கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, May 30, 2006

பாசில் - இளையராஜா

நண்பர்களே! போன வாரம் கமல்-ராஜா கூட்டணியில் சில பாடல்களை கேட்டோம். பதிவில் பின்னூட்டங்களை பார்க்கும் போது, பதிவு அந்த கூட்டணி மாதிரியே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நண்பர் சாணக்கியனுக்கு தான் நன்றி சொல்லணும்.

இந்த வாரம் ஒரு இயக்குனர்-ராஜா கூட்டணியை எடுத்து பாடல் போடலாம் என்று நினைத்தேன். இயக்குனர் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். பாரதிராஜாவில் தொடங்கி, மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார் என்று நிறைய இருக்கிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கம் முதல் இன்று வரை ஒரு படம் விடாமல் ராஜாவின் இசையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் இடம் இயக்குனர் பாசிலுக்கு தான். பூவே பூச்சூடவா- வில் ஆரம்பித்து 'ஒரு நாள் ஒரு கனவு' வரை இந்த கூட்டணி சிதறாமல் தொடர்கிறது. நான் இங்கு எடுத்துக் கொள்வது தமிழ் படங்கள் மட்டும் தான். பாசில் மலையாளத்தில் ரொம்ப அரிதாகவே ராஜாவை பயன்படுத்தி இருக்கிறார் (மலையாளம் 'காதலுக்கு மரியாதை' (Aniyathi Pravu) யே ராஜா கிடையாது). ஆனால் தமிழில் ராஜா இல்லாமல் பாசில் படம் இயக்கியது இல்லை.

பாசிலிடம் எனக்கு பிடிக்காத ஒன்று. யேசுதாஸ். விஜய் ஹீரோவாக இருந்தாலும் சரி, வடிவேலு ஹீரோவாக இருந்தாலும் சரி. கிட்டத்தட்ட எல்லா பாடல்களும் யேசுதாஸ் தான் பாட வேண்டும். போனால் போகட்டும் என்று மற்ற பாடகர்களுக்கு சில சமயம் வாய்ப்பு கிடைக்கும் (எஸ்.பி.பி-க்கே சான்ஸ் அரிது தான்). இது எனக்கு பாசில் படப்பாடல்கள் எல்லாமே ஒரே அச்சில் வார்த்த கொழுக்கட்டை மாதிரி ஒரே மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும்.

பாசில் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பாடலை இந்த பதிவில் கேட்கலாம்.

1. பூவே பூச்சூடவா (1985)

பாசிலின் முதல் தமிழ் படம். இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ரெண்டு நதியாவும், சின்னக் குயில் சித்ராவும். 'சின்னக் குயில் பாடும் பாட்டு' எப்போதும் எனக்கு பிடித்தப் பாடல். பத்மினி பாட்டியும் நதியா பேத்தியும் பாசமழை பொழிந்த படம். இடையில் வரும் எஸ்.வி.சேகர் வில்லத்தனம் ரசிக்கும் படி இருக்கும். சித்ராவுக்கு விருது கிடைத்த படம் என்று நினைக்கிறேன். சித்ராவின் இளம் குரலில் 'பூவே பூச்சூடவா' பாடல்.



2. பூவிழி வாசழிலே (1987)

பாசில் படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்தபடம் இது தான். முதல் படத்தில் செண்டிமெண்ட் கொடுத்தாலும், அடுத்த படத்திலேயே ஒரு த்ரில்லரை, அதுவும் கொஞ்சம் கூட பிசகாமல் பக்காவாக கொடுத்திருப்பார் பாசில். முதல் காட்சியில் அந்த குழந்தை ஒரு கொலையை பார்க்க, அதன் அம்மா கொல்லப்படும் காட்சியில் இருந்தே படம் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும். ரகுவரன் & கோ அந்த குழந்தையை சத்தியராஜிடம் இருந்து கடத்த முயலும் ஒவ்வொரு காட்சியும் அக்மார்க் த்ரில்லர். பாடலாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் ராஜா கலக்கி இருப்பார். வழக்கம் போல இரண்டு யேசுதாஸ் பாடல். ராஜா கலக்கி இருந்த மலேசியா வாசுவின் 'பாட்டிங்கே' (க்ளப் பாடல்) அவ்வளவாக எடுபடாததில் எனக்கு வருத்தமே. அதுக்கு என்ன! நம்ம ப்ளாக். அந்த பாடலை போட்டுட்டா போச்சு.

இந்த பாடலை இப்போது அப்படியே வாசிக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். இந்த ராஜா எங்கே போனார்? இந்த மாதிரி இசை கருவிகளை ஏன் இப்போது பயன் படுத்த முடிவதில்லை? எல்லாமே சில கீ-போர்டுக்குள் அடங்கி விட்டதா? இந்த பாடலை கேட்கும் போது இப்படி 100 கேள்விகள் என் மனதில் எழும்பும். ஒவ்வொரு இசை கருவிகளையும் அணு அணுவாக ரசிக்கலாம். ட்ரம்ஸ், பேஸ் கிடார், ஹம்மிங் என்று ஒரு இசை கலக்கல். மலேசியாவும் சைலஜாவும் அருமையாக பாடி இருப்பார்கள். பாடல் இதோ.



3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)

மீண்டும் சத்யராஜை வைத்து, ஆனால் ரொம்பவே மலையாள வாடையோடு ஒரு அம்மா செண்டிமெண்ட் வைத்து வந்த படம் 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. சுமாரான ஒரு படம். ரொம்ப சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. 'குயிலே குயிலே குயிலக்கா' சித்ரா-யேசுதாஸ் குரலில் இந்த பாடல்.



4. வருஷம் 16 (1989)

பட்டித்தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு படம். அப்போது எங்கு பார்த்தாலும் வருஷம்-16 தான். 'தர்மத்தின் தலைவன்' படத்தில் முதலில் வந்திருந்தாலும், குஷ்புவுக்கு கேவில் கட்ட அஸ்திவாரம் போட்ட ஒரு படம். கண்ணன்-ராதிகா-ராஜாமணி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போதும் நம் மனசுக்குள் நிற்கும். குடும்பம்-செண்டிமெண்ட்-காதல்-காமெடி என்று அம்சமாக கொடுத்திருப்பார் பாசில். ராஜாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும். 'பழமுதிர் சோலை எனக்காக தான்'..ம்ம்ம்ம்..இந்த பாடலையாவது எஸ்.பி.பி கிட்ட கொடுத்திருக்லாம்ல..ம்ம்ம்ம்...சரி சரி..யாரு பாடினா என்னா..பாட்டு நல்லா இருந்தா சரி..



5. அரங்கேற்ற வேளை (1990).

பாசில் முதல் முதலாக செண்டிமெண்ட்-அ ரொம்ப குறைத்து, முழுவதும் நகைச்சுவையாக கொடுத்த படம். கொஞ்சம் நாடகத்தனமா இருக்கும் (படமே நாடக கொட்டாய்ல நடக்கிற மாதிரி தானே). துறுதுறு ரேவதி, பிரபு. இவர்களுக்கு இடையே வி.கே.ராமசாமி படும் பாடு என்று நம்மை நல்லாவே சிரிக்க வைக்கும் நிறைய காட்சிகள் உண்டு. என்னோட பேவரைட் உமா ரமணனோட 'ஆகாய வெண்ணிலாவே' கலக்கல் பாடல். மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். எல்லோருக்கும் பிடித்த 'ஆகாய வெண்ணிலாவே' பாடல்.



6. கற்பூர முல்லை (1991)

'என்டே சூர்யபுத்திரிக்கு' மலையாளத்தில் பாசில் எடுத்த படத்தின் தமிழ் வடிவம் 'கற்பூர முல்லை'. டப்பிங்கா, இல்லை இரண்டையும் ஒரே சமயத்தில் எடுத்தாரா என்று தெரியவில்லை. நான் படமும் இன்னும் பார்க்கவில்லை. பாடலை கேட்டவரைக்கும், அமலா ஸ்ரீவித்யாவின் மகளாக வருவார், ஆனால் ஸ்ரீவித்யா அதை காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பார் என்று நினைக்கிறேன். மறுபடியும் யேசுதாஸ் :-). ஒரு அருமையான பாடல். யேசுதாஸ்-சுசிலா-சித்ரா பாடியது. 'பூங்காவியம் பேசும் ஓவியம்'.



7. கிளி பேச்சு கேட்கவா ( 1993)

மலையாள மம்முட்டியோடு பாசில் களம் இறங்கிய படம். நகைச்சுவையாக எடுக்கவா, த்ரில்லராக எடுக்கவா, கிராமத்து கதை மாதிரி எடுக்கவா என்று ரொம்பவே குழம்பி நம்மையும் குழப்பி இருப்பார். மம்முட்டி கிராமத்து வாத்தியாராக வரும் ஆரம்ப காட்சிகள், பேய் பங்களாவுக்கு சார்லியை கூட்டிக்கொண்டு கூத்தடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். மற்றபடி இரண்டு பாடலில் ராஜா படத்திற்கு கொஞ்சம் வெளிச்சத்தை கொடுத்தார். 'அன்பே வா அருகிலே' யேசுதாஸின் க்ளாசிகல் கலக்கல். அடடா! நம்ம எஸ்.பி.பி சிவகாமி நெனைப்பினிலே பாட்டு பாடறார். ( போங்கடே! இந்த பாட்டெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகாதுன்னு யேசுதாஸ் சொல்லிட்டார் போல :-). நான் டி.வில ரொம்பவே ரசித்த பாடல் இந்த சிவகாமி நெனைப்பினிலே. ஆடதெரியாமல் மம்முட்டி ஆடுவதையும், அந்த பெரியவர் ஒரு குடையை பிடித்துக்கொண்டு இரண்டு பேரையும் விரட்டி கொண்டு போவதையும் நிறையவே ரசிக்கலாம். ராஜாவின் ஒரு சில தபேலா ஆட்டம் பாடல்களில் இது ஒரு முத்து.



8. காதலுக்கு மரியாதை (1997)

'என்னப்பா பாட்டு போடறீங்க. நான் போடறேன் பாருங்க பாட்டு' அப்படின்னு ராஜா சொல்லி பாடல்களை கொடுத்தது மாதிரி இருந்தது 'காதலுக்கு மரியாதை' பாடல் வந்த பொழுது. அப்படி ஒரு படம் தயாராவது கூட அவ்வளவாக விளம்பரப்படுத்த படவில்லை. கேசட் வெளியான பொழுது தான், 'என்னடா இது, தலைவர் இசையா இருக்கே..அடடா. பாசில் படமா' அப்படின்னு நெனைச்சிக்கிட்டே வாங்கி கேட்டேன். அப்புறம் தான் படம் வெளி வந்து செம கலக்கு கலக்கிக்கிட்டு இருந்தது. குரோம்பேட்டை வெற்றில ஆடு மாடு பூட்டுற மாதிரி வர்றவங்கள எல்லாம் உள்ள விட்டுக்கிட்டே இருப்பான். ஹவுஸ் புல் போர்ட் எல்லாம் கெடையாது. டிக்கெட்ட வாங்கி உள்ள போனப்புறம் தான் உள்ள நிக்கவே எடம் கெடையாது என்று தெரிந்தது. முட்டங்காலில் நின்னுக்கிட்டே பார்த்த ஒரே படம். ராஜா-பாசில் கூட்டணிக்கு சிகரம் வைத்த ஒரு படம். ராஜாவின் பின்னணி இசை ராஜாங்கம் படம் முழுவதும் பரவி இருக்கும் (முக்கியமா அந்த க்ளைமாக்ஸ் காட்சி, விஜய்-சாலினி பிரியும் காட்சி..நம்ம கண்ணுல டக்குன்னு கண்ணீர் எட்டிப்பார்க்கும்.ம்ம்ம்ம்)..

பாடலை பற்றி எல்லோருக்குமே தெரிந்த விசயம் தான். என்னை தாலாட்ட வருவாளோ ஏற்கனவே பதிவில் பார்த்து விட்டோம். அதனால் 'இது சங்கீத திருநாளோ' கேட்கலாம்.



9. கண்ணுக்குள் நிலவு (2000)

ஒரு படம் பிச்சிக்கிட்டு ஓடிட்டுன்னா, அப்படியே அந்த கூட்டணிய அப்படியே புடிச்சுப் போட்டு காசு பாக்கலாம்ணு கைய சுட்டுக்கொள்வது ரொம்ப சகஜம். 'கிழக்கு சீமையிலே' ஓடினவுடன், நெப்போலியன்-ராதிகா-விஜயகுமார அப்படியே புடிச்சிப் போட்டு 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' என்று ஒரு குப்பை வந்தது. அது போலவே 'காதலுக்கு மரியாதை'க்கு மக்கள் கொடுத்த மரியாதையை பார்த்து விஜய்-ஷாலினி கூட்டணியில் பாசிலே இயக்கி வந்த படம் 'கண்ணுக்குள் நிலவு'. இந்த படத்தில் விஜயின் நடிப்பை ஆகா ஓஹோ என்று ஆள் ஆளுக்கு பாராட்டும் போதே வெளங்காது என்று தோன்றியது. இந்த படத்தோடு, விஜயும் இனி நடிப்பது முயற்சிப்பது இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டார். நான் இன்னும் படமும் பார்க்கவில்லை.

சொல்லப் போனா, எனக்கு 'காதலுக்கு மரியாதை' பாடல்களை விட 'கண்ணுக்குள் நிலவு' பாடல்கள் ரொம்ப பிடிக்கும். ராஜா-பாசில் கூட்டணியில் வந்த பாடல்களில் என் மனதில் முதல் இடம் கண்ணுக்குள் நிலவுக்கு தான். 'காதலுக்கு மரியாதை' கமர்ஷியல். 'கண்ணுக்குள் நிலவு' க்ளாசிகல். ஹரிஹரன் பாடிய 'நிலவு பாட்டு நிலவு பாட்டு' ரொம்பவே வித்தியாசமான கம்போசிங்க். நான் ரொம்பவே ரசிக்கும் ஒரு பாடல். யேசுதாஸின் 'இரவு பகலை தேட' அழகான கவிதை. ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இசை. சரணத்தில் வரும் பேஸ், யேசுதாஸ் குரலோடு சேர்ந்து இதமான ஒரு வருடலை கொடுக்கும். 'ரோஜா பூந்தோட்டம்' மனசுக்குள் இதமான ஒரு ஆட்டம் போடும். எவ்வளவு அழகான ரிதம். உன்னி கிருஷ்ணன்-அனுராதா ஸ்ரீராமின் நீரோடை மாதிரி குரல். பாசில் இந்த பாடலை ரொம்ப அழகாக படமாக்கி இருப்பார். விஜய்-ஷாலினியின் ஆட்டமும், முகபாவனைகளும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். சித்ராவின் 'சின்னஞ்சிறு கிளியே' அருமையான தாலாட்டுப் பாடல். அப்புறம் யேசுதாஸ்-அனுராதா ஸ்ரீராமின் 'ஒரு நாள் ஒரு கனவு' பாடல். இப்படி 'கண்ணுக்குள் நிலவு' ஒரு முழுமையான ராஜாவின் ராஜாங்கம். இன்று 'ரோஜா பூந்தோட்டம்' பாடலை கேட்கலாம்.



10. ஒரு நாள் ஒரு கனவு (2005)

எல்லாமே அழகா இருந்தா திருஷ்டி பொட்டு வைப்பாங்க இல்லையா. அப்படி தான் 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது. படம் வெளிவரும் முன்னமே பாசில் 'இந்த படம் தான் நானும் ராஜாவும் இனைந்து செய்த படங்களிலேயே ஒரு இசை காவியம்' என்று சொன்ன போதே நான் டவுட் ஆனேன். இவரு ராஜா கூட செய்த பாடங்கள் எல்லாமே இசை காவியம் தானே. இப்படி ஓவரா பில்ட்-அப் கொடுக்கறாரே என்று. இந்த படத்துக்கு இயக்கம் 'இராமநாராயணன்' என்று சொன்னால் கூட நம்புவது கஷ்டம் தான். அவ்வளவு சுமாரான திரைக்கதை, இயக்கம். 'காற்றில் வரும் கீதமே' தவிர எல்லாமே சுமார் தான். கொஞ்சம் நல்லா இருந்த 'கஜுரகோ' பாட்டையும் படத்தில் கொடுமை படுத்தி இருப்பார் (இவ்வளவு கேவலமா ஒரு பாடலை நான் பார்த்தது இல்லை). என்னத்த சொல்ல, கடைசியா 'காற்றில் வரும் கீதேமே' கேட்டுட்டு முடிச்சிக்கலாம். நண்பர் சாணக்கியன் விருப்பமாக இந்த பாடலை கொடுக்கிறேன்.




அன்புடன்.
சிவா.

38 Comments:

At 8:07 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//இப்படி ஓவரா பில்ட்-அப் கொடுக்கறாரே என்று//
என்ன சிவா, இப்படிச் சொல்லிட்டீங்க!! எனக்கு இந்தப் படத்து பாடல்கள் எல்லாமே கேட்கப் பிடிக்கும்.. பார்க்கக் கூடாது.. கேட்கணும்.. நல்லவேளையாய் நான் இன்னும் பார்க்கவில்லை.. கேட்டிருக்கேன்..தங்கை பார்த்துட்டு எச்சரிக்கை செஞ்சிட்டா.. தப்பிச்சிட்டேன் :)

 
At 8:35 PM, Blogger சிவா said...

////சௌகார் பாட்டியும் நதியா பேத்தியும் பாசமழை பொழிந்த படம்//

பத்மினிங்க அந்த பாட்டி :)// அடடா! குழம்பிட்டேன். பதிவில் சரி பண்ணிட்டேன். சுட்டிக் காட்டியதுக்கு நன்றி.

 
At 8:41 PM, Blogger Maya said...

அன்பு சிவா,

வணக்கம்.

/சௌகார் பாட்டியும் / அது பத்மினி பாட்டி

பூவிழி வாசழிலே -இதில்தான் மனோ முதன் முதலில் அறிமுகமானார்.(அண்ணே அண்ணே..)

கிளி பேச்சு கேட்கவா -வந்தது வந்தது -ஜானகி இதுவும் நல்ல மெலொடி சிவா.இருந்தால் நேயர் விருப்பமாக போடவும்.

மற்றபடி உங்கள் பதிவை அடிக்கடி பார்ப்பவன் நான்.நானும் மொட்டையின் தீவிர வெறியன்(ராஜாவை நான் இப்படித்தான் 'செல்லமாக' சொல்வதுண்டு..கோபிக்க வேண்டாம்.

இதுவரை பின்னுட்டம் இடாததிற்கு காரணம் சோம்பலே..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

 
At 8:58 PM, Blogger ஸ்ருசல் said...

அலுவலகம் வந்ததும் வழக்கம் போல விருப்பப் பாடல்களின் பட்டியலை ஒலிக்கவிட்டு உங்கள் பதிவினைத் திறந்தால் அங்கேயும் அதே 'பழமுதிர்ச்சோலை'.

நீங்கள் சொல்வது உண்மை. எஸ்.பி.பி நல்ல தெரிவாக இருந்திருப்பார். ஜேசுதாஸ் குரலில் பாடல்கள் கேட்கும்போது ஒரு வயோதிக உணர்வே சமயங்களில் ஏற்படுகிறது.

 
At 9:00 PM, Blogger ஸ்ருசல் said...

'என் பொம்முக்குட்டி அம்மா'-ல் எனக்குப் பிடித்த பாடல், 'உயிரே உயிரின் உறவே'

 
At 9:53 PM, Blogger CRV said...

Siva, enna ipdi solliteenga? Bommukutti ammavukku hit padam. BGM & songs Rajavoda rajangam ache. Chance kedaicha innoru thadavai padathai paarunga.

 
At 9:56 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

நற...நற...நற...
இன்னும் மெயில் வரலை...
:-(

 
At 3:20 AM, Anonymous Anonymous said...

உண்மை இந்தக் கூட்டும்;நல்ல பாட்டுக்கூட்டே!!
யோகன் பாரிஸ்

 
At 3:47 AM, Blogger G.Ragavan said...

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்...

ஆகா...எனக்கு நினைக்க நினைக்க கண்ணில் நீர் வரச்செய்யும் பாடல் இது. மிகவும் பிடித்த பாடல்.

ஜீவனும் ஓய்ந்தது...வேண்டாம்..நான் இங்க நிறுத்திக்கிறேன்.

நல்ல கூட்டணி.

நீங்க சொன்னது போல அளவுக்கு அதிகமான யேசுதாஸ் பயன்பாடு. அது குறைந்திருக்கலாம்.

கிளிப்பேச்சு கேட்க வா - நல்ல கரு. சரியாகக் கையாளவில்லை என்று சொல்வேன்.

கண்ணுக்குள் நிலவு..படம் குப்பை...ஆனால் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். காதலுக்கு மரியாதையை விட.

 
At 4:35 AM, Blogger சிவா said...

வாங்க பொன்ஸ்!
/என்ன சிவா, இப்படிச் சொல்லிட்டீங்க!! எனக்கு இந்தப் படத்து பாடல்கள் எல்லாமே கேட்கப் பிடிக்கும்.. // அப்படியா. எனக்கென்னமோ மாற்ற ராஜா-பாசில் கூட்டணி பாடல்களை பார்க்கும் போது 'ஒர் நாள் ஒரு கனவு' ரொம்பவே சுமாராக பட்டது. உங்களுக்கு பிடித்த மாதிரி நிறைய பேருக்கு பிடித்திருகலாம். நல்லது தானே :-)

//பார்க்கக் கூடாது.. கேட்கணும்.. நல்லவேளையாய் நான் இன்னும் பார்க்கவில்லை// சரியா சொன்னீங்க. ஆனா நான் பார்த்துட்டேனே :-)).

 
At 4:37 AM, Blogger சிவா said...

The Dreamer (பேரு என்னங்க?),

//பாடல்களை வேலையிடத்தில் இருந்து கேட்கமுடியாது எனினும் வீட்டிலிருந்து கேட்பேன் என்பது உறுதி :)// ரொம்ப நன்றி Dreamer. வீட்டில் கணிணில ரியல் ப்ளேயர் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

 
At 4:41 AM, Blogger சிவா said...

வாங்க மாயக்கூத்தன், ஓ! அது பத்மினி பாட்டி இல்ல..மறந்தே போச்சு. பதிவில் சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு ரொம்ப நன்றி.

//கிளி பேச்சு கேட்கவா -வந்தது வந்தது -ஜானகி இதுவும் நல்ல மெலொடி சிவா.இருந்தால் நேயர் விருப்பமாக போடவும்./// ஆமாம். இதுவும், சிங்கார வேலனில் 'தூது செல்வதாரடி'யும் ஜானகி பாடல்களில் ஒரு தனி ரகம். 'நேயர் விருப்பத்தில் சீக்கிரம் கொடுக்கிறேன்.

//மற்றபடி உங்கள் பதிவை அடிக்கடி பார்ப்பவன் நான்.நானும் மொட்டையின் தீவிர வெறியன்(ராஜாவை நான் இப்படித்தான் 'செல்லமாக' சொல்வதுண்டு..கோபிக்க வேண்டாம்.
// நம்மை மாதிரி ராஜா வெறியர்களை பார்க்க/சந்திக்க சந்தோசம். :-))

//இதுவரை பின்னுட்டம் இடாததிற்கு காரணம் சோம்பலே// நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா இந்த பக்கம் வாங்க. அது போதும்.

அன்புடன்,
சிவா

 
At 4:44 AM, Blogger சிவா said...

ஸ்ரூசல்,
//அலுவலகம் வந்ததும் வழக்கம் போல விருப்பப் பாடல்களின் பட்டியலை ஒலிக்கவிட்டு உங்கள் பதிவினைத் திறந்தால் அங்கேயும் அதே 'பழமுதிர்ச்சோலை'.
// உங்களுக்கும் பிடித்த பாடலா. சந்தோசம். எல்லோருக்கும் பிடித்த பாடல் தானே இது :-)

//நீங்கள் சொல்வது உண்மை. எஸ்.பி.பி நல்ல தெரிவாக இருந்திருப்பார். ஜேசுதாஸ் குரலில் பாடல்கள் கேட்கும்போது ஒரு வயோதிக உணர்வே சமயங்களில் ஏற்படுகிறது// உண்மை தான். யேசுதாஸ் குரலில் உள்ள உருக்கம் எல்லா பாடல்களுகளுக்கும் ஒரே மாதிரி ஒரு உணர்வை கொடுப்பது உண்மை.

//'என் பொம்முக்குட்டி அம்மா'-ல் எனக்குப் பிடித்த பாடல், 'உயிரே உயிரின் உறவே'// எனக்கும் பிடித்த பாடல் கூட. எப்படியோ விட்டுப்போச்சு :-)

 
At 4:46 AM, Blogger சிவா said...

வெங்கட்! 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' ஹிட் படமா? நான் ஏதோ சுமாரா போன படம் என்று நினைத்தேன். எனக்கு என்னமோ கொஞ்சம் அழுகாச்சி படம் மாதிரி ஒரு உணர்வு :-)). அதான் அப்படி சொல்லிட்டேன்.

கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி இன்னொரு தடவை படம் பார்த்து சொல்கிறேன்.

 
At 4:47 AM, Blogger சிவா said...

பாலபாரதி! ஐயோ! அடிக்க வராதீங்க. இன்று கண்டிப்பா மடல் அனுப்பி விடுகிறேன். kuilbala@gmail.com தானே...எடுத்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கணும். :-))

 
At 4:48 AM, Blogger சிவா said...

யோகன்! வருகைக்கு நன்றி. இன்னும் நிறைய கூட்டு போடலாம். வந்து பாடல் கேட்டதற்கு நன்றி

 
At 4:52 AM, Blogger சிவா said...

ராகவன்! அந்த பக்கம் ஏதோ பாட்டுச்சத்தம் கேட்குதே..'பூவே பூச்சூடவா' என்று.. :-)..பாடல் ரொம்ப புடிக்குமோ?

//நீங்க சொன்னது போல அளவுக்கு அதிகமான யேசுதாஸ் பயன்பாடு. அது குறைந்திருக்கலாம். // 'ஒரு நாள் ஒரு கனவு' படத்திற்கு யேசுதாஸ் கிடைக்க வில்லை போல. யேசுதாஸ் இல்லாமல் பாசில் படம் அது ஒன்றாக தான் இருக்கும்.

//கிளிப்பேச்சு கேட்க வா - நல்ல கரு. சரியாகக் கையாளவில்லை என்று சொல்வேன்.// உண்மை தான். படத்தை எப்படி கொண்டு போவது என்பதில் பாசில் ரொம்ப தடுமாறி இருப்பார். தமிழில் மம்முட்டிக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்...ம்ம்ம்..

//கண்ணுக்குள் நிலவு..படம் குப்பை...ஆனால் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். காதலுக்கு மரியாதையை விட.// நானும் உங்க கட்சி தான்..காதலுக்கு மரியாதையை விட கண்ணுக்குள் நிலவு நன்றாக இருக்கும். படம் பார்க்க வில்லை இன்னும் (தப்பிச்சிட்டேன் :-))

 
At 10:42 AM, Anonymous Anonymous said...

Poovey poo choodavaa.....
what a evergreen gem from Ilayaraja! A soothing orchestration with guitaring, flute call, chorus humming, lengthy flute melody ... flows like a amaidhiyaana river!!
From Classical Ilayaraja of higher caliber, I can’t get enough of HIS finest ABHERI!! What a sense of contentment Raaja invokes in this song! Chithra as always fills your heart with her warmth rendering!
Finest Abheri, I enjoy...
Kaayarohanesam.... Dikshitar krithi
Panchaashat peeta roopini...Dikshitar krithi
Bhajarey maanasa....
Nagumomu galani.... Thyagaraja
Chinnanchiru vayadhil....Shri.Ilayaraja
Gangaikarai thottum....
isai thamizh nee seidha arum saadhanai.....
Fill my heart & mind with peace.. Early Ilayaraja's poovey poochoodava.... is THE CHOICE!! Will follow up your rest of your great choices later...... love, vinatha!

 
At 11:08 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//பாலபாரதி! ஐயோ! அடிக்க வராதீங்க. இன்று கண்டிப்பா மடல் அனுப்பி விடுகிறேன். //
இது என்ன மேட்டர்? வேண்டுதலின் பேரில் பாடல்கள் தனிமடலிலும் அனுப்பப் படுமா?

 
At 11:19 AM, Blogger சிவா said...

பொன்ஸ்!

//இது என்ன மேட்டர்? வேண்டுதலின் பேரில் பாடல்கள் தனிமடலிலும் அனுப்பப் படுமா? // இல்லை இல்லை...அது அந்த மேட்டர் இல்லை. பதிவில் பாடல்கள் போடுவது எப்படி என்று போன பதிவில் கேட்டிருந்தார். அதை தனி மடல் அனுப்பி சொல்கிறேன் என்று சொன்னேன். அனுப்ப மறந்து விட்டது. அது தான் மேட்டர். :-))

 
At 11:49 AM, Blogger Suka said...

சிவா..

சீடி கட் பண்ணனும் .. நல்ல பாட்டுகளா தேடனும்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன் ..ஆபத்பாந்தவன் வலைப்பூ இது ..

பழமுதிர்ச்சோலை பாட்டு கேட்டுட்டே வண்டி ஓட்டுனா..ஆஹா ..

ஹும் .. எங்கிருந்து டவுன்லோட் பண்ணுறதோ... விலைக்கு வாங்கலான்ம்மா சீடி வேற கெடைக்க மாட்டீங்குது..

 
At 12:12 PM, Blogger சிவா said...

சுகா!
//பழமுதிர்ச்சோலை பாட்டு கேட்டுட்டே வண்டி ஓட்டுனா..ஆஹா // பார்த்து ஓட்டுங்க. ரோட்டுல கவனம் இருக்கட்டும். பாட்டில் மயங்கிடாதீங்க :-))

//எங்கிருந்து டவுன்லோட் பண்ணுறதோ... விலைக்கு வாங்கலான்ம்மா சீடி வேற கெடைக்க மாட்டீங்குது..
//
நீங்க எங்கே இருக்கீங்க. USA என்றால், பின் வரும் இனையத்தில் நிறைய ராஜா சி.டிக்கள் கிடைக்கிறது. நானும் நிறைய இங்கு இருந்து தான் வாங்கி இருக்கிறேன்.

http://www.themahal.com
www.dvdunlimitedonline.com
http://www.orientalrecords.com/

 
At 12:30 PM, Blogger Suka said...

ஆஹா... ரெம்ப நன்றி சிவா.. ஆர்டர் பண்ணிடுறேன்.

நான் இருக்கறது சான் உசே, கலிஃபோர்நியா தான்.

//ஓட்டுங்க. ரோட்டுல கவனம் இருக்கட்டும். பாட்டில் மயங்கிடாதீங்க :-))
//
கொஞ்சம் கஷ்ட்டம் தான்.. :)

 
At 12:36 PM, Blogger சிவா said...

Suka!

Check theMahal.com first. Order whatever CD you like there. The CD cost is much cheaper in theMahal.com.

Then Check www.dvdunlimitedonline.com

Both these websites are really good.

Orientalrecords.com has all IR CDs (most of the 80S). This is the official website of Echo audio (Oriental now). But I haven't ordered anything from here. You can give a try here too.

 
At 5:10 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! பூவே பூச்சூடவாவுக்கே இவ்வளவு கொட்டிட்டீங்க. பேசாம அடுத்த பதிவ உங்களை எழுத சொல்லிடலாம்னு நெனைக்கிறேன். :-). நீங்க நிறைய ராகம், கர்னாடக சங்கீத பாட்டெல்லாம் சொல்லி கலக்கறீங்க. - என்னா வினதா அக்காவுக்கு புடிக்காம போய்டுமா.. :-)

மற்ற படங்களுக்கும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
சிவா

 
At 5:11 PM, Blogger சிவா said...

வாங்க மகேஷ்! உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.

அன்புடன்,
சிவா

 
At 11:59 PM, Blogger சாணக்கியன் said...

Siva,

10 patalkal potu kalakketenga. ipodan theriyudu inda kootani pathi.

'aagaya vennilave' arputhamana padal. athaip paata try pannina athan sootchamangal theriyum. Konjam kastamana padal paduvadarku.

'sivagami nenaipinile' mm. ungalai madiriye nanum tv-la pathu rasichirukken.

'sangeetha thirunala'-ithu mathiri vera flavor-la vara sila paadalgal romba nalla irukkum. Indamadiri padalgal originl flavorai vida nalla irukkum. adu madiri enakku pudicha veru sila padalgal:
1. senbgame senbagme- Asha bosle ( namakkku mano padiya pattudan adigam theriyum)
2. Ulundu vedaikkayile - Sujatha,from mudalvan. "kurukku siruthavale"-vai vida ithu ithama irukkum.

'Katril varum geethame'- Neyar viruppam potadarkku nandri. Idukku appuram vanda pasil-IR film onnu irukku, 'kasthoori man'. Adula 'Keakkalayo Keakkalyo Kannanadu gaanam' appadinnu oru nalla pattu irukku. Indraiya patalil our naal podungalen !

 
At 3:50 AM, Blogger சிவா said...

சாணக்கியன், ஆகாய வெண்ணிலாவே நீங்க பாடியாவது பார்க்க முடியும் (பாடுவேன் என்று சொல்லி இருக்கீங்களே :-). நானெல்லாம் கேட்க மட்டுமே முடியும் :-))))

'செண்பகமே செண்பகமே' ஆஷா ரொம்ப கொஞ்சின மாதிரி இருக்கும். அவங்க குரல் அப்படி. 'உளுந்து வெதைக்கயிலே' சுவர்ணலதா தானே? சுஜாதாவா? பாருங்க

'கஸ்தூரிமான்' பாசில் இயக்கம் அல்ல. அது லோகிதாஸ் என்ற மலையாள இயக்குனர் படம். நீங்க கூறிய 'கேக்கலையோ கேக்கலையோ' பாடல் ரொம்ப நல்லா இருக்கும். கிட்டத்தட்ட 'ராசுக்குட்டி' படத்துல வர்ற பாட்டு மாதிரியே இருக்கும்.

அன்புடன்.
சிவா

 
At 8:15 PM, Anonymous Anonymous said...

Couldn't resist....
Shri.Ilayaraja’s bhakthi bhava with simple orchestral artistry!!

On His birthday, this auspicious day for the world of Music... I want to bring
the virutham ‘Vetrigalin....’ set in Raga Ganamoorthe from Geethanjali to your attention!! There is a Thyagaraja krithi ‘Ganamoorthey....’ starts with the raga name!! Amazing aa yerukkum!! I was listening to the song Maranthen..... set in ahir bhairavi. - Ilayarajavin’ Geeethanjali brought back so much school days memory!! Remember Ek duje ke liye... there is a song ‘sola bharas....’ What a tune, what a mood!! Enjoy, enjoy raaja pattu...!! Vinatha!

http://www.raaga.com/channels/tamil/movie/TD00019.html


Check it out if you want Ek duje ke liye too!!


Amma Janani.... is Lalitha! Remember idhazhil kadhai.....Same raga!!

love, vinatha (siva, will check out your blog!)

 
At 12:59 AM, Blogger பிரதீப் said...

பூவே பூச்சூடவா - ஜேசுதாஸ் பாடியதை விட சித்ரா பாடியதில் ஒரு துள்ளல் இருக்கும்
இதே படத்தில் "சின்னக் குயில்" பாட்டுதான் சித்ராவுக்குப் பொருத்தமான சின்னக் குயில் பட்டம் பெற்றுத் தந்தது

காதலுக்கு மரியாதை பற்றி நிறையப் பேசியாயிற்று. எனக்கும் இப்படத்தில் தாலாட்ட வருவதைவிட சங்கீதத் திருநாள்தான் இஷ்டம்.

கண்ணுக்குள் நிலவு - நிலவுப் பாட்டு ஒரு அற்புதமான கம்போஸிஷன் மட்டுமில்லை, பழநிபாரதியின் இசை பற்றிய மதிப்பீடும் அற்புதம்.

இதைச் சொல்லலைன்னா இப்பதிவு நிறைவுறாது.

ஒரு நாள் ஒரு கனவு - இந்தப் படத்தில் வரும் காற்றில் வரும் கீதம் பாட்டைக் கேசட்டில் கேளுங்கள். இசைஞானியும் வாலியும் வாஞ்சையாக என்னமோ அண்ணன் தம்பி மாதிரி பேசிக் கொண்டே ஜஸ்ட் லைக் தட் கம்போஸ் பண்ணும் அழகு... அந்தப் பாட்டில் ஹரிஹரன், ஷ்ரேயா, பவதாரிணி என்று அனைவரும் உருகி உருகிப் பாடியிருக்கும் விதம் - மயக்கம் தரும் என்பதில் உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை

 
At 1:04 AM, Blogger சாணக்கியன் said...

//'உளுந்து வெதைக்கயிலே' சுவர்ணலதா தானே? சுஜாதாவா? பாருங்க//

Its swarnalatha Siva. ellam thapu thapa solli vechurukkanaa.. idathan aarvakkOlarunnu solluvanga :-)

 
At 5:11 AM, Blogger சிவா said...

வினதா அக்கா!

ஓ! தலைவரோட பிறந்த நாள் இல்லையா. 'கீதாஞ்சலி' ஆல்பம் என்னிடம் இல்லையே :-(. நீங்க கொடுத்த ராகாவில் கேட்டுப்பார்க்கிறேன். ராகம் எல்லாம் நிறைய சொல்லி கலக்கறீங்க. என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவு முயற்சிக்கிறேன் அக்கா.

 
At 5:16 AM, Blogger சிவா said...

வாங்க பிரதீப்!

//பூவே பூச்சூடவா - ஜேசுதாஸ் பாடியதை விட சித்ரா பாடியதில் ஒரு துள்ளல் இருக்கும் // அதனால் தான் சித்ரா பாடியதை எடுத்துப் போட்டேன். ஒரே யேசுதாஸ் மயமா ஆகிட கூடாதே என்றும் தான் :-))

//இப்படத்தில் தாலாட்ட வருவதைவிட சங்கீதத் திருநாள்தான் இஷ்டம்.// நீங்க ஏற்கனவே ஒரு தடவை இதை சொல்லி இருக்கீங்க. அதான் 'சங்கீத திருநாளோ' இந்த பதிவில் போட்டுட்டேன் :-)

// பழநிபாரதியின் இசை பற்றிய மதிப்பீடும் அற்புதம்.// உண்மை தான். 'காதலுக்கு மரியாதைக்கு அப்புறம் பழநிபாரதியில் கவிதைகள் 'கண்ணுக்குள் நிலவு' பாடல்கள் அனைத்திலும் அழகாக தெரியும்.

//இசைஞானியும் வாலியும் வாஞ்சையாக என்னமோ அண்ணன் தம்பி மாதிரி பேசிக் கொண்டே ஜஸ்ட் லைக் தட் கம்போஸ் பண்ணும் அழகு// ஆமாம். நீங்கள் 'அச்சுவின்ட அம்மே' (மலையாளம்) சி.டி கேட்டிருக்கிறீர்களா? அதிலும் ராஜாவும், இயக்குனர் (சத்யம் அந்திகாட்)ம் உட்கார்ந்து ஒவ்வொரு பாடலாக கம்போஸ் பண்ணி, அப்புறம் அதை அப்படியே ஆர்கெஸ்ராவுக்கு மாற்றுவார் ராஜா. அருமையா இருக்கும்.

 
At 5:18 AM, Blogger சிவா said...

சாணக்கியன்! //இதெல்லாம் ஆர்வக்கோளாறுன்னு சொல்வாங்க// அதெல்லாம் இல்லை சாணக்கியன். எல்லோருக்கும் குழப்பம் வர தான் செய்யும். நானும் நிறைய தடவை தப்பு தப்பா சொல்லு மாற்றுவது உண்டு. இதெல்லாம் சகஜமப்பா :-))

 
At 7:11 AM, Blogger கைப்புள்ள said...

கிளிபேச்சு கேக்கவாவில் வரும் அன்பே வா அருகிலே பாட்டும் அருமையான பாடல் சிவா. அதே போல பூவே பூச்சுடவாவில் அனைத்து பாடல்களும் சூப்பரா இருக்கும். வேற என்னத்த சொல்ல...வந்ததுக்கு ஒரு உள்ளேன் ஐயா.

 
At 3:38 AM, Blogger சிவா said...

மோகன்ராஜ்! 'அன்பே வா அருகிலே' அருமையான பாடல். ஏற்கனவே ஒரு பதிவில் போட்டிருக்கிறேன். அதனால் தான் 'சிவகாமி' பாடல் கொடுத்தேன்.

//வேற என்னத்த சொல்ல...வந்ததுக்கு ஒரு உள்ளேன் ஐயா// வருகை பதிவு எடுத்துக் கொள்ளப்பட்டது :-)). நன்றி

 
At 3:42 AM, Blogger சிவா said...

வாங்க சசிகலா,

நீங்க கொடுத்திருக்கும் ஐந்து பாடல்களும் அருமை (ஆறாவது பாடல் நீங்கள் சொல்லிட்டீங்க. படம் தெரியாததால் எனக்கு டக்குன்னு நினைவுக்கு வரமாட்டேங்குது. யோசிச்சி பாக்கறேன்). இதில் சில பாடல்கள் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன் (இன்றைய பாடலில்). மீண்டும் நேயர் விருப்பம் ஆரம்பித்து உங்களுக்காக மறுபடி கண்டிப்பாக கொடுக்கிறேன்.

ப்ளாக் பக்கம் அடிக்கடி வருவதற்க்கு ரொம்ப நன்றி சசிகலா.

அன்புடன்,
சிவா

 
At 3:03 AM, Blogger கானா பிரபா said...

சசி

அந்தப்படம் அழியாத கோலங்கள்

 

Post a Comment

<< Home