கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Sunday, March 26, 2006

நீயா? நானா? யார் தான் இங்கே பெரியவன்!!

தேர்தல் நேரம். எங்க பார்த்தாலும் ஒரே போட்டிங்க. நடிகர் செந்தில் எல்லாம் கலைஞருக்கு சவால் விடும் நேரம் (நேரத்த பாத்தியலா), இங்கே பாட்டிலேயே சில பேர் போட்டி போடுறங்க. யாரு ஜெயிச்சான்னு பார்க்கலாமா?.

எனக்கு பிடித்த சில பாட்டுப் போட்டிகள், முதலில் எம்.ஜி.ஆர்-யிடம் நம்ம கலைவாணர் (சரியா தெரியலீங்க) ஒரு பழைய படத்தில் (விக்கிரமாதித்தன்??) தப்பையை வச்சிக்கிட்டு கேள்வி மேலே கேள்வியா கேட்டு பாடுவார். ரொம்ப நல்லா இருக்கும். (பாட்டு இப்படி போகும் 'உலகினிலேயே பயங்கரமான ஆயுதம் என்று?' இவர் கேட்க, கலைவாணர் 'கத்தி' 'அருவா' என்று அடுக்குவார். அப்புறம் இவர் ' உலகினிலே பயங்கரமான ஆயுதம் நாக்கு' என்று சொல்வார் (குஷ்புகிட்ட கேட்டா 'ஆமாங்க..ஆமாம்' அப்படின்னு மூனு தரம் சத்தியம் பண்ணுவார் :-). அப்புறம் இன்னொரு போட்டி பாக்கியராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் வரும். ஷோபனா சங்கீதத்தில் பட்டையை கிளப்ப, இவர் 'லல்லல்லா' வச்சே சமாளிப்பார். செம காமெடி பாட்டு. கடைசில நொந்து நூலா போய் ஷோபனா 'சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்' அப்படின்னு பரிசை இவருக்கு கொடுத்திருவார். டக்குன்னு நினைவுக்கு வர்ற இன்னொரு பாடல் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'ல ஒரு பாட்டு. பாட்டு என்னன்னு மறந்து போச்சே :-(

சினிமாவுல எடுத்துக்கிட்டீங்கன்னா பொதுவா போட்டிப் பாட்டுல ஹீரோதாங்க ஜெயிப்பார். அவருக்கு பாட தெரியுதோ, ஆட தெரியுதோ அதெல்லாம் தெரியாது. கடைசில கதாநாயகிய கால் தடுக்கி தள்ளிவிட்டாவது ஹீரோவ ஜெயிக்க வச்சிடுவாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ஆட்டத்துக்கு பிரபுதேவா, லாரன்ஸ் எல்லோரும் பிச்சை எடுக்கணும். பின்ன!! ஆடி தோத்தவங்க எத்தனை பேரு.ம்ம்ம்ம்..அப்படி பட்ட சில உலகதரம் வாய்ந்த சில போட்டிகளையும், உண்மையிலேயே சில உருப்படியான போட்டிகளையும் இந்த பதிவில் கேட்கலாம்.

சரி! முதல் பாடல். நம்ம சூப்பர் ஸ்டாரிடம் இருந்தே ஆரம்பிக்கிறேன். 'தங்க மகன்' படத்தில் இருந்து 'பூமாலை! ஒரு பாவை ஆனது'. எஸ்.பி.பியை விட்டா போட்டிப் பாடல்களுக்கு பாட முடியுமா?. எதிர் பாட்டு எஸ்.ஜானகி. அடடா! என்னமா ஒரு இசை. இப்படி பாட்டு எல்லாம் ராஜாவுக்கு அல்வா மாதிரி. ட்ரம்ஸ், ட்ரம்பட் என்று ஒரே வெஸ்டர்ன் கலக்கல். இங்கே ரஜினியோடு போட்டிப் போட்டு தோற்ற அம்மணி பூர்ணிமா. எப்படி தோப்பாங்க. ஐயகோ..இந்த கொடுமையை எல்லாம் கேட்க ஆளே இல்லீங்களா. சூப்பரு ஆடி ஆடி பாப்பாரு (ட்ரை பண்ணுவாரு)..அம்மணியும் சளைக்காமல் ஆடி பட்டைய கிளப்புவாங்க. அப்புறம் தலைவர் 'இது வேலைக்கு ஆறதுல்ல (பாட்டு முடிய போதுல்லா)' அப்படின்னு போட்டுக்கிட்டு இருக்குற சட்டைய கலட்டி எறிவாரு. பூர்ணிமா 'லே! என்னா இது! சின்னப்புள்ள தனமா இருக்கு!' அப்படின்னு திரு திருன்னு முழிப்பாங்க. 'சரி! போய் தொல' அப்படின்னு துப்பட்டாவ எடுத்து வீசுவாங்க. அப்புறம் தலைவர் போட்டுருக்கிற பனியனையும் வீச, 'நான் இந்த வெளாட்டுக்கு வரல' அப்படின்னு அம்மணி முழிச்சிக்கிட்டு ஒரு 20 செகண்ட் நிப்பாங்க. அவ்வளவு தாங்க. 'ஹே..ஹே..ஹே' அப்படின்னு எஸ்.பி.பி உச்சஸ்தாயில் பாட, தலைவர் ஜெயிச்சிடுவார். ரசிக கண்மணிங்க, விசிலடிச்சான் குஞ்சுங்க எல்லாம் 'தலைவா' அப்படின்னு கீழ கெடந்த பழைய லாட்டரி டிக்கட்ட எல்லாம் பொறுக்கி கிழிச்சி பூ மாதிரி வீசுவாங்க. சுபம். 'பாட்ட போடாம, இது என்ன வழ வழன்னு' யாரோ திட்டுறது கேக்குது. சரி! இந்தாங்க பாட்டு.





போன பாடலுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத பாடல் இரண்டாவது. 'வருசஷம் 16' படத்தில் இருந்து 'கரையாத மனமும் உண்டோ'. இந்த படம் கார்த்திக், பாஸில், குஷ்பு எல்லோருடைய திரை வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம். படம் பற்றி சொல்லத் தேவை இல்லை. தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டீங்க.இந்த பாடல் முதலில் எனக்கு ரொம்ப கர்னாடிக் மாதிரி தெரிந்தது. ஆனால் கேட்க கேட்க ரொம்ப புடிச்சு போயிற்று. அதிலும் இரண்டாவது சரணத்தில் ராஜா செம கலக்கு கலக்கி இருப்பார். "மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும் காவல் தெய்வமும் நீயே' என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு வரிக்கும், வரி முடியும் போதும் ஒவ்வொரு தாளத்தில் வரும். அதிலும் தபேலாவும், மிருதங்கமும் மாற்றி மாற்றி ஆவர்த்தன்ம் செய்யும். இப்படி பாடலுக்கு யேசுதாஸை விட்டா வேற ஆள். மனுசன் குரலில் தான் என்ன ஒரு உருக்கம். சித்ரா மட்டும் என்ன சும்மாவா. ரசித்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு இசை கச்சேரி.





போன பாடல் ரொம்ப கர்னாடிக். இப்போ அதே போல உருப்படியான ஒரு போட்டி. ஆனா வெஸ்டர்னில். 'பாடு நிலாவே'யில் எல்லாமே ரொம்ப நல்ல பாடல்கள். ஆனால் ஏனோ 'மலையோரம் வீசும் காற்று தான் நிறைய பேருக்கு தெரிகிறது. இந்த போட்டி பாடல் 'வா வெளியே! இளம் பூங்குயிலே'. மறுபடியும் எஸ்.பி.பி. எதிர் பாட்டு சித்ரா. எனக்கு புடிச்ச ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் ஒன்று. பல்லவி என்னா ஒரு பீட். ஏஸ்.பி.பி பாடலை தொடங்கும் போது லேசா மனோவோ என்று ஒர சந்தேகம் வந்து போகும். அப்புறம் ஒரு வரி பாடியதுமே தெரிஞ்சிடும். இது ஒரு க்ளைமாக்ஸ் பாடல். மோகனுக்கு க்ளைமாக்ஸ் கட்ட நதியாவின் அப்பா துப்பாக்கியோடு ரெடியா இருப்பார். போலிஸ் நதியாவை 'மேடம்! நீங்க கண்டிப்பா பாடணும். இல்லன்னா அவர் உயிருக்கு ஆபத்து' (என்ன லாஜிக்கோ..மறந்து போச்சுங்க :-) அப்படின்னு சொல்லி நதியாவை எதிர் பாட்டு பாட அனுப்புவாங்க. இது தெரியாம மோகன் அலம்பி பாடிகிட்டு இருப்பார். நதியா அழுதுகிட்டே, அதை காட்டிக்காம, எதிர்ப் பாட்டு பாடுவாங்க. மோகனின் அலம்பலை அப்படியே பாடும் விதத்தில் கொண்டு வந்திருப்பார் எஸ்.பி.பி. நதியாவின் சோகம் கலந்த பாடலை அழகாக பாடி இருப்பாங்க (அலம்பல் இல்லாம) சித்ரா. ரெண்டு தலை சிறந்த பாடகர்களை ரசிக்க இந்த பாடல் போதும். ட்ரம்ஸ்லயே போகும் பாடல், முதல் சரணம் முடிந்தவுடன் 'நான் அறிவேன் இளம் பூங்குயிலே' என்று சித்ரா பாடும் போது சட்டென்று தபேலாவுக்கு தாவி, பின் எஸ்.பி.பி 'நீ வா வெளியே இளம் பூங்குயிலே' என்று தொடரும் போது ஜிவ்வென்று ட்ரம்ஸ்க்கு தாவுவது கலக்கலாக இருக்கும். இப்படி ரசிக்க நிறைய இருக்கு இந்த பாடலில். இதோ உங்களுக்காக.





இப்போ நாலாவதா ஒரு பாடல். 'காதல் பரிசு' 'விக்ரம்' 'காக்கி சட்டை' போன்ற கமல் படங்களுக்கு ராஜாவின் இசை ரொம்பவே விஷேசமா இருக்கும். ராஜா-கமல்-எஸ்.பி.பி-ஜானகி என்று சும்மா பட்டையை கிளப்பிய காம்பினேஷன் இந்த படப் பாடல்கள். இதில் 'காதல் பரிசு'ல இருந்து 'ஏய்! உன்னை தானே'. டக்குன்னு உடனே ஒன்று சொல்லணும்னா, ஆண் குரல் இரண்டுக்கும் எஸ்.பி.பியே பாடி இருப்பார். மனுசன் என்ன வேணும்னாலும் பண்ணுவார். யப்பா! கமலுக்கு குரலும் பாலு தான். எதிர் ஆட்டம் போடும் சைனா (மாதிரி) காரனுக்கும் பாலு தான். சைனா காரனுக்ககு கொஞ்சம் தொண்டை கட்டின மாதிரி பாடுவார். சைடுல ராதா ஒரு கும்பலோடு அந்த சைனா காரனை கலாஞ்சிக்கிட்டு இருப்பாங்க. அந்த கால டிஸ்கோ பாட்டு. இங்கே.





இறுதியாக, சூப்பர் ஸ்டார்ல தொடங்கி சூப்பர்லயே முடிக்கிறேன். இந்த பாடலை நல்ல ஸ்பீக்கர்ல/ஹெட் போன்ல கேட்டீங்கன்னா அதோட அருமை தெரியுங்க. ராஜாவோட டாப் டென் (100 அல்ல :-)ல இந்த பாடல் கண்டிப்பா இருக்கணும். இநத ராஜாவை அடிக்கடி பார்க்க முடியாதது என் துரதிஷ்டமே. சும்மா ஒரு வில்லன் கிட்ட 'என்னம்மா! கண்ணு! சௌக்யமா' என்று ஹீரோ பாடுற மாதிரி ஒரு சாதாரண பாடல் தாங்க. ஆனா இந்த பாடலுக்கு இபபடி ஒரு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற ராஜாவின் பரிணாமம் என்னை வியக்க வைத்த ஒன்று. இன்னைக்கு புது பாட்டு எல்லாம் பீட் பீட் என்று Woofer-அ அலற வைக்க புர் புர்னு ஒரு பேஸ் கிட்டரும், Synth ட்ரம்ஸுமா ஆகி போயிட்டு. ஆனா இந்த பாடலை கேட்டா எவ்வளவு ரிச்சா இருக்கு. சொல்ல வார்த்தைகள் வரலைங்க. பாட்ட கேளுங்க. ஐயோ! முக்கியமான ஒன்ன விட்டுட்டேனே! எஸ்.பி.பி-க்கு இணையாக சூப்பரா பாடி இருப்பார் மலேசியா வாசுதேவன். அவரோட பாடல்களில் சொல்லிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. சூப்பர் ஸ்டாரும், சத்யராஜும் இந்த பாடலில் ரொம்பவே நல்லா பண்ணி இருப்பாங்க. சரி! பாட்ட கேளுங்க.






அப்படியே இன்றைய பாடலை தினமும் கேட்க மறந்துடாதீங்க. மீண்டும் அடுத்த வாரம் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்

அன்புடன்
சிவா.

32 Comments:

At 8:05 PM, Anonymous Anonymous said...

எம்.ஜி.ஆர்-யிடம் நம்ம கலைவாணர் (சரியா தெரியலீங்க) ஒரு பழைய படத்தில் (விக்கிரமாதித்தன்??) தப்பையை வச்சிக்கிட்டு கேள்வி மேலே கேள்வியா கேட்டு பாடுவார். ரொம்ப நல்லா இருக்கும். (பாட்டு இப்படி போகும் 'உலகினிலேயே பயங்கரமான ஆயுதம் என்று?' இவர் கேட்க, கலைவாணர் 'கத்தி' 'அருவா' என்று அடுக்குவார். அப்புறம் இவர் ' உலகினிலே பயங்கரமான ஆயுதம் நாக்கு' என்று சொல்வார் (

சக்கரவர்த்தித்திருமகன்??

 
At 8:55 PM, Blogger துளசி கோபால் said...

வஞ்சிக்கோட்டை வாலிபன் பாட்டு இதுதான், 'ஜிலு ஜிலுஜிலு ஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே.....'

 
At 10:47 PM, Blogger CRV said...

Dear Siva, Excellent choice of songs. I want to clarify 2 things. 1) Karayadha manamum undo was not used in the movie. 2) Vaa veliye is sung by Mano and not SPB.

 
At 3:24 AM, Blogger சிவா said...

ஆனானிமஸ்! துளசி அக்கா உங்கள் பதிலை உறுதி படுத்திட்டாங்க. நன்றி துளசி அக்கா (பாருங்க! இந்த காலத்து பாடல் பற்றி பேசினா துளசி அக்கா தானா வர்றாங்க :-)). இனி பதிவுக்கு பதிவு இந்த காலத்து பாட்டு ஒன்னு போடணும் போலயே :-))

 
At 3:33 AM, Blogger சிவா said...

ராகவன்! எல்லோருக்கும் 'சக்கரவர்த்தி திருமகன்' என்று தெரிந்திருக்கு. சின்ன வயசுல எங்க ஊரு கொட்டாயில பார்த்தது. மறந்து போச்சு. கூட பாடுறது கலைவாணர் தானே?.

'வா வா பக்கம் வா' போட்டி பாட்டு மாதிரி இருந்தாலும் ரெண்டு பேரும் ஜோடியா தான் ஆடுவாங்க. ஏற்கனவே அந்த பாடலை போட்டுவிட்டதாலும் விட்டு விட்டேன். நீங்க சொன்ன மாதிரி ரெண்டுமே கலக்கல் பாடல் தான்.
'பூமாலை ஒன்று' பாட்டு மாதிரி யோசிக்கிற இயக்குனர்களுக்கே வெளிச்சம். எப்படியோ பாட்டு கேட்க நல்லா இருக்கும்.

இது நம்ம ஆளு நீங்க சொன்ன மாதிரி எஸ்.பி.பி கலக்கல் தான் போங்க. அதுவும் வாணி பாடும் போது இசை கர்னாடிக்லயும் இவர் பாடும் போது வெஸ்டர்ன்லயும் (இசை யாரு? சங்கர் கணேஷா?) போகும். பாடலை பார்த்து ரொம்பவே ரசிக்கலாம்.

ஆமாம் ராகவன்! 'என்னம்மா கண்ணு' பாட்டுல பாடகர்கள் பேரையே விட்டுட்டேன். மன்னிக்கனும் :-). அவசரத்தில் விட்டுப் போயிட்டு. இப்போ சேர்த்துட்டேன்.

//** டீ.எம்.எஸ் எஸ்.பி.பி போட்டிப் பாட்டு ஒன்னு உண்டு தெரியுமா? **// ஆஹா! ஆரம்பிச்சுட்டார்யா :-) யோசுக்க டைம் கொடுங்க ராகவன்! முயற்சி பண்ணறேன் (எப்படியும் உஷா அக்கா உதவி பண்ணுவாங்க :-))

 
At 3:44 AM, Blogger சிவா said...

வாங்க வெங்கட்! (அப்பாடா ஒரு வழியா பேசிட்டீங்க :-). உங்க ப்ளாக் ரெண்டு நாளா பார்த்தேன். கமெண்ட் சொல்லாம வந்துட்டேன். மறுபடி இந்த வாரம் வர்றேன்.

'கரையாத மனமும் உண்டோ' படத்தில் கிடையாதா?. ஒரு காட்சியில் கார்த்திக் பாட ஜனகராஜ் மிருதங்கம் வாசிக்க (வேலைகாரியை ஒரசிகிட்டே, வி.கே.ராமசாமி இவரை முறைப்பார்) குடும்பத்தில் எல்லோரும் அமர்ந்து ரசிப்பது போல வரும். அது 'பழமுதிர் சோலை' பாடலோ? படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. மறந்து போச்சு வெங்கட். தெளிவு படுத்தியதற்கு நன்றி.

'வா வெளியே' பாடல் என்பது என் அறிவுக்கு அது எஸ்.பி.பி என்று தான் தெரிகிறது. எனக்கு ஒரு இடத்தில் கூட (நான் கூறிய தொடக்கம் தவிர) மனோ என்ற சாயலே தெரியலை. அது எஸ்.பி.பி தான் என்றே நினைக்கிறேன். இந்த இடங்களை மனோவால் பாட முடியாது.
1. அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்' - இதில் 'எதற்கு' பாடும் விதம்.
2. வார்த்தை ஜாலம் தேவை இல்லை காட்டு உந்தன் பாட்டிலே - இதில் 'காட்டு' பாடும் போது வரும் ஒரு சிரிப்பு. இப்படி பாடல் முழுவதும் நிறைய இருக்கு.

நான் தவறாக கூட இருக்கலாம். உங்களிடம் ஒரிஜினல் சி.டி/கேசட் இருந்தால் அப்படியே ஸ்கேன் பண்ணி கொடுங்களேன். நானும் பார்த்துக்கறேன்.

 
At 3:47 AM, Blogger சிவா said...

ராகவன்! இன்னொரு அறிவு போட்டி என்றால், 'பட்டணத்தில் பூதம்' படத்தில் இருந்து 'உலகத்தில் சிறந்தது எது?' என்று ஒரு பாட்டு வருமே. அதுவும் ரசிக்கலாம். ஜெய்சங்கர்-நாகேஷ்-கே.ஆர்.விஜயா(??) பாடுவாங்களே..நாகேஷ் 'உலகத்தில் சிறந்தது வட்டி' என்று சொல்வார். விஜயா 'காதல்' என்பார். ஜெய்சங்கர் 'அன்பு' என்று கோப்பையை தட்டி செல்வார். நான் சொல்வது சரிதானா?

 
At 4:57 AM, Blogger சிவா said...

பாரதி! சரியா சொன்னீங்க! 'தாய்மை' தான் அது. மறந்து போச்சு. தப்பா சொல்லிட்டேன்.

 
At 8:04 PM, Blogger சிவா said...

பாரதி! //* "ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக" **// இந்த பாட்டு நல்லா கேட்டிருக்கேங்க. இப்படி பழைய பாட்டத் தான் எவ்வளவு மெனக்கட்டு எழுதி இருக்காங்க..ம்ம்ம்..இப்போவும் வருதே..ஐயோ..

 
At 4:10 AM, Blogger சிவா said...

ராகவன்! போட்டி பாட்டுல ஒரு பெரிய பட்டியலே கொடுத்துட்டீங்க. 'அன்பே வா' 'ஆடி பெருக்கு' பாட்டெல்லாம் கேட்டதா நியாபகம் இருக்கு.
//* இசையரசி என்னாளும் நானே **// இது தான் யோசிச்சி பாக்கறேன், கேட்டிருக்கேனா என்று :-(

//** யார வேணாலும் உதவிக்குக் கூப்பிடுங்க....ஆனா....நான் விடையச் சொல்ல மாட்டேன் **// ரொம்ப, என் அறிவுக்கு எட்டுற வரைக்கும் யோசிச்சு பார்த்தேன்.ம்ம்ம்ம்..உஷா அக்கா கிட்ட கேட்டு பார்க்கிறேன். இந்த T.M.S-அ விட்டு வரமாட்டேங்கறீங்களே.. :-))
.

 
At 8:06 AM, Blogger G.Ragavan said...

// Ini ungalai Kelvi Ragavan nu sollalama? Not go.Ragavan!!! //

உஷா, அப்ப கோ.இராகவன் அப்படீங்கறத கே.இராகவன்னு மாத்தச் சொல்றீங்களா! :-))

// My reply is

is this correct or not?

1. ONe song - Saravanan sonnan!
Sankaran kettan!!
Satshi ku swamy malai!!
idhu dhan TMS and SPB i think!!

ANother song - anal idhu A.L.Ragavan and TMS i think!!

Poova thalaiya pottal theiryum
neeya naana parthu vidu //

ஏ.எல்.ராகவன் டீஎம்.எஸ் போட்டிய ஒத்துக்க முடியாது. ஏன்னா நம்ம எஸ்.பி.பி டீ.எம்.எஸ் போட்டியப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.

சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டானும் சரியான பாடலே. பாராட்டுகள். ஆனா நான் நினைத்தது மிகவும் பிரபலமான நடிகர் நடித்த பிரபலமான பாடல்கள் நிறைந்த பிரபலமான படம். :-)

Correcta sollunga Ragavan!!!

 
At 8:58 AM, Anonymous Anonymous said...

hello siva,

innoru paatu nyabagam vandhadhu....oru swami padam...i think agasthyarum ravananum paadara maadhiri...meru malayai karikkarthukku paaduvaanga....raagathuleye potti irukkum.......kadaisila agathyar win panniduvaar...seerkazhi and tms paadiyadhunnu ninaikiren....

radha

 
At 9:15 AM, Blogger சிவா said...

ராதா! வருகைக்கு நன்றி. நீங்க சொல்ற பாடலோட காட்சி லேசா ஞாபகம் வருது. ஆனா புடி படமாட்டேங்குது. ராகவன்,உஷா,துளசி அக்கா இந்த படை வந்தவுடன் சரியா சொல்லிருவாங்க. கொஞ்சம் காத்திருப்போம்.

 
At 12:51 PM, Anonymous Anonymous said...

siva,

kandu pidichitten....."vendriduven..naadhathaal endha naataiyum vendriduven"

TMS and Seerkazhi...ella azhagaana raagangalai serthu paatu amaithirupar.kunnakudi vaidyanathan!!!

Radha

 
At 12:58 PM, Blogger சிவா said...

கலக்கிட்டீங்க ராதா! பழைய பாடல் நெறைய கேப்பீங்களோ? இப்படி பழைய பாட்டெல்லாம் எனக்கு எங்கயாவது டி.வில பார்த்தா தான் தெரியும். நம்ம ராகவன் தான் புகுந்து வெளையாடுவார். அவரு போட்டி போட்டின்னு பழைய பாடலா கேக்கறார். பாத்தீங்களா :-)

 
At 1:42 PM, Blogger லதா said...

அன்புள்ள ஜிரா,

படமும் பாடலும் - "நாளை நமதே"
:-)))

 
At 7:35 PM, Blogger சிவா said...

உஷா அக்கா! திடீர் திடீர்னு உங்க கணிணி மக்கர் பண்ணுதே. ஏன் :-(. ராகவனுக்கு பதில் சொல்ல நீங்க தான் சரியான ஆள். என்னிய விட்டுருங்க ராகவன் :-(.

//** Unga writings nalla iruku Siva!! **// நன்றி உஷா அக்கா!

//** Naaku
Idharku Kushu patri unga comments!!! REally nice write up!!
!! **// நீங்க வேற. சத்தமா சொல்லாதிய..யாராவது தொடப்பகட்டையோட வந்துர போறாங்க. :-))

மறக்காம பாட்டை எல்லாம் கேட்டுருங்க.

 
At 7:37 PM, Blogger சிவா said...

கேள்வியின் நாயகனே ராகவா! இப்படி போட்டியா நடத்துறீயலே..பாருங்க எல்லோரும் எவ்வளவு ஆர்வமா கலந்துக்கறாங்க. உங்களுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி கொடுத்துட்டு தான் எனக்கு மறுவேலை :-)). உங்களை மண்டை காய விட அடுத்த பதிவில் ஒரு பாடல் போட்டு ஒன்று போடணும். அப்போ தான் என் மனசு ஆறும் :-)

 
At 7:40 PM, Blogger சிவா said...

ஜிரா (பேரு நல்லா இருக்கு..சீரகத்துக்கு ஆங்கில பேரு மாதிரி..ஹி..ஹி)..லதா சொல்லிருக்காங்க பாருங்க பதில். சரியான்னு சொல்லுங்க.

 
At 10:18 PM, Blogger G.Ragavan said...

// Dear Ragavan,
Thanks for the response.
Ippo ninaivu vandhadhu!!

Film : Thirisoolam
Song : Irandu kaigal nanganal

Correcta?

With Love,
Usha Sankar. //

உஷா இந்தப் பாடும் பிரபலமான பாட்டே. ஆனால் யேசுதாசும் பாலுவும் சேர்ந்து பாடியதும். மேலும் போட்டிப் பாடும் அல்ல.

 
At 10:20 PM, Blogger G.Ragavan said...

// அன்புள்ள ஜிரா,

படமும் பாடலும் - "நாளை நமதே"
:-))) //

லதா....இதுவும் இன்னொரு டீ.எம்.எஸ், பாலு பாட்டு. ஆனா குடும்பப் பாட்டு. மொத்தம் மூன்று குரல்களில் இந்தப் பாட்டு ஒலிக்கும். பி.சுசீலா, டீ.எம்.எஸ் மற்றும் பாலு. எனக்குப் பிடித்தது பி.சுசீலா பாடியதுதான். டீ.எம்.எஸ் ஓவர்பாடிங் பண்ணீருப்பார். பாலுவோட குரலில் கனம் குறைவா இருக்கும்.

 
At 10:23 PM, Blogger G.Ragavan said...

// Dear Ragavan,
Padam : nalai namadhae - sonnavanga name ilaiyae?

Song : NaAN oru medai padagan
ayinum innum manavan!!

With Love,
Usha Sankar. //

உஷா நீங்களும் நாளை நமதே பாட்டைப் பிடிச்சீங்களா.....இது குடும்பப் பாட்டு இல்லை. போட்டிப் பாட்டும் இல்லை. ஆனால் கூட்டுப் பாடு. குதூகலப் பாட்டு. டீ.எம்.எஸ், எல்.ஆர்.ஈசுவரி, பாலு பாடியது. இந்தப் படத்துலயே எனக்குப் பிடிக்காதது இந்தப் பாட்டுதான்.

 
At 10:24 PM, Blogger G.Ragavan said...

// கேள்வியின் நாயகனே ராகவா! இப்படி போட்டியா நடத்துறீயலே..பாருங்க எல்லோரும் எவ்வளவு ஆர்வமா கலந்துக்கறாங்க. உங்களுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி கொடுத்துட்டு தான் எனக்கு மறுவேலை :-)). உங்களை மண்டை காய விட அடுத்த பதிவில் ஒரு பாடல் போட்டு ஒன்று போடணும். அப்போ தான் என் மனசு ஆறும் :-) //

நன்றி நன்றி நன்றி...அதுக்குதான் படாதபாடு படுறேன்...நேரந்தான் ஒழிய மாட்டேங்கி.....

 
At 10:26 PM, Blogger G.Ragavan said...

// கேள்வியின் நாயகனே ராகவா! இப்படி போட்டியா நடத்துறீயலே..பாருங்க எல்லோரும் எவ்வளவு ஆர்வமா கலந்துக்கறாங்க. உங்களுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி கொடுத்துட்டு தான் எனக்கு மறுவேலை :-)). உங்களை மண்டை காய விட அடுத்த பதிவில் ஒரு பாடல் போட்டு ஒன்று போடணும். அப்போ தான் என் மனசு ஆறும் :-) //

நன்றி நன்றி நன்றி...அதுக்குதான் படாதபாடு படுறேன்...நேரந்தான் ஒழிய மாட்டேங்கி.....

// ஜிரா (பேரு நல்லா இருக்கு..சீரகத்துக்கு ஆங்கில பேரு மாதிரி..ஹி..ஹி)..லதா சொல்லிருக்காங்க பாருங்க பதில். சரியான்னு சொல்லுங்க. //

இந்த ஜிராங்குற பேரு நம்ம உஷா ராமச்சந்திரன் வச்சது. அப்படியே நின்னு நிலைச்சிரும் போல இருக்கு. சீரகத்துக்கு ஆங்கிலத்துல குமின் சீட்ஸ் அப்படீன்னு பேரு. ஜீராங்குறது இந்தியில. உஷா சொன்ன ஜீரா அனேகமா சக்கரப் பாகாத்தான் இருக்கனும். :-)

 
At 8:49 PM, Blogger G.Ragavan said...

// Dear RAgavan,
Enna padal nu sollidunga seekiram!!
Velaiyae oda mataengaradhu!! Actuala, enaku TMS la konjam songs dhan pidikum.Adhanal dhan prob !! He he hehe!! //

உஷா...சிவா எங்கிட்ட பந்தயம் கெட்டீருக்காரு. அவரே சொல்லீருவாராம்....எப்பாடுபட்டாவது...அதுதான் நான் சொல்றதுக்கு யோசிக்கிறேன். மேலும் என்னைய மாட்ட வைக்க அவரும் புதிர் போடப் போறாராம்...அதுல ஜெயிச்சிட்டு இதுக்கு விடை சொல்றேன்.

 
At 3:00 AM, Blogger சிவா said...

ராகவன்!

//* சிவா எங்கிட்ட பந்தயம் கெட்டீருக்காரு. அவரே சொல்லீருவாராம்....எப்பாடுபட்டாவது **// ஏங்க இப்படி பொய் சொல்றீங்க..ஹாஹாஹா..இப்படி என்னைய மாட்டி விட்டுட்டீங்களே..நான் இந்த கேள்விக்கு சரண்டர் ஆகிட்டேன். உஷா அக்கா வேற ஆவலாக இருக்காங்க..Please பதிலை சொல்லிடுங்க :-))

 
At 3:22 AM, Blogger G.Ragavan said...

சரி. சரி. எல்லாரும் விருப்பமாக் கேக்குறீங்க...அதுனால சொல்றேன்.

இமயம் படத்துல இருந்து சக்தி என்னடான்னு ஒரு பாட்டு. அதுல டீ.எம்.எஸ் சிவாஜிக்கும் பாலு ஜெய்கணேஷுக்கும் பாடுவாரு. போட்டிப் பாட்டு.

 
At 12:10 PM, Anonymous Anonymous said...

siva,
கலக்கிட்டீங்க ராதா! பழைய பாடல் நெறைய கேப்பீங்களோ? இப்படி பழைய பாட்டெல்லாம் எனக்கு எங்கயாவது டி.வில பார்த்தா தான் தெரியும். நம்ம ராகவன் தான் புகுந்து வெளையாடுவார். அவரு போட்டி போட்டின்னு பழைய பாடலா கேக்கறார். பாத்தீங்களா

naanellam edhula romba kathukutti.....neenga raaghavan llam periya jaambavaans....adhun endha raghavan irukkaare avaroda sema bejaaru....eppadithan cyril oda bhakthi paattu post la haan namakku pudicha paatellam pottu oru comment ezhudellam nnu pona...evar maattukku ennoda choice ellam ezhudi..thanakku pudichadha pottutaar....enakku sema kaduppu ponga.....(raghavan just kidding...okay??!)

Radha

 
At 12:37 PM, Blogger சிவா said...

ராதா!
//** evar maattukku ennoda choice ellam ezhudi..thanakku pudichadha pottutaar....enakku sema kaduppu ponga **//

ஹா ஹா ஹா..இப்போ இப்படி பழைய பாட்டா கேட்டு எல்லோரையும் மண்டை காய விடுறார் :-))

 
At 8:34 PM, Blogger G.Ragavan said...

// raghavan irukkaare avaroda sema bejaaru....eppadithan cyril oda bhakthi paattu post la haan namakku pudicha paatellam pottu oru comment ezhudellam nnu pona...evar maattukku ennoda choice ellam ezhudi..thanakku pudichadha pottutaar....enakku sema kaduppu ponga.....(raghavan just kidding...okay??!) //

ராதா, நான் தப்பா எடுத்துக்கலை. விளையாட்டை வினையா எடுத்துக்கலை.....

சிறிலோட அந்தத் திரி எனக்கு நல்லா நினைவிருக்கு...ஆனா போடுறதுக்கு இன்னும் நெறைய பாட்டுக இருக்கு.....ஆனாலும் மத்தவங்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கனுங்குற பரந்த மனப்பான்மையால (ஹி ஹி ஹி) நான் கொஞ்சமா பாட்டுப் போட்டேன்.

 
At 9:30 PM, Anonymous Anonymous said...

I remember one song think this too is sung in competition... college competition i guess

Pengal illadha ulagathile annagal irundhu enna payan...

If I'm not wrong the film is kalyana parisu.

I'm not that familiar with old songs...so i may be wrong..

Any comments???

ksr.

 
At 5:29 AM, Blogger சிவா said...

ksr!

நீங்க சொல்ற பாடல் எனக்கும் லேசா நினைவுக்கு வருது. ஆனால் படம் நினைவுக்கு இல்லை. ஆமாம். அதுவும் போட்டி பாடல் தான். ராகவன் இந்த பக்கம் வந்தால் ஏதாவது தகவல் கிடைக்கலாம்.

 

Post a Comment

<< Home