன்று கேட்கலாம்.
"அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தில் இருந்து "நானே நானா! யாரோ தானா" என்ற பாடல். தொடக்க கிடாரும், சரணத்தில் வரும் குரூப் வயலினும் அழகு. கேட்டு பாருங்கள்.
9 Comments:
நல்ல பாட்டு சிவா. வாணி ஜெயராம் குரல் சூப்பர்.
எனக்கு பிடித்த வாணியின் பாட்டு: ஏழுஸ்வரங்களில் எத்தனை ராகம்.நானே நானா பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி
பாடல் வந்த புதிதில் பல முறைகள் கேட்டிருக்கிறேன்..நினைவூட்டலுக்கு நன்றி.
பாடலை கேட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
உஷா ! பாடல் தெரிவு பொதுவான மக்கள் ரசனையை கருத்தில் கொண்டே போடுகிறேன். எனக்கென்று ஒரு ரசனை உண்டு. எல்லாமே 90க்கு அப்புறம் வந்த பாடல்கள். அதை எல்லாம் போட்டால், நிறைய பேருக்கு பாடல் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், போடுவதில்லை. சில பாடல்கள் போட முயற்சி செய்கிறேன்.
சிறந்த பாடகிகளில் ஒருவர் வாணி ஜெயராம் என்பதில் மறு கருத்தே இருக்க முடியாது.
இந்தப் பாடலுக்காக அவர் தமிழக அரசின் விருது வாங்கியிருக்கிறார். எதனால் இளையராஜா இசையில் இவர் நிறைய பாடவில்லை என்பது இன்னமும் புதிர்தான்.
சொல்ல மறந்து விட்டேன்.
www.vanijairam.com போய்ப் பாருங்கள்.
நன்று ராகவன். இனையத்தை பார்த்தேன். வாணி ஜெயராம் பற்றி எல்லா தகவல்களும் இருக்கிறது. தெரிவித்ததற்க்கு நன்றி
ராகவன் முதலில் நீங்கள் அளித்த தகவலுக்கு நன்றி
சிவா... இளையராஜாவைப் பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நெடுநாளைய ஆசை. பார்ப்போம் முடிகிறதா என்று. உங்கள் பாடல்கள் தெரிவு அற்புதம். ரசனையான ஆளய்யா நீர்
கணேஷ்! தாராளமா இளையராஜாவை பற்றி பதிவு போடுங்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
//*ரசனையான ஆளய்யா நீர் **/ - நன்றி :-).
Post a Comment
<< Home