கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, April 25, 2006

பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-2)

'என்னை தாலாட்ட வருவாளா' என்று பாடியாச்சு. அவள் வருவாளா? வர மாட்டாளான்னு தெரியணும்லா. அது தாங்க அடுத்த கட்டம். லவ்வ சொல்றது. இது தாங்க ரொம்ப சோதனையான கட்டம். இத தாண்டுறதுக்கே சில பயப்புள்ளைங்களுக்கு ரெண்டு மூனு வருசம் ஆயிரும். சிலதுங்களுக்கு இந்த கட்டமே கண்டமா போய் இறுதி கட்டமா போய்டும்.

காதலை 'அலைபாயுதே' மாதவன் மாதிரி 'நீ ரொம்ப அழகா இருக்க. லவ் பண்ணிடுவோமோன்னு பயமா இருக்கு' அப்படின்னு வழிஞ்சிக்கிட்டே சொல்லலாம். ஆனா இதுக்கு உலக மகா தைரியமும், எருமையை மாதிரி ரொம்ப கொஞ்சமா சொரணை மட்டும் இருக்கணும். இல்லன்னா வேலைக்காகாது.

Love proposal-க்கு நம்ம முரளிய விட்டா வேற ஆளு யாரு இருக்கா. டைட்டில் போட ஆரம்பிக்கும் போது ஒரு லெட்டர எழுதி சட்டை பைக்குள்ள வைப்பார். க்ளைமாக்ஸ் வரைக்கும் அத பைக்குள்ளயே வச்சு, நம்ம பொறுமையை எல்லாம் சோதித்து, அப்புறம் க்ளைமாக்ஸ்ல லெட்டர கொடுக்க போகும் போது அது ஆடி மாசம் காத்துல அடிச்சிக்கிட்டு போய்டும்..ம்ம்ம்..நிஜத்திலும் இப்படி நிறைய பேர பார்க்கலாம்.

இன்னொரு எளிதான வழி, நம்மக்கிட்ட நல்லா பேசுற பொண்ணுன்னா, பேசிக்கிட்டே இருக்கும் போது, சைடுல பிட்ட போடுறது. நம்ம 'குஷி' விஜய் மாதிரி. 'உங்களுக்கு என்னல்லாம் புடிக்கும்னு' கேட்டுட்டு பதில் என்னன்னு பாக்குறது. 'எனக்கா! எனக்கு கானா உலகநாதன், P.வாசு...' இப்படி பட்டியல் போகும். 'இல்ல..அதுக்கு மேல' அப்படின்னு வளர்த்துக்கிட்டே போகலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் பலன் கிடைக்கலாம். பொண்ணு ரொம்ப உஷார் பார்ட்டின்னா, 'மவனே! நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். அவ்வளவு ஈ.சியா நான் சொல்லிருவேனா' அப்படின்னு நமக்கு முரளி படம் க்ளைமாக்ஸ் ஒன்னு ரெடி பண்ணலாம். அது அவன் அவன் நேரத்தையும், கேள்வி கேட்கும் திறமையையும் பொருத்தது.

மேலே சொன்ன அதுக்குமே வழி இல்லன்னா, இருக்கவே இருக்கு நண்பர்கள் பட்டாளம். ஒருத்தன வெளங்காம ஆக்குறதுன்னா ஓடி வருவாங்க (ஜாலியா தான் :-). தூது அனுப்பலாம். லெட்டர் கொடுத்து அனுப்பலாம். ஆனா பையன் எவ்வளவு நம்ப தகுந்தவன் என்று பாத்துக்கணும் :-) . அப்படித்தான் நான் கல்லூரி படிக்கும் போது கூட்டாளி குமாருக்கு ஒரு புள்ள மேல காதல் வந்திடுச்சி. எங்களுக்கும் வகுப்பில் ஒரு நல்ல கதை கெடச்சிது. ஆனா பையன் கட்டம்-1 ஐயே தாண்ட மாட்டேங்கறான். ஒரு நா, பையன நாங்க எல்லோரும் தள்ளிக்கிட்டு போய் லெட்டர் எழுத பயிற்சி கொடுத்தோம் (நான் இல்லீங்க..நான் கூட இருந்தேன்..அம்புட்டு தான் :-). அவனும் ஒரு 10 லெட்டர் எழுதி வழக்கம் போல கிழிச்சி கிழிச்சி போட்டான். அவனுக்கு ஒன்னும் திருப்தியா வரலையாம். 'சரி விடுல. நானே எழுதி தர்றேன்' என்று நம்ம ப்ரண்டு கோபி கடிதம் எழுத, கடிதம் ரெடியானது. கொடுக்கப் போகும் போது பையன் சொதப்ப, கோபி கடுப்பாகி 'போடா! பயந்தாங்கொள்ளி. நானாவது போய் கொடுக்கறேன்' (ஒரு உதவி தான்:-)என்று பைக்கை எடுத்துக்கிட்டு புள்ளைங்க நிக்கிற பஸ் ஸ்டாண்டுக்கு போய் கடிதத்தை நீட்டி இருக்கிறான். 100 புள்ளைங்க நிக்கிற எடத்துல இப்படி பண்ணினா அந்த புள்ள என்ன பண்ணும். வாங்கல. அடுத்த நாள் என்னிடம் என்னோட வகுப்பு தோழி கேட்டா 'நம்ம கோபி லவ் பண்ணறானாமே. நேத்து கடிதம் கொடுத்தனாமே' அப்படின்னு. வகுப்பு புல்லா ஒரே பேச்சு. 'அடப்பாவி நான் கொடுத்ததுன்னு சொல்லலையா' அப்படின்னு குமாரு கத்த 'பயத்துல சொல்ல மறந்துட்டேன்ல. மன்னிச்சிருல' அப்படின்னு கோபி கதையையே மாத்திட்டான். இப்படி பட்ட பயலுவ கிட்ட சாக்கிரதையா இருக்கணும். இல்லன்னா ஒரு நிமிசத்தில கதையே மாறி போய்டும் :-)).

சரி சரி..கதை சொல்லிக்கிட்டு இருக்கறேன். பதிவுக்கு போகலாம். இந்த பதிவுக்கு பாடல் தேர்வு செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நம்ம சதீஷும், தங்கமும் பெரிய பெரிய பட்டியலாக மடல் அனுப்பி ரொம்ப உதவி செய்தார்கள். ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. பாடல்னா, 'அழகன்'ல மதுபாலா பாடுவாங்களே 'தத்தித்தோம்...' அப்படின்னு, 'என் கண்ணனே..உன் மீராவை நீ இங்கு பாராயோ' அப்படின்னு சொன்னதும் 'பொளேர்'ன்னு ஒன்னு விழும். இந்த மாதிரி பாட்டு (Love Proposal) தேடி தேடி அலுத்துப் போச்சு. அதுவும் ராஜா இசையில்..ம்ம்ம்ம்..சும்மா பாட்டுல 'I Love You' இருக்கிற மாதிரி 100 பாட்டு தேறும். ஆனா எல்லாம் சும்மா டூயட் பாட்டு மாதிரி தான் இருக்கு. சரி ஒரு ரெண்டு மூனு பாட்டோட திருப்தியா நிறுத்திக்கலாம்.

முதல் பாடல் மெல்லிசை மன்னர் M.S.V - ன் இசையில் (சரி தானே?) ஒரு அக்மார்க் Proposal பாடல். 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இருந்து 'சிப்பி இருக்குது..முத்தும் இருக்குது..திறந்து பார்க்க நேரம் இல்லடி ராசாத்தி'. யப்பா! என்ன ஒரு பாடல். ஸ்ரீதேவி சந்தம் சொல்லிக்கொண்டே போக, கமல் அதை வார்த்தை போட்டு பாட, என்ன ஒரு அழகான பாடல். பார்க்கவும் ரசிக்கவும். முடிக்கும் போது 'கொடுத்த சந்தங்களில் என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்' என்று கமல் முடிக்க, இதை எதிர்ப்பார்க்காத ஸ்ரீதேவி ஒரு சின்ன அதிர்ச்சி காட்டி இருப்பார். அழகு. அப்புறம் எஸ்.பி.பி-ஐயும் ஜானகியையும் பற்றி சொல்லவும் வேண்டுமா. குரலிலேயே நடிக்க இந்த ரெண்டு பேரால் மட்டுமே முடியும். இதோ பாடல்.



இரண்டாவதா, கடிதம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது. 'குணா' படத்தில் இருந்து 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே'. காதலியை வச்சே கடிதம் எழுத சொல்வது ஒரு வகை. குணா படத்தையோ, கமலையோ பற்றி கேக்கணும்னா நம்ம MySPB ப்ளாக் சுந்தர்கிட்ட பேச சொல்லலாம். மனுசன் கலக்கலா சொல்வார். அதனால் நான் நிறைய சொல்லலை. கமல்-இளையராஜா கூட்டணி பற்றி சொல்லணும்னா நிறைய சொல்லலாம். தற்போதைய திரை உலகத்தில் இசை ஞானம் உள்ள ஒரே கலைஞர் கமல் (இல்ல..விஜய்க்கு ஆஜித்துக்கும் நிறைய குத்துப்பாட்டு ஞானம் உண்டு என்றெல்லாம் என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது..ஆமாம்..சொல்லிப்புட்டேன். :-). இந்த பாடலை பற்றி..'மனிதர் உணர்ந்து கொள்ள..இது மனிதர் காதல் அல்ல' (ஆனா! படம் பாக்கறவன் மனுசன் தானே..இப்படி சொன்ன எப்படி :-)) இந்த வசனம்..அப்புறம் கமல் வசனமாக சொல்லிக்கிட்டே போக, அதை பாடலாக பாடும் விதம் (பாட்டாவே படிச்சிட்டியா..நடு நடுவுல மானே தேனே போட்டுக்க')..ஜானகியின் குரல், தலைவரோட "கமல் ஸ்பெஷல்" இசை..இப்படி நிறைய..சரி சரி..பாட்டுக்கு போகலாம்..



இறுதியாக, மௌனராகம் கார்த்திக் அந்த காலத்துல ரொம்ப பேமஸ். 'மிஸ்டர் சந்திரமௌலி..மிஸ்டர் சந்திரமௌலி' என்று அவர் மௌனராகத்தில் வந்தது என்றும் நினைவில் நிற்கும். அதையே அப்படி 'கோபுர வாசலிலே' படத்தில் ப்ரியதர்ஸன் பயன்"படுத்தி" இருப்பார். அந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் கார்த்திக் புகுந்து விளையாடுவார். இந்த பாடலை கிட்டத்தட்ட அலைபாயுதே மாதவன் ஸ்டைல் Proposal- என்று வச்சிக்கலாம். 'கேளடி பெண் பாவையே'. இளையராஜா-ப்ரியதர்ஸன் என்றால் விசேஷம் தான். எஸ்.பி.பி-யின் கலக்கல் பாடல் இங்கே.




நம்ம ப்ளாக் சதீஷும், தங்கமும் நிறைய பாடல் சொல்லி கொடுத்தார்கள். சதீஷ் கூறிய 'புத்தம் புது மலரே' (அமராவதி), தங்கம் கூறிய 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' (சேரன் பாண்டியன்) பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த பாடல்கள் என்னிடம் இல்லாததால், கிடைத்தவுடன் இங்கே கொடுக்கிறேன்.

சீக்கிரம் அடுத்த கட்டத்தில் சந்திக்கலாம்..வரட்டா..

10 Comments:

At 9:35 AM, Blogger G.Ragavan said...

ம்ம்ம்.....சிவாவின் வலைத்தளத்தில் மெல்லிசை மன்னரின் பாடல். :-) நல்லதே.

மூன்று பாடல்களும் மூன்று முத்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழ்நிலையைச் சொல்கின்றது. ஒவ்வொரு விதமாக. ஆனால் மூன்றும் காதலைச் சொல்லும் பாடல்கள்தான்.

முதல் பாடலில் இரண்டு அறிவாளிகள் அறிவாளித்தனமாகக் காதலைச் சொன்னால் இரண்டாவது பாடலில் இரண்டு அன்பாளிகள் அன்பைக் கொண்டு காதலைச் சொல்கிறார்கள். குறும்பாளிகளின் காதல் சொல்லும் முறை மூன்றாவது பாடலில்.

ஆனாலும் இது இரண்டு ஸ்பெஷல். எப்படித் தெரியுமா?

மூன்றில் இரண்டு இளையராஜா பாடல்கள்.
மூன்றில் இரண்டு எஸ்.பி.பீ பாடல்கள்
மூன்றில் இரண்டு ஜானகி பாடல்கள்

சரிதானா?

 
At 5:03 AM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! சிவாவின் வலைதளத்தில் நல்ல பாடல்கள் எப்போதுமே ஒலிக்கும் :-) ராஜா பாடல் மட்டும் தான் என்று நான் சொன்னதே இல்லை (இல்லன்னா ப்ளாக் பேரு ஏதாவது இளையராஜான்னு வச்சிப்பேன்). அதானால் மெல்லிசை மன்னருக்கும் இடம் உண்டு :-))

அடடா! நான் மூன்று பாடல் போட்டா, நீங்க அதில் ரெண்டு ரெண்டா பிரித்து அழகாக சொல்லிட்டீங்க. ஆமாம் ரெண்டு ராஜா, ரெண்டு SPB, ரெண்டு ஜானகி தான் :-))

ரெண்டு அறிவாளிங்க, ரெண்டு அன்பாளிங்க..ரெண்டு குறும்பாளிங்க...ஹாஹாஹா..நல்லாஇருக்குதே :-))

 
At 10:04 AM, Blogger G.Ragavan said...

// வாங்க ராகவன்! சிவாவின் வலைதளத்தில் நல்ல பாடல்கள் எப்போதுமே ஒலிக்கும் :-) ராஜா பாடல் மட்டும் தான் என்று நான் சொன்னதே இல்லை (இல்லன்னா ப்ளாக் பேரு ஏதாவது இளையராஜான்னு வச்சிப்பேன்). அதானால் மெல்லிசை மன்னருக்கும் இடம் உண்டு :-)) //

அட பிளாக்கிற்கு இளையராஜா பேரை வெக்கிற திட்டம் வேற இருந்துச்சா... :-)) அதுவும் தப்பில்லை. ஆனால் அப்புறம் அவர் பாட்டு மட்டுந்தான் போடும்படியாயிரும்.

// அடடா! நான் மூன்று பாடல் போட்டா, நீங்க அதில் ரெண்டு ரெண்டா பிரித்து அழகாக சொல்லிட்டீங்க. ஆமாம் ரெண்டு ராஜா, ரெண்டு SPB, ரெண்டு ஜானகி தான் :-)) //

மூனுல ரெண்டு போகுந்தானே....

// ரெண்டு அறிவாளிங்க, ரெண்டு அன்பாளிங்க..ரெண்டு குறும்பாளிங்க...ஹாஹாஹா..நல்லாஇருக்குதே :-)) //

நல்லாயிருக்கிறதாலத்தானே பாட்டுகளப் போட்டுருக்கீங்க.... :-)

 
At 8:23 PM, Blogger சிவா said...

ஆமாம் ராகவன்! ப்ளாக் பேரை இளையராஜா பேரோடு வைத்தால், நமக்கு புடித்தாலும் வேற இசை அமைப்பாளர்கள் பாடல் போட முடியாது..90% ராஜா என்றாலும், மற்றதும் திடீர்னு போடுவேன் :-))

 
At 8:24 PM, Blogger சிவா said...

சதீஷ்! நீங்க கொடுத்த பட்டியலை போட முடியலை..மன்னிக்கனும் :-(.

ராகவன் எதையும் அழகா சொல்வார்..மனுசன் ஒரு பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கறேன் என்று சொன்னார்..ம்ம்ம்ம்..அப்புறம் சத்தத்தையே காணோம்..சீக்கிரம் ஆரம்பியும்வே..ஆவலாய் இருக்கோம்லா :-)

 
At 9:14 AM, Blogger G.Ragavan said...

// ராகவன் எதையும் அழகா சொல்வார்..மனுசன் ஒரு பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கறேன் என்று சொன்னார்..ம்ம்ம்ம்..அப்புறம் சத்தத்தையே காணோம்..சீக்கிரம் ஆரம்பியும்வே..ஆவலாய் இருக்கோம்லா :-) //

சிவா நேரந்தான் சிவா....ஒரு டேமேஜரா இருக்குறது ரொம்ப நேரம் எடுத்துக்கிருது.......

 
At 6:37 AM, Blogger பாலராஜன்கீதா said...

ஜிரா,

ஏதோ என் நினைவிலிருந்து எழுதுகிறேன். பிழை இருந்தால் திருத்தவும். டி எம் எஸ் அவர்கள் நடிகர் திலகத்திற்காகப் பாடியது என நினைக்கிறேன்.
= = = = =
நான் அனுப்புவது கடிதம் அல்ல ... உள்ளம் ...
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல ... எண்ணம் ...
உன் உள்ளமதைக்கொள்ளை கொள்ள

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்குநான் எழுதும் கடிதம்
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல ........

எத்தனையோ நினைத்திருக்கும் எண்ணம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல ........
= = = =

 
At 2:49 PM, Blogger சிவா said...

பாலராஜன் கீதா! ஜீரா வந்து பாட்டப் பத்தி சொல்வார் :-).

எனக்கும் இந்த பாடல் நன்றாக நினைவிருக்கிறது. டி.எம்.எஸ் பாடல் தான். அவர் பாடும் விதமே அலாதி. நல்ல பாடல். உங்களிடம் இருக்கிறதா?

 
At 5:55 AM, Blogger பாலராஜன்கீதா said...

அன்புள்ள சிவா,

balarajangeetha at gmail dot com

மின்மடலுக்குக் காத்திருக்கிறேன்

 
At 5:55 AM, Blogger சிவா said...

பாலராஜன் கீதா! தனி மடல் ஒன்று அனுப்பியுள்ளேன். கிடைத்ததா?

அன்புடன்,
சிவா

 

Post a Comment

<< Home